1 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (24.7.2020) பட்ஜெட் மீதான உரையை நிகழ்த்த வருகை தந்த... துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
படம்: எம்.சாம்ராஜ்
2 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (24.7.2020) பட்ஜெட் மீதான உரையை நிகழ்த்த வருகை தந்த... துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வரவேற்ற சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
படம் : எம்.சாம்ராஜ்
3 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (24.7.2020) பட்ஜெட் மீதான உரையை துணைநிலை ஆளுநர் படிக்க தொடங்கியவுடன்... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து... கருப்பு சட்டை அணிந்து வந்து... அவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி வெளிநடப்பு செய்தார்.
படம் : எம்.சாம்ராஜ்
4 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (24.7.2020) பட்ஜெட் மீதான உரையை துணைநிலை ஆளுநர் படிக்க தொடங்கியவுடன்... சட்டப்பேரவையில் இருந்து வௌயே வந்த புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், அரசு கொரடா அனந்தராமன் எம்எல்ஏ மற்றும் ஜெயமூர்த்தி எம்எல்ஏ.
படம் : எம்.சாம்ராஜ்
5 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து இன்று (24.7.2020) அதிமுக எம்எல்ஏ- க்கள். பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
படம் : எம். சாம்ராஜ்
6 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (24.7.2020) பட்ஜெட் மீதான உரையை நிகழ்த்திய பின்பு... காவல்துறையினரின் பாதுகாப்புடன் வெளியே வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
படம் : எம். சாம்ராஜ்
7 / 75
8 / 75
9 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (24.7.2020) ஆளுநர் உரை நிகழ்வு முடிந்த பின்பு... துணைநிலைஆளுநர் கிரண்பேடியை சட்டப்பேரவையில் இருந்து வழியனுப்பி வைக்கும் சபாநாயகர் சிவக்கொழுந்து.
படம் : எம். சாம்ராஜ்
10 / 75
11 / 75
12 / 75
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (24.7.2020) ஆளுநர் உரை நிகழ்வு முடிந்த பின்பு.. வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் எம்எல்ஏ-க்கள்.
படம் : எம். சாம்ராஜ்
13 / 75
புதுச்சேரியில் இன்று (24.7.2020) ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து... பாஜக எம்எல்ஏ-க்கள் சுவாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கைகளில் பதாகைகளை ஏந்தி வந்தனர்.
படம் : எம். சாம்ராஜ்
14 / 75
’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க... மத்திய அரசு பரிந்துரைத்துள்ள, உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஹோமியோபதி மருந்துகள் சேலத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இன்று (24.7.2020) சேலம் - லைன்மேடு பகுதியில் ’அமுதசுரபி’ சமூக நல அமைப்பினர்... மாநகராட்சி அனுமதி பெற்று ஹோமியோபதி மருந்துகளை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
படம் : எஸ்.குரு பிரசாத்
15 / 75
16 / 75
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் ’கரோனா’ தொற்றுப் பரவாமல் தடுக்க... பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு கண்டறியப்பட்ட பின்பே... அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
படங்கள்: எஸ். குருபிரசாத்
17 / 75
18 / 75
19 / 75
ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்... மலைப் பகுதி முழுவதும் உள்ள மரம், செடி, கொடிகள்... புல் பூண்டுகள் அனைத்தும் செழித்து வளர்ந்து... பசுமைப் போர்வை போர்த்திக் கொண்டுள்ளது.
படங்கள்: எஸ்.குருபிரசாத்
20 / 75
21 / 75
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கும்... ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சி செய்யும்... மத்திய அரசை கண்டித்து - கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே தொழிலாளர்கள் இன்று (24.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : க.ஸ்ரீபரத்
22 / 75
23 / 75
கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... காட்பாடி - டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் தற்காலிக ஊழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் - வேலூரில் நேற்று அதிகாலை பெய்த மழையினால் தற்காலிக உழவர் சந்தை மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால்... விவசாயிகள் வியபாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து - இந்த உழவர் சந்தையை அருகில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வாளகத்துக்கு உள்ளே மாற்றி அமைத்தனர்.
படம் : வி.எம்.மணிநாதன்்
24 / 75
25 / 75
கரோனா தொற்று காரணத்தால் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்து மூடிக்கிடக்கின்றன .
இந்நிலையில் -
பள்ளியிலேயே மதிய உணவு சமைத்து வழங்க முடியாத காரணத்தால்...இன்று (24.7.2020)
எழும்பூர் - மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட
அரிசி - பருப்பு உள்ளிட்ட பொருட்களை மாணவர் - மாணவிகள் பெற்றுச் செல்கின்றனர் .
படங்கள்:
க.ஸ்ரீபரத்
26 / 75
27 / 75
28 / 75
29 / 75
30 / 75
31 / 75
32 / 75
வேலூர் - காதிதப்பட்டறை குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளதை சரிசெய்யக் கோரியும், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும்.... இன்று (24.7.2020) அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவர்த்தை நடத்தி... அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
33 / 75
34 / 75
சென்னையை அடுத்த மறைமலை நகர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் வடமாநிலத்தோர் சிலர் விதவிதமான விநாயகர் சிலைகளை தயாரித்து
வருகின்றனர்.
இந்த ஆண்டு ’கரோனா’ தடுப்பு ஊரடங்கு காரணமாக - பெரிய
பெரிய சிலைகளை தயாரித்து
வர்ணம் பூசாமல் வைத்துள்ளனர் . அடுத்த மாதம் நிகழவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இதுவரை ஒரு ஆர்டர்கூட வரவில்லை என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
.
படங்கள்:எம்.முத்துகணேஷ்
35 / 75
36 / 75
ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி... இன்று (24.7.2020) வேலூர் - தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கையம்மன் கோயிலில் - அம்மனுக்கு தங்கக் கசவ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
படம் : வி.எம்.மணிநாதன்
37 / 75
திருச்சி - தலைமை அஞ்சல் நிலையத்தில் பணிபுரிந்த சில ஊழியர்களுக்கு... ’கரோனா’ தொற்று உறுதிசெய்யப்பட்டதையொட்டி... தற்காலிகமாக அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டது.
படம்: ஞானவேல் முருகன்
38 / 75
’கரோனா’ தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கும் சூழல் தற்போது இல்லை என்பதால் ... தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் - ஒரு வீட்டில் அலைபேசி, மடிக்கணினி மூலமாக அன்றாட பாடங்களை படிக்கும் மாணவிகள்.
படங்கள் : ஜி.ஞானவேல் முருகன்
39 / 75
40 / 75
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்... இன்று (24.7.2020) செய்திமக்கள் தொடர்பு அலுவலராக மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
படம் ; வி.எம். மணிநாதான்
41 / 75
42 / 75
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த பசு மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாகனத்தை ஓட்டியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . மாட்டுக்கும் கால் முறிந்தது.
’ப்ளூ கிராஸ்’ அமைப்புக்கு போன் செய்து... காத்திருந்தும் அவர்கள் வராததால்... அங்கிருந்த போக்குவரத்து காவலர்களே மாட்டை வேனில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் அங்கு வந்த மாட்டு உரிமையாளரான பாபு ’’ மாடு கன்று ஈனப்போகும் சமயத்தில் இப்படி ஆகிப்போச்சே,,,’’ என மனமொடிந்து போனார். அங்கிருந்தோர் மாட்டை சாலையில் சுற்றித் திரியவிட்டதற்காக பாபுவை திட்டித் தீர்த்தனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
43 / 75
44 / 75
45 / 75
46 / 75
47 / 75
48 / 75
49 / 75
50 / 75
வேலூரை அடுத்த காட்பாடி - தாராபடவேடு பகுதி அருகே இன்று (24.7.2020) காலையில் நிலைத் தடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர்மீது மோதி... விபத்துக்கு உள்ளான பால் வண்டி.
படம்: வி.எம்.மணிநாதன்
51 / 75
ஊதியம் வழங்குவதில் உள்ள குழப்பத்தை நீக்க வேண்டும்... முழு சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து அனைத்து தொழிலாளர் சங்கங்களும் இணைந்து.... இன்று (24.7.2020) வண்ணாரப்பேட்டை தாமிரபரணி போக்குவரத்து பணிமனை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: மு.லெட்சுமி அருண்
52 / 75
லண்டன் தேம்ஸ் நதியில் உள்ள ’வெஸ்ட் மினிஸ்டர்’ பாலத்தைப் போலவே கட்டமைப்பைக் கொண்டு சிறப்பு பெற்ற தாமிரபரணி ஆற்று பாலத்தைக் கட்டிட... தனியொரு ஆளாக பொருள் உதவி செய்த சுலோச்சனா முதலியார் பிறந்த நாளான இன்று (24.7.2020) திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பாலத்தில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
படங்கள்: மு. லெட்சுமி அருண
53 / 75
54 / 75
55 / 75
நீங்கள் பார்க்கும் இந்தப் பாலத்துக்கு ஆங்கிலேயர் ’சுலோச்சனா முதலியார் பாலம்’ என்று பெயர் வைத்தனர். இந்தப் பாலத்தைக் கட்டிட... தனியொரு ஆளாக பொருள் உதவி செய்த சுலோச்சனா முதலியரின் பிறந்த நாள் இன்று (24.7.2020).
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மீது 150 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சேதமும் இல்லாமல் கம்பீரமாக இருக்கும் இந்தப் பாலம்... உறுதியான கட்டிடத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
படம்: மு. லெட்சுமி அருண்.்
56 / 75
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (24.7.2020) வேப்பேரி காவல் ஆணையர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது - கரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பும் இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் காவலர்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன்... அவர்களை வாழ்த்தி வரவேற்றார்.
படம்: ம.பிரபு
57 / 75
58 / 75
59 / 75
நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...சென்னை - பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பி ல் இன்று (24.7.2020) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
படம்: ம.பிரபு
60 / 75
61 / 75
62 / 75
கல்வி தொலைக்காட்சி உட்பட 15-க்கும் மேற்பட்ட தனியார் சேனல்கள் மூலம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு... பாடங்கள் கற்பிக்கப்படவுள்ள நிலையில் ... இதற்காக கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 5 -க்கும் மேற்பட்ட ஸ்டுடியோக்கள் அமைத்து... ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு... அதனை ஒளிப்பதிவும் எடிட் செய்யும் பணியும் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.
படங்கள் : ம.பிரபு
63 / 75
64 / 75
65 / 75
66 / 75
67 / 75
அரசாணைக்கு விரோதமாக பிடித்தம் செய்த சம்பளத்தை வழங்க வேண்டும்; ஊரடங்கு காலத்தில் பணிபுரிந்த நாட்களுக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... மதுரை பைபாஸ் சலையில் உள்ள தலைமைப் போக்குவரத்து அலுவலகம் முன்பாக... டிஎன்எஸ்டிசி, எல்விஎஃப், சிஐடியு, எஸ்எம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து... இன்று (24.7.2020) ஆர்ப்பாட்டம் நடத்தின.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
68 / 75
கந்த சஷ்டிக் கவசத்தை இழிவுபடுத்தியோரை கைது செய்யக் கோரி... இன்று (24.7.2020) கோவை - காந்திபுரம் பாஜக அலுவலகம் முன்பு காவடி தூக்கியும்... மேளங்கள் அடித்தும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
69 / 75
70 / 75
ஆடி பூரத்தையொட்டி இன்று (24.7.2020) கோவை - ராஜா செட்டியார் வீதியில் உள்ள வன பத்திரகாளியம்மனுக்கு 1,008 வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு, பூஜை நடைபெற்றது.
படம்: ஜெ .மனோகரன்
71 / 75
கோவை அருகே அன்னூரில் பெரியார் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்.... இன்று (24.7.2020) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்த சென்றனர்.
படம் : ஜெ.மனோகரன்
72 / 75
’கார்கில்’ போர் நினைவு அனுசரிப்பு தினத்தையொட்டி( 26.7.2020) 'ஒரு மாணவன் ஒரு மரம்' என்ற கொள்கையுடன் கோவை மாவட்ட 2 தமிழ்நாடு (2TN ARTY BATTERY) தேசிய மாணவர் படை சார்பில்... இன்று (24.7.2020) கோவை அரசு கலை கல்லுரியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கர்னல் எல்.சி.எஸ். நாயுடு தொடங்கி வைத்தார்.
உடன் - கோவை மண்டல இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம் மற்றும் அரசு கலை கல்லுரி முதல்வர் கே. சித்ரா, கர்னல் கிரிஷ் பார்த்தன், மேஜர் கண்ணன், கேப்டன் ஜாகீர் உசேன் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்டோர்.
படம்: ஜெ.மனோகரன்
73 / 75
74 / 75
ரேஷன் கடைகளில் தொடர்ந்து 6 மாத காலத்துக்கு விலையில்லாப் பொருட்களை வழங்கிட வலியுறுத்தி...இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (24.7.20200 கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
படம்: ஜெ.மனோகரன்
75 / 75
மதுரை - எல்லீஸ் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் இன்று (24.7.2020) ஆடி பூரத்தை முன்னிட்டு... அம்மனுக்கு ஆயிரக்கணக்கில் வண்ண வண்ண வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி