Published on : 30 Jul 2020 18:50 pm

பேசும் படங்கள்... (30.07.2020)

Published on : 30 Jul 2020 18:50 pm

1 / 65
சேலம் - சத்திரம் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்து... அரிசிப்பாளையம் - சின்னப்பன் நகர் பொதுமக்கள் இன்று (30.7.2020) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ். குருபிரசாத்
2 / 65
3 / 65
4 / 65
மத்திய அரசின் சுற்றுச்சூழல் திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்... எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும்... சேலத்தில் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் இன்று (30.7.2020) சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனிடம் கோரிக்கை மனு அளித்தனர். படம் : எஸ். குருபிரசாத்
5 / 65
மத்திய அரசின் சுற்றுச்சூழல் திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும... எட்டுவழிச் சாலை திட்ட்த்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும்... சேலத்தில் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கையெடுத்து கும்பிட்டவாறு இன்று (30.7.2020) சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனிடம் மனு அளிக்க வந்தனர். படங்கள்: எஸ். குருபிரசாத்
6 / 65
7 / 65
சென்னை- மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள 10 மற்றும் 11-ம் எண் ரேஷன் கடையில் நேற்று (29.7.2020) இரவில் மின் கசிவு காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டது. படம் : க.ஸ்ரீபரத்
8 / 65
சென்னை- மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள 10 மற்றும் 11-ம் எண் ரேஷன் கடையில் நேற்று (29.7.2020) இரவில் மின் கசிவு காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டதையொட்டி... கடைக்குள் இருந்த சேதமுற்ற பொருட்களை கடை ஊழியர் வெளியே கொண்டு வந்து கொட்டினார். படம் : க.ஸ்ரீபரத்
9 / 65
சென்னை- மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள 10 மற்றும் 11-ம் எண் ரேஷன் கடையில் நேற்று (29.7.2020) இரவில் மின் கசிவு காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டதையொட்டி...மின் வாரிய ஊழியர் மின் கசிவு ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செயதார். படம் : க.ஸ்ரீபரத்
10 / 65
நாளை 3-வது ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோம்பு ஆகிய பண்டிகை நாள் என்பதால்... சென்னை - மயிலாப்பூர் மாட வீதியில் உள்ள கடைகளில் வாழையிலைகள், விதவிதமானப் பூக்கள், பூஜைப் பொருட்கள், தாமரைப் பூக்கள் போன்றவற்றை வாங்க இன்று (30.3.2020) பொதுமக்கள் திரண்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
11 / 65
12 / 65
13 / 65
14 / 65
15 / 65
நாளை 3-வது ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பு ஆகிய பண்டிகை நாள் என்பதால்... சென்னை - மயிலாப்பூர் மாட வீதியில் உள்ள கடைகளில் வாழை இலைகள், விதவிதமானப் பூக்கள், பூஜைப் பொருட்கள், தாமரைப் பூக்கள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டதால்... இன்று (30.3.2020) இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. படங்கள்: க.ஸ்ரீபரத்
16 / 65
17 / 65
18 / 65
19 / 65
20 / 65
21 / 65
திருநெல்வேலி என். ஜி. ஓ காலனிப் பகுதியில் உள்ள குப்பைப் பிரித்தெடுக்கும் மையத்தில் பணியில் இருக்கும்போது... இயந்திரத்தால் கைத் துண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்... தூய்மைப் பணியாளர் பாக்கியலட்சுமிக்கு நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கக் கோரி... இன்று (30.7.2020) திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். படங்கள் : மு.லெட்சுமி அருண்
22 / 65
23 / 65
தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இன்று (30.7.2020) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் - மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
24 / 65
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக... மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாடக கலைஞர்கள் பங்கு பெற்ற ’கரோனா’ விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் இன்று (30.7.2020) நடைபெற்றன. இதில் பங்கு பெற்ற இந்தக் கலைக் குழுவினர்.... திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சென்று ’கரோனா’ விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்
25 / 65
26 / 65
27 / 65
28 / 65
நாளை 3-வது ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பு என்பதால் மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில்... இன்று (30.7.2020) மல்லிகைப்பூ விலை கிலோ 700 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
29 / 65
30 / 65
31 / 65
வைகை அணையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்... மதுரை செல்லும் சாலையில் - ஜம்புலிபுத்தூர் என்ற பகுதியில்... சமூக இடைவெளி இன்றியும் முகக் கவசம் அணியாமலும் இன்று (30.7.2020) டிராக்டரில் செல்லும் இளைஞர்கள். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
32 / 65
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மிதமான சாரல் மழை பெய்து இப்பகுதியை குளிர்வித்தது. இன்று (30.7.2020) வெளுத்து வாங்கிய வெயிலுக்கு இடையே... சிட்லபாக்கம் பகுதியில் பருத்தி வெடித்துச் சிதறியதைப் போல் ஆகாயத்தில் காட்சி அளித்த மேகக் கூட்டங்கள். படங்கள் : எம்.முத்துகணேஷ்
33 / 65
34 / 65
ஆகஸ்ட் 3-ம் தேதி ’ரக்சா பந்தன்’ பண்டிகை வருவதையொட்டி.... சென்னை - சவுகார்ப்பேட்டை பகுதியில் உள்ள கடையொன்றில் தங்கள் சகோதரர்களுக்கு ’ராக்கி’ கயிறு வாங்க இன்று (30.7.2020) பெண்கள் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். படங்கள் : பு.க.பிரவீன்
35 / 65
36 / 65
’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிப் போயிருந்த சிறுவர்களும், பெரியவர்களும் இன்று (30.7.2020)சென்னையை அடுத்த நெமிலிச்சேரி ஏரியில் வரிசையாக அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்தனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
37 / 65
38 / 65
பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி... சென்னை- இரட்டை ஏரி அருகே... இன்று (30.7.2020) நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில் விவிதமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. படங்கள் : ம.பிரபு
39 / 65
40 / 65
41 / 65
42 / 65
43 / 65
44 / 65
45 / 65
சேலம் மாவட்டத்தில் ’கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளது. இதைக் கட்டுப்படுத்த - சேலம் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாவென ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று சின்ன திருப்பதி பகுதியில் உள்ள மக்களுக்கு ’கரோனா’ தொற்று அறிகுறிகள் உள்ளதாவென கண்டறியும் பணிகள் நடைபெற்றன. படம் : எஸ்.குருபிரசாத்
46 / 65
வரலட்சுமி நோன்பு மற்றும் 3-வது ஆடி வெள்ளி பண்டிகை நாளை (31.7.2020) கொண்டாடப்படுவதையொட்டி... - சேலம் நேரு கலையரங்கத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ மார்க்கெட்டில் பூ மற்றும் பூஜை பொருட்கள் வாங்க இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். படம் : எஸ்.குருபிரசாத்
47 / 65
48 / 65
சென்னை - அண்ணா சாலையில் உள்ள... தர்ஹா தூபியின் பின்னணியில் இன்று அந்தி சாயும்வேளையில்... ஆகாயத்தில் வண்ணக்கோலமிட்ட கதிரவன் படம் : ம.பிரபு
49 / 65
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களைப் பாதுகாக்கவும்... 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்... கருப்புப் பட்டை அணிந்து - திருநெல்வேலி ஆட்சித் தலைவர் வளாகத்தில் இன்று (30.7.2020) தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு .லட்சுமிஅருண்
50 / 65
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருவதால்... கோவை- குறிச்சி குளத்தில் பெலிக்கன் பறவைகள் அதிகளவில் தென்பட ஆரம்பித்துள்ளன. படங்கள் : ஜெ .மனோகரன்
51 / 65
52 / 65
53 / 65
54 / 65
55 / 65
56 / 65
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு... கோவை - குனியமுத்தூரில் பூசணி அல்வா தயாரிக்கும் பணியில் முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். படம் : ஜெ .மனோகரன்
57 / 65
58 / 65
59 / 65
60 / 65
61 / 65
62 / 65
63 / 65
64 / 65
65 / 65
கோவையில் செல்போனில் இணைத்து பேசும் வகையில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ‘ப்ளூடூத் ஹெட்செட்’ உடன் கூடிய முகக்கவசம். படம்: ஜெ.மனோகரன்.

Recently Added

More From This Category

x