Published on : 31 Jul 2020 18:21 pm

பேசும் படங்கள்... (31.07.2020)

Published on : 31 Jul 2020 18:21 pm

1 / 82
நேற்று ( ஜூலை - 30) தியாகிகள் தினைவு தினத்தை முன்னிட்டு... புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு அமைந்துள்ள... தொழிற்சாலைகளில் உழைக்கும் நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய நடந்த உரிமைப் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளின் சிலைக்கு பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
2 / 82
நேற்று ( ஜூலை - 30) தியாகிகள் தினைவு தினத்தை முன்னிட்டு... புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு அமைந்துள்ள... தொழிற்சாலைகளில் உழைக்கும் நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய நடந்த உரிமைப் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளின் சிலைகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த சிஐடியு தொழிற்சங்கத்தினர் அமைதி ஊர்வலமாக வந்தனர், படம்: எம்.சாம்ராஜ்
3 / 82
நேற்று ( ஜூலை - 30) தியாகிகள் தினைவு தினத்தை முன்னிட்டு... புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு அமைந்துள்ள... தொழிற்சாலைகளில் உழைக்கும் நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய நடந்த உரிமைப் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளின் சிலைகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சிஐடியு தொழிற்சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். படம் : சாம்ராஜ்
4 / 82
நேற்று ( ஜூலை - 30) தியாகிகள் தினைவு தினத்தை முன்னிட்டு... புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு அமைந்துள்ள... தொழிற்சாலைகளில் உழைக்கும் நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய நடந்த உரிமைப் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். படம்: எம்சாம்ராஜ்
5 / 82
நேற்று ( ஜூலை - 30) தியாகிகள் தினைவு தினத்தை முன்னிட்டு... புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு அமைந்துள்ள... தொழிற்சாலைகளில் உழைக்கும் நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய நடந்த உரிமைப் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். படம்: எம்.சாம்ராஜ்
6 / 82
புதுச்சேரி வெங்கட்டா நகர் சாலையோரத்தில் நேற்று (ஜூலை - 30) மூடப்படாத கால்வாயில் விழுந்து சிக்கிக்கொண்ட பசு மாடு ஒன்றை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
7 / 82
8 / 82
9 / 82
10 / 82
’கரோனா’ தொற்று தடுப்புப் பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு.. ஒரு தொண்டு அமைப்பினர் சார்பில் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை நேற்று (ஜூலை - 30) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழங்கினார். அருகில். சிவா எம்எல்ஏ. படம்: சாம்ராஜ்
11 / 82
12 / 82
13 / 82
’கரோனா’ தொற்று தடுப்புப் பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு.. ஒரு தொண்டு அமைப்பினர் சார்பில் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை நேற்று (ஜூலை - 30) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழங்கினார். தான் வாங்கிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் தூய்மைப் பணியாளர்கள். படம்: எம்.சாம்ராஜ்
14 / 82
நாளை கொண்டாடவுள்ள பக்ரீத் பண்டிகைக்காக... சென்னை - திருவல்லிக்கேணிப் பகுதியில் இன்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள செம்மறி ஆடுகள். படம் :க.ஸ்ரீபரத்
15 / 82
16 / 82
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று (31.7.2020) நடப்பு ஆண்டுக்கான விலையில்லாப் புத்தகப் பை வழங்கப்பட்டது. சென்னை - மயிலாப்பூர் பகுதியில் புதிய புத்தகப் பையுடன் வீடு திரும்பும் மாணவ - மாணவியர். படம்: க.ஸ்ரீபரத்
17 / 82
18 / 82
19 / 82
20 / 82
ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி... இன்று (31.7.2020) வேலூர் - தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு... சிறப்பு பூஜைகள் நடந்தன. படம் : வி.எம்.மணிநாதன்
21 / 82
ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி இன்று (31.7.2020) வேலூர் - கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள வேம்புலியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு... சிறப்பு பூஜைகள் நடந்தன. படம்: வி.எம்.மணிநாதன்.
22 / 82
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (31.7.2020) வெளியானதையொட்டி... சென்னை - திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பெண்கள் பள்ளியில் - தேர்வு முடிவுகளை கைபேசியில் ஆர்வத்துடன் பார்த்து மகிழும் மாணவிகள். படங்கள்: க . ஸ்ரீபரத்
23 / 82
24 / 82
25 / 82
26 / 82
ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூர் - மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் இன்று (31.7.2020) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு... சிறப்பு பூஜைகள் நடந்தன. படம்: வி.எம்.மணிநாதன்
27 / 82
28 / 82
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று (31.7.2020) இணையதளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து... வேலூர் - கொசப்பேட்டையில் உள்ள ஈவேரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை... முகக்கசவம் அணிந்து வந்து - தனிமனித இடைவெளியுடன் பார்த்த மாணவிகள். படங்கள் : வி.எம்.மணிநாதன்
29 / 82
30 / 82
31 / 82
32 / 82
33 / 82
34 / 82
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை பிரிவில் ஒருவருக்கு ’கரோனா’ தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று (31.7.2020) அந்த அலுவலகம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். படங்கள் : விஎம்.மணிநாதன்
35 / 82
36 / 82
37 / 82
38 / 82
39 / 82
திருச்சி - அரியமங்கலம், எஸ்.ஐ.டி பகுதியில் சாலையோரக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளை அங்கிருந்து நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் அகற்ற முயற்சிப்பதாகக் கூறி... இன்று (31.7.2020) திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்க வந்தனர். படம்: ஜி.ஞானவேல் முருகன்
40 / 82
அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவுள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கு... விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில்... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் பிரசாதம் அடங்கிய மங்கலப் பொருட்கள் மற்றும் காவிரி ஆற்றில் சேகரிக்கப்பட்ட மணல் ஆகியவை இன்று (31.7.2020) அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
41 / 82
42 / 82
திருஞானசம்பந்தர் மற்றும் தேவாரப் பாடல்களைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பேசியவர்கள் மீது... உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி - திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் திருநெல்வேலி சிவன் அடியார்கள் திருக்கூட்டம் மற்றும் ஓதுவார்கள் அமைப்பினர் சார்பில் புகார் மனு இன்று (31.7.2020) கொடுக்கப்பட்டது. படங்கள்: மு. லெட்சுமி அருண்
43 / 82
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில்... தொடங்கப்பட்ட கரோனா தொற்று பரிசாதனை முகாமை இன்று (31.7.2020) புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அம்முகாமில் அத்தொகுதி எம்எல்ஏ சிவா பரிசோதனை செய்து கொண்டார். படம்: எம்.சாம்ராஜ்
44 / 82
புதுச்சேரி - உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரத் துறை சார்பில் இன்று (31.7.2020) நடத்தப்பட்ட ’கரோனா’ தொற்றுப் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட ஓருவரது உமிழ் நீர் மாதிரியை சேகரிக்கும் மருத்துவர். அருகில் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. படம்: எம்.சாம்ராஜ்
45 / 82
46 / 82
47 / 82
புதுச்சேரி - உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரத் துறை சார்பில் இன்று (31.7.2020) நடத்தப்பட்ட ’கரோனா’ பரிசோதனை முகாமில் கலந்துகொண்ட காவல்துறையினரின் உமிழ் நீர் மாதிரியை சேகரிக்கும் மருத்துவர். படம்: எம்.சாம்ராஜ்
48 / 82
புதுச்சேரி - உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரத் துறை சார்பில் இன்று (31.7.2020) நடத்தப்பட்ட ’கரோனா’ பரிசோதனை முகாமில் கலந்துகொண்டகுழந்தையிடம் உமிழ் நீர் மாதிரியை சேகரிக்கும் மருத்துவர்.
49 / 82
புதுச்சேரி - உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில்... இன்று (31.7.2020) திரையரங்கு ஒன்றில் நடத்தப்பட்ட ’கரோனா’ தொற்றுப் பறிசோதனை முகாமில்... சோதனை செய்துகொள்ள வரிசையில் நிற்கும் பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்
50 / 82
புதுச்சேரியில் இன்று (31.7.2020) பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அம்முடிவுகளைத் தங்களது ஆலைபேசியில் ஆர்வத்தோடு பார்வையிடும் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். படம்: எம்.சாம்ராஜ்
51 / 82
52 / 82
‘கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக - மூடியிருக்கும் நீதிமன்றங்களை உடனே திறக்கக் கோரி... திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்பு இன்று (31.7.2020) வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்
53 / 82
’கரோனா’ தொற்றுக் காரணமாக சென்னையில் தடைப்பட்டிருந்த அரசு கட்டுமானப் பணிகள்... ஊரடங்கு தளர்வு காரணமாக... மீண்டும் தொடங்கியுள்ளன. இன்று (31.7.2020) சென்னை - சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாதையைப் புதுப்பிக்கும் பணிக்கு செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள். படங்கள்: ம.பிரபு
54 / 82
55 / 82
குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணியில் இருக்கும்போது கைத் துண்டாகி சிகிச்சையில் இருக்கும் தூய்மைப் பணியாளர் பாக்யலட்சுமிக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி... அனைத்து கட்சியினர் சார்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு இன்று (31.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
56 / 82
இன்று (31.7.2020) 11 -ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து... பாளையங்கோட்டை மெரி சார்ஜெண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்களது மதிப்பெண்களை அலைபேசியில் ஆர்வமுடன் பார்க்கும் மாணவிகள்> படம்: மு .லெட்சுமி அருண்
57 / 82
58 / 82
’கரோனா’ தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக... பள்ளிகளைத் திறப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே 2 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு நடப்பு ஆண்டுக்கான விலையில்லாப் புத்தகப்பைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இதற்காக சேலம் - குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... இன்று (31.7.2020) புத்தகப்பைகளுக்குள் பாடப்புத்தகங்களைப் பிரித்து வைக்கும் பணியில்... ஆசிரியர்கள் ஈடுபட்டனர். படங்கள் : எஸ்.குரு பிரசாத்
59 / 82
60 / 82
61 / 82
62 / 82
சேலம் அரசு மருத்துவமனையில் ’கரோனா’ தொற்றைக் கண்டறியும் ஆய்வகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளருக்கு ’கரோனா’ தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து... இன்று (31.7.2020) அந்த ஆய்வகம் மூடப்பட்டு... கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. படம் : எஸ்.குரு பிரசாத்
63 / 82
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர்... தான் தினமும் தெருவோரங்களில் யாசகம் பெற்று சேகரித்த 10 ஆயிரம் ரூபாயை... ’கரோனா’ நிதிக்காக மதுரை - ஆட்சியரிடம் இன்று (31.7.2020) வழங்கினார். இதுபோல் இவர் ’கரோனா’ நிதி வழங்குவது 7-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
64 / 82
’கரோனா’ தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில்.. டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவது, ’கரோனா’ தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... அனைவரும் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை கோரிக்கை அட்டையை அணிந்துகொண்டு பணியாற்றுமாறு டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் ஊழியர்களின் 12 சங்கங்கள் சார்பாக இன்று (31.7.2020) அட்டை வழங்கப்பட்டது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
65 / 82
’கரோனா’ தொற்று நாளுக்கு நாள் அதிகமாகப் பரவுவதால்... மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா இணையதளம் வழியாக ( வீடியோ கான்ஃபரன்ஸ்) பொதுமக்களின் புகார்களையும், குறைகளையும் இன்று (31.7.2020) கேட்டறிந்தார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
66 / 82
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக... மூடப்பட்ட மாவட்ட நீதிமன்றங்களை உடனடியாக திறக்கக் கோரி... வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மதுரையில் இன்று (31.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
67 / 82
நீண்ட காலமாக கட்டப்பட்டு வந்த பல்லாவரம் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. இந்த பாலத்தை காலம் கடத்தாமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கக் கோரி... இன்று (31.7.2020) இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். படங்கள் :எம்.முத்துகணேஷ்
68 / 82
69 / 82
70 / 82
71 / 82
72 / 82
கோவை துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியில் இணையதளம் மூலமாக இன்று (31.7.2020) வெளியான பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட மாணவி. படம்: ஜெ.மனோகரன்
73 / 82
கோவை நாடார் வீதியில் உள்ள கோயிலில் இன்று (31.7.2020) ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையொட்டி... அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். படம்: ஜெ.மனோகரன்
74 / 82
கோவை கெம்பட்டி காலனியில் உள்ள வன பத்திரகாளியம் கோயிலில் இன்று (31.7.2020) ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.படம்: ஜெ.மனோகரன்
75 / 82
கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய அதிநவீன ஆவின் பாலகத்தின் கட்டுமானப் பணிகளுக்கு இன்று (31.7.2020) பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் எஸ் .பி.வேலுமணி. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்டோர். படம்: ஜெ மனோகரன்
76 / 82
கோவை பா.ஜ.க அலுவலகத்தில் இன்று (31.7.2020) வரலட்சுமி விரதத்தையொட்டி... பாரத மாதாவுக்கு பெண்கள் வழிபாடு நடத்தினர். படம்: ஜெ .மனோகரன்
77 / 82
ரக் ஷா பந்தன் பண்டிகை வருவதையொட்டி... கோவை - ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள கடைகளில் இன்று (31.7.2020) ’ராக்கி கயிறு’ வாங்க வந்திருந்த மக்கள். படம்: ஜெ .மனோகரன்
78 / 82
79 / 82
80 / 82
81 / 82
சென்னை - ஆலந்தூர் பகுதியில் இன்று (31.7.2020) சூரிய ஒளியில்... மாலை ஆகாயம் பன்முகம் காட்ட.... விமானம் ஒன்று அதைக் கடந்து செல்லும் அழகான காட்சி. படங்கள்: எம்.முத்து கணேஷ்
82 / 82

Recently Added

More From This Category

x