1 / 56
நாளை நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... மாதாவரம் பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் தற்காலிக பழ மார்க்கெட்டில் இன்று (21.8.2020) அதிகாலையிலேயே அதிகளவில் பழவகைகள் விற்பனை நடைபெற்றது. பழங்களை வாங்க சமூக இடைவெளியின்றி ஏகப்பட்டோர் குவிந்திருந்தனர்.
படங்கள்: ம.பிரபு
2 / 56
3 / 56
4 / 56
சென்னை - அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தை... காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் சுதாகர், துணை ஆணையர் தர்மராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் இன்று (21.8.2020) ஆய்வு செய்தனர்.
படங்கள்: ம.பிரபு
5 / 56
6 / 56
7 / 56
8 / 56
சென்னை - அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலையில் (21.8.2020) சங்கரின் உறவினர்கள் சிலர் வருத்தத்துடன் கூடியிருந்தனர்.
படங்கள் : ம.பிரபு
9 / 56
10 / 56
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு... சென்னை - பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (21.8.2020) நடைபெற்ற விழாவில்... அக்கட்சியின் தமிழக தலைவர் முருகன் கரோனா தொற்று பாதுகாப்புப் பணிகளில் தியாக உள்ளத்தோடு பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களின் பாதங்களில்... பூ போட்டு வணங்கி - அவர்களுக்கு விதை விநாயகர் சிலைகளை வழங்கி கவுரவித்தார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
11 / 56
12 / 56
13 / 56
14 / 56
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு... இன்று (21.8.2020) மயிலாப்பூரின் லஸ் சிக்னல் அருகில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாஸ்க் விநாயகர்.
படம்: க.ஸ்ரீபரத்
15 / 56
16 / 56
மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் தென் தமிழகத்தின் அனைத்து தொழில் வர்த்தக சங்க அமைப்பின் சார்பாக இன்று நடைபெற்ற ’தமிழகத்தின் 2-வது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வலியுறுத்தும்’ ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 56
நாளை நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியையொட்டி...இன்று (21.8.2020) மயிலாப்பூர் மாட வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பூஜை பொருட்களை இன்று அதிகாலையில் இருந்தே வாங்க பொதுமக்கள் திரண்டனர். அப்படி திரண்ட பொதுமக்கள் எவரிடமும் கரோனா தொற்றுப் பரவல் அச்சம் துளியும் இருக்கவில்லை.
படங்கள்: க.ஸ்ரீபரத்
18 / 56
19 / 56
20 / 56
21 / 56
22 / 56
23 / 56
நாளை நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி... திருநெல்வேலி - சமதானபுரத்தில் இன்று (21.8.2020) மதியவேளையில் ஒரு தந்தையும் - மகனும்... தங்கள் வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
படம் : மு.லெட்சுமி அருண்
24 / 56
25 / 56
26 / 56
27 / 56
28 / 56
29 / 56
புதுச்சேரி - தேங்காய்திட்டு பகுதியில் இயங்கி வந்த பைஃபர் படகுகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று (21.8.2020) ஏற்பட்ட தீவிபத்தில்.... பைஃபர் படகுகள் எரிந்து அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீயை அணைக்க முற்பட்ட தீயணைப்பு வீரா்கள்... பாதுகாப்பு கவச உடைகளில்லாமல்... போராடி தீயை அணைக்க முயன்றபோது... சில தீயணைப்பு வீரர்களுக்கு கண்கள் ஏரிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து அவரது கண்களில் தண்ணீரை ஊற்றி முதல் உதவி செய்யும் சக தீயணைப்பு வீரா்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
30 / 56
31 / 56
மதுரை பேச்சியம்மன் கோயிலில் திருடுபோன ஐம்பொன் சிலைகளை இன்று போலீஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சிலைகளை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் பார்வையிட்டார்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
32 / 56
டி 20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளதையொட்டி... சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று (21.8.2020) புறப்பட்டுச் சென்றனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
33 / 56
34 / 56
35 / 56
36 / 56
37 / 56
38 / 56
39 / 56
40 / 56
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) வேலூர் - அண்ணா சாலையில் விற்பனைக்கு வைத்திருரந்த வண்ணமயமான விநாயகர் சிலைகளை... வீட்டில் வைத்து பூஜை செய்ய வாங்கி சென்ற பெண்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
41 / 56
42 / 56
43 / 56
44 / 56
கடந்த 13 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை திருமண மண்டபங்களில் ஆயிரக்கணக்கில் கண்காட்சிக்கு வைப்பது சீனிவாசனுக்கு வழக்கம்.இந்த முறை அரசு தடை அறிவித்ததால் தனது வீட்டிலேயே புதிதாக வாங்கிய வித்தியாசமான விநாயகர் சிலைகளுக்கு முகமூடி அணிவித்து அழகு பார்க்கிறார்.
படங்கள்:எம்.முத்து கணேஷ்
45 / 56
46 / 56
47 / 56
48 / 56
49 / 56
50 / 56
51 / 56
52 / 56
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை (22.8.2020) கொண்டாடப்படவுள்ளதையொட்டி.. வேலூர் - சேண்பாக்கம் பகுதியில் தனது வீட்டில் வைத்து பூஜை செய்ய... மஞ்சள், குங்குமம், திருநீறு, தென்னங்குச்சி, கடுகு மற்றும் நூல் ஆகியவற்றை பயன்படுத்தி கலைநயத்தோடு கைகளாலேயே விநாயகர் சிலையை செய்யும் பெண்மணி.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
53 / 56
54 / 56
55 / 56
56 / 56