Published on : 04 Aug 2020 17:48 pm

பேசும் படங்கள்... (04.08.2020)

Published on : 04 Aug 2020 17:48 pm

1 / 36
’டாஸ்மாக்’ மதுபானக் கடை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி.... வேலூர் - டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக... வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு). இன்று (4.8.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
2 / 36
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்... சாலையோர வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்த... அனைத்து வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (ஆகஸ்ட் - 4) நடைபெற்றது. அருகில், மகளிர் திட்டம் இயக்குநர் சிவராமன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள். படம் : வி.எம்.மணிநாதன்
3 / 36
’டாஸ்மாக்' மதுபானக் கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ... ’கரோனா’ தொற்று பாதுகாப்புக்குத் தேவையான முக்கவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை உடனடியாக வழங்கக் கோரி... மதுரை அண்ணா நகர் பகுதியில் இன்று டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 36
புதுச்சேரி - முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி இன்று (4.8.2020) தொண்டர்கள் யாரும் வாழ்த்து தெரிவிக்க நேரில் வரவேண்டாம்... ’கரோனா’ தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் தொண்டர்கள் திரள்வதை தவிர்க்க வேண்டுகிறோம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்... புதுச்சேரி - ராஜீவ்காந்தி சின்னல் அருகே அவரது கட்சியினர் காமராஜர், சிவாஜிகணேசன் உள்ளிட்டோர் ரங்கசாமியை வாழ்த்துவது போன்று சித்தரித்து வாழ்த்து பதாகை வைத்திருந்தனர். படம்: எம்.சாம்ராஜ்
5 / 36
புதுச்சேரி- காந்தி நகரில் உள்ள வருவாய்த் துறை அலுவலகத்தில் பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள்... உயர் கல்வியில் சேருவதற்கு இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இன்று (4.8.2020) நின்றிருந்தனர். உடன் மாணவர்களின் பெற்றோர். படம்: எம்.சாம்ராஜ்
6 / 36
புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி... நகராட்சி ஊழியர் சங்கத்தினர் இன்று (4.8.2020) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
7 / 36
புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ’கரோனா’ தொற்றுப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் - சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்... மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். படம் : எம்.சாம்ராஜ்
8 / 36
’டாஸ்மாக்' மதுபானக் கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ... ’கரோனா’ தொற்று பாதுகாப்புக்குத் தேவையான முக்கவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை உடனடியாக வழங்கக் கோரி... திருநெல்வேலி - முன்னீர்பள்ளம் ’டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு இன்று (4.8.2020) திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்
9 / 36
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவோர்... தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க தவறுவதால்... இன்று (4.8.2020) சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வருவதற்கு முன்பு... அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வசதியாக போலீஸார் சுண்ணாம்பு பவுடரால் வட்டமிட்டனர். படம்: பு.க.பிரவீன்
10 / 36
பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும்... மானிய விலையில் டீசல், மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் - இன்று (4.8.2020) சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சமூக இடைவெளியுடன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : பு.க.பிரவீன்
11 / 36
’கரோனா’ காலத்தில் வைரஸ் தொற்றுக்கு பயந்து மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது ஒருபக்கம் என்றால்... விலங்குகள் உணவுக்கு அல்லாடுவது இன்னொரு பக்கத் துயரக் கதையாகும். ‘கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் இப்போதும் கோயில்கள் மூடியிருக்கும் நிலையில்... திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதையில்... உணவுக்காக குரங்குகள் குட்டிகளுடன் காத்திருக்கின்றன. படங்கள் : ம.பிரபு
12 / 36
13 / 36
14 / 36
திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில் இரண்டு பக்கங்களிலும்.... விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் அறுவடையை முடித்து... வைக்கோலை குவித்து வைத்துள்ளனர். மழைக்காலம் விரைந்து வருவதையொட்டி... முன்னேற்பாடாக தங்கள் கால்நடைகளின் தீவனத்துக்காக அப்பகுதியினர் வாகனங்கள் மூலம் வைக்கோலை வாங்கிச் செல்கின்றனர். படங்கள்: ம.பிரபு
15 / 36
16 / 36
வரும் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யவும்.... யாகசாலை பூஜை செய்யவும் அனுமதி அளிக்கக் கோரி.... மதுரை மாநகர மாவட்ட இந்து முன்னணியினர் விநாயகர் வேடமிட்ட நபருடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (4.8.2020) மனு வழங்க வந்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 36
ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்... இப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவுவதையொட்டி.... இன்று (4.8.2020) காலையில் - மலைப் பாதையைச் சூழ்ந்த பனிமூட்டம். படம் : எஸ்.குரு பிரசாத்
18 / 36
19 / 36
20 / 36
கேள்விக்குறியாகும் சமூக இடைவெளி: சேலம் - கிச்சிபாளையம் புதுதெருப் பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது குறித்து... திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் இன்று (4.8.2020) ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஏராளமான பொது மக்கள் அங்கு குவிந்தனர். ’கரோனா’ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்... பொதுமக்கள் இதுபோன்று அலட்சியமாக கூட்டம் கூட்டமாக கூடுவது - தொற்று நோயைப் பற்றிய நமது பெரும் அலட்சியத்தையே காட்டுகிறது. படம் : எஸ்.குரு பிரசாத்
21 / 36
சென்னையின் நுழைவுவாயிலான இரும்புலியூர் பாலம் அமைந்துள்ள பகுதியில்... 3-வது இருப்புப் பாதையில் பொருத்த ராட்சத கர்டர்கள் தயாராகி வருகின்றன. இரு இரும்புப் பாலங்களை நவீன கருவிகள் துணையுடன் இணைக்கும் பணியில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
22 / 36
23 / 36
’கரோனா’ தொற்றுத் தடுப்புக்காக சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் இப்போதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும்... சென்னை சாலைகளில் வாகனப் போக்குவரத்துக் குறையவே இல்லை. சென்னை பெருங்களத்தூர் சாலையில் இன்று (4.8.2020) காலையில் மற்ற வாகனங்களுக்கு இடமின்றி... சாலையை அடைத்தவாறு இருசக்கர வாகனங்கள் சென்றன. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் ஒருவர் கூறும்போது, ’பொது போக்குவரத்து (பேருந்து, ரயில்) நிறுத்தப்பட்ட நிலையில் பிழைப்புக்காக பொதுமக்கள் இப்படி இருசக்கர வானங்களில் செல்கின்றனர். இதன் காரணமாக பழைய இரு சக்கர வாகனங்கள்கூட தற்போது அதிக அளவில் விற்பனையாகின்றன’ என்றார். படங்கள் : எம்.முத்துகணேஷ்
24 / 36
25 / 36
26 / 36
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக குனியமுத்தூர் சுண்ணாம்புக் கால்வாய் அணைக்கட்டு நீர் நிரம்பிக் காணப்படுகிறது. படம் : ஜெ .மனோகரன்
27 / 36
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நீர் நிரம்பி காணப்படும் புட்டுவிக்கி அணைக்கட்டு. படம் : ஜெ .மனோகரன்
28 / 36
சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால்... நிரம்பித் ததும்பும் கோவை - பேரூர் படித்துறை நொய்யல் ஆறு. படம் : ஜெ .மனோகரன்
29 / 36
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வந்தாலும் இன்று (4.8.2020) பகல்பொழுதில் கோவை - கரும்புக்கடை பகுதியில் பெய்த சாரல் மழையில் நனைந்துகொண்டே செல்லும் பெண்களும், சிறுவர் - சிறுமிகள். படங்கள் : ஜெ .மனோகரன்
30 / 36
31 / 36
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை (ஆகஸ்ட் 5) நடைப்பெற உள்ளது. இதையொட்டி... வேலூர் - ரங்காபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் முன்பாக - பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர். படம் : வி.எம்.மணிநாதன்
32 / 36
கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 11-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி... வேலூர் - காட்பாடியை அடுத்த கல்புதூரில் கிருஷ்ணர் சிலைகளை செய்து வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஒரு தொழிலாளர். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
33 / 36
34 / 36
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி... வேலூர் - காட்பாடியை அடுத்த கல்புதூர் பகுதியில்... காகிதக் கூழைப் பயன்படுத்தி விநாயகர் சிலைகளை செய்து... வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம் : வி.எம்.மணிநாதன்
35 / 36
36 / 36

Recently Added

More From This Category

x