1 / 70
மீண்டும் நெரிசல் ஆரம்பம்:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க சென்னையில் இதுவரையில் அமலில் இருந்த முழு ஊரடங்கு இன்று (6.7.2020) முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து - சென்னை மக்கள் இன்று உற்சாகமாக சாலைகளில் சென்று வந்தனர். சென்னை - விமான நிலையப் பகுதியில் எப்போதும்போல வழக்கமான போக்குவரத்து நெரிசலை காணமுடிந்தது. பின்னணியில் விமானநிலைய மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்தன.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
2 / 70
3 / 70
4 / 70
5 / 70
6 / 70
ஈரானில் மீன்பிடிக்கச் சென்று இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் மீனவர்களை... மத்திய அரசு மீட்டு கொண்டுவரக் கோரி இன்று (6.7.2020) புதுச்சேரி மீனர்கள் விடுதலை வேங்கைகள் என்கிற அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
7 / 70
கொளுத்தும் வெயில் வாட்டி வதைத்தாலும்... அது எங்களுக்கு வேலையையும் ஊதியத்தையும் அளிக்கிறது என்பது போல - இன்று (6.6.2020)விழுப்புரம் மாவட்டம், சின்னபாபுசமுத்திரம் பகுதியில் சுட்டெரிக்கும் மதிய வெயிலில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
8 / 70
9 / 70
புதுச்சேரிவில் - கரோனா தொற்றுப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் - மறைமலையடிகள் சாலையில் இன்று (6.7.2020) போக்குவரத்து சிக்னலில் சமூக இடைவெளியைப் கடைபிடிக்காமல் நின்ற வாகன ஓட்டிகள்.
படம்: எம்.சாம்ராஜ்
10 / 70
11 / 70
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமலில் இருந்த ஊரடங்கு இன்று (6.7.2020) முதல் சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தாம்பரம் - இரும்புலியூர் பகுதியில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு... பொருட்களுடன் திண்டிவனத்துக்கு வாகனத்தில் செல்லும் ஒரு குடும்பம்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
12 / 70
13 / 70
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க.... அமலில் இருக்கும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள்தான் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் - எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற மன நிலையோடு இன்று (6.7.2020) சென்னை - திருமங்களம் மேம்பாலத்த்தில் அதிக அளவில் வாகனங்கள் தென்பட்டன.
படங்கள் : ம.பிரபு
14 / 70
15 / 70
சென்னை - பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள்... சென்றுவர ரயில் போக்குவரத்து மற்றும் பேருந்து வசதிகள் இல்லாததால் - அந்தந்த நிறுவனங்களே வாகன ஏற்பாடுகளை செய்துள்ளன.
படம் : எம்.முத்து கணேஷ்
16 / 70
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க.... அமலில் இருக்கும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள்தான் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் - எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற மன நிலையோடு இன்று (6.7.2020) சென்னை - அம்பத்தூர் - முகப்பேர் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் தென்பட்டன.
படங்கள் : ம.பிரபு
17 / 70
18 / 70
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க.... அமலில் இருக்கும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள்தான் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் - எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற மன நிலையோடு இன்று (6.7.2020) சென்னை - கோடம்பாக்கம் மேம்பாலம் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் தென்பட்டன.
படங்கள் : ம.பிரபு
19 / 70
20 / 70
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க.... அமலில் இருக்கும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள்தான் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் - எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற மன நிலையோடு இன்று (6.7.2020) சென்னை சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருந்து. இந்நிலையில் இன்றுமுதல் சென்னை - தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் வர தொடங்கியுள்ளனர்.
படங்கள் : ம.பிரபு
21 / 70
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தபோது...
சென்னை சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிந்தோரிடம் இருந்து வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அப்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை
இன்று (6.7.2020) பாண்டிபஜாரில் போக்குவரத்து போலீஸார் உரியவர்களிடம் ஒப்படைத்தபோது... அதனை நீண்ட வரிசையில் நின்று வாகன உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
படங்கள் : ம.பிரபு
22 / 70
23 / 70
24 / 70
சாத்தான்குளத்தில் கடந்த வாரம் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரு வியாபாரிகள் காவலில் இருந்தபோது உயிரிழந்ததற்கு நீதி கேட்டு... இன்று (6.7.2020) சென்னை - உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படங்கள் : ம.பிரபு
25 / 70
26 / 70
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க.... அமலில் இருக்கும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள்தான் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் - எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற மன நிலையோடு பொதுமக்கள் வாகங்களில் வலம்வர ஆரம்பித்துவிட்டனர்.
இன்று (6.7.2020) சென்னை - மகாலிங்கபுரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் திரண்டிருந்த வாகன ஓட்டிகள்.
படங்கள் : ம.பிரபு
27 / 70
28 / 70
வேலூர் - பெண்லேன்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (ஜூலை - 6) நடந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. அதில் ஏராளமான ஓட்டுநர்களும், மருத்துவ உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.
படங்கள் : வி.எம்.மணிநாதன்
29 / 70
30 / 70
தமிழகத்தின் நீண்ட நாள் கனவாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரை தோப்பூர் பகுதியில்... இன்று (ஜூலை - 6) வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் , சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் - மாவட்ட ஆட்சியர் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
31 / 70
மதுரையில் - கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால்... மதுரை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் - ’கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?’ என்ற விவரத்தை கேட்டு... மதுரை மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன், முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் திமுக சார்பில் இன்று (6.7.2020) மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
32 / 70
சாத்தான்குளத்தில் காவலில் இருந்தபோது உயிரிழந்த தந்தை - மகன் வழக்கில் தொடர்புடைய காவலர்களுக்கு ஆதரவாக செயல்பட்டோரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்; அறந்தாங்கி - சிறுமி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும்.... திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்பு இன்று (6.7.2020) வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : லெட்சுமிஅருண்
33 / 70
வேலுர் - கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் இன்று (ஜூலை - 6) அனைத்து வணிகர் சங்கப் பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் ஞானவேலு தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது, இதில் - வேலூரில் லாங்கு பஜார், மெயின் பஜார், பர்மா பஜார், நியுசிட்டிங் பஜார், அண்ணா பஜார், நேதாஜி மார்க்கெட் ஆகியவற்றை திறக்க அனுமதிக்கக் கோரி.... கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
படம் : வி.எம்.மணிநாதன்
34 / 70
35 / 70
36 / 70
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் விவசாயப் பணிகளும் தொடங்கிவிட்டன. அகண்ட காவிரியில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரை... கல்லணையில் இருந்து (இடமிருந்து) கல்லணை கால்வாய், வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் என பல பகுதிகளாக பாசனத்துக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் கல்லணையில் சிறிது தேங்கிய பின்னர் மதகு வழியாக சீறிப் பாய்ந்துச் செல்லும் அழகே அழகு!
(ட்ரோன் உதவியுடன் இன்று (6.7.2020) எடுத்த படம்)
படம்: ஜி.ஞானவேல்முருகன்
37 / 70
கல்லணையில் இருந்து மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் சீறிப் பாய்ந்து செல்லும் தண்ணீர். அணையின் மேல் பகுதியில் கடல் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
(ட்ரோன் உதவியுடன் இன்று (6.7.2020) எடுத்த படம்)
படம்: ஜி.ஞானவேல்முருகன்
38 / 70
39 / 70
40 / 70
திண்டுக்கல் புறவழிச்சாலையின் ஓரங்களில் தொடர்ந்து தோல் தொழிற்சாலையின் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் காற்று மாசுபட்டு, இப்பகுதியில் வசிப்போர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
படம் : பு.க.பிரவீன்
41 / 70
42 / 70
43 / 70
44 / 70
ராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம் வட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஸ்ரீ தனலட்சுமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர்... அரசு சேலை நெசவு செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் - 70 தறி வைத்துள்ள தங்களுக்கு அதிகாரிகள் வருடத்துக்கு போதுமான அளவு உற்பத்தி திட்டத்தை கொடுக்காததாவும், மாறாக குறைந்த தறியை வைத்துள்ள நபர்களுக்கு அதிகரிகள் அதிகளவு வழங்கி... ஒருதலைபட்சமாக செயல்படுவதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாகவும்...
ஸ்ரீ தனலட்சுமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் - இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் தீர்வு ஏற்படவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இனிவரும் காலத்தில் நரசிங்கபுரம் ஸ்ரீ தனலட்சுமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் இயங்கும் தறிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உற்பத்தி திட்டத்தை உயர்த்தி வழங்கக் கோரி... காட்பாடியில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (6.7.2020) மனு அளிக்க வந்த கைத்தறி நெசவாளர்கள்.
தகவல் + படம் : வி.எம்.மணிநாதன்
45 / 70
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த
காலத்தில்... உரிய ஆவனங்கள் இன்றி சாலைகளில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். சில கட்டுப்பாடுகளுடன் இன்று (6.7.2020) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்... சென்னை - தாம்பரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரவர் பெயருடன் இணைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் சாவிகள் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்தன. அதனை வாகன உரிமையாளர்கள் தேடி எடுத்துச் சென்றனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
46 / 70
47 / 70
48 / 70
49 / 70
50 / 70
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த
காலத்தில்... உரிய ஆவனங்கள் இன்றி சாலைகளில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். சில கட்டுப்பாடுகளுடன் இன்று (6.7.2020) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்... சென்னை - தாம்பரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரவர் பெயருடன் இணைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் சாவிகள் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்தன. அதனை வாகன உரிமையாளர்கள் தேடி எடுத்துச் சென்றனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
51 / 70
52 / 70
53 / 70
இன்று (6.7.2020) முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னை - தாம்பரம் சண்முகம் சாலையில்... சில கடைகள் திறந்திருந்தன. சில கடைகள் மூடியும் காணப்பட்டன. பொதுவாக இப்பகுதியில் இன்று மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
54 / 70
55 / 70
56 / 70
கொடைக்கானல் மண்ணமணூரைச் சேர்ந்த சுமார் 12 குடும்பங்களைச் சேர்ந்தோர்... திருநெல்வேலி - மேலப்பாளையத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.
தற்போது - கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளால் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி... உடனே உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி... திருநெல்வேலி - ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (6.7.2020) மனு அளிக்க வந்தனர்.
படம்: மு .லெட்சுமி அருண்
57 / 70
நீண்ட நாளுக்குப் பிறகு... இன்று (6.7.2020) முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்... சென்னையைத் தவிர்த்து அதைச் சுற்றியுள்ள மாவட்டப் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அக்கடைகளில் மது அருந்துவோர் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று... மது வாங்கிச் சென்றனர். ஒருவருக்கு இவ்வளவுதான் என்று எந்த அளவும் இன்றி மது விற்கப்பட்டதால்... பெட்டியில், பெரிய பைகளில், சாக்குகளில் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
58 / 70
59 / 70
60 / 70
61 / 70
62 / 70
கரோனா தொற்று வேகமாக பரவுவதைத் தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கக் கோரி... கோவை ஆட்சியரிடம் - கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் மனு அளிக்க இன்று (6.7.2020) வந்தனர்.
படம் ; ஜெ .மனோகரன்
63 / 70
கோவை - ஈரோடு மாவட்ட எல்லையான அன்னூரை அடுத்த செல்லப்பாளையம் சோதனைச்சாவடியில்... இன்று (6.7.2020) வாகனங்களில் வருவோரை அரசு அலுவலர்கள், போலீஸார் கண்காணித்து உடல் வெப்பப் பரிசோதனை செய்து, அவர்களைப் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்ட பிறகே மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர்.
64 / 70
65 / 70
கோவை - ஈரோடு மாவட்ட எல்லையான அன்னூரை அடுத்த செல்லப்பாளையம் சோதனைச் சாவடியில் - அரசு அலுவலர்கள், போலீஸாருடன் இணைந்து இன்று (6.7.2020) ’டி.என்- 2 பேட்டரி பட்டாலியன்’ தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ - மாணவியரும் சேவை செய்தனர். அந்த மாணவ - மாணவியரை பாராட்டும் வகையில் - கோவை மண்டலா என் சி சி குரூப் கமாண்டர் கர்னல் எல் சி எஸ் நாயுடு பழங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தினார். உடன் - நோடல் கர்னல் கிரிஷ் பார்த்தன்.
படம் : ஜெ .மனோகரன்
66 / 70
கோயம்புத்தூர் சரக அலுவலகத்தில் இன்று (6.7.2020) காவல்துறை துணைத் தலைவராக... நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றுக் கொண்டார்
படம் : ஜெ .மனோகரன்
67 / 70
கோயம்புத்தூர் சரக அலுவலகத்தில் இன்று (6.7.2020) காவல்துறை துணைத் தலைவராக... பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரன் நாயர்,
அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
படம் ; ஜெ .மனோகரன்
68 / 70
டாஸ்மாக் மதுக்கடைகளில் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்... டாஸ்மாக் நிர்வாகத்தினரை கண்டித்தும்... கரோனாவை எதிர்கொள்ள உரிய உபகரணங்கள் வழங்கக் கோரியும்... கோவை டாஸ்மாக் முது நிலை மண்டல மேலாளறை கூட்டுக்குழு நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.
படம் : ஜெ .மனோகரன்
69 / 70
கரேனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் பொறுமையாக கொள்ளையடித்த கொள்ளையர்கள்.
புதுச்சேரி - கிருஷ்ணாநகர் 12-வது குறுக்குத் தெருவில் தையல் கலைஞர் வீர செல்வம் வீட்டு மாடியில் வசிப்போருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து... பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அந்த வீட்டைச் சுற்றியுள்ள சாலையை சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இரும்பு தகடு வைத்து மூடினர். இந்நிலையில் - கீழ்வீட்டில் வசித்த வீரசெல்வம்... தனது வீட்டை பூட்டிவிட்டு லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இச்சூழலை சாதகமான பயன்படுத்திய மர்ம ஆசாமிகள்... அந்த வீட்டு கதவை உடைத்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 4 பவுன்நகையை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி போலீஸார்.. மேலும் விசாரித்து வருகின்றனர்.
தகவல் + படம்: எம்.சாம்ராஜ்
70 / 70