Published on : 20 Jul 2020 16:41 pm

பேசும் படங்கள்... (20.07.2020)

Published on : 20 Jul 2020 16:41 pm

1 / 52
நேற்று (ஞாயிறு) முழு நாள் ஊரடங்கு முடிந்து... இன்று (20.7.2020) காலை எழும்பூர் காஜா மேஜர் சாலையில்... வழக்கத்தைவிட வாகன நெரிசல் காணப்பட்டது. படம் : எல்.சீனிவாசன்
2 / 52
சில கட்டுப்பாடு தளர்வுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் - இன்று (20.7.2020) ஆடி அம்மாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சென்னை - மெரினா கடற்கரையில் இன்று தர்ப்பணம் செய்ய வந்த பொது மக்கள். படம் : பு.க.பிரவீன்
3 / 52
சில கட்டுப்பாடு தளர்வுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் - ஆடி அம்மாவாசையை முன்னிட்டு இன்று (20.7.2020) சென்னை - மெரினா கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்கள்... தர்ப்பணம் செய்த பொருட்களை கடலில் விட்டு... தங்கள் முன்னோரை வழிபட்டனர். படங்கள் : பு.க.பிரவீன்
4 / 52
5 / 52
சில கட்டுப்பாடு தளர்வுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் - ஆடி அம்மாவாசையை முன்னிட்டு இன்று (20.7.2020) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர் வழிபாடு நடைபெற்றது. ஆண் குழந்தைகள் இல்லாத பெற்றோருக்கு... மகள் தர்ப்பணம் கொடுக்கலாம் என்கிற எண்ணத்தோடு - இன்று சென்னை - மெரினா கடற்கரையில் தனது முன்னோருக்கு தர்ப்பணம் செய்கிறார் ஒரு பெண். (அடுத்தப் படம்) தர்ப்பணம் செய்த பொருட்களை கடலில் விட்டு... தனது முன்னோரை வழிபடுகிறார் அந்தப் பெண். படங்கள் : பு.க.பிரவீன்
6 / 52
7 / 52
திருச்சி மாவட்ட காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் விரைந்து அணுகி உதவும் வகையில்... ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக - 'ரேஸ்' என்கிற குழுவை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா நேற்று சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி வைத்தார். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
8 / 52
9 / 52
10 / 52
ஆடி அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க... ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றுக் கரையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கம். தற்போது - கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அமலில் இருக்கும் ஊரடங்கால்... தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வராததால்... இன்று அம்மா மண்டபம் வெறிச்சோடிக் காணப்பட்டது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
11 / 52
12 / 52
சிபிஎஸ்இ - பாடப்புத்தகத்தில் இருந்து... நீக்கப்பட்ட தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பை... ’ஊர்கூடி வாசிக்கும் இயக்கம்’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் - இன்று (20.7.2020) சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக பாடநூல் நிறுவனம் (டிபிஐ வளாகம்) அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. படம் : க.ஸ்ரீபரத்
13 / 52
சில கட்டுப்பாடு தளர்வுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் - இன்று (20.7.2020) ஆடி அம்மாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி - வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் உள்ள முத்து மண்டபத்தில் நடைபெற்றது. தொற்று பரவல் காரணமாக தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்கள் கூட்டம் இந்த ஆண்டு குறைந்தே காணப்பட்டது. படங்கள் : வி.எம்.மணிநாதன்
14 / 52
15 / 52
16 / 52
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு நீதிமன்றங்களை உடனடியாக திறந்து... அதில் 50 சதவீதம் வழக்கறிஞர்களை கொண்டு நீதிமன்றங்களை நடத்த வேண்டும்; வழக்கறிஞர்களுக்கு தமிழகரசு மாதம் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையை ( லா சேம்பர்ஸ்) உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் கோரிக்கைகளை முன்வைத்து.... இன்று (20.7.2020) சென்னை உயர்நீதிமன்றம் ஆவின்பால் வளாகம் அருகில் - அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : க.ஸ்ரீபரத்
17 / 52
வேலூர் - அரசமரப்பேட்டைப் பகுதி பாக்கியாத் தெருவில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளை... இன்று (20.7.2020) வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் , சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
18 / 52
சென்னையில் பணிபுரியும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டும் பயணிக்கும் வகையில்... அரக்கோணம் - சென்னை மார்க்கத்தில் புறநகர் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு இன்று (20.7.2020) ரயில் வந்தவுடன் அனைவரும் இறங்கிய பிறகு... ரயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. படங்கள் : ம.பிரபு
19 / 52
20 / 52
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று (20.7.2020) பெட்டியுடன் வரும் முதல்வர் நாராயணசாமி. படம்: எம்.சாம்ராஜ்
21 / 52
புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஓப்புதல் அளிக்காததால்... அதை ’செல்லாத பட்ஜெட்’ எனக் கூறி... இன்று (20.7.2020) என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அதிமுக, பாஜக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். படம்: எம்.சாம்ராஜ்
22 / 52
புதுச்சேரி - ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து... இன்று (20.7.2020) பாஜக எம்எல்ஏ-க்கள் சுவாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் கைகளில் பதாகைகளுடன் வந்தனர். படம்: எம்.சாம்ராஜ்
23 / 52
புதுச்சேரி - சட்டப்பேரவைக்கு இன்று (20.7.2020) பட்ஜெட் உரை நிகழ்த்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வருவார் என எதிர்பார்த்து... அவரை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வருகை தரதாததால் சட்டப்பேரவைக்கு செல்லும் கதவும் மூடப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
24 / 52
புதுச்சேரி - ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து... இன்று (20.7.2020) சட்டப்பேரவையில் இருந்து. வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள் அன்பழகன், பாஸ்கரன், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். படம்: எம்.சாம்ராஜ்
25 / 52
’கரோனா’ தொற்று பரவல் தடுப்புப் பணிகளில்... இரவும் - பகலும் அயராது பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை... துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டித்தத்தாகக் கூறி.. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இன்று (20.7.2020) கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். படங்கள் : எம்.சாம்ராஜ்
26 / 52
27 / 52
28 / 52
முதல் நாள் நல்ல மழை... அடுத்த நாள் 100 டிகிரியைத் தாண்டிய வெயில்... என சென்னை மக்களிடம் வண்ண ஜாலம் காட்டுகிறது வானிலை. சென்னை- புறநகர் பகுதியில் இன்று சதமடித்த வெயிலுக்கு நடுவே... பஞ்சுப் பொதிகளாய் ஆறுதல் தந்த மேககூட்டம். இடம் : குரோம்பேட்டை மேம்பாலம். படங்கள் : எம்.முத்துகணேஷ்
29 / 52
30 / 52
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில்... கூடுவாஞ்சேரி ஏரிதான் பெரிது. சென்ற ஆண்டு மழை பொய்த்ததால் அந்த ஏரியில் இப்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. அதிலும் - ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை மண்டியுள்ளதால் - இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் வரும் மழைக்காலத்தில் பெய்யவுள்ள மழையின் கருணையால் ஏரி நிரம்பி... இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர் விவசாயிகள். படங்கள் : எம்.முத்துகணேஷ்
31 / 52
32 / 52
33 / 52
34 / 52
35 / 52
36 / 52
ஆடி அமாவசையான இன்று (20.7.2020) திருநெல்வேலி - பேராச்சி அம்மன் கோவிலுக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களை... கரோனா ஊரடங்கை காரணம் காட்டி... போலீஸார் திருப்பி அனுப்பினர். மேலும் இப்பகுதி முழுதும் தடுப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது. படம் : மு. லெட்சுமி அருண்
37 / 52
ஆடி அமாவசையன்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தற்போது கரோனா அச்சத்தால் நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. அதனால் இன்று (20.7.2020) தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வராததால் திருநெல்வேலி - தாமிரபரணி குறுக்குத்துறை ஆற்றங்கரை வெறிச்சோடி காணப்பட்டது. படம் : மு. லெட்சுமி அருண்
38 / 52
திருநெல்வேலி குறுக்குத்துறை படித்துறையும் அங்குள்ள மண்டபமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு பிரசித்திப் பெற்றது. ஆண்டுதோறும் ஆடி - அமாவாசை அன்று ஆயிரக்கணக்கானோர் இந்தப் பகுதியில் ஒன்று கூடுவர். கரோனா தடுப்புக்காக தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால்.... இன்று தர்ப்பணம் கொடுக்க எவரும் வராததால்.. வெறிச்சோடி காணப்படுகிறது குறுக்குத்துறை மண்டபம். படங்கள் : மு.லெட்சுமி அருண்
39 / 52
சேலத்தில் - இன்று (20.7.2020) மதியம் கனமழை பொழிந்து முடிந்த நிலையில்... சேலம் மாநகரை தழுவிச்சென்ற மேகக் கூட்டங்கள்... இயற்கை எழிலுடன் காட்சியளித்தன. படங்கள் : எஸ்.குருபிரசாத்
40 / 52
41 / 52
42 / 52
தமிழகத்தில் - பருவமழை தொடங்கியுள்ள நிலையில்... சேலத்தில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் - செட்டிச்சாவடிப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று (20.7.2020) வெண்டைக்காய்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண். படம் : எஸ்.குரு பிரசாத்
43 / 52
தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக... இன்று (20.7.2020) சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரை... சிபிஐ போலீஸார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
44 / 52
45 / 52
மதுரை மாவட்ட ஊராட்சி முகமை மூலமாக நடைபெறும் பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்யக் கோரி... செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக... இன்று (20.7.2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
46 / 52
சென்னை - மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில்... இன்று (20.7.2020) திடீரென கூட்டம் கூட்டமாக வந்த டால்பின்கள். படம்: பு.க.பிரவீன்
47 / 52
48 / 52
கோவை - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்... கல்வி தொலைக்காட்சிக்காக 10 மற்றும் 11 -ம் வகுப்புக்கான பாடப் பதிவுகள் இன்று (20.7.2020) கோவை தனியார் பள்ளியில் நடைபெற்றது. படம்: ஜெ .மனோகரன்
49 / 52
50 / 52
’கரோனா’ ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக... கோவையின் சாலையோரங்களில் முடங்கிக் கிடக்கும் - சாலைப்போடப் பயன்படும் கிரில்கள், மிக்ஸிங்... கைகளால் இயக்கும் வண்டிகள். படம் : ஜெ .மனோகரன்
51 / 52
ஆடி - அமாவசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க... கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோயில் நொய்யல் ஆற்று படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கம். தற்போது ’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால்... இன்று (20.7.2020) தர்ப்பணம் கொடுக்க எவரும் வராததால் - வெறிச்சோடிக் காணப்பட்டது. படம் : ஜெ.மனோகரன்
52 / 52

Recently Added

More From This Category

x