1 / 49
வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்புப் பணிக்காக... இன்று (30.6.2020) சென்னையில் இருந்து அதிநவீன கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது . இந்த இயந்திரம் திராட்சைப் பழத் தோட்டத்தில் மருந்து தெளிக்க பயன்படுத்துவது என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்: வி.எம்.மணிநாதன்
2 / 49
3 / 49
4 / 49
கரோனா தொற்றுப் பரவலால்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துயரத்தை அனுபவித்து வருகின்றனர். திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு கிராமத்தில் எப்போதும் ஏராளமான எலுமிச்சம் பழங்கள் விளையும் காலம் இது. ஆனால், இப்போது நாடெங்கும் அமலில் இருக்கும் -
ஊரடங்கு காரணத்தால் விளைந்த எலுமிச்சம் பழங்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையும்... போதிய விலை கிடைக்காத நிலையும் இருப்பதால்... இப்பகுதி விவசாயிகள் எலுமிச்சம் பழங்களைப் பறிக்காமலே செடியிலேயே விட்டுவிட... அவை உதிர்ந்து தோட்டத்திலேயே வீணாகிறது.
தகவல் + படம் : பு.க.பிரவீன்
5 / 49
6 / 49
7 / 49
8 / 49
சேலம் மாவட்டத்தில் - உத்தமசோழபுரம், அயோத்தியாப்பட்டிணம், ஓமலூர்... போன்ற பகுதிகளில் தென்னை ஓலைக் கீற்றுகள் பின்னும் தொழிலில் ஏராளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக கோடை காலத்தில் தென்னை ஓலைக் கீற்றுகள் விற்பனை அதிகரித்து இருக்கும்.
தற்போது ஊரடங்கு காரணமாக கீற்று விற்பனை முற்றிலுமாக சரிந்துள்ள நிலையில் - சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சேலம் - அயோத்தியாப்பட்டினத்தில் மீண்டும் நம்பிக்கையை இழக்காமல் தென்னை ஓலைக் கீற்றுகளைப் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
படங்கள் : எஸ்.குரு பிரசாத்
9 / 49
10 / 49
11 / 49
12 / 49
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக... தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் காவலர் மகாராஜன் ஆகியோர் இன்று (30.6.2020) மதுரை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 49
14 / 49
15 / 49
தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை பதிவு செய்யக் கோரி... இன்று (30.6.2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
16 / 49
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (30.6.2020) ’ஜூம்’ செயலி மூலம் புகார் அளிப்பவரிடம், அந்தப் புகார் பற்றி விசாரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்.
படம் : ஜெ.மனோகரன்
17 / 49
18 / 49
கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று (30.6.2020) ஊழியர்கள் மட்டும் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
படம் : ஜெ.மனோகரன்
19 / 49
கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனுக்களை ஒப்படைக்கும் அறைக்கு செல்வதற்காக... இன்று (30.6.2020) அமைக்கப்பட்ட பாதை மற்றும் தனி அறை.
படம் : ஜெ.மனோகரன்
20 / 49
இன்று (30.6.2020) நீர் நிரம்பி கண்கொள்ளாக் கட்சியாக காணப்பட்ட - கோவை உக்கடம் பெரியகுளம் .
படம் .ஜெ மனோகரன்
21 / 49
கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்... ஆபத்தை உணராமல் கிரேனின் கீழே செல்லும் வாகன ஓட்டிகள்.
படம்: ஜெ .மனோகரன்
22 / 49
23 / 49
24 / 49
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இத்தொற்றுப் பரவலைக்
கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சேலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு அருகில் உள்ள மக்களுக்கு கரோனா வைரஸ் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (30.06.2020) அம்மாபேட்டை பகுதியில் உள்ள மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதை மேற்கொள்ளப்பட்டது.
படம்: எஸ்.குரு பிரசாத்.
25 / 49
26 / 49
27 / 49
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என 2 வியாபாரிகள் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த
சம்பவத்தை கண்டித்து...
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று (ஜூன் - 30) நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அக்கட்சியினரை...
காவல்துறையினர் கைது செய்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
28 / 49
29 / 49
தமிழ்நாடு மேடை அலங்காரத் தொழிலாளர் நல அமைப்பு சார்பாக... கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை... திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மலர்களால் அலங்கரித்த மேடையில் அவர்களது பொம்மைகளை வைத்து பெருமைப்படுத்தினர்.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
30 / 49
31 / 49
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த... வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் வாரா வாரம் சுழற்சி முறையில்... பகுதி பகுதியாக விடுமுறை அறிவித்திட நெல்லை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி இன்று (30.6.2020) திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் உள்ள நகைக் கடை, துணிக் கடை மற்றும் கெமிக்கல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
32 / 49
33 / 49
34 / 49
35 / 49
சென்னை - குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் தற்போது (30.6.2020) தூர்வாரும் பணிகளுடன்... சுற்றுலா நீர்வனப் பூங்கா அமைப்பதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீண்டகாலமாக அப்பகுதிவாசிகளின் கோரிக்கையாக உள்ள இப்பணிகள்... இந்த ஆண்டு பெரு மழை வருவதற்குள் நடைபெற்றுவிடும் என இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
36 / 49
37 / 49
38 / 49
39 / 49
40 / 49
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று (30.6.2020) வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கு சிறிது சிறிதாக
தூறலும் பெய்தது.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
41 / 49
42 / 49
43 / 49
44 / 49
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில்... பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஆலோனை கூறவும்... கரோனா உதவி கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (30.6.2020) அங்கு சுழற்சி முறையில் பணி செய்யும் குழுவினர்.
படங்கள் : ம.பிரபு
45 / 49
46 / 49
47 / 49
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து... அகில இந்திய மகிளா காங்கிரஸ் சட்டப் பிரிவு சார்பில்... சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (30.6.2020) பாண்டு வண்டி ஓட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
படங்கள்: ம.பிரபு
48 / 49
49 / 49