Published on : 12 Aug 2020 17:38 pm

பேசும் படங்கள்... (12.08.2020)

Published on : 12 Aug 2020 17:38 pm

1 / 30
வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது... செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்ற வரும் தமிழக முதல்வரை வரவேற்பதற்கான... ஒத்திகை நிகழ்ச்சி இன்று (12.8.2020) சென்னையில் நடைபெற்றது. படம் : க.ஸ்ரீபரத்
2 / 30
தமிழகம் முழுவதும் ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க அரசுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - இருசக்கர வாகனம் வைத்திருப்போர் தாங்கள் அன்றாட வேலைகளுக்குச் செல்ல அதை பயன்படுத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனம் இல்லாதோர்... அன்றாட வேலைக்குச் செல்ல சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை மாநகரில் சைக்கிளைப் பயன்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
3 / 30
4 / 30
மயிலாப்பூர் கோயில் குளம் பல நாட்களாக தண்ணீரின்றி வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்த போதிலும்... குளத்தில் தண்ணீர் ஏறவில்லை. படங்கள் : க.ஸ்ரீபரத்
5 / 30
6 / 30
7 / 30
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து... தாம்பரம் பகுதியில் மழைநீர் கால்வாய்கள் தூர் வாரப்படுகின்றன. தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் பகுதியில் மழைர்நீர் கால்வாயில் தேங்கிய சகதியை அள்ளி வெளியேற்றும் ஊழியர்கள். படங்கள் : எம்.முத்துகணேஷ்
8 / 30
9 / 30
10 / 30
கந்த சஷ்டிக் கவசத்தை அவதூறாகப் பேசிய யூ-டியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்து... ’இந்து மக்கள் கட்சி’யைச் சேர்ந்தோர் - பல்லாவரம் நாகல்கேணி பகுதியில் இன்று (12.8.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
11 / 30
12 / 30
விநாயகர் சதூர்த்தி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில்... தமிழக அரசும் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லையென அறிவிக்காததால்... திருவள்ளூர் மாவட்டம் - ஆரணிப் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு. யாரும் ஆர்டர் கொடுக்காததால்... வணணம் பூசாமல் நிறுத்தி வைத்துள்ளனர். படம் : ம.பிரபு
13 / 30
14 / 30
15 / 30
திமுக கழகத்தின் நற்பெயருக்கும், திமுக தலைவரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில்... சமூக வலைதளத்தில் செயல்படும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி - மதுரை காவல்துறை ஆணையரிடம் இன்று (12.8.2020) மனு கொடுக்க வந்த திமுகவின் மதுரை மாவட்டச் செயலாளர் தளபதி, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் மற்றும் அக்கட்சியினர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 30
’கரோனா’ தொற்றுப் பாதிப்புக்காக தனிப்படுத்தப்பட்டோருக்கு... தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில்... திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் இன்று (12.8.2020) திரைப்பட நடிகரும், மிமிக்கிரி கலைஞர்களுமான ரோபோ சங்கர் மற்றும் செந்தில்... ஆகியோர் பல குரல்களில் பேசினர். படம்: மு.லெட்சுமி அருண்
17 / 30
18 / 30
திருநெல்வேலி - பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில்... ‘கரோனா’ தொற்றுப் பரவலை தடுத்துக்கொள்வது, செல்லும் இடங்களில் சமூக இடைவெளியைப் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்றவற்றைப் பற்றிய திரைப்பட நடிகரும், மிமிக்கிரி கலைஞர்களுமான ரோபோ சங்கர் மற்றும் செந்தில்... ஆகியோர் இன்று (12.8.2020) விழிப்புணர்வூட்டினர். படங்கள் : மு.லெட்சுமி அருண்
19 / 30
20 / 30
கோவையில் வரும் 15-ம் தேதி நடைபெறவிருக்கிற... 74-வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றத் தயாராகிவரும் வ.உ.சி மைதானம். படம் : ஜெ .மனோகரன்
21 / 30
22 / 30
23 / 30
செங்கல்பட்டு மாவட்டத்தில்... ’கரோனா’ தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இம்மாவட்டத்தில் அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில்... ’கரோனா’ தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம்... இன்று (12.8.2020) மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ’கரோனா’ தடுப்பு சிறப்பு அதிகாரி உதயசந்திரன், டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஐஜி நாகராஜன், அன்பு மற்றும் ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். படங்கள்: எம்.முத்து கணேஷ்
24 / 30
25 / 30
26 / 30
ஒரு சிறு மழைக்குக் கூட வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் பகுதிதான்... சென்னை - தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதி. இப்பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை செவிமடுத்த அரசு நீண்ட நாட்களுக்குப் பிறகு... மழைநீர் கால்வாய் அமைத்து வருகிறது. அதற்கான கட்டுமானப் பணிகள் மும்முரமாக இன்று (12.8.2020) நடைபெறுன. படங்கள்: எம்.முத்துகணேஷ்
27 / 30
28 / 30
29 / 30
30 / 30

Recently Added

More From This Category

x