Published on : 04 Jul 2020 15:14 pm

பேசும் படங்கள்... (04.07.2020)

Published on : 04 Jul 2020 15:14 pm

1 / 51
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி... அதன் விற்பனை களைகட்டும். தற்போது கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் - பலாப்பழ விற்பனை மிகவும் சரிந்துள்ளது. சேலம் - சத்திரம் பகுதியில் வாங்குவோரை... எதிர்பார்த்துக் காத்திருக்கும் வியாபாரி. படம் : எஸ். குருபிரசாத்
2 / 51
3 / 51
தென்தமிழகத்தின் நீண்டநாள் கனவாக இருப்ப மதுரை - தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. இதன் ஆரம்ப நிலைக்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று (4.7.2020) நான்கு வழிச் சாலையில் இருந்து மருத்துவமனை அமைய உள்ள இடம் வரை... சலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தகவல் + படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 51
5 / 51
6 / 51
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்.... மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லைகளுக்கு இடையே... அழகாபுரி போலீஸ் சோதனைச் சாவடியில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இன்று (4.7.2020) இ- பாஸ் இல்லாமல் அனுமதியின்றி நடந்து செல்வோரை தடுத்து நிறுத்தி... திருப்பி அனுப்பி வைத்தனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 51
8 / 51
மதுரையில் - கரோனா தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதால்... இன்று (4.7.2020) நெல் பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 51
10 / 51
வேலூர் மாவட்டத்தில் - கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக... பொது மக்கள் மத்தியில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி... இன்று (4.7.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர். படம் : வி.எம்.மணிநாதன்
11 / 51
12 / 51
வேலூர் மாவட்டத்தில் - கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக... பொதுமக்கள் மத்தியில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி... திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் இன்று (4.7.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை சந்தித்து... கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ... அதற்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்; அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதாக புகார்கள் வருகிறது அதை சரி செய்ய வேண்டும்; கரோனா பரவலை தடுக்கவும், கரோனா நோயாளிகளுக்கு போதிய உதவியை செய்யவும் எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம்; இம்மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; கரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைகளில் சரியாக வழிநடத்த வேண்டும்’’ என்றனர். தகவல் + படம் : வி.எம்.மணிநாதன்.
13 / 51
14 / 51
வேலூர் மாநகரில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால்... மாநகராட்சி நிர்வாகம் இந்தத் தொற்று பரவலைத் தடுக்க - மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் தலா 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. இதில் - மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தொற்று பாதித்த பகுதிகளுக்குச் சென்று... கிருமிநாசினி மருந்து தெளித்து, வீடு வீடாக கபசுரக் குடிநீர் வழங்கி... நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதைத் தொடர்ந்து - அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே காய்ச்சல் பரிசோதனை செய்தும் வருகின்றனர். தகவல் + படங்கள் : வி.எம்.மணிநாதன்
15 / 51
16 / 51
17 / 51
18 / 51
19 / 51
திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னொளி கடற்கரை கைப்பந்து மைதானத்தை... இன்று (4.7.2020) சுற்றுலாத்துறை அமைச்சர் என்.நடராஜன் திறந்து வைத்தார். உடன் - பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் துறை தலைவர் அமல்ராஜ், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
20 / 51
21 / 51
திருச்சி - ரேஸ்கோர்ஸ் சாலை அண்ணா விளையாட்டரங்கம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானவை... இன்று (4.7.2020)சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் திறந்து வைத்தார் . உடன் - பிற்படுத்தபட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் துறை தலைவர் அமல்ராஜ், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
22 / 51
23 / 51
தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால்... திருச்சி - காந்தி மார்க்கெட் மீன் மார்க்கெட்டில்... இன்று (4.7.2020) மீன் வாங்க திரண்டிருந்த பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
24 / 51
25 / 51
இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில்... சீன வீரர்களால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து... இன்று (4.7.2020) மதுரை - பைபாஸ் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ’சீன உணவு வகைகள் இங்கு விற்பனைக்கு இல்லை... ‘ என்று போர்டு வைத்துள்ளனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
26 / 51
ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கும் இடம்பெயரும் பறவைகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் திண்டுக்கல் - தேனி ரோடு... பகுதியில் தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரைக் குடிக்க வரும் பறவைகள். படங்கள் : பு.க.பிரவீன்
27 / 51
28 / 51
29 / 51
30 / 51
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்... திருநெல்வேலி - பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமிருந்ததையொட்டி... அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மார்க்கெட் பகுதி வளாகம் முழுவதும் தடுப்புகள் போடப்பட்டு அடைக்கப்பட்டது . படங்கள் : மு.லெட்சுமி அருண்
31 / 51
திருநெல்வேலி - மேலப்பாளையம் எம்எம்சி காலனியில் இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் பாதிக்கப்பட்டதாகக் கூறி... எம்எம்சி காலனி பகுதியில் வசிப்போர் - தங்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி... இன்று (4.7.2020) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு. லெட்சுமி அருண்
32 / 51
தூத்துக்குடி மாவட்டம் - கீழச்செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு... திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்... செய்தி மக்கள்தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர்... தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவை வழங்கினர். உடன் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள். படங்கள் : மு.லெட்சுமி அருண்
33 / 51
34 / 51
35 / 51
இந்தப் படத்தைப் பார்த்து.... இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள ராணுவ முகாம் என்று நினைக்க வேண்டாம். பேக் வாட்டர் என்றழைக்கப்படும் பழவேற்காடு ஏரிப் பகுதிதான் இது. அழகிய தீவு போன்று காட்சியளிக்கும் இந்த இடம்.... சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால்... படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளதையும்... கடலுக்கு படகுகள் செல்லும் நீர்வழித் தடங்களையும் படத்தில் காணலாம். (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்) படம்: ம.பிரபு
36 / 51
37 / 51
கோவையில் கரோனாதொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்... மாநகர காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு... பூ மார்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது. படம் ; ஜெ . மனோகரன்
38 / 51
39 / 51
கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக... இன்று (4.7.2020) கோவை - உப்பிலிபாளையம் பகுதிகளிள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத் துறையினர் படம் : ஜெ .மனோகரன்
40 / 51
41 / 51
42 / 51
43 / 51
44 / 51
கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக அமலில் இருக்கும் ஊரடங்கில்... பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால்... இன்று (4.7.2020) கோவை - ஆர்எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதி டாஸ்மாக் மதுக்கடையில்... ம து பாட்டில்களை அள்ளிச் செல்லும் மூதாட்டி . படம்; ஜெ .மனோகரன்
45 / 51
46 / 51
47 / 51
48 / 51
கோவை - பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தேரை பாதுகாக்க அதை தகர ஷீட்டுகள் கொண்டு மூடி வைத்துள்ளனர். அந்த ஷீட்டுகள் காற்றில் அடிக்கடி பறந்து விடுவதால்... நிரந்தரமாக இரும்பு தகடுகளால் மூடி பாதுக்காக்க... அதற்கான வேலைகள் நடை பெற்றுவருகிறது. படம் : ஜெ .மனோகரன்
49 / 51
50 / 51
தமிழகத்தில் வருவாய் குறைந்த கிராம கோயில்களை சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து... வேலூர் மாவட்டம் - காட்பாடி அடுத்த கல்புதூரில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
51 / 51

Recently Added

More From This Category

x