Published on : 12 Jul 2020 17:35 pm

பேசும் படங்கள்... (12.07.2020)

Published on : 12 Jul 2020 17:35 pm

1 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று (12.7.2020) தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால்... வெறிச்சோடிக் கிடந்த சென்னை - தியாகராய நகர் பாண்டி பஜார் சாலை. படம் க.ஸ்ரீபரத்
2 / 67
3 / 67
திருச்சியில் நேற்று இரவு பெய்த மழையால் மேலப்புதூர் சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதாலும், இன்று(12.7.2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் சுரங்கப் பாதையின் முன்பாக தடுப்பு போடப்பட்டு... போக்குவரத்து தடை படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
4 / 67
5 / 67
6 / 67
7 / 67
திருச்சியில் நேற்று இரவு பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோட்டை ஸ்டேஷன் சாலை தடுப்புச் சுவர் உடைந்து விழுந்தது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
8 / 67
9 / 67
தமிழக அரசு அறிவித்தபடி இன்று (12.7.2020) ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கை... திருச்சியில் பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தனர். அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் பலரரும் தள்ளுவண்டி மற்றும் கடைகளுக்கு முன்பாகப் படுத்து ஓய்வெடுத்தனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
10 / 67
11 / 67
12 / 67
13 / 67
தமிழக அரசு அறிவித்தபடி இன்று (12.7.2020) ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கை திருச்சியில் பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தனர். இதையடுத்து கோட்டை ஸ்டேஷன் சாலை... ஆள் ஆரவாரமின்றி இருந்தது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
14 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று (12.7.2020) தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால் வெறிச்சோடிக் காணப்பட்ட சென்னை - பாண்டி பஜார். படம் க.ஸ்ரீபரத்
15 / 67
16 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணத்தால் இன்று (12.7.2020) வெறிச்சோடி காணப்படும் சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெரு. படம் க.ஸ்ரீபரத்
17 / 67
18 / 67
இன்று அரசு அறிவித்தபடி...முழு ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்ட வேலூர் அண்ணா சாலை. படம்: வி.எம்.மணிநாதன்.
19 / 67
20 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கால் இன்று (12.7.2020) தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பர்கிட் சாலை சந்திப்பு வெறிச்சோடி இருந்தது. படம் க.ஸ்ரீபரத்
21 / 67
22 / 67
இன்று அரசு அறிவித்துள்ள கரோனா முழு ஊரடங்கால் காசி மேடு துறை முகம் இன்று (12.7.2020) மீன் வாங்குவோர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது படம். பு.க.பிரவீன்
23 / 67
24 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணத்தால் வெறிச்சோடி காணப்படும் ரிச் (ரேடியோ மார்க்கெட்) தெரு. படம்: பு.க.பிரவீன்
25 / 67
26 / 67
27 / 67
வழக்கமாக பரபரப்பாக காணப்படும் சென்னை - சாலை இன்று (12.7.2020) கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது. படம்: பு.க.பிரவீன்
28 / 67
29 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று (12.7.2020) சென்னையில் முழு ஊரடங்கு காரணத்தால் போக்குவரத்து ஏதுமின்றி... வெறிச்சோடிக் காணப்படும் சென்னை - பாடி மேம்பாலம். படம்: பு.க.பிரவீன்
30 / 67
31 / 67
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இன்று (12.7.2020) அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வேலூர் தொரப்பாடி பகுதியில் அத்தியாவாசிய தேவையின்றி... வீணாக சுற்றியவர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதித்த காவல்துறையினர். படம்: வி.எம்.மணிநாதன்
32 / 67
33 / 67
34 / 67
இன்று (12.7.2020) திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. படங்கள் மு. லெட்சுமி அருண்
35 / 67
இன்று (12.7.2020) திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து... பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோயில் கிழக்கு தெரு பஜாரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. படங்கள் மு. லெட்சுமி அருண்
36 / 67
இன்று (12.7.2020) திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து... பாளையங்கோட்டை முருகன்குறிச்சி திருவனந்தபுரம் சாலை வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. படங்கள் மு. லெட்சுமி அருண்
37 / 67
அரசு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் இன்று (12.07.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. படம்: எஸ். குருபிரசாத்
38 / 67
அரசு உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் இன்று (12.07.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் சேலம், ஜெ.ஜெயலலிதா இரண்டடுக்கு மேம்பாலம் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காட்சியளித்தது. படம்: எஸ். குருபிரசாத்
39 / 67
தமிழகம் முழுவதும் இன்று (12.07.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் சேலம், திருவள்ளுவர் சிலை சாலை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி இருந்தது. படம்: எஸ். குருபிரசாத்
40 / 67
சென்னை - அடையாறு பகுதியில் இன்று (12.7.2020) மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து... சிறு தூறல்களுடன் வானிலை கடந்து சென்றது. இதைத் தொடர்ந்து கருமேகங்களுக்கு இடையில் கதிரொளி கசிந்து அழகாக காட்சி அளித்தது. படம்: பு.க.பிரவீன்
41 / 67
42 / 67
43 / 67
சென்னையில் இன்று (12.7.2020) மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து பல பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. படங்கள்: ம.பிரபு
44 / 67
45 / 67
இன்று (12.7.2020) எந்த தளர்வுகளும் இன்றி... முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால்... சென்னை சாலையில் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில் ஊரோடு நாமும் ஒத்துப்போக வேண்டும் என்பது போல் பூட்டிய கடை வாசலில் படி தாண்டாமல் படுத்துக்கிடந்தது ஒரு பூனை. படம்: ம.பிரபு
46 / 67
தமிழகம் முழுவதும் இன்று (12.7.2020) முழு ஊரடங்கு அமலில் இருந்தது, இந்நிலையில் சென்னை - அனகாபுத்தூர் பகுதியில் தடையை மீறி பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கியது. இத்தகவல் அறிந்த இப்பகுதி வட்டாட்சியர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில்... சங்கர் நகர் போலீஸார் அந்த பெட்ரோல் பங்க்கு ’சீல்’ வைத்தனர். இதில் - வேடிக்கை என்னவென்றால் - பெட்ரோல் பம்ப் மீது இன்று (12-7-2020 ஞாயிற்று கிழமை ) கரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல் பங்க் இயங்காது என அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படங்கள் :எம்.முத்துகணேஷ்
47 / 67
48 / 67
49 / 67
50 / 67
மதுரை மாவட்ட புதிய எஸ்பி ஆக பதவியேற்றுள்ள சுஜித்குமார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
51 / 67
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுக்க இன்று (12.7.2020) ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் -இன்று மதுரை கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பில்... விளக்குத்தூண் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
52 / 67
கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் புதுச்சேரி - கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி... அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் இலவச கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி, மரக்கன்று, காலை சிற்றுண்டி ஆகியவற்றை வழங்கினர். மேலும் அவர்களை கவுரவிக்கும் வகையில் மலர் தூவி பாராட்டவும் செய்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
53 / 67
54 / 67
55 / 67
மதுரை - வடபழஞ்சி தொழில்நுட்பப் பூங்கா கட்டப்பட்டுள்ள இடத்தில் ... கரோனா வார்டு அமைப்பதற்காக - வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று (12,7,2020) ஆய்வு மேற்கொண்டனர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
56 / 67
57 / 67
கோயம்புத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுபேற்றுகொண்ட அர.அருளரசு படம் ; ஜெ .மனோகரன்
58 / 67
கோவை - துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் உட்பட 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையொட்டி ... இன்று (12.7.2020) காவல் நிலையம் மூடப்பட்டது. படம்: ஜெ .மனோகரன்
59 / 67
கோவை - துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் உட்பட 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையொட்டி ... இன்று (12.7.2020) காவல் நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில் - கை திகளுக்கு போடும் விலங்கு மூலம் பூட்டப்பட்டுள்ள காவல்நிலைய கேட் படம்: ஜெ .மனோகரன்
60 / 67
கோவை - துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் உட்பட 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையொட்டி ... இன்று (12.7.2020) காவல் நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் இன்று முதல் துடியலூர் காவல்நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. படம் : ஜெ .மனோகரன்
61 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணத்தால் கோவை பங்கஜா மில் சாலையில் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் படம்: ஜெ .மனோகரன்
62 / 67
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணத்தால் இன்று (12.7.2020) காணப்படும் கோவை அவிநாசி சாலை . படம்: ஜெ .மனோகரன்
63 / 67
64 / 67
பொதுவாக நதி மூலம்,ரிஷி மூலம் அறிய முடியாதுதான். இது - சென்னை - அடையாறு ஆற்றின் மூலமான ஆதனூர் பெரிய ஏரியாகும். .இதிலிருந்துதான் முதலில் உபரி நீர் வெளியேறி ஆறாக உருவெடுக்கிறது.பின்னர் பல ஏரிகளின் உபரி நீர் அவற்றோடு சேர்ந்து சென்னைக்கு நிலத்தடிநீரை உயர்த்திவிட்டு... மெரினாவில் கலக்கிறது. .ஆனால் - இப்போது தண்ணீரின்றி கால்நடைகளின் மேய்சல் நிலமாக மாறிவிட்டது.இனி அடுத்துவரும் பருவமழையில் நிரம்பிவிடும் என விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். படங்கள்:எம்.முத்துகணேஷ்
65 / 67
66 / 67
67 / 67
மதுரை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட சிவ பிரசாத். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x