1 / 44
’கரோனா’ முழு ஊரடங்கை முன்னிட்டு நீர்நிலைகளில் நீராடவும் வழிபாடு நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தபோதும்... இன்று (2.8.2020) ஆடிபெருக்கு பண்டிகையையொட்டி... திருச்சி - மேல சிந்தாமணி காவிரி ஆற்றுப் படித்துறையில் அப்பகுதி பொதுமக்களில் சிலர் வழிபாடு நடத்தினர்.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
2 / 44
3 / 44
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று ஆயிரக்கணக்கான மக்களுடன்... களைகட்டிக் காணப்படும் திருச்சி - அம்மா மண்டபம் காவிரி ஆற்றுப் படித்துறை... இன்று (2.8.2020) ’கரோனா’ முழு ஊரடங்கை முன்னிட்டு நீர்நிலைகளில் நீராடவும் வழிபாடு நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் வெறிச்சோடிக் கிடந்தது.
படம் : ஜி.ஞானவேல் முருகன்
4 / 44
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நடமாட்டத்துடன களைகட்டிக் காணப்படும் திருச்சி - ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில்... இன்று (2.8.2020) ’கரோனா’ முழு ஊரடங்கை முன்னிட்டு நீர்நிலைகளில் நீராடவும் வழிபாடு நடத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததையடுத்து, பொதுமக்கள் எவரும் செல்லாத வகையில் போலீஸார் தடுப்புகள் வைத்து அடைத்திருந்தனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
5 / 44
6 / 44
7 / 44
’கரோனா’ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் விளைவாக... திருச்சி - காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் இன்று (2.8.2020) முதல் மாநகராட்சியினரால் அடைக்கப்பட்டு... தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
8 / 44
9 / 44
10 / 44
’கரோனா’ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் விளைவாக... திருச்சி - காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் இன்று (2.8.2020) முதல் மாநகராட்சியினரால் அடைக்கப்பட்டு... தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதை... வேட்டிக்கை பார்க்கும் அப்பகுதி பொதுமக்கள்.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
11 / 44
12 / 44
’கரோனா’ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் விளைவாக... திருச்சி - காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் இன்று (2.8.2020) முதல் மாநகராட்சியினரால் அடைக்கப்பட்டு... தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதையொட்டி... அங்குள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகளில் பணிபுரியும் லோடு மேன்கள் வாழ்வாதாரம் கெடும் வேதனையில் ஆங்காங்கே அமர்ந்துள்ளனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்
13 / 44
'கரோனா' தொற்று பரவல் தடுப்பு பணிகளில் அன்றாடம் ஈடுபட்டு வரும் போலீஸார், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட சமூக சேவையில் ஈடுபட்டுள்ளோருக்கு... நாள்தோறும் அவர்கள் பணி செய்யும் இடங்களுக்கே சென்று மூலிகை தேநீர், கசாயம், கூழ் போன்றவற்றை காலை - மாலை என இருவேளைகளிலும் தினமும் இலவசமாக கொடுத்து வருகிறார்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
14 / 44
15 / 44
16 / 44
தீரன் சின்னமலை நினைவு நாளையெட்டி இன்று (2.8.2020) சென்னை - கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு... தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
படம்: க.ஸ்ரீபரத்
17 / 44
18 / 44
19 / 44
சென்னை - ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்... தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (2.8.2020) ’கரோனா’ தொற்று மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதனால் இம்மருத்துவமனையைச் சுற்றி போலீ ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படங்கள் : பு.க.பிரவீன்
20 / 44
21 / 44
முழு ஊரடங்கு நாளான இன்று (2.8.2020) வழக்கமாக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்... மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட காகம் ஒன்று... சாலையோரத்தில் தனது குஞ்சுக்கு உணவை ஊட்டி மகிழ்கிறது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
22 / 44
23 / 44
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு பண்டிகையை சிலர் பொதுமக்களுக்கு கூழ் ஊற்றி கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு பண்டிகை நாளான இன்று (2.8.2020) முழு ஊரடங்கு கடைபிடிப்பதால்... தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையில் காச நேய் மருத்துவமனையின் எதிர் பகுதியில் உள்ள சிலர் மிகுந்த கட்ட்டுப்பாடுகளுடன் தங்கள் வழக்கப்படி கூழ் காய்ச்சி வழங்கினர்.
படம் : எம்.முத்துகணேஷ்
24 / 44
தமிழகம் முழுவதும் இன்று (2.8.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் ... சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், கடைவீதிகள் வெறிசோடிக் காணப்பட்டன. படங்கள்: எஸ்.குரு பிரசாத்.
25 / 44
26 / 44
27 / 44
28 / 44
சுருக்க வலை போட்டு மீன் பிடிப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் மீனவர்களுக்கு தடை வீதித்திருக்கும் நிலையில்... மீனவர்கள் இப்போதும் தடைசெய்யப்பட்ட அந்த சுருக்க வலையைப் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. இன்று (2.8.2020) அதிகாலையில் புதுச்சேரி கடல் பகுதியில் படகுகளில் சென்று தடைசெய்யப்பட்ட சுருக்க வலையைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்தனர்.
படம்: எம்.சாம்ராஜ்
29 / 44
புதுச்சேரி - பெரியகடை காவல்நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டை உடைத்து திருடப்பட்ட 60 பவுன் நகை மற்றும் உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே கஞ்சாவை காவல்துறையினர் இன்று (2.8.2020) பறிமுதல் செய்தனர்.
படம்: எம்.சாம்ராஜ்
30 / 44
மதுரை - முனிச்சாலை சந்திப்புப் பகுதியில்... போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு... தினமும் உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
31 / 44
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு பண்டிகை அன்று மதுரை - மீனாட்சி அம்மன் கோயில் முழுவதும் பெண்கள் கூட்டம் அலைமோதும். முழு ஊரடங்கு நாளான இன்று (2.8.2020) ஆடிப்பெருக்கு பண்டிகை வந்துள்ளதால் கோயிலில் கூட்டம் காணப்படவில்லை.
கிழக்கு கோபுர வாசல் பகுதியில் மட்டும்... ஒரு சில பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலிக் கயிற்றை... புதிதாக மாற்றிக் கொண்டார்கள்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
32 / 44
இன்று (2.8.2020) முழு ஊரடங்கு நாள் என்பதால்... மதுரை - எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து மேலூர் செல்லும் சாலை எந்த வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
33 / 44
34 / 44
சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்.... தங்கள் விளைநிலங்களை... பயிரிடும் வகையில் விவசாய வேலைகளில் முமுரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
படம் : எஸ்.குரு பிரசாத்.
35 / 44
36 / 44
37 / 44
தமிழகம் முழுவதும் இன்று (2.8.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி... சென்னை - விமான நிலையத்தில் இருந்து குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக - விமான நிலையத்தின் உள் பகுதியும் முகப்பு பகுதியும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தவிர்க்க முடியாத காரணங்களால் பயணித்தொரு சில மூத்த பயணிகளை முழு பாதுகாப்பு கவசத்தோடு உதவியாளர்கள் விமான நிலையத்துக்கு உள்ளே அழைத்து சென்றனர்.
படங்கள்:எம்.முத்துகணேஷ்
38 / 44
39 / 44
40 / 44
41 / 44
42 / 44
இன்று (2.8.2020) முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதையொட்டி....
திருநெல்வேலி மாவட்டம் - கொக்கிரகுளம் பகுதி சாலை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம்: மு.லெட்சுமி அருண்
43 / 44
வேலூர் - க்ரீன் சர்க்கிள் பகுதியில் இன்று (2.8.2020) அந்தி வானத்தில் - கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றி... கரும்புகை சூழ்ந்திருப்பதைப் போல... தோன்றிய வண்ணக் காட்சி!
படங்கள் : வி.எம்.மணிநாதன்.
44 / 44