1 / 32
’கரோனா’ தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக... தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ள நிலையில்... எப்போதும் பரபரப்பாக காணப்படும் பார்க் டவுன் சாலை எந்த வாகனப்போக்குவரத்தும் இன்றி இன்று (9.8.2020) வெறிச்சோடிக் காணப்பட்டதுடன்... அந்தச் சாலையில் அப்பகுதி சிறுவர்கள் பம்பரம் விளையாடி மகிழ்ந்தனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
2 / 32
3 / 32
தமிழகத்தில் - குறைந்த வருமானம் உள்ள கோயில்களைத் திறக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பால்... பல நாட்களாக மூடிக்கிடந்த கோயில்கள் திறக்க ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் - சென்னை பல்லவன் இல்லம் அருகில் அமைந்திருக்கும் பாடிகாட் மூனிஸ்வரன் கோயில் எதிரில் உள்ள ஸ்ரீ தேவி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்... சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில்... இன்று (9.8.2020) தரையில் வட்டமிடுகிறார் ஒரு பெண்.
படம் : க,ஸ்ரீபரத்
4 / 32
5 / 32
’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க... தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையோரம் வாழும் ஆதரவற்றோருக்கு இன்று (9.8.2020) சென்னை - பூக்கடை போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உணவு வழங்கினர்.
படம் : க.ஸ்ரீபரத்
6 / 32
7 / 32
தமிழகம் முழுவதும் இன்று (9.8.2020) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்... சேலம் - அஸ்தம்பட்டி பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார்.
படங்கள் : எஸ்.குரு பிரசாத்.
8 / 32
9 / 32
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இன்று (9.8.2020) சேலம் நகரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும்...
குரங்குச்சாவடி பகுதியில் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : எஸ்.குருபிரசாத்.
10 / 32
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இன்று (9.8.2020) சேலம் நகரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும்... ஐந்து ரோடு சாலை வெறிச்சோடிக்காணப்பட்டது.
படம்: எஸ்.குரபிரசாத்
11 / 32
’கரோனா’ தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில்... இன்று (9.8.2020) சேலம் நகரில் . செவ்வாய்பேட்டை பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு... அந்தப் பகுதி இளைஞர்கள் மாநகராட்சி அனுமதியுடன் உணவு வழங்கினர்.
படம் : எஸ்.குருபிரசாத்
12 / 32
13 / 32
புதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில்... 2-ம்கட்ட உயர் மின்னழுத்த கோபுர கம்பிகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. ’’முழு ஊரடங்கு காரணமாக ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே மிக எளிதாக எந்தச் சிரமமும் இன்றி... பணி செய்ய முடிந்தது’’ என பணியில் இருந்த மின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
14 / 32
15 / 32
எப்போதும் மிகுந்த பரபரப்பாக இருக்கும்... பரனூர் சுங்கச்சாவடி இன்று (9.8.2020) முழு ஊரடங்கு காரணத்தால் போக்குவரத்து வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : எம்.முத்துகணேஷ்
16 / 32
முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இன்று (9.8.2020) எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை மற்றும் காந்தி மார்க்கெட் சாலை வெறிச்சோடி காணப்படும் காட்சி.
படம் : மு.லெட்சுமி அருண்
17 / 32
’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக மதுரைப் பகுதிகளில் மூடிக்கிடந்த உடற்பயிற்சி மையங்கள் நாளைமுதல் (10.8.2020) திறக்கப்பட உள்ளதையடுத்து... பயிற்சி நிலையம் ஒன்றில் இன்று உடற்பயிற்சிக் கருவிகளை சுத்தம் செய்து பூஜை செய்தனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
18 / 32
19 / 32
இன்று (9.8.2020) முழு ஊரடங்கு நாள் என்பதால் எப்போதும் மிகுந்த பரபரப்பாக காணப்படும் மதுரை - மேலமாசி வீதி வாகனப்போக்குவரத்தும், பொதுமக்களின் நெரிசலும் இன்றி காணப்படுகிறது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி.
20 / 32
இன்று (9.8.2020) முழு ஊரடங்கு நாள் என்பதால் எப்போதும் மிகுந்த பரபரப்பாக காணப்படும் மதுரை - திண்டுக்கல் ரோடு வாகனப்போக்குவரத்தும், பொதுமக்களின் நெரிசலும் இன்றி காணப்படுகிறது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி.
21 / 32
கந்த சஷ்டிக் கவசம் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட நபர்களை கண்டித்து இன்று (9.8.2020) நண்பகலில் மதுரை - திண்டுக்கல் சாலையில் உள்ள முருகன் கோயில் வாசலில் ’இந்து முன்னணி’ அமைப்பினர் சார்பில் ’வேல்’ வைத்து கந்த சஷ்டிக் கவசம் பாடல் பாடப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார்... ‘முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இன்று... அனுமதியின்றி இதுபோல் கூட்டம் கூடுவதை அனுமதிக்க மாட்டோம்...’ என்று கூறி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
22 / 32
23 / 32
வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி - உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் காவல் துறையினர் முகக்கவசம் அணிந்து... அணிவகுப்பு ஒத்திகையில் இன்று (9.8.2020) ஈடுபட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
24 / 32
25 / 32
கரோனா பாதிப்பு, ஊரடங்கு, இ-பாஸ் சிரமங்கள் போன்றவற்றால் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு நகரமாக கருதப்படும் புதுச்சேரியில் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிப்போயுள்ளன. இந்நிலையில் - புதுச்சேரி சுண்ணாம்பாறு படகுக் குழாம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தாலும்கூட... படகுச் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் எவருமே வராமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
படம்: எம்.சாம்ராஜ்
26 / 32
சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இன்றைய (9.8.2020) நிலை இது. முழு ஊரடங்கு நாளான இன்று தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் உட்பட மூடப்பட்ட நிலையில்... வடமாநிலத்தோர் மற்றும் நீண்டதூரம் பயணம் செய்யும் லாரி ஓட்டுநர்களுக்கு இந்த அம்மா உணவகம் மிக பயனுள்ளதாக அமைந்திருந்தது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
27 / 32
28 / 32
29 / 32
30 / 32
சென்னையை அடுத்த மணலியில் சுங்கத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில்
அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக
மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வந்த தகவலை அடுத்து...
கடந்த வாரம் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், தீயணைப்புத் துறை இயக்குநர் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அடங்கிய குழுவினர் மணலியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று அக்குழுவினர் அறிவுறுத்தியிருந்த நிலையில்... இன்று (9.8.2020) 10 கண்டெய்னர்கள் மூலம் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
படம் : பு.க.பிரவீன்
31 / 32
32 / 32