Published on : 03 Aug 2020 18:54 pm

பேசும் படங்கள்... (03.08.2020)

Published on : 03 Aug 2020 18:54 pm

1 / 46
சேலம் - மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு விலையில்லாப் பாடப்புத்தகப் பைகள் வழங்கும் பணி இன்று (3.8.2020) தொடங்கியது. இதைத் தொடர்ந்து சேலம் - கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. படங்கள் : எஸ்.குருபிரசாத்
2 / 46
3 / 46
எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிடக் கோரி... சேலம் - ஆட்சியர் அலுவலகத்தில் திமுக எம்.பி-க்கள் பார்த்திபன், செந்தில்குமார், கவுதம சிகாமணி மற்றும் அந்தப் பகுதியின் விவசாயிகள் இன்று (3.8.2020) கோரிக்கை மனு வழங்க வந்தனர். படம் : எஸ். குருபிரசாத்
4 / 46
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு நடப்பு ஆண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதையொட்டி... சென்னை - திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பெண்கள் பள்ளியில் இன்று (3.8.2020) விலையில்லாப் பாடப் புத்தகங்களை ஒவ்வொரு மாணவிக்கும் ஆசியுடன் ஆசிரியைகள் வழங்கினர். படங்கள்: க.ஸ்ரீபரத்
5 / 46
6 / 46
7 / 46
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புனித நதிகளில் ஒன்றான திருநெல்வேலி - தாமிரபரணி நதியின் குறுக்குத்துறை படித்துறையில் இருந்து இன்று (3.8.2020) புனித மண் அள்ளியெடுத்து... ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்பட்டது . இதைத் தொடர்ந்து - இந்தப் புனித மண் உரியவர்கள் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் - விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல ’இந்து’ அமைப்புகள கலந்து கொண்டு சிறப்பித்தன. படங்கள் : மு.லெட்சுமிஅருண்
8 / 46
9 / 46
10 / 46
வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் சென்னை மாநகருக்கு வருவோரை நகராட்சி நிர்வாகம் சில நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து வருகிறது. இந்நிலையில் ‘ராஜஸ்தானி ஹெல்த் ஃபவுண்டேஷன்’ என்கிற தன்னார்வ அமைப்பினர்... தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புவோர் தங்குவதற்கான இலவச மையத்தை வேளச்சேரி - தரமணி இணைப்பு சாலைப் பகுதியில் அமைத்துள்ளது. இந்த இலவச தனிமைப்படுத்திக்கொள்ளும் மையத்தை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் இன்று (3.8.2020) திறந்து வைத்தனர். படங்கள்: பு.க.பிரவீன்
11 / 46
12 / 46
13 / 46
’கரோனா‘ தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமணம், கோயில் மற்றும் பொது விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம், கோயில் மற்றும் பொது விழாக்களில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி வழங்கும் பேண்ட் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருமானமின்றி வறுமையில் வாடும் பேண்ட் இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டியும், சமூக இடைவெளியுடன் இசைத் தொழில் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டியும்... தமிழ்நாடு பேண்ட் இசை தொழிலாளர் நலச் சங்கத்தினர் இன்று (3.8.2020) திருநெல்வேலி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். படங்கள் : மு.லெட்சுமி அருண்.
14 / 46
15 / 46
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்க்கும் நாள்... தற்போது ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருந்து வரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக நடைபெறாமல் இருந்தது. ஆனால், பொதுமக்கள் பலர் திங்கட்கிழமைதோறும் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு... மனு அளிக்க திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையைக் கருத்தில்கொண்டு... தமிழகத்தில் முதன்முறையாக இன்று (3.8.2020) திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் இணையவழியில் பொதுமக்களை நேர்காணல்செய்து... அவர்களுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கை தொடர்பான அதிகாரிகளை உடனுக்குடன்அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். படங்கள்: மு.லெட்சுமி அருண்
16 / 46
17 / 46
18 / 46
சென்னை - புறநகர் பகுதியில் உருவாகி மெரினாவில் கடலில் கலக்கும் அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தடுப்பு சுவர் எழுப்பி கிரில் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. படங்கள் : எம்.முத்துகணேஷ்
19 / 46
20 / 46
21 / 46
22 / 46
மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த 2021 மார்ச் மாதம் வரை ... கால அவகாசம் கேட்டு - ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக இன்று (3.8.2020) மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
23 / 46
ரக்க்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு இன்று (3.8.2020) சென்னை - வேப்பேரி பகுதியில் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி... தங்களுடைய சகோதர - சகோதரி பாசத்தை வட மாநிலப் பெண்கள் பரிமாறிக்கொண்டனர். படம்: பு.க.பிரவீன்
24 / 46
25 / 46
26 / 46
ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி இன்று (ஆகஸ்ட் - 3) வேலூர் - சத்துவாச்சாரி பகுதியில் ஒரு வீட்டில் சகோதரர்களுக்கு ராக்கி அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த சிறுமியர்கள். படம் : வி.எம்.மணிநாதன்
27 / 46
மதுரை மாவட்டம் - கருவேலம்பட்டி கிராமத்தில் கல்குவாரியில் கற்களை தூளாக்கும் ’கிரஷர்’ இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குவதால்... சுற்றியுள்ள பகுதிகளில் மாசு ஏற்படுவதாகக் கூறி... அந்தக் குவாரியைத் தடை செய்யக் கோரி... மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கும் முன்பு இன்று (3.8.2020) கருவேலம்பட்டி கிராம மக்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
28 / 46
இன்று (3.8.2020) திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் நிறப்பிரிகையைப் போன்ற அற்புதக் காட்சி ஆகாயத்தில் தோன்றியது. அந்த ஆகாய வளையங்களை வைத்து பூக்களுக்கு மூக்குத்தி அணிவித்தது போன்றும் , மரங்களுக்கு மணிமகுடம் அணிவித்தது போன்றும் எடுக்கப்பட்ட புகைப்பட ஜாலங்கள். படங்கள்: மு. லெட்சுமி அருண்
29 / 46
30 / 46
31 / 46
வரும் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கக் கோரி... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விநாயகர் வேடமிட்ட நபருடன் கோரிக்கை மனு அளிக்க சிவசக்தி சேனா அமைப்பினர் இன்று (3.8.2020) வந்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
32 / 46
33 / 46
34 / 46
கரோனா தொற்றுத் தடுப்பு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்.... சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், காமராஜ் முன்னிலையில் இன்று (3.8.2020) நடைபெற்றது. படம்: ம.பிரபு
35 / 46
வரும் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்...வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (ஆகஸ்ட் - 3) நடைபெற்றது. இதில் - மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். படம்: வி.எம்.மணிநாதன்
36 / 46
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்புக்கு காரணமான அரசு அதிகாரிகள் மீதும்... கடையநல்லூர் அணைக்கரை முத்து மரணத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும்... நடவடிக்கை எடுக்கக் கோரி - ’காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் இன்று (3.8.2020) அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் , சமூக நல ஆர்வலர்கள் பங்கு கொண்டனர். அப்போது திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் எஸ்டிபிஐ கட்சியினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். படம் : மு.லெட்சுமி அருண்
37 / 46
திருஞானசம்பந்தர் அருளிய திருமுறைகளை இழிவுபடுத்திப் பேசியதாக சுந்தரவள்ளி என்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி... வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (3.8.2020) ஞான திருவளாக குமார மடத்தினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
38 / 46
கிருஷ்ணஜெயந்தி வரும் 11-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி... காட்பாடி - கல்புதூர் பகுதியில் விற்பனைக்காக கிருஷ்ணர் சிலைகளை செய்து வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஒரு தொழிலாளர். படம்: வி.எம்.மணிநாதன்
39 / 46
புதுச்சேரி - சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி எம்எல்ஏ-வுக்கு ’கரோனா’ தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டடையடுத்து... சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவுப்படி.... சட்டப்பேரவை வளாகம் முழுவதும் 10 நாட்கள் மூடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யபட்ட நிலையில் இன்று (3.8.2020) காலையில் திறக்கப்பட்டபோது... பேரவை முகப்பில் வைக்கப்பட்டிருந்த அழகிய ‘இட்லி பூ’ எனப்படும் வெட்சிப்பூ செடியில் தேன் குடிக்கும் அழகிய வண்ணத்துப் பூச்சி. படம்: எம்.சாம்ராஜ்
40 / 46
புதுச்சேரி - சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி எம்எல்ஏ-வுக்கு ’கரோனா’ தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டடையடுத்து... சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவுப்படி.... சட்டப்பேரவை வளாகம் முழுவதும் 10 நாட்கள் மூடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யபட்ட நிலையில் இன்று (3.8.2020) காலையில் திறக்கபட்டது. இதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு... உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கிறார் சுகாதார ஊழியர் ஒருவர். படம்: எம்.சாம்ராஜ்
41 / 46
ரக்க்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு இன்று (3.8.2020) கோவை - ஆர்.எஸ்.புரம் பகுதியில்... சகோதரர்களுக்கு ’ராக்கி’ அணிவித்து சகோதர உறவின் உன்னதத்தை வடமாநிலப் பெண்கள் பரிமாறிக்கொண்டனர். படம் : ஜெ மனோகரன்
42 / 46
43 / 46
கோவை - சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் இன்று (3.8.2020) வழங்கப்பட்டன. படம் : ஜெ .மனோகரன்
44 / 46
பருவ மழை தொடங்கியதையொட்டி... இன்று (3.8.2020) காலைவேளையில் கோவை - ஆர் .எஸ். புரம் சாலையில் சாரல் மழையில் நனைந்தபடியே செல்லும் மூதாட்டி ஒருவர். படம் : ஜெ .மனோகரன்
45 / 46
கார்கில் போர் அனுசரிப்பு தினத்தையொட்டி.... ’ஒரு மாணவன் ஒருமரம்’ என்ற திட்டத்தின்படி... கோவை மாவட்ட 2-வது தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளி கடந்த கால மாணவர்கள் சங்கம் சார்பில்... இன்று (3.8.2020) கோவை ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்தில் - கோவை குரூப் கமாண்டர் கர்னல் நாயுடு மற்றும் கிரிஷ் பார்த்தன், எஸ்.எம் அதிகாரி கமாண்டிங், 2 (டி.என்) என்.சி.சி.உள்ளிட்டோர் மரக்கன்று நட்டனர். படம் : ஜெ .மனோகரன்
46 / 46

Recently Added

More From This Category

x