Published on : 01 Aug 2020 19:16 pm

பேசும் படங்கள்... (01.08.2020)

Published on : 01 Aug 2020 19:16 pm

1 / 87
புதுச்சேரி சுல்தான்பேட்டையில் உள்ள முகமதியா பள்ளி வாசலில் தொழுகைக்கு உள்ளே செல்லும் முஸ்லிம்களுக்கு கைகளைச் சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்குவதுடன் உடல் வெப்பநிலையையும் சோதனை செய்யும் சமூக நல அமைப்பினர். படம்:எம்.சாம்ராஜ்
2 / 87
புதுச்சேரி சுல்தான்பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (1.8.2020) சமூக இடைவெளியுடன் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள். படம்:எம்.சாம்ராஜ்
3 / 87
4 / 87
5 / 87
புதுச்சேரி முகமதியா பள்ளிவாசலில் கட்டித் தழுவாமல் சமூக இடைவெளி விட்டு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கும் முஸ்லிம் சிறுவர்கள். படம்:எம்.சாம்ராஜ்
6 / 87
7 / 87
8 / 87
9 / 87
புதுச்சேரியில் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க ஆடுகளை வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர். படம்: எம்.சாம்ராஜ்
10 / 87
11 / 87
12 / 87
பக்ரீத் பண்டிகை இன்று (1.8.2020) கொண்டாடப்படுவதையொட்டி... சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் தங்களது குடியிருப்புகளிலேயே முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். படங்கள் : எஸ். குரு பிரசாத்
13 / 87
14 / 87
15 / 87
16 / 87
17 / 87
18 / 87
சேலம் - போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில்.... திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் காட்சியளிக்கிறது. படம்: எஸ். குரு பிரசாத்
19 / 87
20 / 87
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் -1) கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக, வழிப்பாட்டுத் தலங்களில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படாததால், வேலூர் - சாயிநாதபுரத்தில் உள்ள மசூதியில் அறிவிப்பு பலகை வைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: வி.எம்.மணிநாதன்
21 / 87
22 / 87
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் -1) கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக... வழிப்பாட்டுத் தலங்களில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படாததால், வேலூர் - சாயிநாதபுரத்தில் தங்கள் வீடுகளில் சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து... தங்களின் குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள். படம்: வி.எம்.மணிநாதன்
23 / 87
24 / 87
தமிழக அரசின் உத்தரவுப்படி சில கட்டுப்பாடுகளுடன் (ஆகஸ்ட்-1) முதல் ஹோட்டல்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள oரு ஓட்டலில் தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து மக்கள் உணவு சாப்பிட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்
25 / 87
26 / 87
27 / 87
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று (1.8.2020) கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக, வழிப்பாட்டுத் தலங்களில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படாததால், வேலூர்- கஸ்பா பகுதி சின்ன அல்லாபுரத்தில் ஒரு வீட்டில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தங்களின் குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
28 / 87
29 / 87
தாய்ப்பால் வார விழாவையெட்டி சென்னை சேப்பாக்கம் கோசா மகப்பேறு மருத்துவமனையில் இன்று (1.8.2020) குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து தாய்மார்களுக்கு விளக்கும் மருத்துவர். படங்கள்: க.ஸ்ரீபரத்
30 / 87
31 / 87
32 / 87
தாய் பால் வார விழாவையெட்டி இன்று (1.8.2020) மருத்துவமனையில் தாய் பால் தானம் வழங்கும் ஒரு தாய். படங்கள்: க.ஸ்ரீபரத்
33 / 87
34 / 87
பக்ரீத் திருநாளையொட்டி இன்று (1.8.2020) சென்னை மண்னடி பகுதியில் சமூக இடைவெளியுடன் தொழுகை செய்த முஸ்லிம்கள் .
35 / 87
36 / 87
37 / 87
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரம் பகுதியில் ட்ரேஜர் இயந்திரத்தின் மூலம் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. படங்கள் : பு.க.பிரவீன்
38 / 87
39 / 87
40 / 87
ஊரடங்கு உத்தரவால் தொழில் நலிவடைந்த போதிலும் ஆர்வமுடன் மண்பாண்டங்களை செய்வதற்கு மண்ணைக் குழைத்துப் பிசையும் தொழிலாளி. படங்கள் மு. லெட்சுமி அருண்.
41 / 87
42 / 87
ஊரடங்கு உத்தரவு நீடித்து இருப்பதால் , உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை வியாபாரம் செய்யமுடியாமல் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் அவதியுறும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தேக்கமடைந்து கிடக்கும் மண்பாண்ட பொருட்களைக் கவலையுடன் பார்க்கின்றனர். படங்கள் மு. லெட்சுமி அருண்.
43 / 87
44 / 87
பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று (1.8.2020) திருச்சி அல்லிமால் தெருவில் ஒரு வீட்டில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்ஸிம்கள். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
45 / 87
46 / 87
47 / 87
திருச்சி பாலக்கரை பகுதியில் இன்று (1.8.2020) பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட முஸ்ஸிம்கள். படம்: ஜி.ஞானவேல் முருகன்
48 / 87
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி வாசலில் தொழுகைக்கு அனுமதியில்லை. எனவே- திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் முன்பு நேற்று போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
49 / 87
50 / 87
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று (1.8.2020) பக்ரீத் பண்டிகையை ஆங்காங்கே எளிய முறையில் சமூக இடைவெளியுடன் முஸ்லிம்கள் கொண்டாடினர். பாளையங்கோட்டை அருகில் உள்ள ரஹ்மத் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எளிய முறையில் பக்ரீத் தொழுகை நடத்தப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண்
51 / 87
மதுரை தொகுதி நாடளுமன்ற உறூப்பினர் சு.வெங்கடேசன் ’கரோனா’ தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை - ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் மதிப்புடைய பொருட்களை இன்று (1.8.2020) வழங்கினார். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
52 / 87
53 / 87
நாளை ஆடிப்பெருக்கு பண்டிகை என்பதால் மதுரை கீழமாசி வீதியில் உள்ள சந்தனக் கடையில் இன்று (1.8.2020) சந்தனம் வாங்க குவிந்த மக்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
54 / 87
55 / 87
மதுரை ப்ளாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் நடந்த ரத்ததான முகாமை இன்று (1.8.2020) தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் லட்சுமி தேவசேனா முரளி, ரோட்டரி சங்கத்தின் செய்தி தொடர்பாளர் நெல்லை பாலு. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
56 / 87
57 / 87
நாளை முழு ஊரடங்கு என்பதாலும் ஆடிப்பெருக்கு பண்டிகை என்பதாலும் மதுரை கீழமாசி வீதியில் இன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க திரண்டிருந்த பொதுமக்கள். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
58 / 87
59 / 87
பக்ரீத் திருநாளையொட்டி இன்று (1.8. 20) கோவை உக்கடம் ஜெ. கே. கார்டன் பகுதியில் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் தொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள். படம்:ஜெ மனோகரன்
60 / 87
61 / 87
62 / 87
63 / 87
64 / 87
65 / 87
66 / 87
67 / 87
68 / 87
69 / 87
70 / 87
சிப்பிக்குள் முத்து போலக் காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலையைச் சூழ்ந்து காணப்படும் மேகக் கூட்டம். படம் :.ஜெ மனோகரன்
71 / 87
நாளை ஆடிப்பெருக்கையொட்டி கோவை தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ மார்கெட்டில் இன்று பூக்கள், பழங்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம். படம்: .ஜெ மனோகரன்
72 / 87
73 / 87
74 / 87
75 / 87
76 / 87
77 / 87
கோவையில் அமையவுள்ள - ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாக கோவை வாலாங்குளம் கரைகளைச் சுற்றி வேலி அமைக்கும் பணியில் வடஇந்தியர்கள். படம் :ஜெ மனோகரன்
78 / 87
79 / 87
80 / 87
81 / 87
புதுச்சேரியில் இன்று (1.8.2020) காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில்... திடீரென வானம் மேக மூட்டத்துடன்... பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகளும்.... குடையுடன் நடந்து செல்லும் பொதுமக்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்
82 / 87
83 / 87
84 / 87
85 / 87
86 / 87
87 / 87

Recently Added

More From This Category

x