1 / 63
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள்... 4 நாட்களுக்கு முன்பாக மீண்டும் பிடிக்கச் சென்றவர்கள் இன்று (18.7.2020) கரைக்கு மீன்களுடன் திரும்பியதால்... மொத்த விற்பனைக்கு மீன்களை கூடையில் பிரித்து வைத்து ஏலம் விட்டனர்.
படங்கள் : ம.பிரபு
2 / 63
3 / 63
4 / 63
சென்னையில் - நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை - காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (19.7.2020) சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மொத்த விற்பனைக்கு மீன்களை வாங்க வந்த கூட்டம்.
படங்கள் : ம.பிரபு
5 / 63
6 / 63
புதுச்சேரி - வனத்துறை பராமரிப்பில் இருந்த மணக்குள விநாயகர் ஆலயத்தின் யானை லட்சுமியை இன்று (19.7.2020) பொதுமக்கள் வழிபட ஆலயத்துக்குக் கூட்டிவரும் பக்தர்கள். படம் : எம்.சாம்ராஜ்
7 / 63
புதுச்சேரி - மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்ட யானை லட்சுமி அலங்கரிக்கப்பட்டு ஆலய குருக்கள் வழிபாடு நடத்தினர்.
படம் : எம்.சாம்ராஜ்
8 / 63
புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் இன்று (19.7.2020) சிவன் வேடமிட்டு வந்த நாடகக் கலைஞரை... உடல் வெப்பப் பரிசோதனை செய்யும் ஆலய பணியாளர் . படம் : எம்.சாம்ராஜ்
9 / 63
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடித்
துறைமுகத்தில் மீன் வளத் துறை சார்பில் இன்று வாய்க்காலில்
அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக், பாட்டில் கழிவுகளை படகில் வாரி அப்புறப்படுத்தும் பணி இன்று (18.7.2020) நடைபெற்றது
படம் : எம்.சாம்ராஜ்
10 / 63
11 / 63
காட்பாடி -
காங்கேயநல்லூர் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, அப்பகுதியில் இன்று
(ஜூலை 18) நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்
12 / 63
13 / 63
14 / 63
15 / 63
வேலூர் - சத்துவாச்சாரியில் கரோனா தொற்றுப் பரவல்... அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக... இன்று (17.7.2020) கங்கையம்மன் கோயில் அருகே உள்ள பள்ளிக்கூடத் தெருவில்... தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டது.
படம் : வி.எம்.மணிநாதன்
16 / 63
கோவையில் - தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி... அவமதிப்பு செய்த நபர்களை கைது செய்யக் கோரி... சமூக ஆர்வலர்கள் இன்று (18.7.2020) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்தனர்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 63
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை - மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர், காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 10 பேரிடம் மனித உரிமைகள் ஆணையர் டிஎஸ்பி குமார் நேரடியாக இன்று (18.7.2020) விசாரணை நடத்தினார்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 63
சேலம் - மாவட்டத்தில் ஓமலூர், கருப்பூர் போன்ற பகுதிகளில்... உருண்டை வெல்லம் உற்பத்தித் தொழிற்சாலைகள் அதிகளவில் செயல்படுகின்றன.
’கரோனா’ ஊரடங்கு உத்தரவால் தற்போது - வெல்லம் உற்பத்தி மந்தமாக இருந்துவந்த நிலையில்... தற்போது மீண்டும் உற்பத்தி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. இதற்காக - கருப்பூரில் வெல்லம் தயாரிப்புக்குத் தேவையான கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் இன்று (18.7.2020) விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
படம் : எஸ்.குருபிரசாத்
19 / 63
20 / 63
21 / 63
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலால் பல ஏரிகள்... தண்ணீரின்றி வறண்ட நிலையில் உள்ளன. தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கொல்லப்பட்டி புதூர் ஏரி 20 வருடங்களுக்குப் பிறகு... கடந்த ஆண்டு நிரம்பி இருந்த நிலையில், தற்போது கோடை வெயிலால் முழுமையாக தண்ணீரின்றி வறட்சியுடன் காட்சியளிக்கிறது.
படம் : எஸ். குருபிரசாத்
22 / 63
மதுரை - எல்லீஸ் நகர் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள 60 அடி கிணற்றில்... இன்று (18.7.2020) காலையில் 3 மாத கருப்பன் என்ற ஆடு தவறி உள்ளே விழுந்துவிட்டது. தீயணைப்புப் படையினர் கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை மீட்டனர். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தீயணைப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
23 / 63
24 / 63
25 / 63
26 / 63
திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணையில் ஷட்டர்களைத் திறந்து மூடுவதில் முக்கிய பங்கு வகிக்கும்... ஜெனரேட்டர் அறை மற்றும் பவர் அறை சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளன. எனவே, அந்த சிதிலமடைந்த அறைகளுக்கு சவுக்குக் கட்டைகளைத் தற்காலிகமாக முட்டு கொடுத்து வைத்துள்ள ஊழியர்கள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
27 / 63
28 / 63
29 / 63
30 / 63
31 / 63
கோவை டவுன்ஹால் 5 கார்னர் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் முன்பு... நேற்றிரவு (17.7.2020) மர்ம நபர்கள் டயரில் தீ பற்ற வைத்து வீசிச் சென்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
படம்: ஜெ .மனோகரன்
32 / 63
33 / 63
34 / 63
35 / 63
36 / 63
கோவை - ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோயில் முன்பு மர்ம நபர்கள் டயரில் தீ பற்ற வைத்து வீசிச் சென்றதையடுத்து... இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (18.7.2020)
விநாயகர் கோயிலில் இந்து அமைப்பினர் பார்வையிட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
37 / 63
கோவை - ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோயில் முன்பு மர்ம நபர்கள் டயரில் தீ பற்ற வைத்து வீசிச் சென்றதையடுத்து... இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் இன்று (18.7.2020) போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படம் : ஜெ .மனோகரன்
38 / 63
39 / 63
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறையான
ரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... எஸ்ஆர்எம்யூ பணிமனை ஊழியர்கள் சங்கத்தினர் இன்று (18.7.2020) கோவை குட் ஷெட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிப்புகளைத் தெரிவித்தனர்.
படம் : ஜெ .மனோகரன்
40 / 63
கோவை - மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வெள்ளி உருகி ஊற்றுவதை போல்... கீழே வழிந்தோடும் அருவியின் அழகே அழகு!
படம் : ஜெ .மனோகரன்
41 / 63
42 / 63
கோவை டிகேஎம் காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்த ஒருவர் இன்று (18.7.2020) ’கரோனா’ தொற்றால் உயிரிழந்ததையொட்டி... அந்த மார்க்கெட் மூடப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
படம் : ஜெ .மனோகரன்
43 / 63
44 / 63
45 / 63
'கரோனா' ஊரடங்கு அமலில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்... பெருவாரியான பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில்... தமிழக மின் வாரியத்தினர் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் மின் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி... அதைக் கண்டித்து ’பத்து ரூபாய் இயக்கம்’ சார்பில் இன்று (18.7.2020) சென்னை - அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படங்கள்: பு.க.பிரவீன்
46 / 63
47 / 63
’கரோனா’ தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக... தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில்... இன்று சென்னை ஜென்ரல் பீட்டர் சாலையில் உள்ள கடையொன்றில் (18.7.2020) கார் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து... காருக்குள் அமரும் பயணிகளின் நேரடி தொடர்பை குறைக்க... காருக்குள் பிளாஸ்டிக் ஷீட்களை ஒட்டினர்.
படம்: பு.க.பிரவீன்
48 / 63
49 / 63
50 / 63
புதுச்சேரியில் - 144 ஆண்டுகால பழமைவாய்ந்த கலவை கல்லுாரியை மறுசீரமைக்கக் கோரி... இன்று (18.7.20200 ’கலவை கல்லுாரி பாதுகாப்பு இயக்கம்’ சார்பில்... முன்னாள் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பேராட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எம்.சாம்ராஜ்
51 / 63
சென்னை - மாநகராட்சியும் ‘கோல்டு ஹார்ட்’ தன்னார்வத் தொண்டு நிறுவனமும் இணைந்து ... இன்று (18.7.2020) ’கரோனா’ தொற்று விழிப்புணர்வு பைக் ராலியை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
படம் : க.ஸ்ரீபரத்
52 / 63
53 / 63
54 / 63
55 / 63
திருநெல்வேலி - அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இன்று (18.7.2020) தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ’கரோனா’ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக... வைக்கப்பட்டிருந்த கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்தா மருந்துப் பொருட்களை அமைச்சர்... பார்வையிட்டார். உடன் - ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர்.
படங்கள் : மு.லெட்சுமி அருண்.
56 / 63
57 / 63
58 / 63
திருநெல்வேலி - அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இன்று (18.7.2020) ’கரோனா’ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு... ’கரோனா’ தொற்றால் பாதித்தோரிடம் காணொலி காட்சி மூலம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உரையாடினார்.
உடன் - ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர்.
படங்கள் : மு.லெட்சுமி அருண்.
59 / 63
60 / 63
61 / 63
62 / 63
63 / 63
இன்று (18.7.2020) திருநெல்வேலி - மாநகரப் பகுதிகளில்... காலை முதல் நண்பகல் வரை கடுமையான வெயில் அடித்தது. பிற்பகலில் கரு மேகங்கள் சூழ்ந்து - சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. இதனால் கொஞ்சம் குளுமையான காற்று வீசியது. இந்நிலையில் - பாளையங்கோட்டையில் இருந்து தென்மேற்கில்... ஒரு பாதியில் மட்டும் மழை பொழியும் அருமையான காட்சி. படம்: மு .லெட்சுமி அருண்