1 / 50
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி மதிப்பெண் சான்றிதழ்... இன்று (17.8.2020) வழங்கப்பட்டது. சென்னை - எழும்பூர் மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் பெறும் மாணவிகள்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
2 / 50
3 / 50
தேசிய கல்விக் கொள்கையைத் திரும்ப பெற வலியுறுத்தி... மத்திய அரசை கண்டித்து மதிமுக-வின் தலைமை அலுவலகம் முன்பு இன்று (17.8.2020) அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
படம் : க,ஸ்ரீபரத்
4 / 50
அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியதையடுத்து... சென்னை - அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆர்வமுடன் வந்த பெற்றோர்.
படங்கள் : பு.க.பிரவீன்
5 / 50
6 / 50
7 / 50
8 / 50
9 / 50
இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு சார்பில்... விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
இடம்: கேகே நகர்,எம்.ஜி.ஆர் மார்கெட் அருகில்
படம்: பு.க.பிரவீன்.
10 / 50
11 / 50
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நேற்று (16.8.2020) சாலையோரங்களில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றோரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கஷ்டப்பட்டு எழுப்பி... உணவும் தண்ணீரும் வழங்கினர். அப்போதுதான் தெரிந்தது அந்த ஆதரவற்றோர் பசியில் சுருண்டு படுத்திருக்கிறார்கள் என்பது.
உணவு வழங்கியோரை விசாரித்தபோது அவர்கள் ’சன்டே ஏஞ்சல்ஸ்’ என்கிற முகநூல் குழும சந்தோஷ் மற்றும் நிஷித் என்பது தெரியவந்தது.
இதுபோன்ற உதவிகளைக் கடந்த இரண்டு வருடமாக வழங்குவதாக சொல்லும் இவர்கள்... என்ஜிஓ காலனியில் தொடங்கி... பாளையங்கோட்டை , திருநெல்வேலி சந்திப்பு மற்றும் திருநெல்வேலி டவுன் வரையில் கண்ணில் தென்படுகிற ஆதரவற்றோருக்கு உணவளிக்கிறார்கள்.
படங்கள்: மு. லெட்சுமி அருண்
12 / 50
13 / 50
14 / 50
15 / 50
16 / 50
சென்னையில் குடிநீர் தேவையைப் பூத்திசெய்யும் முக்கிய ஏரியான போரூர் ஏரி கடந்த ஆண்டு இதே நாட்களில் வறண்டு காணப்பட்டது. தற்போது சென்னைக்கு வீராணம் உட்பட மற்ற ஏரிகளில் இருந்து தொடர்ந்து... நீர் வந்து கொண்டிருப்பதால், இந்த ஆண்டு போரூர் ஏரியில் இருந்து நீர் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 70 மில்லியன் கனஅடி முழு கொள்ளளவு கொண்ட... இந்த ஏரியில் இருந்து தற்போது நீர் எடுக்காததாலும், அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாகவும் 30 மில்லியன் கனஅடிவரை போரூர் ஏரியில் நீர் தேங்கி கண்கொள்ளாக் காட்சியளிக்கிறது.
படங்கள் : ம.பிரபு
17 / 50
18 / 50
19 / 50
சென்னையில் ஊரடங்கு காலங்களில் விலங்குகள், பறவைகள் உணவுக்கு மிகவும் சிரமப்படுகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவற்றுக்கு தொடர்ந்து உணவு கிடைத்த நிலையும் இப்போது இல்லை. இந்நிலையில் சென்னை - சிம்சன் அருகே உள்ள சுவாமி சிவானந்தா சாலையில் காலைப்பொழுதில் நடைப்பயிற்சி செய்வோர்... பறவைகளுக்கும் காகங்களுக்கும் இரை போட்டு வருகின்றனர்.
படங்கள் : ம.பிரபு
20 / 50
21 / 50
22 / 50
23 / 50
24 / 50
திருச்சி பீம நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (17.8.2020) மாணவர் சேர்க்கை தொடங்கியது. தலைமை ஆசிரியையிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்த பெற்றோர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
25 / 50
திருச்சி பீம நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (17.8.2020) மாணவர் சேர்க்கை தொடங்கியது. பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரிடம் உடனடியாக பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
26 / 50
27 / 50
திருச்சி பீம நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (17.8.2020) மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்காக சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து காத்திருந்த பெற்றோர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
28 / 50
திருச்சி - கூனி பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்யாததைக் கண்டித்து... இன்று (17.8.2020) அப்பகுதியினர் மாநகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் கால்வாயில் எடுத்த மணலைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
29 / 50
30 / 50
ரூ. 50 லட்சம் இழப்பீடு, வாரிசுக்கு பணி வழங்குவது... என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (17.8.2020) திருச்சி - மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ள டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
31 / 50
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில்... மதுரை தமுக்கம் அஞ்சல் நிலையம் முன்பு...இன்று (17.8.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
32 / 50
சேலத்தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி... அவற்றை கட்டுப்படுத்தக் கோரி... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள்... இன்று (17.8.2020) நாய் முகமூடியை அணிந்தவாறு நூதன முறையில் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
படம் : எஸ்.குரு பிரசாத்.
33 / 50
புதுச்சேரியில் ஏ. எஃப். டி பஞ்சாலையை மூடுவதற்க்கு அரசு பிறப்பித்துள்ள ஆணையை... ரத்து செய்யக் கோரி இன்று (17.8.2020) தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
34 / 50
விழுப்புரம் மாவட்டம் - ஆரோவில் மற்றும் பொம்மையார்பாளையம் கடல் பகுதியில்... கடல் அலையின் சீற்றத்தால் மணல் பரப்பில் 5 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் மீனவர்கள் படகுகளை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
படம்: எம்.சாம்ராஜ்
படங்கள்.எம்.சாம்ராஜ்
35 / 50
தமிழகமெங்கும் அரசு அறிவிப்பின்படி இன்று (17.8.2020) பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் சேர்க்கைக்காக வந்த மாணவர்கள்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
36 / 50
37 / 50
38 / 50
39 / 50
இ - பாஸ் நடைமுறையில் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளதையொட்டி... இன்று (17.8.2020) ஏராளமான வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுத்தன. இதன் காரணமாக சென்னை - முகப்புப் பகுதியான வண்டலூரில் மிகுந்த வாகன நெரிசல் ஏற்பட்டது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
40 / 50
41 / 50
42 / 50
வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியையொட்டி... விநாயகர் சிலைகளில் நவதானியங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள கோவை குளங்கள் அமைப்பைச் சேர்ந்தோர்.
படம் ; ஜெ .மனோகரன்
43 / 50
44 / 50
கோவை ராஜ வீதி துணி வணிகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை
வழங்குகிறார் தலைமை ஆசிரியர் மணியரசி.
படம் : ஜெ .மனோகரன்
45 / 50
46 / 50
கோவை ராஜ வீதி துணிவணிகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... இன்று (17.8.2020) சேர்க்கைக்காக பெற்றோருடன்
வந்திருந்த மாணவர்கள்.
படம் : ஜெ .மனோகரன்
47 / 50
48 / 50
49 / 50
50 / 50