1 / 28
புதியதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட -
தேசிய கல்விக் கொள்கையைத் திரும்ப பெறக் கோரி... இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம்... ஆகிய அமைப்புகள் சார்பில் - இன்று (ஆக - 19) சென்னை - சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதி அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
படம் : க.ஸ்ரீபரத்
2 / 28
ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடி ஒருவரை கைது செய்யச் சென்றபோது... நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டார். அதற்குரிய விசாரணை மற்றும் ஆலோசனைக் கூட்டம்... இன்று (ஆக. 19) திருநெல்வேலி டிஐ ஜி அலுவலகத்தில் நடைபெற்றது. இகூட்டத்தில் பங்கேற்க வந்த மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் மற்றும் துணை ஆணையர் சரவணன்.
படம் : மு. லெட்சுமி அருண்
3 / 28
ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடி ஒருவரை கைது செய்யச் சென்றபோது... நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டார். அதற்குரிய விசாரணை மற்றும் ஆலோசனைக் கூட்டம்... இன்று (ஆக. 19) திருநெல்வேலி டிஐ ஜி அலுவலகத்தில் நடைபெற்றது. இகூட்டத்தில் பங்கேற்க வந்த டிஜிபி திரிபாதியை வரவேற்கும் காவல் துறை உயரதிகாரிகள்.
படம் : மு. லெட்சுமி அருண்
4 / 28
ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடி ஒருவரை கைது செய்யச் சென்றபோது... நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டார். அதற்குரிய விசாரணை மற்றும் ஆலோசனைக் கூட்டம்... இன்று (ஆக. 19) திருநெல்வேலி டிஐ ஜி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த டிஜிபி திரிபாதியை... செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் சூழ்ந்துகொண்டு... கேள்வி கேட்க முயற்சித்தனர். சூழ்ந்து கொண்டு நிற்காமல் சமூக இடைவெளியுடன் நிற்கும்படி அவர்களை டிஜிபி கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. உடனே, டிஜிபி டேபிள் கொண்டு வரச்சொல்லி அதில் அமர்ந்து செய்தியாளர்களிடம் உரையாடினார். உடன் டிஐஜி பிரவீன்குமார் அபினபு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
5 / 28
6 / 28
ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடி ஒருவரை கைது செய்யச் சென்றபோது... நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டார். அதற்குரிய விசாரணை மற்றும் ஆலோசனைக் கூட்டம்... இன்று (ஆக. 19) திருநெல்வேலி டிஐ ஜி அலுவலகத்தில் நடைபெற்றது . அக்கூட்டத்தில் காவலர் சுப்பிரமணியம் உருவப் படத்துக்கு டிஜிபி திரிபாதி அஞ்சலி செலுத்தினார். உடன். தென்மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவீன்குமார் அபினபு, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
7 / 28
கரோனா தொற்று காரணத்தால் அமலில் இருக்கும் ஊரடங்கால்... தமிழகத்தில் ஒவ்வொரு தொழில் செய்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா மற்றும் நாடகத் துறையைச் சார்ந்துள்ள தொழில்களும் இதில் அடக்கம். இந்நிலையில் சினிமா மற்றும் நாடக கலைஞர்களுக்குரிய செயற்கை முடி (டோப்பா அல்லது விக்) அலங்காரத்தை வாடகைக்குவிடும் மற்றும் விற்பனை செய்யும் தனது கடையை தினமும் திறந்துவைத்து காத்திருக்கிறார்... கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்.
படம்: க.ஸ்ரீபரத்
8 / 28
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும், வளர்ச்சி பணிகளைத் தொடங்கி வைக்கவும்... தமிழக முதல்வர் பழனிசாமி நாளை (ஆகஸ்ட் -20) வருகை தரவுள்ளதையொட்டி - வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோப்ப நாய் உதவியுடன் இன்று சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்.
படங்கள் : வி.எம்.மணிநாதன்
9 / 28
10 / 28
வாகனக் கடனுக்கான மாதத் தவணையை செலுத்துவதற்கு 3 மாத கால அவசகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி.... திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (19.8.2020) வாகனங்களுடன் பாடைக் கட்டி... நூதனப் போராட்டத்தில் தனியார் வாகன ஓட்டுநர்கள் ஈடுபட்டனர்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
11 / 28
திருச்சி மாவட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் முதற்கட்டமாக... ரேஷன் கார்டுதார்களுக்கு விலையில்லா முகக் கவசம் இன்று (19.8.2020) வழங்கப்பட்டது.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
12 / 28
13 / 28
திருச்சி மாவட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் முதற்கட்டமாக... ரேஷன் கார்டுதார்களுக்கு விலையில்லா முகக் கவசம் இன்று (19.8.2020) வழங்கப்பட்டபோது, அவற்றைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
14 / 28
விநாயகர் சதுர்த்தியையொட்டி விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கமுடியாமல் அவதிப்படும் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள்... வருமாமின்றி வாங்கிய ரூ .13 லட்சம் கடனுக்கு வட்டிகூட கட்டமுடியாமல் அல்லல்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
படங்கள்: மு. லெட்சுமி அருண்.
15 / 28
16 / 28
விநாயகர் சதுர்த்தியையொட்டி விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கமுடியாமல் அவதிப்படும் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள்... வருமாமின்றி வாங்கிய ரூ .13 லட்சம் கடனுக்கு வட்டிகூட கட்டமுடியாமல் அல்லல்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வாழ்வாதாரம் இழந்த நிலையில் தற்போது - சொற்ப வருமானம் கிடைக்கும் என்பதற்காக திருஷ்டி பொம்மைகளை செய்து... அவற்றை விற்று பசியாறுவதாக சொல்கின்றனர்.
படங்கள்: மு. லெட்சுமி அருண்.
17 / 28
18 / 28
கரோனா தொற்றில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பெரிதும் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில்... சென்னை அருகே மண்ணிவாக்கம் ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஏரியில் தூர்வாரும் பணியில் பெண் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டுள்ளனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
19 / 28
20 / 28
21 / 28
22 / 28
ஆந்திரா மாநிலம் நாராயணவரம் அருகே விநாயகர் சதுர்த்தி மற்றும் உணவுக்காக பயிரிடப்பட்ட கம்பு பயிர்... அறுவடை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி விற்பனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
படங்கள் : ம.பிரபு
23 / 28
24 / 28
கேரள மாநிலம் - மூணாறு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் உயிரிழந்த தோட்டக்கலை தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (ஆக. 18) ’மே17’ இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
25 / 28
இந்தியாவிலேயே முதல்முறையாக... சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோருக்கான தொடர் கண்காணிப்பு மையத்தை... சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (19.8.2020) தொடங்கி வைத்தார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவமனை டீன் தேரணி ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
படங்கள் : பு.க.பிரவீன
26 / 28
27 / 28
28 / 28