1 / 51
கரோனா தொற்றுப் பரவல் தடுப்புக்காக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில்... 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தங்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் வரும் 15-ம் தேதி விநியோகிக்கப்பட்டு... தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (13.7.2020) சிந்தாரிப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்து பகுதிவாரியாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.
படங்கள்: ம.பிரபு
2 / 51
3 / 51
4 / 51
திருச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில்லென்று வீசும் காற்றுடன் கூடிய மிதமான வானிலையால் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் ஏராளமானோர்... இன்று (13.7.2020) கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ள திருச்சி மகாத்மா காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு வந்தனர்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
5 / 51
6 / 51
காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் ஏராளமானோர்... இன்று (13.7.2020) கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ள திருச்சி மகாத்மா காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்களிடம் இருந்து - உரிய பாதுகாப்புடன் கரோனா தொற்றுப் பரிசோதனைக்கான மாதிரியை சேகரிக்கும் மருத்துவப் பணியாளர்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
7 / 51
8 / 51
திருச்சி - மகாத்மா காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் இன்று (13.7.2020) கரோனா தொற்றுப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
9 / 51
10 / 51
திருச்சி - கீழ்கல்கண்டார் கோட்டை பகுதியில்... விவசாய நிலங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சியைக் கண்டித்து.. இன்று (13.7.2020) திருச்சி - ஆட்சியர் அலுவலகம் நுழைவுவாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
11 / 51
12 / 51
13 / 51
14 / 51
அரசுப் பள்ளியில் பயிலும் மாண - மாணவிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் இவ்வாரத்தில் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் சேலம் - கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தடைந்த பாட புத்தகங்களை வகுப்பு வாரியாக பிரித்து வைக்கும் பணியில் இன்று (13.7.2020) ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தினமும் - 20 மாணவிகள் வீதம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
படங்கள்: எஸ்.குரு பிரசாத்
15 / 51
16 / 51
சென்னை - கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் கூடுவதாலும்... வாகனப் போக்குவரத்தாலும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் சாலையோரம் இருந்த காய்கறிக் கடைகள் அனைத்தும் இன்று முதல் பிராட்வே பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
படம்: ம.பிரபு
17 / 51
சென்னை - கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு மொத்த பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் கூடுவது வழக்கம். எனவே இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து எப்போதும் அதிகமிருக்கும். இந்நிலையில் இன்று (13.7.2020) இப்பகுதியில் போக்குவரத்தையும் மக்கள் நடமாட்டத்தையும் போலீஸார் ஒழுங்குபடுத்தியதால் இப்பகுதியி இருந்த சாலைகளும் கடைகளும் வாகன நெரிசல் இன்றி இயல்பாக செயல்பபட்டது.
படம்: ம.பிரபு
18 / 51
சென்னை - கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் கூடுவதாலும்... வாகனப் போக்குவரத்தாலும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் - இப்பகுதிக்கு செல்லும் சாலை இன்று முதல் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
படம்: ம.பிரபு
19 / 51
20 / 51
சென்னையில் - கரோனா தொற்று தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில்... கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் புத்துணர்ச்சியுடன் பணிக்குத் திரும்பிய... காவலர்களை இன்று (13.7.2020) சென்னை - மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று... அவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.
படம்: க.ஸ்ரீபரத்
21 / 51
22 / 51
சென்னை - வியாசர்பாடியில் உள்ள நியாய விலை கடையொன்றில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இலவச ரேஷன் போருட்களை வாங்க மக்கள் திரள்வதால்... இப்பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
படம் : ம.பிரபு
23 / 51
24 / 51
சென்னை - சிந்தாரிப்பேட்டையில் உள்ள நியாய விலை கடையொன்றில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இலவச ரேஷன் போருட்களை வாங்க மக்கள் திரள்வதால்... இப்பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
படம் : ம.பிரபு
25 / 51
சென்னை - கீழ்பாக்கம் சாலை காந்தி நகரில் உள்ள நியாய விலை கடையொன்றில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இலவச ரேஷன் போருட்களை வாங்க மக்கள் திரள்வதால்... இப்பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
படம் : ம.பிரபு
26 / 51
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, வேலூர் விஐடியில் ஏற்பாடு செய்துள்ள 500 படுக்கை கொண்ட சிறப்பு வார்டை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
27 / 51
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பள்ளிகள் அனைத்தும் இன்னும் திறக்கப்படாததால்... பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்தின்கீழ் பயன் பெற்றுவந்த மாணவர்கள் சிரமப்படுவதாக கோரிக்கை எழுந்தது. இதையடுத்து - அந்த மாணவர்களுக்குரிய அரிசி பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் - வியாசார்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (13.7.2020) மாணவர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை காட்டி அரிசி பெற காத்திருக்கும் பெற்றோர்.
படம் : ம.பிரபு
28 / 51
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பாடங்களை மடிக்கணினியில் பதிவு செய்து தரக் கோரி... காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இன்று (13.7.2020) தங்களுடைய மடிக்கணினிகளை தலைமை ஆசிரியர் சரளாவிடம் கொண்டுவந்து கொடுத்தனர்.
படம் : வி.எம்.மணிநாதன்
29 / 51
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் - இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள்... தங்களுக்கான தேர்ச்சிபெற்ற பணியிடங்களை நிரப்பக் கோரி - மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
30 / 51
வேலூர் - மாவட்ட பாஜக சார்பாக... இன்று நடைபெற்ற பத்திரிகையாளார் சந்திப்பில்... ’பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு பாரதம்’ குறித்து பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி விளக்கிப் பேசினார். உடன் - வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் உட்பட பாஜக நிர்வாகிகள்.
படம் : வி.எம்.மணிநாதன்
31 / 51
அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு விற்பனைக்குக் கொண்டுச் செல்ல... வெங்காய விவசாயிகளுக்கு ஈ-பாஸ் வழங்கக் கோரி... இன்று (13.7.2020) கோவை ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
படம் : ஜெ .மனோகரன்
32 / 51
கோவை - மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு .... இன்று (13.7.2020) முகக்கவசங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை இப்பகுதி தன்னார்வலர்கள் சார்பில். வழங்கப்பட்டன.
படம் : ஜெ .மனோகரன்
33 / 51
ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையிகளை வலியுறுத்தி... கோவை - கூட்ஷேட் சாலையில் உள்ள பணிமனை தொழிலாள்ர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிப்பைத் தெரிவித்தனர்.
படம் : ஜெ .மனோகரன்
34 / 51
35 / 51
36 / 51
200 மில்லி கிராம் தங்கத்தில் முகக்கவசத்தை வடிவமைத்து... விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை குனியமுத்தூர் ராஜா.
படம் : ஜெ மனோகரன்
37 / 51
38 / 51
இன்று (13.7.2020) மதியவேளையில்...
கோவை - சுண்டக்காமுத்தூ குளக்கரையின் மீது மனசை கொள்ளைக்கொள்ளும் பஞ்சுப்பொதி மேகங்கள் ஆகாயத்தின் தவழ்ந்து காண்போரை வசீகரித்தன.
படம் : ஜெ மனோகரன்
39 / 51
இன்று (13.7.2020) மதியவேளையில்...
கோவை -உக்கடம் பெரியகுளமும் அதன் மீதான கலை நயத்துடன் காணப்பட்ட மேகங்களும் விழிகளுக்கு விருந்து படைத்தன.
படம்: ஜெ .மனோகரன்
40 / 51
சோழிங்கநல்லூர் அருகேயுள்ள நீர்ப்பிடிப்பு ஏரி... சதுப்பு நிலப் பகுதியாகும். இங்கு - கூட்டம் கூட்டமாக வலசை வரும் பலவகை பறவைகளின் கீச்சிடும் ஓசை... கேட்போர் மனசைப் பரவசப்படுத்தும்.
இப்போது - இந்த ஏரிப் பகுதியில் நீர்வற்றியதால்.. பறவைகள் வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் இன்று (13.7.2020) மதியவேளையில் எஞ்சியிருக்கும் கொஞ்சம் நீரில்... மிஞ்சிய மீன்களைப் பிடித்து உண்ண வண்ணநாரை, கூழைக்கடா போன்ற பறவைகள் வந்திருந்தன.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
41 / 51
42 / 51
43 / 51
44 / 51
45 / 51
தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்குத் தொடர்பாக... சிறையில் இருக்கும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரை... விசாரணை செய்வதற்காக சிறையில் இருந்து வெளியே எடுக்க... சிபிஐ போலீஸார் இன்று (13.7.2020) மதுரை - நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வந்தனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
46 / 51
தென்மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியிருக்கும் நிலையில்... இன்று (13.7.20200 சென்னை - செங்குன்றத்தில் உள்ள புழல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 47.5 கனஅடியாக உள்ளது. இந்த ஏரியின் மொத்த ஆழம் 50.2 கனஅடியாகும்.
படம் : பு.க.பிரவீன்
47 / 51
48 / 51
கரோனா தொற்றுத் தாக்குதலால் மரணமடைந்த... திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில்.... ஆயுதப்படை ஆய்வாளர் சாது சிதம்பரத்தின் உருவப் படத்துக்கு... இன்று (13.7.2020) மாநகர - காவல் ஆணையர் தீபக் தாமோர் மற்றும் துணை ஆணையர் சரவணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
படங்கள்; மு. லெட்சுமி அருண்
49 / 51
50 / 51
51 / 51
வேலூர் மாவட்டத்தில் அறிகுறி இல்லாமல் கரோனா தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க... காட்பாடியில் உள்ள விஐடி-யில் தற்காலிகமாக 500 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் - இன்று கரோனா சிறப்பு வார்டை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
படம் : வி.எம்.மணிநாதன்.