Published on : 18 Aug 2020 18:46 pm

பேசும் படங்கள்... (18.08.2020)

Published on : 18 Aug 2020 18:46 pm

1 / 21
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் இம்மாநில அரசு செவ்வாய்கிழமைதோறும் புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதையடுத்து - இன்று (18.8.2020) புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பும் புதுவை காவல் துறையினர். படம் : எம்.சாம்ராஜ்
2 / 21
புதுச்சேரியில் செவ்வாய்கிழமை முழு ஊரடங்கையொட்டி இன்று (18.8.2020) 100 அடி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் சாலையோர தட்டு வண்டியில் முகத்தில் முகக்கவசத்துடன் உறங்குகிறார் ஒரு தொழிலாளி. படம்: எம்.சாமராஜ்
3 / 21
புதுச்சேரியில் செவ்வாய் கிழமை முழு ஊரடங்கையொட்டி இன்று (18.8.2020) புதுச்சேரி - கடலுார் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தில்... வாகனங்கள் எதுவும் செல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
4 / 21
புதுச்சேரியில் செவ்வாய் கிழமை முழு ஊரடங்கையொட்டி இன்று (18.8.2020) ஊரடங்கை மீறி செல்வோர் மீது... வழக்குப் பதிவுசெய்ய அவர்களை தடுத்து நிறுத்தி விசாரிக்கும் புதுவை காவல் துறையினர். இடம் : புதுச்சேரி - மறைமலையடிகள் சாலை படம் : எம்.சாம்ராஜ்
5 / 21
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில்... பேருந்து நிலையத்தில்... அமைந்துள்ள தற்காலிக மார்க்கெட் - இன்று (18.8.2020) செவ்வாய்கிழமை முழு ஊரடங்கையொட்டி வெறிச்சொடிக் காண்ப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
6 / 21
புதுச்சேரியில் இன்று (18.8.2020) செவ்வாய்கிழமை முழு ஊரடங்கையொட்டி நேரு வீதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியிருந்த நிலையில் ... ஒரு கடையின் முன்பு துவைத்த துணிகளை உலர வைக்கும் ஒரு முதியவர். படம்: எம்.சாம்ராஜ்
7 / 21
புதுச்சேரியில் இன்று (18.8.2020) செவ்வாய்கிழமை முழு ஊரடங்கையொட்டி எப்போதும் பரப்பரப்பாகவே காணப்படும் நேரு வீதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. படம்: எம். சாம்ராஜ்
8 / 21
சென்னை மாநகரில் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று (18.8.2020) டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து - அரசு அறிவுறுத்தலின்படி கிருமிநாசினி கொடுக்கப்பட்டு... சமுக இடைவெளியுடன் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம்: ம.பிரபு
9 / 21
சென்னை மாநகரில் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று (18.8.2020) டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து அரசு அறிவுறுத்தலின்படி கிருமிநாசினி கொடுக்கப்பட்டு... சமுக இடைவெளியுடன் கடைக்குள் செல்லுமாறு சென்னை - மயிலாப்பூரில் உள்ள கடையொன்றின் வாசலில் இருந்தபடி காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தபடியிருந்தனர். படம் : பிரபு
10 / 21
சென்னை மாநகரில் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று (18.8.2020) டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து - அதிக அளவில் மது வாங்க கூட்டம் வரும் என்கிற எதிர்பார்ப்பில் மயிலாப்பூர் கடையொன்றில் டோக்கன் வழங்க காத்திருந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. எதிர்பார்த்தபடி டோக்கன் கொடுத்து ஒழுங்குபடுத்தும் வகையில் மது வாங்க அவ்வளவாக கூட்டம் கூடவில்லை. படம்: ம.பிரபு
11 / 21
சென்னை மாநகரில் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று (18.8.2020) டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து - மயிலாப்பூர் கடையொன்றில் மது வாங்க வந்தோரை... இனிப்பு வழங்கி வரவேற்கும் டாஸ்மாக் ஊழியர்கள். படம்: ம.பிரபு
12 / 21
13 / 21
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள பாலன் இல்லத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும்... முகநூலில் அவதூறாக பதிவுசெய்த சமூக விரோதிகளை... உடனடியாக கைது செய்யக் கோரி... இன்று (18.8.2020) மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலூர் மாநகரச் செயலர் சிம்புதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
14 / 21
சென்னை மாநகரில் ஏறக்குறைய 5 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுபானக் கடைகள்... இன்று (18.8.2020) திறக்கப்பட்டன. இந்நிலையில் - சென்னை புறநகரான கிழக்கு தாம்பரம் பகுதிகளில்... திருவிழாப் போல பந்தலிட்டு, கூட்டத்தை கட்டுபடுத்த தடுப்புக் கட்டைகள் அமைத்து... 500 டோக்கன் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்து மெகா ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகத்தினர் செய்து காத்திருந்தனர். மேலும் - ஒரு டாஸ்மாக் கடைக்கு... 4 தன்னார்வலர்கள் மற்றும் 2 போலீஸார் பணியமர்த்தப்பட்டிருந்த நிலையில்.... மொத்தத்தில் டாஸ்மாக் கடைக்காரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சில மது அருந்துவோர்களே வந்திருந்தனர். இன்று மாலை வரை பல கடைகளில் 120 டோக்கனை தாண்டவே இல்லை. படங்கள் : எம்.முத்துகணேஷ்
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
சென்னை மாநகரில் ஏறக்குறைய 5 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுபானக் கடைகள்... இன்று (18.8.2020) திறக்கப்பட்டன. இந்நிலையில் - சென்னை புறநகரான மேற்கு தாம்பரம் பகுதிகளில்... திருவிழாப் போல பந்தலிட்டு, கூட்டத்தை கட்டுபடுத்த தடுப்புக் கட்டைகள் அமைத்து... 500 டோக்கன் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்து மெகா ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகத்தினர் செய்து காத்திருந்தனர். ஆனால் - டாஸ்மாக் கடைக்காரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சில மது அருந்துவோர்களே வந்திருந்தனர். இன்று மாலை வரை பல கடைகளில் 100 டோக்கனை தாண்டவே இல்லை. படங்கள் : எம்.முத்துகணேஷ்
19 / 21
20 / 21
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள பாலன் இல்லத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும்... முகநூலில் அவதூறாக பதிவுசெய்த சமூக விரோதிகளை... உடனடியாக கைது செய்யக் கோரி... இன்று (18.8.2020) மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட கிளையின் சார்பாக மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
21 / 21
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கார்ணம்பட்டு பகுதி சாலையில்... இன்று (18.8.2020) பகல்பொழுதியில் ... அறுவடை செய்து கதிரடித்து கிடைக்கப்பெற்ற நெல்லை காயவைத்து.... அதை சுத்தம் செய்ய காற்றுள்ளபோதே.... தூற்றும் பெண்கள். படம்: வி.எம்.மணிநாதன்.

Recently Added

More From This Category

x