Published on : 09 Jul 2020 18:05 pm

பேசும் படங்கள்... (09.07.2020)

Published on : 09 Jul 2020 18:05 pm

1 / 61
சென்னை - ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டு வளாகத்தில் மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான குழுவுடன்.... இன்று (9.7.2020) அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். படம் : ம.பிரபு
2 / 61
3 / 61
தமிழகத்தில் எல்லா ஊர்களின் சாலையோரங்களிலும் முகக்கவசம் விற்கும் திடீர் கடைகள் முளைத்திருக்கின்றன. கோவையில் - சாலையோரம் ஒன்றில் தனது காரை சற்றே ஓரம் நிறுத்தி அதனை முக்கவசங்கள் விற்கும் கடையாக்கியிருக்கிறார் இளைஞர் ஒருவர். அருகில் சென்று விசாரித்தால்...’ கோவை சிட்டிக்குள்ள வாடகைக்கு கார் ஓட்டி சம்பாதிக்கிறதைவிட இந்த முகக்கவசம் விற்கிறது நல்லாருக்கு சார்...’ என்று ’கரோனா’ கால பொருளாதாரம் பேசுகிறார்.
4 / 61
5 / 61
மகாராஷ்டிராவில் உள்ள அம்பேத்கரின் இல்லத்தை சேதப்படுத்தியோர் மீது - உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி.... வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (9.7.2020) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
6 / 61
ரேஷன் கடைகளைத் திறந்து உடனடியாக அரிசி, பருப்புகளை வழங்கக் கோரியும்... சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஊரடங்கு நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்கக் கோரியும்... இன்று (9.7.2020) புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கள் துறை அலுவலகம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
7 / 61
8 / 61
புதுச்சேரி - ராஜ்பவன் தொகுதி சின்னையாபுரம் பகுதியில்... கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு உரிய நிலப் பட்டாவை வழங்கக் கோரி... காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று (9.7.2020) புதுச்சேரி - தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
9 / 61
10 / 61
புதுச்சேரி - ராஜ்பவன் தொகுதி சின்னையாபுரம் பகுதியில்... கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு உரிய நிலப் பட்டாவை வழங்கக் கோரி... காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று (9.7.2020) புதுச்சேரி - தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முற்றுகையிட வந்த பொதுமக்களை.. புதுவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால்... அவர்கள் எஸ்.வி பட்டேல் சாலையில் வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எம்.சாம்ராஜ்
11 / 61
12 / 61
ஒருங்கிணைந்த - வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த... இதுநாள் வரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து - அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில் தலைமையில் இன்று (9.7.2020) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் - வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
13 / 61
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்... அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான இருப்பிடங்கள் அரசு கலைக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து... மகாத்மா காந்தி விளையாட்டு மைதான உள் அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டோர் பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக படுக்கைகளைத் தயார்படுத்தும் ஊழியர்கள். படங்கள்: எஸ்.குருபிரசாத்
14 / 61
15 / 61
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில்... இன்று (9.7.2020) காலையில் துரைப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று குறுக்கே வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த போலீஸாரும் மற்றும் அதிகாரிகளும் டிப்பர் லாரியையும், ஆம்புலன்ஸையும் இயந்திரங்கள் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தி - சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர். படங்கள் : எம்.முத்து கணேஷ்
16 / 61
17 / 61
18 / 61
19 / 61
20 / 61
21 / 61
சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தில் ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளாலும் தூர்ந்து போயிருந்த 12 ஏக்கர் பரப்பளவுள்ள திருவேங்கடமுடையான் கோயில் குளம் இன்று (9.7.2020) தூர்வாரப்பட்டது. இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி... கோயில் குளத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். படங்கள் : எம்.முத்து கணேஷ்
22 / 61
23 / 61
24 / 61
25 / 61
மதுரையில் பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக - இன்று (9.7.2020) கரோனா தொற்றை எதிர்கொள்ள உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க... அரசு ஊழியர்களுக்கு ’ஆர்சனிக் ஆல்பம் 30 c’ என்னும் ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
26 / 61
27 / 61
மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில்.... உலக மக்களை அச்சுறுத்தும் கரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி... ஆலாத்தூரில் இன்று (9.7.2020) சமூக இடைவெளியை பின்பற்றி .. மகா சண்டி யாகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்டச் செயலாளர் நாகராஜன் செய்திருந்தார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
28 / 61
கோயில் எப்போ திறக்கும்.... நம்ம பஞ்சம் பறக்கும்: அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக - தமிழகத்தில் பலருடைய அன்றாட பிழைப்பு கேள்விக்குறியாகிவிட்டது. திருநெல்வேலி - நெல்லையப்பர் கோயில் வாசலில் கொளுத்தும் வெயிலில் குடை பிடித்தபடி பூ விற்கும் பத்மா என்ற இந்த அம்மா... கடந்த 20 ஆண்டுகளாக இதே இடத்தில் பூ விற்று வருபவர். கடந்த 3 மாதங்களாக ’கரோனா’ ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருந்த பத்மா... தற்போது இரண்டு வாரங்களாகத்தான் தனது பூ வியாபாரத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். ’’ஒரு நாளக்கி நூறு ரூவாயாச்சும் தேவப்பா... நாம போயி யாருட்டேயும் கையேந்தக் கூடாது’’ என்று இவர் கூறியது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இதே போல பல பேர்... நெல்லையப்பர் கோயில் எப்போது திறக்கும்? நம் பஞ்சம் பறக்கு...என எதிர்பார்ப்பில் கோயிலைச் சுற்றி காத்திருக்கின்றனர். படங்கள் : மு. லெட்சுமி அருண்
29 / 61
30 / 61
31 / 61
மதுரை ரயில் நிலைய முகப்பில் 2018-ம் ஆண்டு - 100 அடி உயர கொடி கம்பத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் இன்று (9.7.2020) பெய்த கனமழை காரணமாக... அக்கம்பத்தில் இருந்த கொடி கிழிந்துபோனது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் அக்கொடியை அகற்றினர். படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
32 / 61
33 / 61
வேலூர் மாவட்டத்தில் - கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக காகிதக்கூழ், பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் ஆன விநாயகர் சிலைகளை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய நிலையில்... வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதையொட்டி... இந்த ஆண்டு களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள்தான் அதிகம் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே - வேலூரில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். தகவல் + படங்கள் : வி.எம்.மணிநாதன்
34 / 61
35 / 61
கொடைக்கானல் மலைப் பகுதி... பன்றிமலைப் பகுதியில் காப்பி விளைச்சல் தொடங்கியுள்ளதால்... செடியில் காப்பி பயிர் காய்த்துக் குலுங்குகிறது. படங்கள் : பு.க.பிரவீன்
36 / 61
37 / 61
38 / 61
கோவை - அனுப்பர்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில்... இன்று (9.7.2020) மண்டலவாரியாக பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து - சுகாதாரத் துறையினர் மாத்திரைகள் வழங்கினர். படம் ; ஜெ .மனோகரன்
39 / 61
40 / 61
41 / 61
42 / 61
43 / 61
44 / 61
கோவை - பன்னாட்டு விமான நிலையத்தில்... இன்று (9.7.2020) சுகாதாரத் துறையினர் பயணிகளுக்கு கிருமி நாசினி தெளித்து - உடல் வெப்பப் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர். படம் ; ஜெ .மனோகரன்
45 / 61
46 / 61
47 / 61
48 / 61
49 / 61
கோவை - மேற்குத் தொடர்ச்சி மலையில்... இன்றைய (9.7.2020) பகல்பொழுதில்... வெட்கத்தொடு முத்தமிட்டுக்கொள்ளும் மேகக் கூட்டங்களின் அழகே அழகுதான். படம் ; ஜெ .மனோகரன்
50 / 61
51 / 61
கோவை - பேரூர் சொட்டையன் குட்டை கரையில்... இன்றைய (9.7.2020) காட்டு வேலைகளை முடித்துவிட்டு அந்திசாயும் வேளையில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் உழைக்கும் மக்கள். படம் ; ஜெ .மனோகரன்
52 / 61
53 / 61
வரும் ஆகஸ்ட் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதிக்க வேண்டி... விநாயகர் சிலைகளை தலைமேல் வைத்துக்கொண்டு... நூதன முறையில் கோவை ஆட்சியரிடம் இன்று (9.7.2020) மனு அளிக்க வந்த பாரத் சேனா அமைப்பினர். படம் ; ஜெ .மனோகரன்
54 / 61
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடட்டங்களில்... மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக - வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்... சென்னையின் இன்று (9.7.2020) மாலைப்பொழுதில்... ஆகாயத்தில் விதவிதமான மேகங்களின் திருவிளையாடல் காட்சிகளை மட்டும் காண முடிந்தது. மழைக்கான வாய்ப்புதான் ’ஒரு துளி’யும் இல்லை. படங்கள் : ம.பிரபு
55 / 61
56 / 61
57 / 61
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (9.7.2020) ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் மூலம் 1,650 பேர் வட மாநிலத்தோர் புறப்பட்டுச் சென்றனர். படங்கள்: ம.பிரபு
58 / 61
59 / 61
60 / 61
61 / 61

Recently Added

More From This Category

x