1 / 61
நாடு முழுவதும் - இன்று (26.07.2020) கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பதையொட்டி... நேற்று காலையில் கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில்... மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் முகக்கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
படம்: ஜெ .மனோகரன்
2 / 61
3 / 61
கோவையில் - நேற்று (25.7.2020) மாலை 5 மணி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்... கோவை - உக்கடம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் நேற்று அதிகாலையிலேயே காய்கறிகள் வாங்கக் கூடிய கூட்டம்.
படம் : ஜெ .மனோகரன்
4 / 61
5 / 61
கோவை - புளியங்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள துள்ள ஆறுமுகம் வீதியில் வசிக்கும் பொதுமக்களிடம் நேற்று (25.7.2020) சுகாதாரத் துறையினர் உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொண்டு, உடன் மருந்துகளும் வழங்கினர்.
படம் : ஜெ .மனோகரன்
6 / 61
7 / 61
8 / 61
கோவை - சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்... நேற்று (25.7.2020) தலைமை ஆசிரியர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்களுக்கு வழங்கினார்.
படம் : ஜெ .மனோகரன்
9 / 61
கார்கில் போரில் வெற்றிபெற்ற தினமான இன்று (26.07.2020) திருச்சி - வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் உள்ள மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில்... முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
10 / 61
11 / 61
12 / 61
தளர்வில்லா முழு ஊரடங்கு நாளான இன்று (26.07.2020) - திருச்சியில் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். தஞ்சாவூர் சாலையில் பால்பண்னை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரைப் பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் தூரத்திலேலே திரும்பி சென்றனர். சிலர் உரிய விளக்கம் அளித்தும், பலர் அபராதம் கட்டியும் சென்றனர்.
படங்கள் : ஜி.ஞானவேல் முருகன்
13 / 61
14 / 61
15 / 61
16 / 61
’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால்... வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களில் மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தொழில் நடத்துபவர்களும் அடங்குவர்.
ராயப்பேட்டை பிரகாஷ் கூறும்போது ’’இது எனக்கு பரம்பரை தொழில். ’கரோனா’ ஊரடங்கால் மெரினாவுக்கு பொதுமக்கள் வர தடையுள்ளதால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறேன். நாள் ஒன்றுக்கு ஒரு குதிரைக்கு 400 முதல் 500 ரூபாய் வரை செலவாகும். நான் பசியுடன் இருந்தாலும் என் குதிரைகளுக்கு கடன் பட்டாவது உணவு கொடுத்து வருகிறேன். என்னைப் போல் சென்னையில் நிறையப் பேர் உள்ளனர். எங்கள் நிலை அறிந்து அரசு எங்களுக்கு உதவ வேண்டும்’’ என்றார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
17 / 61
18 / 61
19 / 61
கார்கில் போர் வெற்றி தினமான இன்று (26.7.2020) சென்னை - தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில்... ராணுவ மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்த்ரா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
படம் : பு.க.பிரவீன்
20 / 61
21 / 61
22 / 61
23 / 61
முழு ஊரடங்கு நாளான இன்று (26.7.2020) வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே... கிரீன் சர்க்கிள் பகுதியில் வாகனப் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்
24 / 61
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (26.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையொட்டி... திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படும் சாலைகள்.
படம் : மு. லெட்சுமி அருண்
25 / 61
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (26.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையொட்டி... தாழையூத்து - மதுரை செல்லும் நான்குவழிச் சாலை... வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. படம்: மு. லெட்சுமி அருண்
26 / 61
தமிழகத்தில் இன்று (26.7.2020) முழு ஊரடங்கையொட்டி... சென்னை - ராஜா முத்தையா சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்கள் போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : பு.க.பிரவீன்
27 / 61
’கார்கில்’ போரில் வெற்றிபெற்ற நாளான இன்று (26.7.2020) மதுரை - மேகமலை பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு ... கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு... அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
28 / 61
மதுரையில் முழு ஊரடங்கு நாளான இன்று (26.7.20200 திருப்பரங்குன்றம் பகுதி ... மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
29 / 61
உயர் பன்மைச் சூழலைக்கொண்ட... பல்லுயிர்களின் வாழ்விட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கோவை - சிங்காநல்லுர் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளும் கழிவு நீரும் கலந்து... குளமே மாசடைந்து காணப்படுகிறது.
படம் : ஜெ .மனோகரன்
30 / 61
31 / 61
முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இன்று (26.7.2020) கோவை - அவிநாசி சாலை எந்த வாகனப் போக்குவரத்தும் இன்றி... வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : ஜெ .மனோகரன்
32 / 61
கோவை - சிங்காநல்லுர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ’கரோனா’ தொற்றுக்கான சிகிச்சை பெற்று... குணமடைந்த சிலர் இன்று (26.7.2020) வீடு திரும்பினர்.
படம் : ஜெ .மனோகரன்
33 / 61
34 / 61
கோவை - ராஜ வீதியில்... தங்க நகை வியாபாரிகள் சங்கம் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் சார்பில்... தங்க பட்டறைத் தொழிலாளர்களுக்கு... ’கரோனா’ தொற்றுப் பரிசோதனையை - கோவை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் மகேஷ் கனகராஜ் இன்று (26.7.2020) தொடங்கி வைத்தார்.
படம் : ஜெ .மனோகரன்
35 / 61
சென்னையில் உள்ள... உள்ளகரம் - புழுதிவாக்கம் ஏரி கடந்த காலத்தில்... தூர்வாரி கரை உயர்த்தப்பட்டது. மேலும் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்ட ஏரிக்கு அழகூட்டும் பணிகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் - ஏரியைச் சுற்றியுள்ள மடிப்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத்தினர்... ஏரியின் கரையோரங்களில் இன்று (26.7.2020) மரக்கன்றுகளை நட்டனர். இதில் - சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கலந்து கொண்டனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
36 / 61
37 / 61
38 / 61
39 / 61
40 / 61
முழு ஊரடங்கு நாளான இன்று (26.7.2020) ஒரகடம் பகுதியில்... எந்த வாகனப் போக்குவரத்துமின்றி சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. வாகனப் போக்குவரத்து இல்லாத அந்த சாலையில் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
41 / 61
42 / 61
வன விலங்குகளைப் பாதுகாக்க... மத்திய - மாநில அரசுகள் சட்டரீதியிலான நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளன . அந்த சட்டங்களை எல்லாம் பொருட்படுத்தாமல்... பறவைகள், காட்டு முயல், கொக்கு மற்றும் இனப்பெருக்கத்துக்காக இங்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளை... வேட்டையாடி புதுச்சேரி மாநிலம், வில்லியனுாரில் உள்ள உளவாய்க்கால் சாலைப் பகுதியில்...விற்பனை செய்து வருகின்றனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
43 / 61
44 / 61
45 / 61
‘கரோனா’ தொற்றுத் தடுப்பு குறித்து... பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் - புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில்... காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் கணேசன் முன்னிலையில்... புதுச்சேரி காவல்துறையினர் இன்று (26.7.2020) சைக்கிள் பேரணியை நடத்தினர்.
படம்: எம்.சாம்ராஜ்
46 / 61
47 / 61
புதுச்சேரி - தட்டாஞ்சாவடியில் ’கரோனா’ ஊரடங்கால் வருமானமின்றி... பெரிதும் பாதிக்கப்பட்ட 400 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இன்று (26.7.2020) 10 கிலோ விலையில்லா அரிசியை... ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் வழங்கினர்.
படம் : எம்.சாம்ராஜ்
48 / 61
முழு ஊரடங்கு நாளான இன்று (26.7.2020) விழுப்புரம் மாவட்டம் - ஈசிஆர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டக்குப்பத்தில் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் சாலை. படம் : எம்.சாம்ராஜ்
49 / 61
முழு ஊரடங்கு நாளான இன்று (26.7.2020) காஞ்சிபுரம் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டன.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
50 / 61
51 / 61
52 / 61
முழு ஊரடங்கு நாளான இன்று (26.7.2020) சென்னையில் - போரூர் மேம்பாலம் மற்றும் அதை இணைக்கும் குன்றத்தூர் சாலை, வடபழனி சாலை, பூந்தமல்லி சாலை, நந்தப்பாக்கம் ஆகிய சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இன்றி ஒருசேர வெறிச்சோடிக் காணப்பட்டன.
(ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது)
படம் : ம.பிரபு
53 / 61
வேலூரில் இன்று ( ஜூலை - 26) மாலை பெய்த மழையில் நனைந்தபடி... சென்ற வாகன ஓட்டிகள்.
இடம் : காட்பாடி.
படங்கள் : வி.எம்.மணிநாதன்
54 / 61
55 / 61
56 / 61
57 / 61
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில்...
இன்று (26.7.2020) இரவும் பகலும் உரசிக்கொண்ட - அந்திப் பொழுதில் ஆகாயத்தில் தோன்றியது இந்த மேக வண்ண ஊர்வலம். கவியரசு கண்ணதாசன் இருந்திருந்து... இக்காட்சியை பார்த்திருந்தால்.... தமிழர்களுக்கு.... வண்ணத்தமிழ் கவிதையொன்று கிடைத்திருக்கும்.
இடம் : வி.எம்.மணிநாதன்
58 / 61
59 / 61
60 / 61
61 / 61