1 / 55
தமிழகத்தில் அமலில் இருந்துவரும் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து... சேலம் மாநகரில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணிகள்... மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (1.7.2020) கோயில் கர்ப்பகிரக தூண்களில் சுவாமியின் உருவங்களை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பக் கலைஞர்.
படங்கள் : எஸ்.குருபிரசாத்
2 / 55
3 / 55
4 / 55
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நீட்டிப்பில்... இன்று (ஜூலை - 1) முதல் ஜூலை 15-ம் தேதி வரை... பொது போக்குவரத்துக்காக - பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து - திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுற்றியுள்ள சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
5 / 55
6 / 55
7 / 55
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நீட்டிப்பில்... இன்று (ஜூலை - 1) முதல் ஜூலை 15-ம் தேதி வரை... பொது போக்குவரத்துக்காக - பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள், பேருந்துகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட திருச்சி - மத்திய பேருந்து நிலையத்தின் உட்புறம்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
8 / 55
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக...
திருச்சி - மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால்... அங்கு வேலை பார்த்து வந்தவர்களில் சிலர் ஓய்வெடுக்கின்றனர்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
9 / 55
கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... அமலில் உள்ள ஊரடங்கு நீட்டிப்பில்... (இன்று) ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி - தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடி சோதனைச் சாவடியில் இருசக்கர வாகனங்களில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வருவோரிடம் இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்த பின்னரே... போலீஸார் மேலும் செல்ல அனுமதித்தனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
10 / 55
11 / 55
12 / 55
13 / 55
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... திருச்சி மதுரம் பள்ளி மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (1.7.2020) இங்குள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நேற்று மாநகராட்சி சார்பில்... வெப்ப அளவீட்டு கருவி மூலம் மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
14 / 55
15 / 55
கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக... தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடும் இன்று முதல் (ஜூலை -1) ஜூலை - 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... வேலூர் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து... வேலூர் பழைய பேருந்து நிலையம் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
16 / 55
17 / 55
வேலூர் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து...
- ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்ததாக அதில் பயணம் செய்த பொதுமக்கள் புகார் கூறினர்.
படம் : வி.எம்.மணிநாதன்
18 / 55
கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக... தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடும் இன்று முதல் (ஜூலை -1) ஜூலை - 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... வேலூர் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து... பேருந்துகள் இல்லாமல் வேலூர் - புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்
19 / 55
20 / 55
கரோனா பரவலைத் தடுக்க.... அமலில் இருக்கும்
முழு ஊரடங்கால் நாடே முடங்கியுள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்... இன்று (1.7.2020) செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில் பாதையில்... (புளியம்பாக்கம் பகுதியில்) கால்நடையாகவே பயணிக்கும் உள்ளூர் பெண்கள்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
21 / 55
22 / 55
கரோனா தொற்று பரவல் காரணமாக சில தளர்வுகளோடும் 6-ம் கட்ட ஊரடங்கை... இன்று (1.7.2020) முதல்
ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் வேலூர் - கிரீன் சர்க்கிள் பகுதியில் இன்று பகல் முழுவதும் வாகனப் போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது.
படம் : வி.எம்.மணிநாதன்
23 / 55
கரோனா தொற்று பரவல் காரணமாக 6-ம் கட்ட ஊரடங்கு இன்று (1.7.2020) முதல் நீடிக்கப்பட்டுள்ளதையொட்டி... வேலூர் - காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான் பேட்டை பகுதி தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடி வாகன போக்குவரத்து இன்றி மூடப்பட்டது.
இந்நிலையில் - இ-பாஸ் பெற்று மருத்துவ சிகிச்சைக்காக வரும் வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் ... கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட பிறகும், ஓட்டுநர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகும் தமிழக எல்லைக்குள் போலீஸார் அனுமதித்து வருகின்றனர்.
படங்கள் : வி.எம்.மணிநாதன்
24 / 55
25 / 55
26 / 55
27 / 55
கரோனா தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கின் நீட்டிப்பாக...
இன்று (1.7.2020) முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என்ற அரசு அறிவிப்பை அடுத்து, திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்துக் கழகம் டெப்போவில் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டுள்ள நகர மற்றும் வெளியூர் பேருந்துகள்.
படங்கள் : மு.லெட்சுமி அருண்
28 / 55
29 / 55
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கின்போது... சென்னை சாலைகளில்... தேவையின்றி சுற்றித் திரியும் இளைஞர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் - இன்று (1.7.2020) தாம்பரம் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 500-க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸார்... அந்த வாகனங்களை தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
30 / 55
31 / 55
32 / 55
33 / 55
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால்...
திருநெல்வேலி மாவட்டத்தில் - நகர மற்றும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்படாதாததால் வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் புறநகர் சாலை இன்று (1.7.2020) வெறிச்சோடிக் காணப்படும் காட்சி.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
34 / 55
தமிழகத்தில் - இன்று (1.7.2020) முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என்கிற அரசு அறிவிப்பை அடுத்து... கோவை - உப்பிலிபாளையம் கிளை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அணிவகுத்து நிற்கும் நகர மற்றும் வெளியூர் பேருந்துகள்.
படம்: ஜெ .மனோகரன்
35 / 55
தமிழகத்தில் - இன்று (1.7.2020) முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என்கிற அரசு அறிவிப்பை அடுத்து...
கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்கள்.
படம் : ஜெ .மனோகரன்
36 / 55
தமிழகத்தில் - இன்று (1.7.2020) முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என்கிற அரசு அறிவிப்பை அடுத்து...
பேருந்துகள், பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட கோவை நகரப் பேருந்து நிலைய உட்புறம்.
படம் : ஜெ .மனோகரன்
37 / 55
38 / 55
தமிழகத்தில் - இன்று (1.7.2020) முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என்கிற அரசு அறிவிப்பை அடுத்து...
பேருந்துகள், பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட கோவை - புறநகரப் பேருந்து நிலைய உட்புறம்.
படம் : ஜெ .மனோகரன்
39 / 55
40 / 55
தமிழகத்தில் - இன்று (1.7.2020) முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படாது என்கிற அரசு அறிவிப்பை அடுத்து...
வெறிச்சோடிக் காணப்பட்ட கோவை - காந்திபுரம் சிக்னல் .
படம்: ஜெ .மனோகரன்
41 / 55
பேரிடர் காலமான இந்த கரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில்...
நேரடி விற்பனை அனைத்தும் முடங்கியுள்ளதால் - கோவை ‘பூம்புகார்’ அலுவலகத்தில்... பூம்புகாரின் வலைதளங்கள் மூலம் ஆன்-லைன் வர்த்தகப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்.
படம்: ஜெ .மனோகரன்
42 / 55
பேரிடர் காலமான இந்த கரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில்...
நேரடி விற்பனை அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் ‘பூம்புகார்’ அலுவலகத்தில்... காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பூம்புகாரின் கைவினைக் கண்காட்சிப் பொருட்கள்.
படம்: ஜெ .மனோகரன்
43 / 55
கரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருந்து வருகிற நிலையில்... இன்று (1.7.2020) பள்ளிக்கரனை மேம்பாலம் நான்குமுனை சந்திப்பு 200 அடி ரேடியல் சாலை , கிழக்கு கடற்கரை செல்லும் சாலை, வேளச்சேரி, பள்ளிக்கரனை, சந்திப்பு காமாட்சி மருந்துவமனை அருகே வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட சாலை. (ட்ரோன் மூலம் எடுக்கப்ப்பட்ட புகைப்படம்)
படம் : ம.பிரபு
44 / 55
45 / 55
46 / 55
கரோனா பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட 6-வது கட்ட ஊரடங்கு காரணமாக - இன்று (1.7.2020) முதல் ஜூலை 15-ம் தேதி வரையில் தமிழகத்தில் பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால்... பேருந்துகள் மற்றும் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது - திண்டுக்கல் பேருந்து நிலையம்.
படம் : பு.க.பிரவீன்
47 / 55
48 / 55
திண்டுக்கல் மாவட்டத்தில் - தென்மேற்குப் பருவ மழை... சாரலுடன் தொடங்கியுள்ள நிலையில்... இன்று (1.7.2020) திண்டுக்கல் புறவழிச் சாலைப் பகுதியில் பெய்த மழையில்.. நனைந்தபடியே வாகனத்தில் செல்கிறார் பெயர் தெரியாத நபர்.
படம்: பு.க.பிரவீன்
49 / 55
50 / 55
51 / 55
சர்வதேச மருத்துவர் தினத்தையொட்டி.... இன்று (1. 7. 2020) சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள - ஒமந்தூரார் - அரசு மருத்துவமனை வளாகத்தில் ’’கரோனா தொற்றை வெல்வோம்’... ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவோம்’’ என்று மருத்துவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
படங்கள் : ம.பிரபு
52 / 55
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே - இன்று (1.7.2020)
மாலை வேளையில் மலைகள் மீது மஞ்சள் வெயில் படர... வானில் சூழ்ந்த கருமேகக் கூட்டத்தின் கண்ணைக் கவரும் காட்சி!
படம்: வி.எம்.மணிநாதன்
53 / 55
54 / 55
55 / 55