1 / 30
'கரோனா' தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுகிழமைதோறும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... வெறிச்சோடிக் காணப்படும் சென்னை - என்.எஸ். சி போஸ் சாலையில்... ’காற்றுக்கென்ன வேலி.... கடலுக்கென்ன மூடி’ எனப் பாடியபடி.... சந்தோஷச் சிறகணிந்து மிதிவண்டியில் மிதக்கும் சிறுவர்கள்.
படம் : க,ஸ்ரீபரத்
2 / 30
3 / 30
சென்னையில் கடந்த சில நாட்களாக... ’கரோனா’ தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. இந்நிலையில் - தற்போது மீண்டும் தொற்றுப் பரவல் அதிகமாகி வருவதால்... ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு நாளில் வெளியில் வருபவர்களிடம் விசாரிக்கும் போலீஸார், தகுந்த காரணங்களை ஆதாரத்துடன் தெரிவிப்பவர்களை மட்டுமே மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர்.
இடம்: சென்னை - அண்ணா சாலை.
படங்கள் : க.ஸ்ரீபரத்
4 / 30
5 / 30
6 / 30
தமிழகத்தில் ‘கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக பல நாட்களாக மூடிக்கிடந்த... சிறுகோயில்கள் சில கட்டுப்பாடுகளுடன் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை - பல்லவன் இல்லம் சாலையில் உள்ள கோயிலில் இன்று (16.8.2020) மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்தனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
7 / 30
8 / 30
9 / 30
இன்று (16.8.2020) முழு ஊரடங்கையொட்டி... திருநெல்வேலி - டவுன் நெல்லையப்பர் கோயில் கீழ ரதவீதியில் எப்போதும் பரப்பரப்பாக உள்ள சாலையோரக் கடைகள் அனைத்தும் வாய்மூடிக் கிடந்தன. வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது கீழ ரத வீதி.
படங்கள்: மு.லெட்சுமி அருண்
10 / 30
11 / 30
சென்னையில் கடந்த 2 நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்... வளசரவாக்கம் தந்தை பெரியார் பூங்கா அருகே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ’கோவிட் - 19’ பரிசோதனை மையத்தில்... மக்கள் தாமாக முன்வந்து ’கரோனா’ பரிசோதனை மேற்கொண்டனர்.
படம் : பு.க.பிரவீன்
12 / 30
13 / 30
14 / 30
இன்று (16.8.2020) முழு ஊரடங்கையொட்டி... போலீஸார் உதவியுடன் போரூர் பாலம் அருகில் சாலையோர ஆதரவற்றோருக்கு ’பசி இல்லாத சென்னை’ அமைப்பு சார்பில்... மதிய உணவு வழங்கப்பட்டது.
படங்கள்: பு.க.பிரவீன்
15 / 30
16 / 30
17 / 30
சேலத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டை மாரியம்மன் கோயில் சாலை... முழு ஊரடங்கையொட்டி... இன்று (16.8.2020) வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : எஸ்.குருபிரசாத்
18 / 30
தமிழகம் முழுவதும் இன்று (16.8.2020) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் நகரப் பகுதி பொதுமக்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தவில்லை என்பதை... பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்ட பரவலான மக்கள் நடமாட்டமே நிரூபித்தது.
உதாரணமாக சேலம் - முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் முழுஊரடங்கை கடைபிடிக்காமல் சென்ற வாகன ஓட்டிகளே சாட்சி.
படங்கள் : எஸ்.குருபிரசாத்
19 / 30
20 / 30
வரும் 22-ம் தேதி... விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி... மதுரை - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே தயாராகிவரும் விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
21 / 30
இன்று (16.8.2020) எந்தத் தளர்வும் இல்லாத முழுஊரடங்கையொட்டி... எப்போதும் பரப்பரப்பாகவே இருக்கும் மதுரை கீழ வெளி வீதி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
22 / 30
மதுரை - முடக்கி சாலை பகுதியில் இன்று (16.8.2020) தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ’கரோனா’ தொற்றுப் பரவல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அருகில் - மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
23 / 30
மழைக் காலங்களில் வெள்ள அபாயத்தை தவிர்க்க... அடையாறு ஆற்றின் இருகரையோரங்களிலும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தக் கட்டுமானப் பணிகளை ஆதனூர்,ஊரப்பாக்கம்,மண்ணிவாக்கம் பகுதிகளில் இன்று (16.8.2020) செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். இதில் வேலை நடக்காத பகுதிகளைப் பற்றியும்... ஆக்கிரமிப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கலந்தாலோசித்தார்
.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
24 / 30
25 / 30
26 / 30
27 / 30
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (16.8.2020) காலையில் இருந்தே வானில் மேகமூட்டம் காணப்பட்டது. மதியவேளையில் சூரியனைச் சுற்றி வட்ட வடிவில் ஒளிச்சிதறல் தோன்றியது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
28 / 30
29 / 30
30 / 30