1 / 52
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில்... சென்னை - அண்ணா சாலை அருகில் உள்ள ரிச் தெரு மற்றும் ரேடியோ மார்கெட்டுக்கு உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே - ரிச் தெரு அருகில் வாகனங்கள் நிறுத்த போலீஸார் இட வசதி செய்து தந்துள்ளனர்.
படம் : பு.க.பிரவீன்
2 / 52
3 / 52
தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் தந்தை - மகனான... ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், போலீஸார் ஆகியோரை... சிபிஐ போலீஸார் இன்று (14.7.2020) மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு... மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தி செய்து மேலும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 52
கோடைக்காலம் என்பதால்... தற்போது பெரும்பாலான குளங்கள் வற்றிவிட்ட நிலையில்... திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள - வேய்ந்தாங்குளம் மட்டும் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெருமுயற்சியால் சமீபத்தில் இக்குளம் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட்டதுதான்... இதற்கு காரணம். இதேபோல் - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டால்... கோடைக்காலத்தில்கூட தண்ணீர் பஞ்சம் இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
படங்கள் : மு.லெட்சுமி அருண்
5 / 52
6 / 52
கரோனா தொற்றுக் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில்... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாக கல்வி புகட்டும்... ’கல்வி தொலைக்காட்சி திட்டம்’ இன்று மாலை (14.7.2020) முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு... நாளை முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.
இதற்காக 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியில் ’கல்வி தொலைக்காட்சி திட்டம்’ மென்பொருள் (சாஃப்ட்வேர்) ஏற்றித்தரும் (அப்லோடு செய்து கொடுக்கும்) பணி அரசுப் பள்ளிகளில் தொடங்கியுள்ளது. இதையடுத்து - சென்னை - எழும்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் மடிக்கணினியில் ஆசிரியர்கள் கல்வி மென்பொருளை அப்லோட் செய்து கொடுத்தனர்.
படங்கள் : ம.பிரபு
7 / 52
8 / 52
9 / 52
10 / 52
வரும் - ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகில் விநாயகர் சிலை செய்யும் பணிகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 52
மதுரையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகம் இருப்பதையொட்டி... சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று (14.7.2020) பெரியார் பேருந்து நிலையப் பகுதியில்... வரும் வாகனங்கள் அனைத்தையும் திடீர் நகர் காவல் நிலையப் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன்... கரோனா தொற்றுப் பற்றிய விழிப்புணர்ச்சி விளக்கமளித்து அனுப்பி வைத்தனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 52
ஊரடங்கு காலங்களில் சாலை வரியை ஆறுமாதக் காலத்துக்கு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... திருநெல்வேலி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு - இன்று (14.7.2020) அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவையினர் கருப்பு பேஜ் அணிந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : மு.லெட்சுமி அருண்
13 / 52
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில்... வட சென்னையில் கரோனா தொற்று அதிகம் இருந்த காரணமாக... அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை - காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.
தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புவதால் - இன்று (14.7.2020) இரவு மீண்டும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவுள்ளனர். இதையடுத்து மீன்களை பல நாட்கள் பதப்படுத்தும் வகையில் படகுக்குக் கீழே ஐஸ் நிரப்புவது; இந்திய மீனவர் என்கிற அடையாளத்துக்காக இந்திய தேசிய கொடியை ஏற்றுவது; படகுகளை சீரமைப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
படங்கள் ; ம.பிரபு
14 / 52
15 / 52
16 / 52
17 / 52
18 / 52
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்... சேலம் நகரத்தில் தன்னார்வலர்கள் பலர் அவர்களது பகுதிகளில் - மாநகராட்சி அனுமதியுடன் கரோனா தொற்றுத் தடுப்பு பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் - கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்... அப்பகுதி முழுவதும் தினமும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியை இன்று (14.7.2020) முதல் தொடங்கினர்.
படங்கள் : எஸ்.குரு பிரசாத்
19 / 52
20 / 52
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு... நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வலுவூட்டும் வகையில்... வைட்டமின் சி மற்றும் ஜிங்க் சல்பேட் சத்து மாத்திரைகளை - இன்று (14.7.2020) பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் வழங்கினார்.
படம் : மு .லெட்சுமி அருண்
21 / 52
புதுச்சேரியில் - சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து - கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி அங்காடியில் மழை நீர் தேங்கியுள்ளது.
படம்: எம்.சாம்ராஜ்
22 / 52
23 / 52
24 / 52
கரோனாவைக் கட்டுப்படுத்த சாலைகளில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை புதுச்சேரி அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால் - அதையெல்லாம் மக்கள் பொருட்படுத்துவதே கிடையாது என்பதற்கு அடையாளமாக... புதுச்சேரி - திலகர் நகரில் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட்டு செல்லும் பொதுமக்கள்.
படம் : எம்.சாம்ராஜ்
25 / 52
புதுச்சேரி - ஏஐடியுசி பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்... இந்நிறுவனத் தொழிலாளர்களுக்கு 57 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி... இன்று (14.7.2020) தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
படம் : எம்.சாம்ராஜ்
26 / 52
கேரளாவில் - சமீபத்தில் யானையொன்று வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம்... நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் உள்ள யானை லட்சுமிக்கு பாதுகாப்பு இல்லை என... சமூக ஆர்வலர்களால் புதுச்சேரி - துணைநிலை ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து - ஆளுநரின் உத்தரவின்பேரில் வனத்துறை சார்பில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைத்தில் உள்ள தோட்டத்தில் யானையை பூச்சிகள் எதுவும் அண்டாமல் இருக்க... யானையைச் சுற்றிலும் வலை அமைத்து பராமரித்து வருகின்றனர்.
படம் : எம்.சாம்ராஜ்
27 / 52
28 / 52
தமிழகத்தில் - மின்கட்டணம் செலுத்துவதற்கு இன்று (14.7.2020) கடைசி நாள்... என்பதால் சென்னை - பல்லாவரம் மின்கட்டண மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
29 / 52
30 / 52
31 / 52
32 / 52
2020 -21ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களுக்கு விநியோகிக்கவுள்ள பள்ளி பாடப் புத்தகங்களை சரிபார்க்கும் பணியில் கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இன்று (14.7.2020) ஈடுபட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
33 / 52
34 / 52
35 / 52
கரோனா தொற்று தடுப்புக்காக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில்... பள்ளிகளில் மதிய சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு... அரிசியை அவர்களின் பெற்றோரிடம் நேரிடையாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவை புளியங்குளம் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில்...
இன்று (14.7.2020) அரிசி வாங்க மாணவர்களும் பெற்றோரும் வந்தபோது...
வாங்குவதற்கு முன்பு அவர்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டனர்.
படம்: ஜெ.மனோகரன்
36 / 52
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக... தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் பட்டினி கிடப்பதை தவிர்க்கும் வகையில் பெற்றோரிடம் அரிசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி - கோவை புளியங்குளம் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில்... ஒரு மாதத்துக்கானஅரிசியை வாங்கிச் செல்லும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் .
படம்: ஜெ.மனோகரன்
37 / 52
38 / 52
39 / 52
கோவை - புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்
பள்ளியின் தேசிய மாணவர்படை மாணவர்களை ’வீடுகளில் மரம் நடுவோம்’ என்ற திட்டத்தின்கீழ்... அவரவர் வீடுகளில் வேம்பு, தென்னை மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க அறிவுறுத்திய
பள்ளியின் - தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர்.
படம்: ஜெ.மனோகரன்
40 / 52
41 / 52
கோவை - புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பாக... ஆண்டு தாேறும் ‘ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று ’ (ONE CADET - ONE TREE ) என்ற திட்டத்தின் அடிப்படையில் மரக்கன்று நடப்படுவது வழக்கம்.
தற்போது - கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில்... பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டரின் அறிவுறுத்தலின்படி ’வீடுகளில் மரம் நடுவோம்’ என்ற திட்டத்தின்கீழ்... தேசிய மாணவர் படை மாணவர்கள் தங்கள் வீடுகளிலேயே வேம்பு, தென்னை மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர்.
படம்: ஜெ.மனோகரன்
42 / 52
43 / 52
மீனம்பாக்கம் - காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி... இன்று (14.7.2020) கரோனா தொற்று பாதிப்பால்... மரணமடைந்தார். அவரது - உருவப் படத்துகு காவல்துறை தலைவர் திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
44 / 52
45 / 52
சேலத்தில் - ஆடி மாதம் முதல் நாள் தேங்காய் சுடும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். தேங்காய்க்கு உள்ளே பச்சரிசி, பருப்பு, வெல்லம், எள்ளு ஆகியவற்றைச் சேர்த்து நெருப்பில் சுட்டு... கடவுளுக்கு படையல் வைக்கப்படும். அதேபோல் இப்பொருட்கள் விற்பனையும் களைகட்டியிருக்கும்.
தற்போது - கரோனா தொற்று பரவல் காரணத்தால் தேங்காய் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் அழிஞ்சி குச்சிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை சரிவடைந்துள்ளது. இன்று (14.7.2020) சேலம் - சின்னக்கடை வீதியில் விற்பனையை எதிர்பார்த்து அழிஞ்சி குச்சிகளுடன் காத்திருக்கும் வியாபாரி.
படம் : எஸ்.குரு பிரசாத்.
46 / 52
47 / 52
48 / 52
சென்னை - துறைமுகம் 59- வது வார்டு சத்தியவாணி முத்து நகரில்... இன்று (14.7.2020) அதிமுக சார்பில்... நா.பாலகங்கா இப்பகுதி ஏழை எளியோருக்கு கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று நிவாரணம் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
படம்:எல்.சீனிவசன்
49 / 52
தமிழகத்தில் - மின்கட்டணம் செலுத்த இன்று (14.7.2020) கடைசி நாள் என்பதால்... சென்னை - குரோம்பேட்டை மின்சார அலுவலகத்தில்... நீண்ட வரிசையில் நிற்க முடியாமல் அமர்ந்திருந்த பொதுமக்கள்>
படங்கள் : எம்.முத்து கணேஷ்
50 / 52
51 / 52
52 / 52