Published on : 22 Jul 2020 18:05 pm

பேசும் படங்கள்... (22.07.2020)

Published on : 22 Jul 2020 18:05 pm

1 / 43
புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு ‘ராஜீவ்காந்தி ரொட்டி - பால் திட்டத்தின் பெயரை மாற்றி... முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்கப் போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்ததை கண்டித்தும்... இரவு நேரங்களில் ராஜீவ்காந்தி சிலையை இருள் சூழ்ந்திருப்பதாகவும் கூறி... தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் நேற்று (21.7.2020) இரவு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்..சாம்ராஜ்
2 / 43
திருச்சி - மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவனையில் இன்று (22.7.2020) மூச்சுத் திணறல் ஏற்படும் நோயளிகளுக்கு அதிக அளவு ஆக்ஜிசன் செலுத்தும் நவீன கருவி குறித்து... மருத்துவமனை தலைவர் மருத்துவர் கே.வனிதா செயல்முறை விளக்கம் அளித்தார். படம் : ஜி.ஞானவேல்முருகன்
3 / 43
திருச்சி - மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவனைக்கு இன்று வரவழைக்கப்பட்ட அதிக அளவு ஆக்ஜிசன் செலுத்தும் நவீன கருவி. படம் : ஜி.ஞானவேல்முருகன்
4 / 43
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (22,7,2020) புதுச்சேரி - பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு- பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின்போது... சக ஊழியர் ஒருவர் பாட்டிலில் இருந்த பெட்ரொலை அனைவரின் மீதும் தெளித்தார். இதையடுத்து அவரை காவல் துறையினர் தடுக்க முயன்றபோது ஊழியர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மெல்லிய தடியடி நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
5 / 43
புதுச்சேரி - பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு இன்று (22.7.2020) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
6 / 43
புதுச்சேரி - பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு இன்று (22.7.2020) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர் ஒருவரை கைது செய்து குண்டுகட்டாக துாக்கிச் செல்லும் புதுவை காவல் துறையினர். படம்: எம்.சாம்ராஜ்
7 / 43
புதுச்சேரி - பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு இன்று (22.7.2020) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோரைபோலீஸார் கைது செய்ய முயன்றபோது... அதற்கு ஒத்துழைக்காதவர்களை பலவந்தமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். படம்: எம்.சாம்ராஜ்
8 / 43
9 / 43
புதுச்சேரி பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியர்களின் முற்றுகை பேராட்டத்தையடுத்து... இன்று (22.7.2020) புதுச்சேரி - பொதுப்பணித் துறை தலைமை அலவலகம் இழுத்து முடப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
10 / 43
கரோனா தொற்றாலும், ஊரடங்காலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்... புதுச்சேரி அரசு மின் கட்டணத்தை அதிகரித்துள்ளதைக் கண்டித்து... இன்று (22.7.2020) அதிமுக எம்எல்ஏ-க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். படம்: எம்.சாம்ராஜ்
11 / 43
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான... பாலன் இல்லத்தையும், அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்வதை கண்டித்து.... தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன்பு இன்று (22.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்... ஜி.ராமகிருஷ்ணன் (சிபிஎம்), கலி.பூங்குன்றன் (திக). வன்னி அரசு (விசிக), பலராமன் (காங்கிரஸ்), குன்னக்குடி அனீபா (மமக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
12 / 43
13 / 43
சென்னை - தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து - மாம்பலம் ரயில் நிலையம் வரை ’ஸ்கை வாக்’ நடை பாலம் அமைக்கும் பணி மும்முரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படங்கள்: க.ஸ்ரீபரத்
14 / 43
15 / 43
16 / 43
17 / 43
எண்ணுர் அருகே - வள்ளுர் மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி... பேசின் பிரிஜ் அருகே நடைபெற்று வருகிறது. மின் வாரியத் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வருகிறார்கள். படங்கள் : ம.பிரபு
18 / 43
19 / 43
20 / 43
21 / 43
மதுரை - எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து... திருமங்கலம் வரை செல்லும் சுற்றுச்சாலை சீரமைப்பு பணிகள் (சுமார் 30 கி.மீ தூரம்) தற்போது நிறைவடையும் நிலையை நெருங்கியுள்ளது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
22 / 43
பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி, மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்ய வேண்டும்; சாலை வரியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; டூரிஸ்ட் டாக்ஸிகளுக்கான கட்டணத்தை அரசு உரிய முறையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (22.7.2020) சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் முன்பு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றூம் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : பு.க.பிரவீன்
23 / 43
24 / 43
சென்னை மாநகராட்சி சார்பாக சென்னை - ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று (22.7.2020) ‘கரோனா’ தொற்று தடுப்பு நடவடிக்கைக் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தனியார் மருத்துவப் பரிசோதனைக் கூட பிரதிநிதிகளுடன் சென்னை - மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கலந்துரையாடினார். படம்: பு.க.பிரவீன்
25 / 43
26 / 43
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில்... சேலம் பகுதியில் செல் சாகுபடிக்காக... விளைநிலங்களைத் தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று (22.7.2020) சேலம் - மன்னார்பாளையம் அருகே மாடு பூட்டி நிலத்தில் ஏர் உழும் விவசாயி. படங்கள்: எஸ். குருபிரசாத்
27 / 43
28 / 43
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை முகநூலில் அவதூறு செய்தவர்கள் மீது... நடவடிக்கை எடுக்க - தமிழக அரசை வலியுறுத்தி... இன்று (22.7.2020) வேலூரை அடுத்த தொரப்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட.னர். படம் : வி.எம்.மணிநாதன்
29 / 43
30 / 43
31 / 43
32 / 43
33 / 43
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், கட்சியின் தலைமை அலுவலகத்தையும், அக்கட்சியின் மூத்த தலைவர்களையும் பற்றி... சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி... இன்று (22.7.2020) சிந்துபூந்துறை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : மு. லெட்சுமி அருண்
34 / 43
கோவை - அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் இன்று (22.7.2020) இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் மாணவிகள். படம் : ஜெ.மனோகரன்
35 / 43
கோவை - லாரிபேட்டையில் இயங்கிய காய்க்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்த ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து... அந்த மார்கெட் நாளை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் இயங்கவுள்ளது. இந்நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் முழுவதும் இன்று (22.7.2020) மாநகராட்சியினர் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். படம் : ஜெ .மனோகரன்
36 / 43
37 / 43
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும்... அக்கட்சியின் மூத்த தலைவர்களையும் சமூக வலைதளங்களில்... அவதூறு செய்து பதிவிட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி... கோவையில் இன்று (22.7.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு... கோவை நாடாளுமன்ற உறுபபினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : ஜெ .மனோகரன்
38 / 43
’கரோனா’ தொற்றுக் கால பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி.... இன்று (22.7.2020) கோவை - மத்திய வட்டார போக்குவரட்து அலுவலகம் முன்பு... சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்
39 / 43
கோவை - மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்... ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருபவர்கள்... உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். படம் : ஜெ.மனோகரன்
40 / 43
41 / 43
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும்... அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும் சமூக வலைதளங்களில்... அவதூறு பரப்பி வருவோரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி... இன்று (22.7.2020) மதுரை - ஜான்சி ராணி பூங்கா அருகே அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
42 / 43
’கரோனா’ தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த - பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளான... திருநெல்வேலி - மகாராஜ நகர் உழவர் சந்தைப் பகுதியில்... இன்று (22.7.2020) மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர். படம்: மு.லெட்சுமிஅருண்
43 / 43
தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் கொலை தொடர்பான விசாரணைக்காக... டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு வந்துள்ளனர். அதில் 2 அதிகாரிகளுக்கு ‘கரோனா’ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து... இன்று (22.7.2020) மதுரை - ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு தீயணைப்பு படையினர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x