1 / 50
கொடைக்கானல் - கீழ்மலைப் பகுதியில்... அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பை நீர்த்தேக்கம் போதுமான மழை பெய்யாததால் வறண்டு காணப்படுகிறது.
படம் : பு.க.பிரவீன்
2 / 50
3 / 50
வேலூர் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று (8.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : வி.எம்.மணிநாதன்
4 / 50
திண்டுக்கல் மாவட்டம் - கன்னிவாடி கிராமப் பகுதியில்...
மானாவாரியாக விளைந்துள்ள சோளப் பயிர்கள்.
படம் : பு.க.பிரவீன்
5 / 50
6 / 50
7 / 50
மதுரை - உலகத் தமிழ் சங்கத்தின்கீழ் செயல்படும் சங்கத் தமிழ் அருங்காட்சியகத்தின் வெளிப்புற சுவர்களில்... சுற்றுச்சூழல் ஓவியர் கண்ணன் தலைமையில் நற்றினை, கலித்தொகை, குறுந்தொகை, நெடுநல்வாடை, மலைபடுகடாம் போன்ற பழந்தமிழ் இலக்கிய காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
8 / 50
9 / 50
தமிழகத்தில் - 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அமைப்பை தடை செய்யக் கோரி... இன்று (8.7.2020) எஸ்டிபிஐ கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 50
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும்கூட... மதுரை - கோரிப்பாளையத்தில் இன்று (8.7.2020)
பொது மக்கள் எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல்... வாகனங்களில் சென்று வந்தனர்.
படம : எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 50
12 / 50
மதுரை - மேலப்பாளையம் முனிசிபல் காலனியைச் சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்தினர்... தங்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்தித் தரக் கோரியும்... போதை பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு சிலரால் தங்களுக்கு ஆபத்து உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்... இன்று (8.7.2020) திருநெல்வேலி மாநகராட்சி முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
படங்கள்: மு.லெட்சுமி அருண்
13 / 50
14 / 50
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதார்களுக்கு... 2-வது கட்டமாக புதுச்சேரி அரசு சார்பில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இன்று (8.7.2020) புதுச்சேரி - தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரிசியை வாங்கி வரும் பொதுமக்கள்.
படம் : எம்.சாம்ராஜ்
15 / 50
16 / 50
17 / 50
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதார்களுக்கு... 2-வது கட்டமாக புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் அரிசியை வாங்க சமூக இடைவெளி வீட்டு நிற்கும் பொதுமக்கள்.
படம் : எம்.சாம்ராஜ்
18 / 50
கடலோர காவல் நிலைய தலைமை காவலருக்கு இன்று (8.7.2020) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து... காவல்நிலையம் மூடப்பட்டதால் - காவல் நிலையத்துக்கும் வெளியே அமர்ந்து பணிபுரியும் புதுவை போலீஸார்.
படம் : எம்.சாம்ராஜ்
19 / 50
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றிவரும் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து... இன்று (8.7.2020) துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன.
படம் : எம்.சாம்ராஜ்
20 / 50
புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றிவரும் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து.... இன்று (8.7.2020) நகராட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் நகராட்சி ஊழியர்கள்.
படம் : எம்.சாம்ராஜ்
21 / 50
கழிவுநீர் அகற்றும்போது ஏற்படும் மரணங்களை தடுத்திடக் கோரியும்... அதற்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்த வலியுறுத்த கோரியும்... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (8.7.2020) ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
22 / 50
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!
கடந்த காலங்களில் சிறுவர்கள் கூடி விளையாடும் பல்வேறு விளையாட்டுக்கள் ஆரோக்கியத்தையும், உடல் திறனையும் வளர்க்கும் விதமாக இருந்தன. நாகரிக மாற்றத்துக்குப் பின்னர் சிறுவர்கள் வீடுகளில் முடங்கி செல்போன்களிலும், தொலைக்காட்சிகளிலும் தங்கள் நேரத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் தொலைக்கும் அவலமே நடக்கிறது.
இந்நிலையில், இன்று (8.7.20200 ) சேலம் - கன்னங்குறிச்சியில்...
உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டான, ‘பச்சைக்குதிரை’ விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள சிறுவர் - சிறுமியர்களை பார்க்கும்போது, கடந்த காலத்தில் நாமும் இப்படி தா-ண்-டி விளையாடியது ஞாபகத்துக்கு வருகிறது.
படங்கள் : எஸ். குரு பிரசாத்
23 / 50
24 / 50
பாளையங்கோட்டையில் இருந்து மஹாராஜ நகர் உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் உள்ள வளைவான பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வந்தது. இதை அப்பகுதியினர் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதிலும்... எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை.
இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பாறைக்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன், கருத்தபாண்டி ஆகிய இருவரும்... வாகனத்தை நிறுத்திவிட்டு... பள்ளத்தில் கற்களை நிரப்பியதுடன்... மரக் கிளையை ஒடித்து அப்பள்ளத்தில் நட்டு... ஒரு எச்சரிக்கையையும் உருவாக்கினர். ’நமக்கென்ன வந்தது’ என்று அலட்சியமாக பலரும் இப்பள்ளத்தைக் கடந்த நிலையில்...
இவர்களை போன்ற இளைஞர்களைப் பார்க்கும் போது... ‘வாழ்க புதிய தலைமுறை’ என்று உரக்கச் சொல்லத் தோன்றியது!
படங்கள்; மு.லெட்சுமி அருண்
25 / 50
26 / 50
கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து நேரிடையாக மனுக்கள் பெறுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் - மனு பெட்டியில் மனுக்களை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் - ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் இன்று (8.7.2020) இளைஞர்கள் மனுக்களை செலுத்தினர்.
படங்கள்; மு. லெட்சுமி அருண்
27 / 50
28 / 50
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்... தடுப்பு நடவடிக்கைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் - சேலம் அஞ்சல் நிலையங்களில் மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் தபால் மூட்டைகளுக்கு கிருமிநாசினி தெளித்தப் பின்னரே... தொடர்புடைய முகவரிக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் நிலையத்துக்கு வந்துச் சேர்ந்த தபால் மூட்டைகளுக்கு... கிருமிநாசினி மருந்து தெளிக்கும் ஊழியர்.
படம் ; எஸ். குரு பிரசாத்
29 / 50
30 / 50
திருநெல்வேலி - பாளையங்கோட்டை மஹாராஜ நகர் உழவர் சந்தையானது - கரோனா தொற்று பரவலை முன்னிட்டு... பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (8.7.2020) மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அந்தப் பகுதிகளை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
31 / 50
32 / 50
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கால்... நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில் விரைவில் தொற்றுப் பரவல் குறைந்து... வரும் மாதங்களில் நிலைமை மிகவும் சீராகிவிடும் என்கிற நம்பிக்கையோடு.... கோவையை அடுத்த தெலுங்குபாளையத்தில் - விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகளைத் தயாரித்து வரும் தொழிலாளர்கள்.
படம் : ஜெ மனோகரன்
33 / 50
34 / 50
35 / 50
36 / 50
கோவையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில்... புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆயுதப் படையைச் சேர்ந்த மகளிர் போலீஸாருக்கு... துப்பாக்கிகளைக் கையாள்வது பற்றி இன்று (8.7.2020) பயிற்சி அளிக்கப்பட்டது.
படம் : ஜெ மனோகரன்
37 / 50
38 / 50
39 / 50
கோவை மாநகர், கணபதி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி சார்பாக... தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுரக் குடிநீரும்... முகக்கவசங்களும் வழங்கினார். உடன் - மாநிலச் செயற்குழு உறுப்பினர் கணபதி சிவகுமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
படம் : ஜெ மனோகரன்
40 / 50
கோவை - நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து... மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கு ரூ. 1.69 லட்சம் மதிப்பீட்டில் மூன்றுசக்கர வாகனத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி .ஆர் .நடராஜன் வழங்கினார்.
படம் : ஜெ மனோகரன்
41 / 50
வேலூரில் - இன்று (8.7.2020) மாலைவேளையில்... 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையின் காரணமாக... வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி - தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.
படம் : வி.எம்.மணிநாதன்
42 / 50
43 / 50
44 / 50
45 / 50
46 / 50
சென்னையில் முழு ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு... ஜூலை -7 முதல் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மொத்த விற்பனை கடைகள் நிரம்பிய பாரிமுனை - கொத்தவால் சாவடியில் இன்று (8.7.2020) தங்கள் கடைகளுக்கு தேவையானப் பொருட்களை வாங்க அதிக அளவில் வியாபாரிகள் திரண்டதால்... இப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
படங்கள் : ம.பிரபு
47 / 50
48 / 50
சென்னையின் நுழைவுவாயிலான தாம்பரத்தை அடுத்த - இரும்புலியூர் பகுதியில்... சாலை ஓரங்களை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ்... ஸ்ரீபெரும்புதூர் வனச்சரகத்தினரால் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அந்த மரக்கன்றுகளுக்கு சாதாரண நாட்களில் 5 நாட்களுக்கு ஒருமுறையும்... வெயில் காலத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறையும்... லாரிகள் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. இந்த மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு.... வளர்க்கப்பட்டால் எதிர்காலத்தில் இப்பகுதியின் சாலையோரங்கள் பெரும் சோலை போல காணப்படும் என்பதில் ஐயமில்லை.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
49 / 50
50 / 50