Published on : 25 Jun 2020 17:55 pm

பேசும் படங்கள்... (25.06.2020)

Published on : 25 Jun 2020 17:55 pm

1 / 49
ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்த கிருஷ்ணா நீர்... செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்துவிடப்பட்டது. தற்போது 17 கன அடி கொள்ளளவில்... கடல் போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்று (25.6.2020) மதியம் கரு மேகங்களுக்கு இடையே... மெல்லிய சூரியக் கதிர் வீச்சுடன் காட்சியளித்தது. படங்கள் : எம்.முத்துகணேஷ்
2 / 49
3 / 49
4 / 49
5 / 49
சென்னையை - அடுத்த மாங்காடு மற்றும் பூந்தமல்லிக்கு இடைப்பட்ட பகுதியில்... அதிகளவில் போக்குவரத்து இருப்பதால் கரோனா தொற்று விரைந்து பரவுவதாகக் கூறி... இன்று (25.6.2020) இரு மாவட்ட எல்லைகளிலும் தடுப்பு ஏற்படுத்தி இரு பகுதிகளும் தற்காலிகமாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது - மிக மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அப்பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. படங்கள் : எம்.முத்து கணேஷ்
6 / 49
7 / 49
8 / 49
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக... மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு வாகனங்களில் செல்ல இ-பாஸ் காட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி... இன்று (25.6.2020) வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் எல்லையான... பிள்ளையார் குப்பம் பகுதி சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்ட எல்லைக்குள் இ-பாஸ் இல்லாமல் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோர் திருப்பி அனுப்பப்பட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்
9 / 49
சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சதுப்புநில வகையைச் சேர்ந்த முதலையொன்று முட்டையிட்டு குஞ்சுப் பொரித்துள்ளது . பிறந்து - 15 நாட்களே ஆன இந்த முதலை குட்டியை மற்ற முதலைகள் மற்றும் பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக இன்று (25.6.2020) தனி கூண்டு அமைத்து... மாற்று இடத்தில் வைத்து பாதுகாக்கத் தொடங்கினர். படங்கள் : எஸ். குரு பிரசாத்
10 / 49
11 / 49
12 / 49
கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக... மாவட்டங்களுக்கு இடையே வாகனங்களில் செல்ல இ-பாஸ் அவசியம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று (25.6.2020) திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் செல்வோரின் இ-பாஸ் விவரங்களை போலீஸார் சோதனை செய்து அனுப்பினர். இ-பாஸ் இல்லாதவர்கள் வந்தவழியே திருப்பி அனுப்பப்பட்டனர். படம் : ஜி.ஞானவேல்முருகன்
13 / 49
இன்று (25.6.2020) திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் தற்காலிக சோதனை சாவடியில் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் செல்வோரின் இ-பாஸ் விவரங்களை போலீஸார் சோதனை செய்து அனுப்பினர்.
14 / 49
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால்... , வேலூர் மாவட்டத்தில் இன்று(25.6.2020) மாவட்ட எல்லைகளுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகள் வேலூர்- ராணிப்பேட்டை மாவட்ட எல்லையிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். இறக்கி விடப்பட்ட பயணிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மாவட்டத்துக்குள் நடந்தே பயணிக்கின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்
15 / 49
16 / 49
கரோனா தொற்று பரவல் காரணமாக, வேலூர் மாவட்டத்தில்இன்று (ஜூன் - 25) முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 பணிமனைகளில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 220 அரசுப் பே ருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வேலூர் மாவட்டத்தில் 32 பேருந்துகளும் ரா ணிப்பேட்டை மாவட்டத்தில் 12பேருந்துகளும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, வேலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் இரண்டும் இன்று - பேருந்துகள் மற்றும் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. படம்: வி.எம்.மணிநாதன்
17 / 49
18 / 49
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் இன்று (25.6.2020) இப்பகுதியில் - கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
19 / 49
கரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் - மதுரை திருப்பரங்குன்றம் பகுதி சாலை இன்று (25.6.2020) வெறிச்சோடி காணப்பட்டது. படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
20 / 49
கரோனா தொற்று பரவல் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.6.202) நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்,பி. உதயகுமார் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
21 / 49
மதுரை - கோரிப்பாளையம் பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாமல்... சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல்... சுற்றித் திரிபவர்களிடம் கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை... இன்று (25.6.2020) போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் பகிர்ந்துகொண்டார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
22 / 49
தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் சி.ஐ.டி நகர் வீட்டுக்கு இன்று (25.6.2020) மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. படம்: எல்.சீனிவாசன்
23 / 49
எப்போதும் மிகவும்... பரப்பரப்பாக காணப்படும் சென்னை - அண்ணா சாலை இன்று (25.6.2020) வாகனப் போக்குவரத்து ஏதுமின்றி... வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில் எந்த தடையும் இன்றி சுற்றி திரியும் கால்நடை. படம்: ம.பிரபு
24 / 49
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் கூனிச்சம்பட்டுப் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 53 பேர்... இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் அனைத்து வீதிகளுக்கும் செல்லும் வழிகள் இன்று (25.6.2020) முழுமையாக அடைக்கப்பட்டன. படம்: எம்.சாம்ராஜ்
25 / 49
புதுச்சேரி மாநிலம் - திருக்கனூர் கூனிச்சம்பட்டு பகுதியில்.... 53 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து - அப்பகுதியில் இன்று (25.6.2020) சுகாதாரத் துறையினர், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். படம்: எம்.சாம்ராஜ்
26 / 49
மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடித் தடைகால நிவாரண உதவித் தொகைக்கான கோப்பில்... கையேழுத்திடாத புதுவை - துணைநிலை ஆளுநர் கிரண்பேயைக் கண்டித்தும் புதுவை அரசை கண்டித்தும்... இன்று (25.6.2020) துணைநிலை ஆளுநர் மாளிகையின் முன்பு அதிமுக எம்எல்ஏ-க்கள், அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 / 49
புதுச்சேரியில் - கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதையடுத்து... இன்று (25.6.2020) உழவாய்கால் பகுதியில் டிராக்டர் மூலம் விளைநிலங்களைப் பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். படம் : எம்.சாம்ராஜ்
28 / 49
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (25.6.2020) பத்திரிகையாளர்களுக்கு கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் - நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்து மாத்திரைகளை… சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார். படங்கள்: எல் .சீனிவாசன்
29 / 49
30 / 49
31 / 49
32 / 49
33 / 49
போலீஸ் காவலில் இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமான இரு வியாபாரிகள் உயிரிழந்ததை அடுத்து... அவர்களின் சடலங்கள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் இன்று (25.6.2020) உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்து இருவர் சடலங்களையும் வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்து... மருத்துவமனையின் முன்பு திரண்டிருந்தனர். படம் : மு.லெட்சுமி அருண்
34 / 49
போலீஸ் காவலில் இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமான இரு வியாபாரிகள் உயிரிழந்ததை அடுத்து... அவர்களின் சடலங்கள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் இன்று (25.6.2020) உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்து இருவர் சடலங்களையும் வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்து... மருத்துவமனையின் முன்பு திரண்டிருந்தனர். இதையொட்டி -மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது . படம்: மு.லெட்சுமி அருண் .
35 / 49
வட சென்னை பகுதியில் அதிகளவில் கரோனா தொற்றுப் பரவி வருவதையொட்டி... மிண்ட் தெரு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு முன்பு ‘கரோனா’ தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் இன்று (25.6.2020) மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். படம் : ம.பிரபு
36 / 49
வட சென்னை பகுதியில் அதிகளவில் கரோனா தொற்றுப் பரவி வருவதையொட்டி... இன்று (25.6.2020) இப்பகுதியில் உள்ள மிண்ட் தெரு பொதுமக்களுக்கு ‘கரோனா’ தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: ம.பிரபு
37 / 49
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் இன்று (25.6.2020) தற்கொலை செய்துகொண்டார். அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் அருகில் அமைந்திருந்த அவரது இருட்டுக் கடை அல்வா கடை முன்பு பாதுகாப்புக்காக தடுப்பு அமைக்கப்பட்டது. படங்கள்; மு. லெட்சுமி அருண்
38 / 49
39 / 49
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.6.2020) முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ‘பொலிவுறு நகரம்’ திட்டத்தின்கீழ்... கோவை - உக்கடம் குளம், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஆகியோர் கலந்துகொண்டனர். படம்: ஜெ .மனோகரன்
40 / 49
கோவையில் கபசுரக் குடிரீர், ஜிங்க் மாத்திர, சத்து மாத்திரைகள் அடங்கிய ’நோய் எதிர்ப்பு சக்தி’ பெட்டகத்தை... 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் திட்டத்தை இன்று (25.6.2020) முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். படம்: ஜெ .மனோகரன்
41 / 49
கோவையில் இன்று (25.6.2020) நகரப் பேருந்து நிலையத்தை பார்வையிட வந்த முதல்வர் பழனிசாமி... அங்கு கடைகளில் விற்பனைக்கு இருந்த முகக்கவசங்கள்... அனைத்தும் தரமானதா என்று கடைக்காரரிடம் விசாரித்தார். படம்: ஜெ .மனோகரன்
42 / 49
43 / 49
கோவையில் இன்று (25.6.2020) நகரப் பேருந்து நிலையத்தைப் பார்வையிட வந்த முதல்வர் பழனிசாமி... அங்கிருந்த பயணிகளிடம் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பயணிக்குமாறு அறிவுறுத்தினார். படம் : ஜெ .மனோகரன்
44 / 49
கோவையில் இன்று (25.6.2020) நகரப் பேருந்து நிலையத்தைப் பார்வையிட வந்த முதல்வர் பழனிசாமி... அங்கிருந்த பொதுமக்களிடம் ‘’ரேஷனில் வழங்கப்படும் இலவசப் பொருட்களை வாங்கினீர்களா?” என்று விசாரித்தார். அப்போது ஒரு சிலர் ‘’எங்களுக்கு ரேஷன் கார்டே இல்லை’’ என புகார் தெரிவிக்க... அருகில் இருந்த ஆட்சியரை அழைத்து ’’இவர்களுக்கு உடனே ரேஷன் கார்டு கொடுங்கள்” என முதல்வர் பரிந்துரைத்தார். படம்: ஜெ .மனோகரன்
45 / 49
சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் மேலும் மேலும்... அதிகரித்து வருவதால்... மாவட்ட எல்லைகளில் போலீஸார் தொடர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையியில் இன்று (25.6.2020) செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதி - ஜிஎஸ்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார். படங்கள் : எம்.முத்து கணேஷ்
46 / 49
47 / 49
48 / 49
49 / 49
சென்னையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்... அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித் திரிவோரின் இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து... வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை - வாலாஜா சாலை காவல் நிலையம் முன்பு இன்று (26.5.2020) பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டடிருந்தன. படம்; ம.. பிரபு

Recently Added

More From This Category

x