Published on : 05 Aug 2020 18:38 pm

பேசும் படங்கள்... (05.08.2020)

Published on : 05 Aug 2020 18:38 pm

1 / 50
சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் கழிவுகளைக் கொட்டி வருவதால்... இந்த ஏரி முழுவதும் மாசடைந்து காணப்படுகிறது. இது தொடர்புடைய நிர்வாகம் உடனடியாக தலையிட்டு - ஏரியில் இருந்து குப்பைகளை அகற்றி ஏரியைக் காக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள் : எம்.முத்து கணேஷ்
2 / 50
3 / 50
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா... இன்று (ஆகஸ்ட் - 5) நடைப்பெற்றது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - காட்பாடியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் காவல்துறையினர் இன்று காலையில் சோதனையில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
4 / 50
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (ஆகஸ்ட் - 5) நடைப்பெற்றது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க... பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஸ்ரீ சாலை கங்கையம்மன் கோயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் காவல்துறையினர் இன்று காலையில் சோதனையில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன
5 / 50
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட இன்று (5.8.2020) அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்நிலையில் - அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதை நிறுத்த வேண்டும்; காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்; ‘முத்தலாக்’ தடைச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... வேலூர் - அண்ணா கலையரங்கம் அருகே இன்று (ஆகஸ்ட் - 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்
6 / 50
7 / 50
மாநில, மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து ’தமிழ்நாடு வங்கி’யை உருவாக்கக் கோரி.. சென்னை - பாரிமுனை எம்சிசி பேங்க் வாயிலில் சென்னை - மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இன்று (5.8.2020) போராட்டம் நடைபெற்றது. படங்கள் : ம.பிரபு
8 / 50
வேலூர் - அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில்... வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட் - 5) தர்ணா போராட்டம் நடைபெற்றது. படம் : வி.எம்.மணிநாதன்.
9 / 50
தமிழகம் முழுவதும் ’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்... பொது நிகழ்ச்சிகளுக்கும் கோயில் விழாக்களுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு ஒலி - ஒளி அமைப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (5.8.2020) தாம்பரம் நீதிமன்றம் அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
10 / 50
11 / 50
12 / 50
நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தியும்... வழக்கறிஞர்களுக்கு ’கரோனா’ கால நிவாரணம் வழங்கக் கோரியும்.... திருச்சி ஒருங்கிணைந்த நீதி மன்றம் வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று (5.8.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
13 / 50
அயோத்தில் நடைபெறும் ஸ்ரீ ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவையொட்டி... திருச்சியில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று (5.8.2020) பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
14 / 50
திருச்சி - கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட கடைகளில் இன்று (5.8.2020) முதல் காய்கறி விற்பனை தொடங்கியது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
15 / 50
16 / 50
சென்னை - தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்துக்கு இன்று (5.8.2020) வந்த திமுக- சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வத்தை... பா.ஜ.க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். படம் : ம.பிரபு
17 / 50
அயோத்தியில் இன்று (5.8.2020) காலையில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்ற அதே நேரத்தில்... சென்னை - தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில்... ஸ்ரீராம பாராயணம் நடப்பெற்றது . நிகழ்ச்சி இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. படம் : ம.பிரபு
18 / 50
அரசியலை மதத்துடன் இணைக்கும் வகையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து... புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி சார்பில் - இன்று (5.8.2020) புதுச்சேரி சாரம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
19 / 50
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து... புதுச்சேரி - கல்வித் துறை முன்பு புதுச்சேரி மாநில யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர்... இன்று (5.8.2020) கல்வி கொள்கை நகலை எரித்து... கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
20 / 50
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட இன்று (5.8.2020) நடந்த பூமி பூஜையை வரவேற்க்கும் விதமாக... புதுச்சேரி - ராஜா தியோட்டர் சந்திப்பில் - புதுச்சேரி இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். படம் : எம்.சாம்ராஜ்
21 / 50
22 / 50
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் பணி இன்று தொடங்கியது. சேலம் - பள்ளப்பட்டி நியாய விலைக் கடையொன்றில் முகக்கவசம் வழங்கும் பணியை... இன்று (5.8.2020) சேலம் ஆட்சியர் ராமன் தொடக்கி வைத்தார். உடன் - சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர். படங்கள் : எஸ்.குரு பிரசாத்
23 / 50
24 / 50
வரும் 11-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியும், 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியும் வருவதால்... ’கரோனா’ ஊரடங்கு காரணமாக கிருஷ்ணர் மற்றும் விநாயகர் சிலைகள் விற்பனையாகுமோ... ஆகாதோ... என்கிற கவலை ஒருபக்கம் இருப்பினும் - நம்பிக்கையுடன் சென்னை - பேசின் பிரிட்ஜ் அருகில் கிருஷ்ணர், விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகளில் வட மாநிலத்தோர் ஈடுபட்டுள்ளனர். படம் : பு.க.பிரவீன்
25 / 50
26 / 50
27 / 50
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு பணியின்போது... உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம் உடனே வழங்க வேண்டும்; ’கரோனா’ தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்... என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... சேலம் - அஸ்தம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (5.8.2020) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எஸ்.குரு பிரசாத்.
28 / 50
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட இன்று (5.8.2020) பூமி பூஜை நடைபெற்ற அதே சமயத்தில்... அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க - சேலத்தில் மசூதிகள் மற்றும் முக்கிய கோயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டை அழகிரிநாதப் பெருமாள் கோயிலிலும் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். படம் : எஸ்.குருபிரசாத்
29 / 50
30 / 50
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா இன்று (5.8.2020) நடைபெறுவதையொட்டி.... சென்னை - புளியந்தோப்பு பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில்.... இன்று காலையில் அகண்ட தீபம் ஏற்றி... ஸ்ரீ ராம பாராயணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் - பாரத் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிளை, சிவசேனா, இந்து மக்கள் முன்னணி, இந்து சத்திய சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். படங்கள் : ம.பிரபு
31 / 50
32 / 50
33 / 50
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்; 'முத்தலாக்' சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்; ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மதுரை - ஓபுளா படித்துறை அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக இன்று (5.8.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
34 / 50
மதுரையில் - நாளை (6.8.2020) தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ‘கரோனா’ தொற்றுப் பரவல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து... மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பொலிவு பணிகள் இன்று மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
35 / 50
36 / 50
37 / 50
’கரோனா’ தடுப்புப் பணியின்போது உயிரிழக்கும் அலுவலர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு - தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
38 / 50
திருநெல்வேலி - பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக காவலர் குடியிருப்புப் பகுதிகளில்... இன்று (5.8.2020) ’கரோனா’ பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உடன் - திருநெல்வேலி ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள். படங்கள் : மு.லெட்சுமி அருண்
39 / 50
40 / 50
41 / 50
திருநெல்வேலி - கொக்கிரகுளம் புதிய ஆற்றுப் பாலத்தைத் திறந்து வைக்க மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க... முதலமைச்சர் பழனிசாமி வருகை தருவதையொட்டி... சுலோச்சனா பாலத்துக்கு வண்ணம் தீட்டும் வேலை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படங்கள்: மு.லெட்சுமி அருண்
42 / 50
43 / 50
44 / 50
அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கு இன்று (5.8.2020) பூமி பூஜை நடைபெற்றதையொட்டி... கோவையில் - இந்து அமைப்புகள் சார்பில் ராமர் படத்தை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். படம் : ஜெ .மனோகரன்
45 / 50
46 / 50
47 / 50
’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுப்புப் பணியின்போது உயிரிழந்த அரசு அலுவலர்களின் குடும்பத்தினருக்கு... அரசு அறிவித்த ரூ .50 லட்சம் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் பணிபுரியும் போராட்டத்தில் இன்று (5.8.2020) ஈடுபட்டனர் . படம் : ஜெ மனோகரன்
48 / 50
49 / 50
கோவை - சவுரிப்பாளையம் பகுதி மக்களுக்கு ’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்புக்காக... நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்குஅமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் இன்று (5.8.2020) வழங்கினர். படம்; ஜெ. மனோகரன்
50 / 50
அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று (5.8.2020) பூமி பூஜை நடைபெற்றதையொட்டி... கோவை - மாவட் பாஜக சார்பில்... ரத்தினபுரி சுதாகர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. படம் : ஜெ .மனோகரன்

Recently Added

More From This Category

x