1 / 44
ஸ்ரீரங்கம் - ரெங்கநாதர் கோயிலில் ஆனி மாதம் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் நிகழ்வின்போது... ஆண்டுதோறும் காவிரிஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து புனிதநீர் எடுத்து - அதை கோயில் யானை மீது கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது - கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால்... கோயில் யானை மீது புனித நீர் கொண்டு வரும்
நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று (3.7.2020) பட்டாச்சாரியார்கள் வெள்ளிக் குடங்களில் எடுத்து வந்த புனித நீர்... கோயில் வளாகம் வந்தடைந்தவுடன் தங்க குடத்தில் மாற்றப்பட்டு, அங்கு தயாராக இருந்த யானை மீது வைத்து மேளதாளத்துடன் ஸ்ரீ ரெங்கநாதர் சந்நிதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
2 / 44
ஸ்ரீரங்கம் - ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் நிகழ்வுக்காக இன்று (3.7.2020) காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து... புனிதநீர் எடுத்துவரப்பட்டது. கரோனா தொற்று பரவலை தடுப்பற்காக - முகக்கவசம் அணிந்து... சமூக இடைவெளியுடன்... வெள்ளிக் குடங்களில் புனிதநீரை சுமந்து வந்த கோயில் பட்டாச்சாரியர்கள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
3 / 44
4 / 44
மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், 15 அம்ச கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும்... திருச்சி - ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (3.7.2020) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
5 / 44
தூத்துக்குடி மாவட்டம் - கீழச்செக்காரக்குடியில்... கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று (3.7.2020) திருநெல்வேலி - அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டன . இந்நிலையில் - மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
படங்கள் : மு.லெட்சுமி அருண்
6 / 44
7 / 44
8 / 44
"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்...
இஜ்ஜெகத்தினை அழித்திடுவோம் " என்றார் பாரதி. கரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருக்கும் இச்சமயத்தில்...
திருநெல்வேலி ரயில்நிலையம் முன்பு ஆதரவற்ற நாய்களுக்கு வைத்த உணவை உண்கிறார் இந்த ஆதரவற்ற இளைஞர்.
கரோனா தொற்று வீரியத்துடன் பெருகி பரவ ஆரம்பித்த ஆரம்ப காலங்களில்... திருநெல்வேலி மாநகராட்சியும் தன்னார்வலர்களும் இப்பகுதியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் - கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக... ஊரடங்கு நீண்டுகொண்டே செல்வதால் ஆதரவற்றோருக்கு உணவு அளிப்பதை பலர் குறைத்துக் கொண்டனர்.
இதனால் - பல இடங்களில் ஆதரவற்றோரின் உணவுத் தேவை என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
’’இந்த இக்கட்டான துயரச் சூழலில் ... இலவச உணவு பொட்டலங்களை
தொடர்ந்து
வழங்கி... வீடு வாசலற்ற ஆதரவற்றோரை மாநகராட்சி நிர்வாகம்
பாதுக்காக்க முன் வர வேண்டும்’’ என இப்பகுதி
சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தகவல் +
படங்கள்: மு.லெட்சுமி அருண்
9 / 44
10 / 44
11 / 44
12 / 44
மதுரை - எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல் வணிக வளாகத்தில்... விவசாயிகளிடம் இருந்து... வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை வணிக வளாகத்தில் காய வைக்கும் பணியில் இன்று (3.7.2020) ஊழியர்கள் ஈடுபட்டனர்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 44
தமிழ்நாட்டில் - அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளரிடம் இருந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி ரயில் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கக் கூடாது; மேலும் - சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி -
தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக... மதுரை - தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் முன்பு இன்று (3.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
14 / 44
மத்திய - மாநில அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும்... பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்... சிஐடியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (3.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : வி.எம்.மணிநாதன்
15 / 44
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு .... இன்று (3.7.2020) தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : பு.க.பிரவீன்
16 / 44
தொழிலாளர் - சட்டத்தை திருத்தியமைத்த... மத்திய அரசை கண்டித்து... திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் இன்று (3.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : பு.க.பிரவீன்
17 / 44
18 / 44
தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும்; பெட்ரோல், - டீசல் விலை உயர்வை கண்டித்தும்; அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரே... சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் தொழிற்சங்கத்தினர் இன்று (3.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : வி.எம்.மணிநாதன்
19 / 44
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்துவதை திரும்பப் பெற வேண்டும்... புதிய வேலை நியமன தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி - வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று (3.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : வி.எம்.மணிநாதன்
20 / 44
21 / 44
சென்னை - பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில்... எப்போதும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்வது வழக்கம். தற்போது அந்நிலப் பகுதியில்... தண்ணீர் வற்றி தரைகள் ஈரப்பதமின்றி இருந்தாலும்... இரைத் தேடி ஒரு சில பறவைகள் தனது குஞ்சுகளுடன் வந்து செல்கின்றன.
படங்கள் : ம.பிரபு
22 / 44
23 / 44
வேலூர் மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கோரியும்... முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ’கரோனா’ நிவாரண நிதி உதவி வழங்கக் கோரியும்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (3.7.2020) முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
24 / 44
கரோனா அறிகுறிகளுடன் இருப்போருக்கு சிகிச்சை வழங்குவதற்காக... கோவை - கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தயாராகிவரும்... 400 படுக்கை வசதி கொண்ட அரங்கத்தை இன்று (3.7.2020) அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை ஆட்சியர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
படம்:ஜெ.மனோகரன்.
25 / 44
26 / 44
27 / 44
கரோனா தொற்று பரவலை தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக மலேசியா அருகே உள்ள புருனே தீவில் சிக்கித் தவித்த... 139 இந்தியர்கள்... இன்று (3.7.2020) தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் மூலம் கோவை விமானம் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர் .
படம் : ஜெ .மனோகரன்
28 / 44
29 / 44
30 / 44
31 / 44
கோவை - ’லட்சுமி மில்ஸ்’ சிக்னல் பகுதியில்... இன்று (3.7.2020) உடையில் பொருத்தக் கூடிய கேமராவுடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள கோவை மாநகர போக்குவரத்துக் காவலர்.
படம் : ஜெ.மனோகரன்.
32 / 44
33 / 44
சென்னை - சிட்லபாக்கத்தில் உள்ள புனித தோமையர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு... கரொனா தொற்று ஏற்பட்டதையொட்டி அந்த அலுவலகம் இன்று (3.7.2020) முதல் மூடப்பட்டது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
34 / 44
35 / 44
கரோனா தொற்றுப் பரவலை கட்டுபடுத்த அமலில் இருக்கும் ஊரடங்கில்... சில கட்டுப்பாடுகளுடன்.... மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்க... விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்.. வழக்கம் போல் இன்று (3.7.2020) எந்தக் கட்டுப்பாடுமின்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திருவல்லிக்கேணி - ஐஸ் அவுஸ் அருகில் உள்ள மீர்சாகிப் பேட்டை மார்க்கெட்டில் கூடியிருந்த பொதுமக்கள்.
படம் : ம.பிரபு
36 / 44
சென்னையில் - இன்று (3.7.2020) மாலைபொழுது... அந்தி சாயும்வேளையில் - வானில் ஒரு பக்கத்தில் சிறு சிறு கருமேகங்கள் திரள... அருகிலேயே வானவில் தோன்றிய அழகிய காட்சி;
படங்கள்: ம.பிரபு
37 / 44
38 / 44
39 / 44
வேலூர் நகரத்தில் - இன்று (ஜூலை - 3) மாலையில் ஒருமணி நேரத்துக்கு மேலாக... விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.
இடம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்.
படம் : வி.எம்.மணிநாதன்
40 / 44
41 / 44
42 / 44
43 / 44
44 / 44