1 / 65
மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்ததின் எதிரொலியாக... இன்று (29.7.2020)
திருநெல்வேலி மாவட்டம் - கொக்கிரகுளம் பகுதியில் மேகக்கூட்டங்கள் ஆகாயத்தில் போர்வை போல் படர்ந்திருந்த காட்சி.
படங்கள்: மு.லெட்சுமி அருண்
2 / 65
3 / 65
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று (28.7.2020) இரவு பெய்த மழையின் காரணமாக... காய்கறி கடைகளில் தேங்கியுள்ள தண்ணீரை... பூந்தமல்லி நகராாட்சியினர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
படம் : ம.பிரபு
4 / 65
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று (28.7.2020) இரவு பெய்த மழையின் காரணமாக... விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எலுமிச்சைப் பழ மூட்டைகள் ம் சேதமடைந்தன.
படம் : ம.பிரபு
5 / 65
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று (28.7.2020) இரவு பெய்த மழையின் காரணமாக கடைகளில் தேங்கியுள்ள தண்ணீரை பூந்தமல்லி நகராாட்சியினர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் - தூய்மை பணியாளர்கள் காய்கறி கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
படங்கள் : ம.பிரபு
6 / 65
7 / 65
8 / 65
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று (28.7.2020) இரவு முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி - கரையான்சாவடி சாலை சிறிய மழைக்கே குண்டும் குழியுமாக மாறியதால்... சாலையில் போக்குவரத்து வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன.
படங்கள் : ம.பிரபு
9 / 65
10 / 65
11 / 65
12 / 65
சென்னையை அடுத்த அகரம் தென் பகுதியில் மின் வாரியப் பணிகள் நிறைவுபெறாத நிலையில்... இன்று (29.7.2020) காலையில் வயல்வெளிகளில் மேய்சலுக்கு விட்டிருந்த 5 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
13 / 65
14 / 65
15 / 65
16 / 65
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலைமுதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் - மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் மழையில் நனைந்தபடியே வாகனங்கள் சென்றன.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
17 / 65
18 / 65
19 / 65
20 / 65
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருந்துவரும் ஊரடங்கு காரணமாக... சென்னை - கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவற்றில் அமைந்திருந்த சுங்கச்சாவடிகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளுக்குப் பிறகு இன்றுமுதல் அந்த சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் (டோல்) வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.
பட்ங்கள் : பு.க.பிரவீன்
21 / 65
22 / 65
23 / 65
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று (29.7.2020) அதிகாலை முதல் சாரலுன் கூடிய மழை பெய்துவருகிறது. இந்நிலையிலும் வேளச்சேரி - தாம்பரம் சாலையில் பொதுமக்கள் சில்லென்ற மழைச் சாரலில் நனைந்தபடியே தங்கள் தினசரி பணிகளுக்குச் சென்றனர்.
படம்: பு.க.பிரவீன்
24 / 65
25 / 65
26 / 65
27 / 65
28 / 65
29 / 65
திருநெல்வேலி - என் ஜி.ஓ காலனியில் உள்ள குப்பையைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டபோது இயந்திரத்தால் கை துண்டிக்கப்பட்டு... தற்போது சிகிச்சையில் இருந்து வரும் தூய்மைப் பணியாளர் பாக்கியலட்சுமிக்கு நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்க வலியுறுத்தி... இப்பகுதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அருந்ததியர் நல அமைப்பினர் இன்று (29.7.2020) பெருமாள்புரத்தில் உள்ள நகராட்சி மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : மு.லெட்சுமி அருண்
30 / 65
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று (29.7.2020) காலைமுதல்
மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் வெயி்ல் தாக்கத்தில் சிக்கித் தவித்து வந்த சென்னை நகர மக்கள்... குளுகுளு குற்றாலச் சாரலில் நனையும் மகிழ்வோடு... தங்கள் அன்றாட பணிகளுக்கு சென்று வந்தனர்.
படம்: க.ஸ்ரீபரத்
31 / 65
கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (29.7.2020) பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக... மதுரை - தல்லாகுளம் அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
32 / 65
சென்னை - பாரிமுனைப் பகுதியில் இன்று (29.7.2020) காலை சாரல் மழை பெய்தபோது... நண்பர்கள் இருவர் சாலையோரம் இருந்த கை ரிக்ஷாவில் அமர்ந்து... மழைச் சாரலை ரசித்தபடியே... மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
படம் : க.ஸ்ரீபரத்
33 / 65
மதுரை - காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில்... மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே - போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு... தற்போது வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
34 / 65
’கரோனா’ தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்... சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து பணியாளர்களுக்கும் தரமான முகக்கவசம், கையுறைகள், சோப்பு, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கக் கோரியும்... சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மதுரை - அழகர்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டட்தில் ஈடுபட்டனர்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
35 / 65
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ சங்கங்கள் சார்பில் இன்று (29.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
36 / 65
சென்னையில் இன்று (29.7.2020) காலைமுதல்... தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தபோதும்... ‘கரோனா’ பரவலை தடுக்க சில கட்டுப்பாடு தளர்வுடன் ஊரடங்கு இருந்துவரும் நிலையிலும்... எப்போதும் போல் வாகனம் மற்றும் பொதுமக்களின் பரபரப்பு கோலத்துடன் காணப்பட்டது சென்னை - என்.எஸ்.சி போஸ் சாலை.
படங்கள்: க.ஸ்ரீபரத்
37 / 65
38 / 65
சென்னை - பாரிமுனையில் உள்ள பூக்கடை பஜாரில் பூ வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் வழங்கப்பட்ட குடை... இன்று (29.7.2020) பெய்த மழையில் அவர்கள் நனையாமல் பூ வாங்கிச் செல்லவும் பயன்பட்டது. படங்கள்: க.ஸ்ரீபரத்
39 / 65
40 / 65
41 / 65
வரும் மாதம் நடக்கவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக... சென்னை - செயிண்ட் ஜார்ஜ் கோட்டை முன்பு பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
படங்கள் : க.ஸ்ரீபரத்
42 / 65
43 / 65
44 / 65
45 / 65
46 / 65
47 / 65
48 / 65
'கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருந்துவரும்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக... திருச்சி - மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்துக்கு இன்று மாநகராட்சி நிர்வாகத்தினர் ‘சீல்’ வைத்தனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
49 / 65
50 / 65
51 / 65
புதுச்சேரி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு மேல்நிலைக் கல்வி வரையில் கல்வி செலவை அரசே ஏற்கும் என புதுச்சேரி அரசு அறிவித்த அறிவிப்பை... உடனடியாக செயல்படுத்தக் கோரி... புதுச்சேரி - ஆதி திராவிடர் நலத் துறை அலுவலகம் முன்பு இன்று (29.7.2020) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
படம்: எம்.சாமராஜ்
52 / 65
புதுச்சேரி நகரப் பகுதிகளில் கரோனா தொற்றுப் பாதிப்பு நாளுக்கு நாள் பெருமளவு பெருகி வருவதையடுத்து... புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்களுக்கு... கரோனா காலத்தில் பாதுகாப்பாக பணிபுரியும் விதம் குறித்து... காவல்துறையின் மூத்த உயர் அதிகாரி பிரதிஷா கொடரா இன்று (29.7.2020) ஆலோசனை வழங்கினார்.
படம் : எம்.சாம்ராஜ்
53 / 65
வானிலை தாழ்வுநிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக... தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரியிலும் இன்று (29.7.2020) காலை முதல் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. கோரிமேடு சாலையில் மழைச் சாரலில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
54 / 65
55 / 65
56 / 65
கரோனா காலகட்டத்தில் பள்ளிகளை திறக்கக் கூடாது; மேலும் - பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்டு... பள்ளிகளைச் சுழற்சிமுறையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்; ஜாக்டோ - ஜியோ சங்கங்கள் வலியுறுத்தி நிலுவையில் உள்ள 12 அம்சக் கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ - ஜியோ தலைவர்களை அழைத்து பேச வேண்டும்... என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை... இன்று (29.7.2020) வேலூர் - ஆட்சியர் அலுவலகத்துக்கு அளிக்க வந்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர்.
படம் : வி.எம்.மணிநாதன்
57 / 65
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி ’பக்ரீத்’ பண்டிகையையொட்டி... குர்பானி வழங்குவதற்காக - கோவை - போத்தனுர் சாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
படம் : ஜெ .மனோகரன்
58 / 65
59 / 65
60 / 65
கோவை மாநகராட்சி உத்தரவால் கிராஸ்கட் சாலையில் உள்ள செல்போன் கடைகள் கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க மூடப்பட்டுள்ளன.
படம் :ஜெ .மனோகரன்
61 / 65
62 / 65
கோவை மாநகரத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் -
குடிநீரை சீராக விநியோகிக்க வலியுறுத்தி திமுக சார்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவரவர் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி... காலிக் குடங்களுடன் இன்று (29.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ். புரம் தெப்பக்குளம் பகுதியில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர்.
படம் : ஜெ .மனோகரன்
63 / 65
64 / 65
65 / 65
இந்திய மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (29.7.2020) கோவை - ஜீவா இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
படம் : ஜெ .மனோகரன்