Published on : 10 Jul 2020 17:02 pm

பேசும் படங்கள்... (10.07.2020)

Published on : 10 Jul 2020 17:02 pm

1 / 63
தமிழகத்தில் - விரைவில் மழைக்காலம் ஆரம்பிக்கப் போவதால்... பெரம்பலூர் - வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் வெங்காய சாகுபடிக்கு வெங்காய நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. படம் : பு.க.பிரவீன்
2 / 63
3 / 63
4 / 63
புதுச்சேரி - ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு... இன்று (10.7.2020) இலவச கரோனா தொற்றுப் பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவர்கள். படம்: எம்.சாம்ராஜ்
5 / 63
புதுச்சேரியில் கரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 3.50 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு... ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கக் கோரி... புதுச்சேரி - அதிமுக எம்எல்ஏ-க்கள் அன்பழகன், பாஸ்கரன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கையில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி இன்று (10.7.2020) புதுவை - சட்டப்பேரவையின் முன்பு தர்ணாவில் ஈடுப ட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
6 / 63
7 / 63
8 / 63
கரோனா நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி... இன்று (10.7.2020) புதுச்சேரி - சட்டப்பேரவை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ-க்கள் அன்பழகன், பாஸ்கரன், வையாபுரி மணிகண்டன் ஆகியோரின்.... கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை - உடனடியாக நிறைவேற்றுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து உறுதியளித்தார். படம் : எம்.சாம்ராஜ்
9 / 63
கரோனா தொற்று பரவலை தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக - மூடி வைக்கப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை... இன்று (10.7.2020) காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்துவிடப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் ஒரு சிலர் மட்டும் கடற்கரைக்கு வந்திருந்தனர். படம் : எம்.சாம்ராஜ்
10 / 63
11 / 63
12 / 63
புதுச்சேரி ‘பாப்ஸ்கோ’ நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 32 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி... புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் மாளிகையின் முன்பு இன்று (10.7.2020) குடும்பத்தினருடன் ஏஐடியுசி தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் படங்கள்: எம்.சாம்ராஜ்
13 / 63
14 / 63
’ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் குறித்து புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி தலைமையில்... இன்று (10.7.2020) காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுடன்... வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசு துறைச் செயலர்கள் கலந்து கொண்டனர். படம்: எம்.சாம்ராஜ்
15 / 63
16 / 63
சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்று (10.7.2020) சேலம் - மோட்டாங்குறிச்சி பகுதியில் காலையில் பெய்த மழையின்போது... மேகக் கூட்டங்கள் ஏற்காட்டு மலையை தழுவிச்செல்லும் அழகும்... விளைநிலங்களில் காணப்பட்ட பசுமையின் அழகும் காண்போரை ஒருகணம் ரசிக்க வைத்தது. படங்கள் : எஸ்.குருபிரசாத்
17 / 63
18 / 63
19 / 63
திருநெல்வேலி பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால்... பாளையங்கோட்டை ஆயுதப் படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில்... நெல்லை மாநகராட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (10.7.2020) நடைபெற்றது . படங்கள்: மு .லெட்சுமி அருண்
20 / 63
21 / 63
கரோனா தொற்று தடுப்புக்காக... அமலில் இருக்கும் ஊரடங்கு காலத்தில் அல்லும் பகலும் ஓய்வின்றி பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில்... இன்று (10.7.2020) மாநகராட்சி அலுவலர்கள் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வழங்கினர். படங்கள் : மு. லெட்சுமி அருண்
22 / 63
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்க... தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் - இன்று (10.7.2020) சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம் : எஸ்.குரு பிரசாத்
23 / 63
24 / 63
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில்... ஜூலை மாதத்துக்கான இலவச நிவாரணப் பொருட்களை வாங்கிச் செல்லும் அப்பகுதி மக்கள். படம் : ஜெ. மனோகரன்
25 / 63
26 / 63
27 / 63
தஞ்சையில் இருந்து ரயில் மூலம் வடகோவை ரயில் நிலையத்துக்கு வந்திறங்கும்... பயனாளிகளுக்கு வழங்குவதற்கான ரேஷன் அரிசி மூட்டைகள்.
28 / 63
29 / 63
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவருக் தொடர் மழையால்... கோவை - சாடிவயல் பகுதி தூர்வாரப்பட்ட நொய்யல் நதியில்... தங்கு தடையின்றி பாயும் தண்ணீர். படம் : ஜெ .மனோகரன்
30 / 63
31 / 63
கோவை - பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் மக்களின் நீண்ட காலக் கனவான... பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறை மற்றும் நொய்யல் ஆற்றின் தரைப் பாலம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது படம் :.ஜெ .மனோகரன்
32 / 63
33 / 63
34 / 63
35 / 63
வேலூரில் - இன்று (ஜூலை - 10) அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்தது. இந்நிலையில் - கரோனா தொற்றுப் பரவல் காரணமாக... வேலூர் மாங்காய் மண்டி அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட் பகுதி மற்றும் கிரீன் சர்க்கிள் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் குளம்போல் தேங்கிய மழைநீர். படம்: வி.எம்.மணிநாதன்
36 / 63
37 / 63
38 / 63
39 / 63
40 / 63
சேலத்தில் நேற்று நள்ளிரவு (9.7.2020) பலத்த காற்றுடன் மழை பெய்ததையொட்டி... நகரின் பல பகுதிகளில் மரங்கள் பல சாய்ந்தன. சீரங்கபாளையம் பகுதியில் உள்ள ராஜாஜி சாலையில் சாய்ந்த 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரத்தை... அங்கிருந்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டனர். படம் : எஸ்.குருபிரசாத்
41 / 63
42 / 63
சேலத்தில் நேற்று நள்ளிரவு (9.7.2020) பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் தேங்கிய மழை நீரில் செல்லும் வாகன ஓட்டி. படம் : எஸ்.குரு பிரசாத்
43 / 63
ஜூலை மலர்களே... ஜூலை மலர்களே: எப்போதும் ஜூலை மாதங்களில் பூக்கும் செங்கொன்றை பூக்கள்... இந்த ஆண்டும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை பகுதிகளில் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. கரோனா தொற்றுப் பரவலுக்கு இடையில்... பயத்துடன் சாலையில் பயணிப்போர் ஒரு சிலரையாவது இந்த ஜூலை பூக்களின் சிரிப்பு... கவர்ந்து இழுக்கத்தான் செய்கிறது. படங்கள் : மு. லெட்சுமி அருண்
44 / 63
45 / 63
46 / 63
தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் ஜெயராஜ் , பென்னிக்ஸ் கொலை தொடர்பாக விசாரணை நடத்த... இன்று (10.7.2020) டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் - ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார், சுஷில் குமார் வர்மா, அஜய்குமார், சச்சின், பூனம் குமார் ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர்... மதுரை விமான நிலையத்தில் இருந்து தனியார் கார்கள் மூலம் துத்துக்குடி புறப்பட்டுச் சென்றனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
47 / 63
48 / 63
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.7.2020) கரோனா தொற்றுப் பரவல் தொடர்பான மருத்துவ உபகரணங்களை... வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க, மதுரை மாவட்ட தலைவர் ஜெகதீஷ் வழங்கினார். அருகில் - ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், பெரிய புல்லான் ஆகியோர் படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
49 / 63
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட... வேலூர் - சிப்பாய் புரட்சியின் 214-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை -10) அனுசரிக்கப்பட்டது. வேலூர் கோட்டை எதிரே மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, வேலூர் - அண்ணா சாலையில் அமைந்துள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றி வைத்தார். தகவல் + படம் : வி.எம்.மணிநாதன்
50 / 63
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் 214-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 10) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, வேலூர் சிப்பாய் புரட்சியில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில்... வேலூர் - அண்ணா சாலை மக்கான் சிக்னல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். படம்: வி.எம்.மணிநாதன்.
51 / 63
52 / 63
53 / 63
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட... வேலூர் சிப்பாய் புரட்சியின் 214-ம் ஆண்டு நினைவு தினம் இன்று(ஜூலை 10) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, வேலூர் சிப்பாய் புரட்சியில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் வேலூர் அண்ணா சாலை மக்கான் சிக்னல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், அதிகாரிகள், அரசியில் கட்சியினர் மற்றும் பலர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
54 / 63
55 / 63
56 / 63
நேற்று (9.7.20200 இரவு சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. அதன் பிரதிபலிப்பாக... இன்று - ஊரப்பாக்கம் அருகில் ஆதனூர் பகுதிகளில்... வானில் பலவண்ணமயமாக காட்சி அளித்த மேங்கள் கண்களுக்கு விருந்தாகின. படங்கள்:எம்.முத்துகணேஷ்
57 / 63
58 / 63
59 / 63
60 / 63
61 / 63
சென்னை - வண்டலூர் பகுதிகளில் இன்று (10.7.2020) மேகக் கூட்டங்கள் அலம்பிவிட... சோப்பு நுரை போட்டது போல ரம்யமாக காட்சியளித்தது. படங்கள்:எம்.முத்துகணேஷ்
62 / 63
63 / 63

Recently Added

More From This Category

x