Published on : 15 Aug 2020 21:19 pm

பேசும் படங்கள்... (15.08.2020)

Published on : 15 Aug 2020 21:19 pm

1 / 65
திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.8.2020) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. படம் : ஜி.ஞானவேல்முருகன். .
2 / 65
3 / 65
திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.8.2020) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. படம் : ஜி.ஞானவேல்முருகன்.
4 / 65
கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. படம் : ஜி.ஞானவேல்முருகன்.
5 / 65
திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.8.2020) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் விழாவில் அணிவகுப்பு நடத்திய காவல் துறையினர். படம் : ஜி.ஞானவேல்முருகன்.
6 / 65
7 / 65
திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.8.2020) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற முகக்கவசம் அணிந்து உரிய இடைவெளி விட்டு வந்த சுகாதாரத் துறையினர். படம் : ஜி.ஞானவேல்முருகன்.
8 / 65
திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15.8.2020) நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அனைத்து தரப்பினரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்த நிலையில், நிகழ்வுகளைப் பதிவு செய்ய வந்திருந்த பத்திரிகைப் புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு விதி முறைகளைச் சற்றும் கடைப்பிடிக்க வில்லை. படம் : ஜி.ஞானவேல்முருகன்.
9 / 65
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் புதுச்சேரி முதல்வர் முதல்வர் நாராயணசாமி உரையாற்றுகிறார். படம் :எம்.சாம்ராஜ்
10 / 65
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். படம் :எம்.சாம்ராஜ்
11 / 65
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சுதந்திர தின விழா நினைவாக மரக்கன்றை நட்டு வைத்த முதல்வர் நாராயணசாமி. படம் :எம்.சாம்ராஜ்
12 / 65
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அண்மையில் பிரிக்கப்பட்டு... புதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது, இவ்விழாவில் - தேசியக் கொடியை ஆட்சியர் ஜான் லூயிஸ் ஏற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டா. இதைத் தொடர்ந்து விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன். படங்கள் : எம்.முத்துகணேஷ்
13 / 65
14 / 65
15 / 65
16 / 65
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். படம்:எம்.முத்துகணேஷ்
17 / 65
இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்... (15.8.2020) சென்னை- கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து... அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். படங்கள்: ம.பிரபு
18 / 65
19 / 65
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு... இன்று (15.8.2020) திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு பிரம்மாண்ட தூணில் பறக்கவிடப்பட்டிருந்த தெசியக் கொடியை... ஆச்சரியமாக பார்த்த ஒரு சிறுவன்... அந்தக் கொடிக்கு நெகிழ்ச்சியுடன் வணக்கம் வைத்து தனது மரியாதையைச் செலுத்தினார். படங்கள் : மு.லெட்சுமி அருண்.
20 / 65
21 / 65
74 -வது சுதந்திர தின விழாவையொட்டி... இன்று (15.8.2020) சென்னை கோட்டையின் முன்பு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார். டங்கள் : ம.பிரபு
22 / 65
23 / 65
24 / 65
25 / 65
26 / 65
இன்று (15.8.2020) சென்னயில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி சுதந்திர தின உரையாற்றினார். படம் : ம.பிரபு
27 / 65
இன்று (15.8.2020) சென்னயில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறூப்பினர்கள் மற்றும் விருது பெற்ற பெருமக்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.. படங்கள் : ம.பிரபு
28 / 65
29 / 65
இன்று (15.8.2020) சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின உரைக்குப் பிறகு... நிகழ்ச்சி நிறைவடைந்து முதல்வர் புறப்பட்டபோது ... வழி அனுப்பிவைக்கும் கட்சியினர். படம்:ம.பிரபு
30 / 65
74 -வது சுதந்திர தினத்தையொட்டி... இன்று (15-8-2020) சென்னை - மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்... மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். படம் : க.ஸ்ரீபரத்
31 / 65
32 / 65
33 / 65
34 / 65
இன்று தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவில்... பல்வேறு துறையைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு விருதுகளை முதல்வர் பழனிசாமி இன்று (15.8.2020) வழங்கினார். சமூக சேவைக்கான விருது செல்வகுமார் என்பவருக்கு வழங்கப்பட்டது. படம் : ம.பிரபு
35 / 65
இன்று தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவில்... உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதனுக்கு கோவிட்-19 முதலமைச்சர் சிறப்பு விருதினை முதல்வர் பழனிசாமி இன்று (15.8.2020) வழங்கினார். படம் : ம.பிரபு
36 / 65
இன்று தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவில்... பல்வேறு துறையைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு விருதுகளை முதல்வர் பழனிசாமி இன்று (15.8.2020) வழங்கினார். முதலமைச்சரின் நல் ஆளுமை விருது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.
37 / 65
இன்று தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவில்... பல்வேறு துறையைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு விருதுகளை முதல்வர் பழனிசாமி இன்று (15.8.2020) வழங்கினார். ’கோவிட்-19' தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் சிறப்பு பணியாற்றும் சென்னை - மாநகராட்சியின் சிறப்பு பணிக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டது. படம் : ம.பிரபு
38 / 65
இன்று தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவில்... பல்வேறு துறையைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு விருதுகளை முதல்வர் பழனிசாமி இன்று (15.8.2020) வழங்கினார். தமிழக அரசின் மருத்துவ சேவையை பாராட்டி சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விருது பெற்றார். படம் : ம.பிரபு
39 / 65
இன்று தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவில்... பல்வேறு துறையைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு விருதுகளை முதல்வர் பழனிசாமி இன்று (15.8.2020) வழங்கினார். வேளாண்மை துறையினருக்கு ’புதிய யுத்தி சிறப்பு விருதும், கரோனா தடுப்பு பணியில் சிறப்பு பணியாற்றிய காவலர்கள். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. படங்கள் : ம.பிரபு
40 / 65
41 / 65
42 / 65
43 / 65
44 / 65
திருநெல்வேலி - பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று (15.8.2020) காலை 8 மணியளவில் நடைபெற்ற 74-வது இந்திய சுதந்திர தினவிழாவில்... ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி காவல் துறையினரின் அணிவகுப்பைத் தலைமையேற்றுத் திறம்பட நடத்தினார். தன் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த தகவல் அறிந்த நிலையிலும்... தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்தச் செல்லாமல்... இன்று நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புக்குத் தலைமையேற்று நடத்திய மகேஸ்வரியின் கடமை உணர்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவரது தந்தை இறந்த தகவல் சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பின்புதான் எல்லோருக்கும் தெரியவர... இதைத் தொடர்ந்து மகேஸ்வரி திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார். படங்கள் : மு.லெட்சுமி அருண்.
45 / 65
46 / 65
47 / 65
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில்...சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா இன்று (15.8.2020) கொண்டாடப்பட்டது. சேலம் ஆட்சியர் ராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ’கரோனா’ தொறுப் பரவலைத் தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். . படங்கள் : எஸ்.குருபிரசாத்.
48 / 65
49 / 65
50 / 65
51 / 65
கரோனா தொற்றுப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இன்று (15.8.2020) திருநெல்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி நடக்கும் மைதானத்துக்குள் சிறுவர்களுக்கும் முதியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து... மைதானத்தின் உள்ளே நடக்கும் விழா நிகழ்ச்சிகளை... பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே நின்று... ரசித்து பார்க்கும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண்
52 / 65
53 / 65
இன்று (15.8.2020) திருநெல்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி அணிவகுப்பில் கலந்துகொண்ட காவலர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். படம்: மு.லெட்சுமி அருண்
54 / 65
இன்று (15.8.2020) திருநெல்வேலி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியின்போது காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை... மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதிஷ் ஏற்றுக்கொண்டார். படம்: மு.லெட்சுமி அருண்
55 / 65
இன்று (15.8.2020) திருநெல்வேலி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியின்போது காவல் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதிஷ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். படம்: மு.லெட்சுமி அருண்
56 / 65
இன்று (15.8.2020) திருநெல்வேலி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியின்போது காவல் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதிஷ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து வண்ண பலூன்களை ஆகாயத்தில் பறக்கவிட்டார். படம்: மு.லெட்சுமி அருண்
57 / 65
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழால் அரசு இசைப் பள்ளி மாணவிகள் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடினர். படம் : மு. லெட்சுமி அருண்.
58 / 65
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்... அரசு இசைப் பள்ளி மாணவிகள் கர்னாடக இசையில் அமைந்த பாடலுக்கு ஏற்ப பரதநாட்டியம் ஆடினர் . படம் : மு. லெட்சுமி அருண்.
59 / 65
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்... அரசு இசைப் பள்ளி மாணவிகள் கர்னாடக இசையில் அமைந்த பாடலுக்கு ஏற்ப பரதநாட்டியம் ஆடினர் . : மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியை... விழா மேடையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் ரசித்து மகிழ்ந்தனர். படம் : மு. லெட்சுமி அருண்.
60 / 65
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழும்பியுள்ள நிலையில்... இன்று (15.8.2020) அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வந்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தகவலறிந்து அங்கே வந்த அதிமுகவினர் சிலர்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். படம் : பு.க.பிரவீன்
61 / 65
74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு... இன்று (15.8.2020) சென்னை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்... மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணதாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கரோனா தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி உயிர் நீத்த காலத்தில் காவலர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கி அவர்களை சிறப்பித்தார். படம் : பு.க.பிரவீன்
62 / 65
63 / 65
64 / 65
65 / 65
74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.8.2020) சென்னை - எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில்... கரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்களுக்கு மருத்துவமனை இயக்குநர் விஜயா சான்றிதழ் வழங்கினார். படம்: பு.க.பிரவீன்

Recently Added

More From This Category

x