Published on : 11 Jul 2020 18:36 pm

பேசும் படங்கள்... (11.07.2020)

Published on : 11 Jul 2020 18:36 pm

1 / 70
நாளை - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்... இன்று (11.7.2020) சென்னை - நடேசன் சாலையில் பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படம் : க.ஸ்ரீபரத்
2 / 70
3 / 70
நாளை - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்... இன்று (11.7.2020) சென்னை - கிருஷ்ணாம்பேட்டை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படம் : க.ஸ்ரீபரத்
4 / 70
5 / 70
6 / 70
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்... இன்று (11.7.2020) சென்னை - கிருஷ்ணாம்பேட்டை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படம் : க.ஸ்ரீபரத்
7 / 70
8 / 70
சென்னையில்... கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவும் - கட்டுப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது சென்னை - கடற்கரை சாலையில் உள்ள எழிலகம் வளாகத்தில்... இன்று (11.7.2020) கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யும் பணியாளர். படம் : க.ஸ்ரீபரத்
9 / 70
10 / 70
11 / 70
சென்னையில் - கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவும்... அதை கட்டுப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இன்று (11.7.2020) நொச்சி நகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில்... கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர். படம் : க.ஸ்ரீபரத்
12 / 70
13 / 70
புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 16 -ம் தேதி தொடங்கவுள்ளது. இதைடுத்து... சட்டப்பேரவையில் பராமரிப்புப் பணிகள் இன்று (11.7.2020) தொடங்கியது. படம்: எம்.சாம்ராஜ்
14 / 70
புதுச்சேரி - பாகூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததாக இன்று (11.7.2020) நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பில் புதுச்சேரி - சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார். படம்: எம்.சாம்ராஜ்
15 / 70
புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம் ராஜ்பவன் தொகுதிகளுக்கு அடுக்குமாடிக் குடியுருப்புகளை இன்று (11.7.2020) முதல்வர் நாராயணசாமி வழங்கினார். படம்: எம்.சாம்ராஜ்
16 / 70
திருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பெரிய கடை வீதி, கள்ளத்தெரு, கிழக்கு ஜாபர்ஷா தெரு உட்பட குறிப்பிட்ட அனைத்து பகுதிகளும் ... நேற்று (10.7.2020) நள்ளிரவு முதல் 14 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. படம்: ஜி.ஞானவேல்முருகன்
17 / 70
18 / 70
19 / 70
20 / 70
21 / 70
திருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் - திருச்சி என்.எஸ்.பி. சாலை சாலை முழுவதும் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் இன்று (12.7.2020) வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ஜி.ஞானவேல்முருகன்
22 / 70
23 / 70
24 / 70
25 / 70
திருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் - திருச்சி பெரிய கடை வீதியில் அடைக்கப்படாத ஒரு பகுதியில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிசோடிக் காணப்பட்டது. படம்: ஜி.ஞானவேல்முருகன்
26 / 70
திருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெரிய கடை வீதியில் தடுப்பு ஏற்படுத்தபட்ட இடத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
27 / 70
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க... மதுரை - நகர்புறத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்... மதுரை நகருக்குள் இருந்து அலங்காநல்லூருக்கு மது அருந்துவோர் மது வாங்க படையெடுத்து வருகிறார்கள். எனவே அலங்காநல்லூர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு... இன்று (11.7.2020) அப்பகுதியைச் சேர்ந்தோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
28 / 70
மதுரையில் - கரோனா தொற்றுப் பரவல் அதிகம் இருப்பதால்... போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை - காளவாசல் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய மேம்பாலம் தடுப்புகள் வைத்து முற்றிலும் மூடப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
29 / 70
திருநெல்வேலி - பாளையங்கோட்டை மார்க்கெட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று தாக்குதல் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில்... மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமிருப்பதால் - இன்று (11.7.2020) மார்க்கெட் அமைந்துள்ள திருச்செந்தூர் சாலை மற்றும் மார்க்கெட் பகுதி வழியாக ஜங்ஷன் மற்றும் டவுனுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை இந்த தடுப்புகள் இருக்கும் என நகர்நல அலுவலர்கள் தெரிவித்தனர். படங்கள்: மு. லெட்சுமி அருண்
30 / 70
31 / 70
32 / 70
சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக... டெல்லியில் இருந்து வருகை தந்திருக்கும் சி.பி.ஐ அதிகாரிகள்... இன்று (11.7.2020) திருநெல்வேலி - அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து சாத்தான்குளம் சென்றனர். படங்கள் : மு.லெட்சுமி அருண்
33 / 70
34 / 70
35 / 70
36 / 70
சேலம் - ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 அரசு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் இன்றும் (11.7.2020) நாளையும் முழுமையாக மூடப்பட்டு... போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம் : எஸ். குரு பிரசாத்
37 / 70
38 / 70
39 / 70
நீர்வற்றி வறண்ட பூமியாக மாறிவிட்ட பள்ளிக்கரனை ஏரியில் - கடந்த சில நாட்களாக பெய்த மழையில் குட்டைபோல் நீர் தேங்கியுள்ள நிலையில்...'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு' - என்ற பழந்தமிழ் பாடலுக்கு ஏற்ப.. ஏரியின் அருகில் உள்ள மின்கம்பியில் அமர்ந்து காத்திருக்கும் கொக்குகள். படம் : ம.பிரபு
40 / 70
41 / 70
42 / 70
43 / 70
திருநெல்வேலி ஆயுதப் படை மைதானத்தில்... காவலர்களுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான - யோகா பயிற்சிகள் இன்று (11.7.2020) நடைபெற்றன. இதில் - காவலர்களுடன் திருநெல்வேலி மாவட்ட சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். படங்கள் : மு.லெட்சுமி அருண்
44 / 70
45 / 70
46 / 70
47 / 70
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு எப்போதும் மக்கள் கூட்ட கூட்டமாக சாலையைக் கடப்பதால் போக்குவரத்து பாதிப்புடன், விபத்து ஏற்படும் அபாயமும் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கரோனா காலத்தைப் பயன்படுத்தி... இப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சுரங்கப் பாதை அமைக்கும் பணி காரணமாக - சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள பாலத்தின் கீழே ஒரு பகுதி மூடப்பட்டு... சென்ட்ரலில் இருந்து பாலம் வழியாக பல்லவன் சாலையைக் கடந்து அண்ணா சாலைக்கு செல்லும் சாலை இன்று (11.7.2020) மூடப்பட்டது. படம் : ம . பிரபு
48 / 70
49 / 70
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி இன்று (11.7.2020) கோவை - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் அரசு அலுவலர்கள். படம் : ஜெ .மனோகரன்
50 / 70
கோவை - குனியமுத்தூர் சுண்ணாம்புக் கால்வாய் அணைக்கட்டை மேலும் பலப்படுத்தும் கட்டுமானப் பணிகள் இன்று (11.7.2020) தொடங்கின. படம் : ஜெ .மனோகரன்
51 / 70
52 / 70
53 / 70
54 / 70
55 / 70
நாளை (12.7.2020) முழு ஊரடங்கையொட்டி... கோவை - சுண்டக்காமுத்தூர் குளத்தில் இன்று மீன்பிடித்து விற்கப்பட்ட நிலையில் - மீன் வாங்க காத்திருக்கும் பொதுமக்கள். படம் : ஜெ .மனோகரன்
56 / 70
57 / 70
58 / 70
59 / 70
நாளை (12.7.2020) முழு ஊரடங்கையொட்டி... கோவை - உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்க கூடிய மக்கள் கூட்டம். படம் : ஜெ .மனோகரன்
60 / 70
61 / 70
62 / 70
கோவை - மீன் மார்க்கெட்டில் இன்று (11.7.2020) சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக... போடப்பட்ட தடுப்புகளைப் பயன்படுத்தாமல்... அலட்சியம் காட்டும் பொதுமக்கள். படம் : ஜெ .மனோகரன்
63 / 70
64 / 70
நாளை (12.7.2020) முழு ஊரடங்கையொட்டி... கோவை - உக்கடம் புதிய மேம்பாலத்தின் கீழே... இன்று தற்காலிக பழக்கடைகள் முளைத்துள்ளன. படம் : ஜெ .மனோகரன்
65 / 70
66 / 70
67 / 70
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக... சில மாதங்களாக வேலூர் - நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டிருந்த நிலையில்... சில கட்டுபாடுகளுடன் மீண்டும் கடைகளைத் திறப்பது தொடர்பாக ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று (ஜூலை - 11) நேதாஜி மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அப்பகுதி வணிகர்களுடன் கலந்தாலோசித்தனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்
68 / 70
69 / 70
70 / 70

Recently Added

More From This Category

x