Published on : 07 Jul 2020 16:42 pm

பேசும் படங்கள்... (07.07.2020)

Published on : 07 Jul 2020 16:42 pm

1 / 53
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது அடிக்கடி சிறு மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சில இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. சென்னையை அடுத்த திருநீர்மலைப் பகுதியில்... இன்று (7.7.2020) குருவை சாகுபடியில் நெல் விளைச்சல் முற்றிய நிலையில் அவசரம் அவசரமாக அறுவடையை மேற்கொண்டனர். இப்போது அறுவடை செய்யாவிட்டால் முற்றிய கதிர்கள் மழையில் முளைத்து விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். படங்கள் : எம்.முத்து கணேஷ்
2 / 53
3 / 53
4 / 53
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் வரும் கால்வாயில் திறந்து விடப்பட்ட நீர்வரத்து இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் - சென்னையின் ஒரு பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி... தற்போது 17 அடி நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழையில் இந்த ஏரி முழுவதுமாக நிரம்பி... சென்னை குடிநீர் பிரச்சினை முற்றிலும் தீர்ந்துவிடும்விடும் என பொதுப்பணித் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். படங்கள் : எம்.முத்து கணேஷ்
5 / 53
6 / 53
7 / 53
8 / 53
சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கான மானியத் தொகையை... அம்மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசு வழங்கப் போவதாக வந்த அறிவிப்பை... கண்டித்து நேற்று (ஜூலை - 7) வேலூர் ஊராட்சி ஒன்றிய வாளகத்தின் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
9 / 53
10 / 53
மதுரை காவலர்கள் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் 57 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இன்று (ஜூலை -7) இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 53
மதுரையில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால்.... போக்குவரத்து நடமாட்டத்தை குறைப்பதற்காக - பைபாஸ் சாலையில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் வழி சாலையை இன்று (ஜூலை - 7) போலீஸார் முற்றிலுமாக மூடினர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 53
இன்று (ஜூலை - 7) காலையில் மதுரை - கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே சென்று கொண்டிருந்த லாரி ஒன்று... திடீரென்று பழுது ஏற்பட்டு சாலையின் நடுவில் நின்றுவிட்டது. அப்போது அங்கு போக்குவரத்து ஒழுங்குப் பணியில் இருந்த காவலர் ஒருவர்... அந்த லாரியை இன்னும் சிலருடன் தானும் இணைந்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 53
14 / 53
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக... வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிவோரில்... காய்ச்சல், சளி, இருமல் போன்ற கரோனா தொற்று அறிகுறிகள் உள்ளோருக்கு இன்று (ஜூலை - 7) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம் : வி.எம்.மணிநாதன்
15 / 53
16 / 53
17 / 53
18 / 53
காவலர்கள் மத்தியில் கரோனா தொற்றுத் தாக்குதல் பரவலாக காணப்படுவதால்.... இன்று (ஜூலை - 7) பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசிப்போருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. படங்கள் : மு.லெட்சுமி அருண்
19 / 53
20 / 53
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிக்க முயற்சிக்கும், நீதி விசாரணையைத் தடுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... காவல்துறை நண்பர்கள் ( ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்) குழுவை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் - அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிம்புதேவன் தலைமையில் இன்று (ஜூலை - 7) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: வி.எம்.மணிநாதன்
21 / 53
22 / 53
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க... தமிழகத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில்... ரயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தோருக்கு - ரயில் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. இன்று (ஜூலை - 7) டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெற சென்னை - செண்ட்ரலில் உள்ள டிக்கெட் பதிவு மையம் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் படம்; ம.பிரபு
23 / 53
24 / 53
கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ... ரூ. 5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி.... இன்று (ஜூலை -7) மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் படங்கள் : மு. லெட்சுமி அருண்
25 / 53
26 / 53
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் நேற்று (ஜூலை - 6) காலமானதையொட்டி... அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக பாரதிதாசனின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டது. அவருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அருகில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ். மன்னன் படம்: எம்.சாம்ராஜ்
27 / 53
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் நேற்று (ஜூலை - 6) காலமானதையொட்டி... அவரது உடல் பாரதிதாசனின் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
28 / 53
29 / 53
கரோனாவு தொற்றுப் பரவலுக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் மூலிகை மற்றும் கீரைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (ஜூலை - 7) கிராமப் பகுதிகளில் இருந்து புதுச்சேரி பழைய மார்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ள முருங்கை கீரை, கீழாநெல்லி, கரிசலாங்கன்னி, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை உள்ளிட்ட பல்வேறு வகை கீரைகளை ஆர்வத்தோடு பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். படம்: எம்.சாம்ராஜ்
30 / 53
31 / 53
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, ஸ்மார்ட் போன் இல்லாத சூழ்நிலையில் ஆன்லைன் கல்வி போதனையை... அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுத்தி... இன்று (ஜூலை - 7) புதுச்சேரி - கல்வித் துறை அலுவலகம் முன்பு... கண், வாயில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
32 / 53
33 / 53
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியில்... இன்று (ஜூலை - 7) அறுவடைக்குத் தயாராக உள்ள கம்புப் பயிர்கள். படங்கள் : பு.க.பிரவீன்
34 / 53
35 / 53
செல்லப்பிராணிகளில் நாய் குட்டிகள் சுற்றி சுற்றி வந்து வாலாட்டி துள்ளி விளையாடும் அழகு... குழந்தைகளை எப்போதும் கவரும். அதனாலே குட்டி நாய்களை தங்கள் அன்புகுரியவராக நேசத்தோடு குழந்தைகள் அரவணைப்பதை பல வீடுகளில் பார்க்க முடியும். இதோ - இங்கே வாலாட்டும் நாய் குட்டியை தூளியில் அமர வைத்து தாலாட்டு பாடி அழகு சேர்க்கும் சிறுமி. இடம் : சேலம் - அயோத்தியாப்பட்டிணம் படம் : எஸ்.குரு பிரசாத்
36 / 53
37 / 53
உடுமலை சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும்... சாத்தான்குளம் தந்தை - மகன் மரணத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும்... திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இன்று (ஜூலை - 7) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : மு.லெட்சுமி அருண்
38 / 53
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு சதுப்பேரியில் உள்ளது. இதில், 20 ஆண்டுகளாக மலைகள் போல் குவித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1.7 லட்சம் டன் அளவு குப்பையைப் பிரித்து மறுசுழற்சி செய்ய... ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரம் - வேலூர் சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்குக்கு கண்டெய்னர் லாரியில் இன்று (ஜூலை - 7) கொண்டுவந்து இறக்கப்பட்டது. இயந்திரங்களைப் பொருத்தும் பணிகள் நாளை (ஜூலை - 8) முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். படம் : வி.எம்.மணிநாதன்
39 / 53
40 / 53
41 / 53
வேலூர் - வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஓர் அறையில் 8 மாதங்களாக பயன்படுத்தாமல் பிளீச்சிங் பவுடர் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் அந்த மூட்டைகள் அனைத்தும் பயனற்று போய்விட்டன. இந்த ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகளை... கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பியிருந்தால்... இந்த கரோனா தொற்றுப் பரவல் நேரத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து தொடர்புடைய அதிகாரிகள் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? படம்: வி.எம்.மணிநாதன்
42 / 53
சென்னை பெருநகர காவல், ஆயுதப் படையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்த... எம்.நாகராஜன் கரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தார். அவரது உருவப்படத்துக்கு தமிழக காவல்துறை தலைமை டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (ஜூலை - 7) காலையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து - கூடுதல் ஆணையர்கள் ஆர்.தினகரன், ஏ.அருண், கண்ணன், பி.சி.தேன்மொழி மற்றும் இணை ஆணையர்கள் ஆர்.சுதாகர், ஏ.ஜி.பாபு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். இடம் : எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் படம் : ம.பிரபு
43 / 53
பணியின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர்... மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இன்று (ஜூலை - 7) சென்னை - சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் - ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பிரேந்திரகுமார் பூங்கொத்து கொடுத்து அவர்களை வரவேற்றார். டிஐஜி அருள்ஜோதி, சென்னை கோட்ட ரயில்வே முதன்மை ஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். படம் : ம.பிரபு
44 / 53
45 / 53
46 / 53
47 / 53
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா மார்க்கெட் வியாபாரிகளுக்கு... தடாகம் சாலையில் உள்ள ஜி. சி .டி கல்லுரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்... இன்று (ஜூலை -7) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. படம் : ஜெ .மனோகரன்
48 / 53
49 / 53
50 / 53
51 / 53
கோவை - காவலர் பயிற்சி மைதானத்தில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் இன்று (ஜூலை - 7) காவல் ஆய்வாளர்களுக்கு கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதைப் பற்றி... அறிவுரைகளை வழங்கி, காக்கி நிறத்தில் ஆன முகக்கவசங்களை வழங்கினார். படம் : ஜெ .மனோகரன்
52 / 53
53 / 53

Recently Added

More From This Category

x