1 / 41
திருச்சி மாவட்டம் - தொட்டியம் வட்டத்தின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய சேகர் என்பவர்... கரோனா தொற்று நிவாரணப் பணியின்போது விபத்தில் மரணமடைந்தார். இவருக்கு - உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகை ரூ.50 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்க வேண்டும், மாநில அளவில் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று முதல் 3 நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து - தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் அலுவலகப் பணியை மேற்கொள்கின்றனர்.
இதையொட்டி... முதல் நாளான இன்று (ஜூன் - 24) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்த வருவாய் துறையினர். படம் : வி.எம்.மணிநாதன்
2 / 41
3 / 41
வேலூர் மாவட்டத்தில் - தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி... வேலூர் - கிருபானந்த வாரியார் சாலையில் இன்று (24.6.2020) கரோனா தொற்று தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இ தில் - நெல், அரிசி மண்டி வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்
4 / 41
5 / 41
6 / 41
வேலூர் அடுத்த பாகாயம் துத்திப்பட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதில்... பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானோர் மற்றும் உடந்தையாக இருந்த இடைத் தரகர்கள் மீது விசாரணைக் கோரியும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கேட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஜூன் 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 41
8 / 41
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க வரும் சில பத்திரிகையாளர்களுக்கு... கரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி... இன்று (24.6.2020) மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பத்திரிகையாளர் அனைவருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மேலும் - ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த செய்தியாளர்கள் அறையும் மூடப்பட்டது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 41
வேலூரில் இன்று (24.6.2020) மாலை மழைத் தூறலுடன் வானில் சூழ்ந்திருந்த கருமேகக் கூட்டம்.
இடம்: வேலூர் விருதம்பட்டு பகுதி பாலாறு.
படம்: வி.எம்.மணிநாதன்
10 / 41
11 / 41
புதுக்கோட்டையில் நாளுக்குநாள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் - அங்குள்ள பூ மார்க்கெட்டில் இன்று (24.6.2020) பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பூ வாங்க திரண்டிருந்தனர்.
படம்: பு.க.பிரவீன்.
12 / 41
13 / 41
14 / 41
கோவை புருக்பாண்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட பூ மார்க்கெட்... இன்று (24.6.2020) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
படம் : ஜெ.மனோகரன்
15 / 41
16 / 41
17 / 41
18 / 41
19 / 41
20 / 41
கடும் சூட்டை தணிக்க கோவை சிங்காநல்லுர் - திருச்சி சாலையோரத்தில் பனை நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.
படம்; ஜெ மனோகரன்
21 / 41
கோவை அவிநாசி சாலையில் உள்ள - எல்.ஐ. சி சந்திப்பில்... தனிமனித இடைவெளி இல்லாமல் கடந்து செல்ல காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.
படம் : ஜெ. மனோகரன்
22 / 41
கடந்த இரு நாட்களாக புதுச்சேரியில் இரவு நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இதையடுத்து.. இன்று (24.6.2020) மதிய நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும்... மேகங்களுக்கு இடையில் கசிந்த சூரிய ஒளிக்கீற்று.
படம்: எம்.சாம்ராஜ்
23 / 41
இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில்... நமது இந்திய வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமான சீன அரசை கண்டித்து... இன்று (24.6.2020) விழுப்புரம் மாவட்டம் - வானுார் தாலுகா அலுவலகம் முன்பு... பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
24 / 41
துாத்துக்குடி - சாத்தான்குளத்தில் காவல் துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் - இரு வியாபாரிகளுக்கு... அஞ்சலி செலுத்தும் வகையிலும் காவல்துறையினரை கண்டித்தும் - இன்று (24.6.2020) புதுச்சேரி அலைபேசி கடைகாரர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது.
படம்: எம்.சாம்ராஜ்
25 / 41
புதுச்சேரியில் - கரோனா பரவலைத் தடுக்க... அரசு காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை மட்டும் - கடைகள் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் - புதுச்சேரி - நேரு வீதி ... இன்று (24.6.2020) 2 மணிக்கு மேல் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
படம்: எம்.சாம்ராஜ்
26 / 41
திருநெல்வேலி - புதிய பேருந்து நிலையம் அருகில்... இளைஞர்கள் மேம்பாட்டு மன்றம் அலுவலக திறப்பு விழா இன்று (24.6.2020) நடைபெற்றது. இதில் - சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கலந்து கொண்டு - சங்கக் கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் .
படம்; மு. லெட்சுமி அருண்
27 / 41
சென்னையில் - கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் 6-வது நாளான இன்று (24.6.2020) நேப்பியர் பாலம் முதல்... கடற்கரை காமராஜர் சாலை வரை வாகனப் போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
படம்; ம.பிரபு
28 / 41
திருநெல்வேலி - சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற 2 வியாபாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ... அவர்கள் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிணவறைக்கு இன்று (24.6.2020) கொண்டுவரப்பட்டு... பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
படம்: மு.லெட்சுமி அருண்
29 / 41
திருநெல்வேலி - சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற 2 வியாபாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ... அவர்கள் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிணவறைக்கு இன்று (24.6.2020) கொண்டுவரப்பட்டு... பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி - உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனை பிணவறைக்கு முன்பு திரண்டதால... அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படம்: மு.லெட்சுமி அருண்
30 / 41
31 / 41
32 / 41
திருநெல்வேலி - சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற 2 வியாபாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ... அவர்கள் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிணவறைக்கு இன்று (24.6.2020) கொண்டுவரப்பட்டு... பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி - உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனை பிணவறைக்கு முன்பு திரண்டதால... அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் - பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் - திருநெல்வேலி மாநகர சட்டம் - ஒழுங்கு இணை ஆணையர் சரவணன் அங்கு வந்து ஆய்வு செய்தார்.
படம்: மு.லெட்சுமி அருண்
33 / 41
34 / 41
திருநெல்வேலி - சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற 2 வியாபாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ... அவர்கள் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிணவறைக்கு இன்று (24.6.2020) கொண்டுவரப்பட்டு... பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி - உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனை பிணவறைக்கு முன்பு திரண்டதால... அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் - பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
படம்: மு.லெட்சுமி அருண்
35 / 41
திருநெல்வேலி -
சாத்தான்குளம் பகுதியில் காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்ட இரு வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு - சென்னை விருகம்பாக்கம் பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து, இன்று (24.6.2020) காலை
இப்பகுதியில் கடையடைப்பு செய்தனர். மேலும் உயிரிழந்த இரு வியாபாரிகளின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர். இதைத் தொடர்ந்து பேரணியாக சென்ற அனைவரையும் போலீஸார் கைது செய்து விருகம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி... பேரணியாகச் சென்றதால்... இவ்வியாபாரிகள் மீது மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்கள்; ம.பிரபு
36 / 41
37 / 41
38 / 41
சேலம் - செவ்வாய்ப்பேட்டை சரக்கு ரயில் நிலையம் அருகே... ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துவோர் மது பானங்கள் அருந்தி வருகின்றனர். இதனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் அபாயம் மட்டுமின்றி , சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே - காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் : குரு பிரசாத்
39 / 41
40 / 41
மதுரைப் பகுதிகளில்...
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதால்.... மதுரையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (24.6.2020) மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள்... பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
41 / 41