Published on : 29 Jun 2020 18:26 pm

பேசும் படங்கள்... (29.06.2020)

Published on : 29 Jun 2020 18:26 pm

1 / 52
அண்மையில் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இரண்டு வியாபாரிகள் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்தும்... நீதி கோரியும்... இன்று (29.6.2020) மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 52
மதுரை தல்லாகுளத்தில் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் - பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று (29.6.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 52
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால்... மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வெளிப்புறப் பகுதியில் - தீயணைப்பு படையினர் மூலம் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 52
5 / 52
தமிழக அரசின் காவல்துறை அலட்சியத்தால் உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் சென்னை - உயர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்றதைக் கண்டித்தும்.... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும்... இன்று (29.6.2020) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நத்தனத்தில் தனது வீட்டின் முன்பு சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
6 / 52
7 / 52
சென்னை - தலைமைச் செயலகத்தில் இன்று (29.6.2020) தமிழக முதல்வரை சந்தித்தப் பிறகு ஐ.சி.எம்.ஆர். தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் செய்தியாளர்களிடம் பேசினார். படம்: எல்.சீனிவாசன்
8 / 52
சென்னை - புறநகர் பகுதிகளில்... இன்று மாலை (29.6.2020) மேகக் கூட்டங்கள்.. வண்ண ஜாலம் காட்டியது. ஆனாலும் மழையை எதிர்பார்த்த சென்னை மக்களின் கண்களில் எல்லாம்.... ஏமாற்றம்தான் மிஞ்சியது. படங்கள் : எம்.முத்து கணேஷ்
9 / 52
10 / 52
11 / 52
12 / 52
13 / 52
14 / 52
சென்னையில் - இன்று (29.6.2020) அந்திப்பொழுதில்... வானத்தில் செங்கவிதை பாடும்... கதிரவன் பின்னனியில் கருத்தைக் கவர்ந்த - காக்கை கூட்டம். படங்கள் : ம.பிரபு
15 / 52
16 / 52
17 / 52
18 / 52
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள நல்லம்பாக்கம் ஏரி... ஆண்டு முழுவதும் நீர்நிறைந்து - தாமரை பூக்களோடு அழகாகக் காட்சியளிக்கும். இந்த ஆண்டு நீர் வற்றி... போதுமான அளவுக்கு தண்ணீரின்றி... சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து ஏரி நிறைந்தால்... இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என கிராம மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
19 / 52
20 / 52
21 / 52
22 / 52
23 / 52
சென்னை, திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட... அயனாவரம் பகுதியில் கரோனோ தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு - கபசுரக் குடிநீர் மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் இன்று (29.6.2020) வழங்கினார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிப்போருக்கு மாநகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
24 / 52
25 / 52
சென்னை - தலைமைச் செயலகத்தில் இன்று (29.6.2020) தமிழக முதல்வரை சந்தித்தப் பிறகு ஐ.சி.எம்.ஆர். தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் மற்றும் மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர். படம்: ம.பிரபு
26 / 52
அமைச்சர் காமராஜ் சென்னை தேனாபேட்டை மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் கரோனா தடுப்பு முகாம்களில் இன்று (28.6.2020) ஆய்வு மேற்கொண்டார். படம்: எல்.சீனிவாசன்
27 / 52
28 / 52
கோவை ஆட்சியர் வளாகம் அருகே இன்று (29.6.2020) வெளியூர்களுக்கு செல்ல இ - பாஸ் வாங்க காத்திருந்த பொதுமக்கள். படம்; ஜெ .மனோகரன்
29 / 52
30 / 52
பாஜக மாநிலத் தலைவர் முருகன் இன்று (29.6.2020) கோவையில் - பத்திரிகையாளர் சந்திப்பின்போது... மத்தியில் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினார். உடன் - அக்கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள். படம் : ஜெ மனோகரன்
31 / 52
கோவை - கணபதி தனியார் வளாகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது... கோவை - மாநகராட்சியின் 100 வார்டுகளில் உள்ள பா.ஜ.க உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ’மொபைல் ஆப்’-ஐ பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்இன்று (29.6.2020) தொடங்கி வைத்தார். உடன் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள். படம்: ஜெ மனோகரன்
32 / 52
கோவை - கணபதி சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பல உருவங்கள் பொறித்த... பல வண்ண முகக்கவசங்களை விற்கிறார் இளைஞர் ஒருவர். படம்: ஜெ .மனோகரன்
33 / 52
வேலூர் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள... தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 5 பேருக்கு... கரோனா வைரஸ் தொற்று பரவல் இன்று (ஜூன் 29) உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து - அப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று... இப்பகுதியில் - வேறு யாருக்காவது காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர். படம் : வி.எம்.மணிநாதன்
34 / 52
35 / 52
36 / 52
வேலூரில் - இன்று (ஜூன் - 29) பிற்பகல் வேளையில் வானில் கருமேகச் கூட்டம் சூழ்ந்தது. மழைப் பொழியும் என்று எதிர்பார்த்தபோது... கொஞ்சம் தூறலுடன் மட்டும் கலைந்து சென்றது. இடம். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம். படங்கள் : வி.எம்.மணிநாதன்
37 / 52
38 / 52
சென்னையில் இருந்து தினமும்... பிற இந்திய நகரங்களுக்கு பயணிக்க லட்சக்கணக்கான பயணிகள் கூடிய - சென்ட்ரல் ரயில் நிலையம்... தற்போது - ஊரடங்கு காரணமாக முடங்கி போய் உள்ளது. ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால்... சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வரிசை கட்டி நின்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகள். படம் : ம.பிரபு
39 / 52
வேலூர் மாவட்டம் - காட்பாடியை அடுத்த பொன்னை பகுதியில் உள்ள தமிழக - ஆந்திர எல்லையில் புதிதாக கட்டப்பட்ட மாநில எல்லை சோதனைச் சாவடியை வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் இன்று (ஜூன் - 29) திறந்து வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய - வேலூர் சரக டிஐஜி காமினி, ’’வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா தடுப்பு பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் எந்தவித மன அழுத்தமும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காவல் துறையினர் அனைவருக்கும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுடன் மன நல ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம்’’ என்றார். தகவல் + படம் : வி.எம்.மணிநாதன்
40 / 52
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக... திண்டுக்கல் காய்கறி மார்க்கெட் தற்போது நத்தம் சாலையில் உள்ள புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால்... இங்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால்... இப்புதிய மார்க்கெட்டிலும் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படங்கள் : பு.க.பிரவீன்
41 / 52
42 / 52
43 / 52
திண்டுக்கல் - நாகல் நகர் பேருந்து நிறுத்தத்தில்... இன்று (29.6.2020) பேருந்துக்காக காத்திருந்தோர்... சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்... முகக்கவசம் இன்றி நடமாடினர். ‘பொதுமக்கள்... இப்படி எதையும் கடைபிடிக்காமல் போனால்... கரோனா தொற்றுப் பரவல் இப்போதைக்கு குறையப் போவதில்லை’ என்று பொதுமக்களில் சிலர் ஆதங்கப்பட்டனர். படம் : பு.க.பிரவீன்
44 / 52
45 / 52
46 / 52
வேலூர் மாவட்டம் - காட்பாடியை அடுத்த பொன்னைப் பகுதியில் உள்ள தமிழக - ஆந்திர எல்லையில் புதிதாக கட்டப்பட்ட மாநில எல்லை சோதனைச்சாவடியை... வேலூர் சரக டிஐஜி காமினி நேற்று (ஜூன் - 29) திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம் : வி.எம்.மணிநாதன்
47 / 52
48 / 52
49 / 52
50 / 52
51 / 52
பெட்ரோல் , டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி.. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி - சேலம் ஆட்சியர் அலுலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (29.6.2020) மனு அளிக்க வந்தனர். படம் : எஸ்.குரு பிரசாத்
52 / 52
திருச்சி - மெயின்கார்டுகேட் தபால் நிலையம் முன்பு... பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (29.6.2020) காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜி.ஞானவேல்முருகன்.

Recently Added

More From This Category

x