1 / 51
கரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில்…இன்று (23.8.2020) முழு ஊரடங்கையொட்டி… சென்னை துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. வேளச்சேரி பகுதியிலும் எல்லா சாலைகளும் போக்குவரத்து ஏதுமின்றி காணப்பட்டது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
2 / 51
3 / 51
4 / 51
5 / 51
6 / 51
கரோனா பரவலைத் தடுக்கும்
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில்… இன்று (23.8.2020)
சென்னை - பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள்… ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடுகின்றனர்.
படங்கள்:எம்.முத்து கணேஷ்
7 / 51
8 / 51
9 / 51
10 / 51
11 / 51
கரோனா பரவலைத் தடுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில்… இன்று (23.8.2020)
சென்னை – பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையின் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
படங்கள்:எம்.முத்து கணேஷ்
12 / 51
13 / 51
14 / 51
15 / 51
தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சில ஞாயிற்றுக்
கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு
முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தனர்.இன்று (23.8.2020)திருச்சியில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரின்
எண்ணிக்கை அதிகரித்தே
காணப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை பின்னணியில் காவிரி ஆற்று பாலத்தில் செல்லும் வாகனங்கள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
16 / 51
17 / 51
18 / 51
திருச்சி கல்லணை சாலையில் உள்ள சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் 7,8,9 ஆகிய மூன்று தேதிகளில்
மட்டும் மூலவர் லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர் படுவது வழக்கம். அதன்படி இன்று (23.8.2020)
காலை காசி விஸ்வநாதர் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் பட்டது.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
19 / 51
20 / 51
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து... சென்னையின் முக்கிய சாலையான காமராசர் சாலை (மெரினா கடற்கரைச் சாலை) போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது படம் : பு.க.பிரவீன்
21 / 51
22 / 51
23 / 51
சென்னை ஆர் .ஏ. புரம் பிராடிஸ் சாலையில் உள்ள வடிகால் நீர் நிலையத்தின் எதிரில் சாலையில்... இன்று (23.8.2020) பெருக்கேடுத்து ஓடிய கழிவு நீர்.
படம்: க.ஸ்ரீபரத்
24 / 51
25 / 51
26 / 51
கரோனா பரவலைத் தடுக்க... முழு ஊரடங்கு அமலில் இருந்த இன்று (23.8.2020) பகல்பொழுதில் மயிலாப்பூர் சாலையொன்றில் அந்தக் காட்சி நம் விழிகளில் விழ்ந்துது.
கரோனா அச்சம், ஊரடங்கு அமல், வாகனப் போக்குவரத்துக்கு தடை... என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது பூம்பூம் மாட்டை ஓட்டிக்கொண்டு... வீடு வீடாகச் சென்று தனது மாட்டின் தலையை ஆட வைத்து... யாசகம் வேண்டினார் அந்த பூம்பூம் மாட்டுக்காரர்.
’’எனது வயிற்றுப்பசிக்கு முன்னால் தொற்று நோயும் தோற்றுப்போகும்...’’ என வேக வேகமாக தலையசைத்தது பூம் பூம் மாடல்ல... அந்த மனிதர்தான். படம்: க.ஸ்ரீபரத்
27 / 51
28 / 51
29 / 51
கோவை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் பிளாஸ்மா சேமிப்பு வங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (23.8.2020) திறந்து வைத்தார். உடன் அமைச்சர் வேலுமணி, சுகாதாரத் துறைச் செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆட்சியர் ராஜாமணி உளிட்டர்.
படம்: ஜெ.மனோகரன்
30 / 51
31 / 51
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று (22.8.2020) கோவை முத்தண்ணன் குளத்தில் விநாயகர் சிலைகளை சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் கொண்டுவந்து கரைத்தனர்.
படங்கள் : ஜெ /மனோகரன்
32 / 51
33 / 51
34 / 51
35 / 51
36 / 51
37 / 51
38 / 51
கோவை காங்கிரஸ் கட்சி தலைமையகம் காமராஜ் பவனில் நேற்று (22.8.2020) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார். உடன் அக்கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர்.
படங்கள் : ஜெ .மனோகரன்
39 / 51
40 / 51
விழுப்புரம் மாவட்டம் தந்திராயன்குப்பம் கடற்ரையில் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பொதுமக்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
41 / 51
விழுப்புரம் மாவட்டம் தந்திராயன்குப்பம் கடற்ரையில் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் சிறுவர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
42 / 51
43 / 51
விழுப்புரம் மாவட்டம் தந்திராயன்குப்பம் கடற்ரையில் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கடலில் கரைத்தபோது கரையாமல் கரை ஓதுங்கிய ஒரு விநாயகர் சிலை.
படம்: எம்.சாம்ராஜ்
44 / 51
45 / 51
தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இன்று (23.8.2020) விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை பொம்மையார்பாளையம் பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : எம்.சாம்ராஜ்
46 / 51
மதுரையில் - கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு... தொடர்ந்து 3 வேளை உணவுகளை வழங்கிவரும்... மதுரை - தொழில் வர்த்தக சங்கத்தின் உணவு தயாரிக்கும் இடத்தை இன்று (23.8.2020) வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
47 / 51
48 / 51
இன்று (23.8.2020) திருநெல்வேலி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து.... திருநெல்வேலி டவுன் சுவாமி சந்நிதி சாலையில் கடைகள் மூடியிருப்பதோடு... வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
படங்கள்: மு.லெட்சுமி அருண்
49 / 51
50 / 51
51 / 51