1 / 45
ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால்.. தங்கள் பணி தொடர்பாக சென்னை நகருக்குள் வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாலை பணி முடிந்து வீடு திரும்பும் வாகனங்களாலும், வண்டலூர் புதிய பாலத்தில் கட்டுமான வேலைகள் நடைபெறுவதாலும்... நேற்று (13.8.20200) போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்தன.
படங்கள் : எம். முத்துகணேஷ்
2 / 45
3 / 45
நாளை (15.8.2020) சுதந்திர தினத்தை முன்னிட்டு... சென்னை விமான நிலையம் நேற்று முதல் இரவு நேரங்களில் அலங்கார மின் விளக்கொளியில் வண்ண வெளிச்சத்தை சிந்தியது.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
4 / 45
5 / 45
6 / 45
நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு... திருநெல்வேலி - பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழா அணிவகுப்புக்கான... ஒத்திகை நிகழ்ச்சியில் நேற்று போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
படங்கள் : மு.லெட்சுமிஅருண்
7 / 45
8 / 45
9 / 45
நாளை (ஆகஸ்ட்- 15) நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு நலன் கருதி... திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில்... போலீஸார் மோப்ப நாய் கொண்டு சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
படங்கள் : மு.லெட்சுமி அருண்
10 / 45
11 / 45
12 / 45
நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு...
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா அணிவகுப்புக்கான... ஒத்திகை நிகழ்ச்சியில் நேற்று போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 45
14 / 45
திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நேற்று (13.8.2020) தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம்... ’’எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக வேண்டும் என்பது அதிமுகவின் அனைத்து தொண்டர்களின் விருப்பம்’’ என்றார்.
தகவல் + படங்கள் : மு.லெட்சுமி அருண்
15 / 45
16 / 45
17 / 45
சென்னையில் - கோயம்பேடு மார்க்கெட்டை உடனடியாக திறக்கக் கோரி... விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் - நேற்று (13.8.2020) மார்க்கெட் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கரோனா ஊரடங்கையொட்டி போராட்டத்துக்கு அனுமதியில்லாத காரணத்தால்... காவல் துறையினர் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
படங்கள் : ம.பிரபு
18 / 45
19 / 45
20 / 45
திருநெல்வேலி - குருத்துடையார்புரம் ரயில்வே பாலம் கட்டுமானப் பணிக்கான தளவாட வேலைகள் கொக்கிரகுளம் ஆற்றங்கரையில் இருந்த மரங்களின் நிழலில் நடைபெற்று வந்தது.
தற்போது - அந்தத் தளவாடங்களை மேலே எடுத்துச் செல்வதற்கு... நிழல் தந்த மரங்களே தடையாக இருப்பதால்... அந்த மரங்களைத் தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர்.
தேவைப்படும் வரை மனிதர்களைப் பயன்படுத்திவிட்டு... கடைசியில் அவர்களை கழற்றிவிட்டுவிடுவதைப் போல - மரத்தின் நிழலில் இளைப்பாறியவர்களே... மரத்தின் கிளைகளை அகற்றுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள்... ’இதுதாண்டா உலகம்’ என தத்துவ முத்துக்களை உதிர்த்தனர்.
படங்கள்: மு. லெட்சுமி அருண்.
21 / 45
22 / 45
23 / 45
சேலம் - மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... இன்று (14.8.2020) போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் மைதானம் முழுவதும் சோதனையை மேற்கொண்டனர்.
படங்கள் : எஸ்.குரு பிரசாத்
24 / 45
25 / 45
26 / 45
இன்று (14.8.2020) ஆடி மாத கடைசி வெள்ளி கிழமை என்பதால்... சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ ரேணுகா தேவி கோயிலில் நடைபெற்ற பால் அபிஷேகத்தை தரிசனம் செய்யும் பக்தர்கள்.
படம் : க.ஸ்ரீபரத்
27 / 45
28 / 45
சேலம் - போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் இன்று (14.8.2020) முதல் காய்கறி மற்றும் பூக்கடைகள் தங்கள் விற்பனையை தொடங்கின.
படங்கள் : எஸ்.குரு பிரசாத்
29 / 45
30 / 45
31 / 45
புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு... இன்று (14.8.2020) அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட காவல்துறையினர்.
படம்: எம்.சாம்ராஜ்
32 / 45
33 / 45
புதுச்சேரியில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு... நேற்று (13.8.2020) இரவு முதல் புதுச்சேரி - சட்டப்பேரவை வளாகம் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்க ஆரம்பித்தது.
34 / 45
புதுச்சேரியில் - பொதுமக்களின் குடிநீருக்கு வாழ்வாதாரமாக விளங்கும் ஊசுட்டேரி.... இப்போது தண்ணீரின்றி வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. படம்: எம்.சாம்ராஜ்
35 / 45
சென்னை - சைதாப்பேட்டை அடையாற்றில் குளிர் தாமரை புதர் போல் வளந்துள்ளது. அடுத்து வரும் மழை காலத்தில் மழைநீர் அதிகரித்தால்...அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடலாம்... எனவே அந்தப் புதரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
36 / 45
37 / 45
38 / 45
நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு... மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி ... ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு வந்துள்ள பார்சல்களை மோப்ப நாயைக் கொண்டு இன்று (14.8.2020) பரிசோதனை மேற்கொண்டனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
39 / 45
தமிழகம் முழுவதும் இ- பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி... இன்று (14.8.2020) சென்னை கே.கே.நகர் வட்டாட்சியரிடம் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் குடும்பத்தோடு மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்
படம்: ம.பிரபு
40 / 45
41 / 45
42 / 45
நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு... இன்று (14.8.2020) சென்னை தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
படம்: க.ஸ்ரீபரத்
43 / 45
நாளை சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக... இன்று (14.8.2020) சென்னை தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம்... ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
படங்கள்: க.ஸ்ரீபரத்
44 / 45
45 / 45