Published on : 25 Jul 2020 18:47 pm

பேசும் படங்கள்... (25.07.2020)

Published on : 25 Jul 2020 18:47 pm

1 / 59
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுக்கு வந்திருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜெயபாலுக்கு ’கரோனா’ தொற்று இன்று (25.7.2020) உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து - சட்டப்பேரவையின் உள்ளே உள்ள அனைத்து பகுதிகளிலும் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். படங்கள் : எம்.சாம்ராஜ்
2 / 59
3 / 59
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுக்கு வந்திருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜெயபாலுக்கு ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து - இன்று (25.7.2020) சட்டப்பேரவையின் முகப்பு பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். படம் : எம்.சாம்ராஜ்
4 / 59
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுக்கு வந்திருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜெயபாலுக்கு ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து - இன்று (25.7.2020) புதுச்சேரி சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டு... உள்ளே வாகனத்தில் வருபவர்களிடம் சுகாதாரத் துறை ஊழியர்கள் உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொண்டனர். படம் : எம்.சாம்ராஜ்
5 / 59
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்த வந்த முதல்வர் நாராயணசாமியிடம் சுகாதாரத் துறை ஊழியர் உடல் வெப்பப் பரிசோதனையை மேற்கொண்டார். படம்: எம்.சாம்ராஜ்
6 / 59
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுக்கு வந்திருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜெயபாலுக்கு ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து - இன்று (25.7.2020) காலை சட்டப்பேரவை நடக்கவிருந்த சட்டப்பேரவை அரங்கம் பூட்டு போட்டு மூடப்பட்டது.
7 / 59
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுக்கு வந்திருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜெயபாலுக்கு ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து -இன்று (25.7.2020) சட்டப்பேரவை மரத்தடியில் கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கும் சபாநாயகர் சிவக்கொழுந்து. அருகில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள். படம். எம்.சாம்ராஜ்
8 / 59
மரத்தடியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்துக்காக தடுப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி காவல் துறையினர். படம் : எம்.சாம்ராஜ்
9 / 59
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (25.7. 2020) காலையில் மீன் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான சிறு மீன் வியாபாரிகள் கூடியதால்.. அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. படங்கள் : ம.பிரபு
10 / 59
11 / 59
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் வழக்கைத்தைவிட பெரிய பெரிய மீன்களுடன் இன்று (25.7. 2020) காலையில் கரைக்குத் திரும்பினர். அந்தப் பெரிய மீன்களை சிறு வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். படங்கள்: ம.பிரபு
12 / 59
13 / 59
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (25.7. 2020) காலையில் சங்கரா மீன் அதிக அளவில் விற்பனையானது. சங்கரா மீன்களை சிறு வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். படம்: ம.பிரபு
14 / 59
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (25.7. 2020) காலையில் சிறு மீன் வியாபாரிகள் தாங்கள் வாங்கிய மீன்களை... மீன்பாடி வண்டி மூலம் தங்கள் கடைக்குக் கொண்டு சென்றனர். படம்: ம.பிரபு
15 / 59
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (25.7. 2020) மீன் வாங்க வரும் சிறு வியாபாரிகள் மற்றும் பொது மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் விதமாக... இப்பகுதியில் ’கரோனா’ பரிசோதனை சிறப்பு முகாம் அமைக்கபட்டு... பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: ம.பிரபு
16 / 59
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (25.7. 2020) மீன் வாங்க வரும் சிறு வியாபாரிகள் மற்றும் பொது மக்களை ஒழுங்குபடுத்தும் விதமாகவும்.. சமூக இடைவெளியுடன் மீன் விற்பனையும் கொள்முதலும் நடைபெறவும்... ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். படம்: ம.பிரபு
17 / 59
18 / 59
’கரோனா’ தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கு காலத்தில் தொடர் பணி மற்றும் சாத்தான்குளம் சம்பவம் போன்றவற்றை மனதில் கொண்டு... காவலர்களின் மன உளைச்சலைப் போக்கும் வகையில்... தமிழகம் முழுவதும் உள்ள காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படும் என டிஜிபி கூறியிருந்தார். இதையொட்டி வடசென்னை - வண்ணாரப்பேட்டை சரகத்துக்கு உட்பட்ட காவலர்களுக்கு சிறப்பு யோகப் பயிற்சி இன்று (25.7.2020) அளிக்கப்பட்டது. இதில் - ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டு தியானப் பயிற்சி செய்தனர். படங்கள் : ம.பிரபு
19 / 59
20 / 59
வேலூர் - அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சைதாப்பேட்டை கிளையின் சார்பில்... கலாஸ்பாளையம் பகுதியில் - ரத்ததான முகாம் இன்று (ஜூலை - 25) நடந்தது. இதை, வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்து... ரத்ததானம் செய்தோருக்கு சான்றிதழ் வழங்கினார். படம் : வி.எம்.மணிநாதன்
21 / 59
22 / 59
வேலூர் - சார்பனாமேடு பகுதியில் ’கரோனா’ தொற்று பாதித்தோரின் வீடுகளின் முன்பு... இன்று (25.7.2020) மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தடுப்புகள் அமைத்து கிருமிநாசினி மருந்து தெளித்து... சுத்தப்படுத்தினர் . படம் : வி.எம்.மணிநாதன்
23 / 59
’பிளஸ் 2‘ தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (ஜூலை - 25) முதல் பள்ளிகளில் வழங்கப்பட்டன. வேலூர் - கொசப்பேட்டையில் உள்ள ஈ.வே.ரா. நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... மாணவிகளுக்கு ’பிளஸ் 2’ தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை தலைமை ஆசிரியை வழங்கினார். படம் : வி.எம்.மணிநாதன்
24 / 59
வேலூர் - கொசப்பேட்டையில் உள்ள ஈ.வே.ரா. நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... இன்று (ஜூலை - 25) தங்களுக்கு வழங்கப்பட்ட ’பிளஸ் 2‘ தற்காலிக மதிப்பெண் பட்டியலை காட்டி மகிழும் மாணவிகள். படம் : வி.எம்.மணிநாதன்
25 / 59
‘கரோனா’ தொற்றுத் தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது - ‘கரோனா’ தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளதால்... விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு இன்று (25.7.2020) சென்னை - பாரிமுனை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில்... தடகளப் பயிற்சியில் ஈடுபடும் வீராங்கனைகள். படங்கள் : க.ஸ்ரீபரத்
26 / 59
27 / 59
28 / 59
29 / 59
30 / 59
31 / 59
32 / 59
33 / 59
34 / 59
’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பதால்... வெளியூர்களுக்கு தயாரிக்கப்பட்ட விநாயகர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்... வரும் மாதம் 11-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உள்ளதையொட்டி... குறைந்த எண்ணிக்கையில் வேலூர் - சூளைமேடு பகுதியில் கிருஷ்ணர் சிலைகளை செய்து - வண்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். படம் : வி.எம்.மணிநாதன்
35 / 59
36 / 59
திருச்சியில் ’கரோனா’ தொற்றுப் பரவல் அதிகரித்ததையொட்டி... பெரிய கடைவீதியின் சுற்றுவட்டாரப் பகுதியை கடந்த 10-ம் தேதி இரவு மாநகராட்சினர் தடுப்பு வைத்து அடைத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு... தடுப்புகளை அகற்றி - பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வந்தனர். இதனால் - இன்று (25.7.2020) கடைகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டதால்... பெரிய கடைவீதி போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. படம் : ஜி.ஞானவேல் முருகன்
37 / 59
38 / 59
திருச்சி - சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... மாணவிகளுக்கு இன்று (25.7.2020) ’ப்ளஸ் 2’ மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. படம் : ஜி.ஞானவேல்முருகன்
39 / 59
மதுரையில் ’கரோனா’ தொற்று சிறப்பு வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் சிலர் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் - அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய வாடகைத் தொகை செலுத்தவில்லை எனக் கூறி... ஹோட்டல் நிர்வாகத்தினர் செவிலியர்களை ஹோட்டல் அறைகளை காலி செய்து வெளியேற்றினர். இதையடுத்து செவிலியர்கள் இன்று (25.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
40 / 59
’கரோனா’ தொற்றுப் பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளுடன் இப்போதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்... இன்று (25.7.2020) நீர் வறண்டு காணப்படும் மதுரை - வைகை ஆற்றில் கபடி போட்டி நடைபெற்றது. இது தொடர்பாக தகவலறிந்த போலீஸார் வைகை ஆற்றுப் பகுதிக்கு... விரைந்து வந்து கபடி விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
41 / 59
தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (25.7.2020) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்... பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் - மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் எம்எல்ஏக்கள் சரவணன், பெரியபுலான். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
42 / 59
சென்னை - எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (25.7.2020) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியர் ராமலெட்சுமி.... மாணவிகளுக்கு வழங்கினார். படங்கள்: க.ஸ்ரீபரத்
43 / 59
44 / 59
மதுரை - காக்கைப்பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (25.7.2020) பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவிகளுக்கு... தலைமை ஆசிரியர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
45 / 59
வேலூரில் ’கரோனா’ தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் - மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும், ரேஷன் கடை ஊழியர்களும்... ’கரோனா’ தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்... அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்று (25.7.2020) வேலூர் - முள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலை கடையொன்றில் விலையில்லாப் பொருட்களை வாங்க சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் நின்றிருந்த பொதுமக்கள். படம் : வி.எம்.மணிநாதன்
46 / 59
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும்... திசையன்விளை செல்லும் சாலையில் உள்ள தெய்வேந்திரபேரி கிராமத்தில் உள்ள... யூகலிப்டஸ் மரங்கள் நீரின்றி காய்ந்து கருகி நிற்கின்றன. இப்பகுதி மக்கள் இந்த மரத்தை ‘தைல மரம்’ என்று அழைக்கிறார்கள். படம் : மு.லெட்சுமி அருண்
47 / 59
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்திருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ என்.எஸ்.ஜெயபாலுக்கு இன்று (25.7.2020) காலை... ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து... சட்டப்பேரவை அரங்கு இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து - தீர்மானங்களை நிறைவேற்ற சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மரத்தடியில் பந்தல் அமைத்து நாற்காலிகள் போடப்பட்டன. படம்: எம்.சாம்ராஜ்
48 / 59
புதுச்சேரி - சட்டப்பேரவை மரத்தடியில் இன்று (25.7.2020 அமைக்கப்பட்ட திறந்தவெளி பேரவை கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து... அதிமுக எம்எல்ஏ-க்கள் அன்பழகன், பாஸ்கரன், அசனா ஆகியோர் ... தரையில் அமர்ந்து தர்ணா பேராட்டம் நடத்தினர். படம்: எம்.சாம்ராஜ்
49 / 59
50 / 59
புதுச்சேரி - சட்டப்பேரவை மரத்தடியில் இன்று (25.7.2020 தற்காலிகமாக அமைக்கப்பட்ட திறந்தவெளி பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தோரை... மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபடுத்தும் புதுவை காவல்துறையினர். படம்; எம்.சாம்ராஜ்
51 / 59
புதுச்சேரி - சட்டப்பேரவை மரத்தடியில் இன்று (25.7.2020 தற்காலிகமாக அமைக்கப்பட்ட திறந்தவெளி பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் நாராணசாமி கலந்து கொண்டு பேசினார். படம்; எம்.சாம்ராஜ்
52 / 59
53 / 59
புதுச்சேரி - சட்டப்பேரவை மரத்தடியில் இன்று (25.7.2020 தற்காலிகமாக அமைக்கப்பட்ட திறந்தவெளி பேரவைக் கூட்டத் தொடரில்... கலந்துகொள்ள எதிர்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் யாரும் வராததால்.. காலியாக காணப்பட்ட நாற்காலிகள். படம்: எம்.சாம்ராஜ்
54 / 59
கிண்டி - சிறுவர் பூங்கா வளாகத்தில் உள்ள பாம்பு அருங்காட்சியகத்தில்... சமீபத்தில் பிறந்த மலைப்பாம்பு குட்டிகளை வனத்துறை அலுவலர் ஒருவர் செய்தியாளர்களிடம் காட்டுகிறார். அவர் கையில் நான்கு மலைப்பாம்பு குட்டிகள் பின்னிப் பினைந்துள்ளன. படம்: பு.க.பிரவீன்
55 / 59
கிண்டி - சிறுவர் பூங்கா வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில்... சமீபத்தில் பிறந்த சொம்பு மூக்கு முதலைக்குட்டிகள் படத்தில் வரிசையாக உள்ளன. அதில் ஒரு முதலைக்குட்டியை கைகளில் ஏந்தி வனத்துறை அலுவலர் ஒருவர் செய்தியாளர்களிடம் காட்டுகிறார். படங்கள்: பு.க.பிரவீன்
56 / 59
57 / 59
வேலூரில் இன்று (25.7.2020) மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக... தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீர். படம்: வி.எம்.மணிநாதன்
58 / 59
புதுச்சேரி பகுதிகளில் இன்று (25.7.2020) ஒருபுறம் வெயில் சுட்டெரித்தாலும்... மாலையில் - கடற்கரையின் காந்தி திடலில்... வானம் கரு மேக மூட்டத்துடன் கடல் நீரை நெருங்குவதுபோல் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து - சற்று நேரத்தில் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்தது. படங்கள் : எம்.சாம்ராஜ்
59 / 59

Recently Added

More From This Category

x