Published on : 22 Jun 2020 16:55 pm

பேசும் படங்கள்... (22.06.2020)

Published on : 22 Jun 2020 16:55 pm

1 / 61
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு... இன்று (22.6.2020) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து - மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலம் முழுவதும்... கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 61
3 / 61
மதுரை - ராஜாஜி பொது மருத்துவமனையில் உள்ள.... கரோனா சிகிச்சை சிறப்பு வார்டில்... கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் சிலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெறுவோருக்கு... சரியான உணவு வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து... இன்று அங்கு சிகிச்சை பெறுவோருக்கு மதிய உணவை உறவினர்ல் எடுத்துச் சென்றனர் படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 61
மதுரை - தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு இன்று (22.6.2020) கரோனா தொற்று உறுதியானதை அடுத்து... அந்த அலுவலகம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் - இந்த தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் 17- க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். .படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 61
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து... பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று (22.6.2020) தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
6 / 61
புதுச்சேரி பெரிய மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டமாக கூடாமல் இருக்கவும்... கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாகவும்... பேருந்து நிலையத்துக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் -இன்று (22.6.2020) காய்கறிகளை வாங்க பொது மக்கள் வராததால் தற்காலிக மார்க்கெட் வெறிச்சோடி கிடக்கிறது. படம்: எம்.சாம்ராஜ்
7 / 61
புதுச்சேரி பெரிய மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டமாக கூடாமல் இருக்கவும்... கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாகவும்... பேருந்து நிலையத்துக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளது.-இன்று (22.6.2020) பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் திறந்திருந்தும்... வாங்குவதறகு பொதுமக்கள் வாராததால் வெறிச்சோடி காணப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
8 / 61
9 / 61
10 / 61
11 / 61
புதுச்சேரியில் - கரோனா தொற்றுப் பரவுவதை தடுக்க... அம்மாநில அரசு பாரதி வீதியில்... சாலையோரக் கடைகளுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து - சாலையோரக் கடைகள் வைக்க அனுமதி வழங்கக் கோரி... இப்பகுதியில் கடை நடத்தும் பெண்கள் இன்று (22.6.2020) புதுச்சேரி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். படம்: எம்.சாம்ராஜ்
12 / 61
கரோனா பாதிப்பாலும், அமலில் இருக்கும் ஊரடங்காலும் அனைத்து பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் - தனியார் பள்ளிகளின் கட்டாய கட்டணக் கொள்ளையைக் கண்டித்து... இன்று (22.6.2020) புதுச்சேரி கல்வித் துறை முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர். படம்: எம்.சாம்ராஜ்
13 / 61
வேலூர் - நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரிகள், தொழிலாளர்கள், அரிசி மண்டி வியாபாரிகள் உட்பட பலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, வேலூர் கிருபானந்த வாரியார் சாலை, நேதாஜி விளையாட்டு மைதானத்தில்... இன்று (22.6.2020) நடந்த கரோனா தொற்று தடுப்பு சிறப்பு முகாமில்... காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள், பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அரிசி மண்டி வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்
14 / 61
15 / 61
16 / 61
17 / 61
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சிப் பிரிவில்... அரசு ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து... இன்று (22.6.2020) ஊரக வளர்ச்சிப் பிரிவு அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு... காலவரையின்றி மூடப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்
18 / 61
கரோனா தொற்றின் தாக்கம்... பெரிய பெரிய தொழில்களை மட்டுமன்றி.... சாமானியனின் உழவுத் தொழிலுக்குப் பயன்படும்... தேங்காய் நார் உரத் தொழிலையும் பெருமளவில் பாதித்துவிட்டது. திண்டுக்கல் அருகே நத்தம் சாலையில் உள்ள தேங்காய் நார் தூள் தயாரிப்பில் இன்று (22.6.2020) மிகக் குறைவான ஊழியர்களே ஈடுபட்டனர். படங்கள்: பு.க.பிரவீன்.
19 / 61
20 / 61
21 / 61
22 / 61
23 / 61
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால் மூடிக் கிடந்த திருநெல்வேலி நீதிமன்றம்.... இன்று முதல் (22.6.2020) செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் முன்னதாக - வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற வளாகம் முன்பு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளேஎ அனுமதிக்கப்பட்டனர். இந்த பரிசோதனையில்... மருத்துவத் துறைப் பணியாளர்களைத் தவிர... மருத்துவத் துறையைச் சார்ந்த மற்ற மாணவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று (22.6.2020) திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்துக்குள் வருவோருக்கு...சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள்... நவீன கருவிகளைக் கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர். படங்கள்: மு.லெட்சுமி அருண் .
24 / 61
25 / 61
26 / 61
கரோனா தொற்றால் உயிரிழந்த.. மாற்றுத் திறனாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டி... இன்று (22.6.2020) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மனு அளிக்க வந்தனர். படம்: மு.லெட்சுமி அருண் .
27 / 61
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்... வீடு வீடாகச் சென்று - கரொனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் - இன்று (22.6.2020) சென்னை - நங்கநல்லூர் பகுதியில்... மாநகராட்சி ஊழியர்கள்... தெர்மா மீட்டர் உதவியுடன் உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொண்டனர். . படம்: எம்.முத்து கணேஷ்
28 / 61
பொதுவாக - ரயில் நிலையங்கள்... பேருந்து நிலையங்களில்தான்... இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருப்போம். இப்போதெல்லாம் - விமான நிலையங்களிலும் ’காத்திருக்கும் காட்சி’ அதிகரித்துள்ளது. விமானத்தின் தாமத வருகை, விமானம் ரத்து, முன்கூட்டியே வந்து காத்திருப்போர்... என விமான நிலையங்களில் பல ரகங்களில் பயணிகள் காத்திருக்கின்றனர். படம்: எம்.முத்து கணேஷ்
29 / 61
கோவை - நஞ்சுண்டாபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா மற்றும் எம் ஜி ஆர் சிலைகளுக்கு... நேற்று (21.6.2020) நள்ளிரவில் மர்மநபர்கள் யாரோ முகக்கவசம் அணிவித்துள்ளதால்... அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. படம்: ஜெ .மனோகரன்
30 / 61
கோவை - திருச்சி சாலையில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் காட்சிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பொம்மைகளுக்கு... முகக்கவசம் அணிவிக்கும் ஊழியர். படம்; ஜெ .மனோகரன்
31 / 61
32 / 61
கோவை - ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரப் பணி துணை இயக்குநர் மற்றும் குடும்ப நலத் துறை அலுவலகத்தில்... பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு... கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் - அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று (22.6.2020) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: ஜெ.மனோகரன்
33 / 61
34 / 61
கோவை - கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபலமான தனியார் நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு... கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்... இன்று (22.6.2020) அந்த ஊழியர்கள் தங்கியிருந்த பகுதி அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. படம்: ஜெ மனோகரன்
35 / 61
ஊரடங்கு உத்தரவு காரணமாக - மூடப்பட்டிருந்த சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இன்று (22 .6.2020) திறக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்... உடல் வெப்பநிலை கண்டறியப்பட்ட பின்னரே... நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம் : எஸ். குரு பிரசாத்
36 / 61
37 / 61
தமிழக அரசு அறிவித்திருந்தபடி... அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரருக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்கும் பணி இன்று (22.6.2020) சென்னையில் தொடங்கியது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ... ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று... குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. படம் : ம.பிரபு
38 / 61
தமிழகத்தில்... ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலையோர வியாபாரமும் அதைச் சார்ந்துள்ள கைத்தொழில்களும் நலிவடைந்துவிட்டன. தற்போது சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... இந்த சாலையோர கடைகள் மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ளன. இன்று (22.6.2020) சேலம் - அழகாபுரம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மூங்கில் கூடைகளை விற்பனை செய்வதற்காக... பல்வேறு வடிவங்களில் கூடைகளை தயார் செய்யும் கைவினைஞர்கள். படங்கள்: எஸ். குரு பிரசாத்
39 / 61
40 / 61
41 / 61
42 / 61
43 / 61
44 / 61
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்... கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்தும், விளைந்த காய்கறிகளுக்கு உரிய விலை இல்லை எனவும் கூறி... திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.6.2020) அறுவடை செய்த காய்கறிகளை தரையில் கொட்டி... போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
45 / 61
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்... கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்தும், விளைந்த காய்கறிகளுக்கு உரிய விலை இல்லை எனவும் கூறி... திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.6.2020) அறுவடை செய்த காய்கறிகளை தரையில் கொட்டி... போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளுடன் - பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அலுவலர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
46 / 61
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.6.2020) தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை தரையில் கொட்டி... விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது... போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவரை தூக்கி செல்லும் போலீஸார். படம்: ஜி.ஞானவேல்முருகன்
47 / 61
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.6.2020) தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை தரையில் கொட்டி... விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது... கொட்டப்பட்ட காய்கறிகளை எடுத்துச் சென்ற பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
48 / 61
49 / 61
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.6.2020) தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை தரையில் கொட்டி... விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது... கொட்டப்பட்ட காய்கறிகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றதுபோக.. மீதமிருந்த காய்கறிகளை குப்பை வண்டியில் அள்ளி எடுத்து சென்ற மாநகராட்சியினர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
50 / 61
51 / 61
கரோனா தொற்று பாதித்தவர்களின் உறவினர்களை தனிமைபடுத்தும் நடவடிக்கைக்காக, திருச்சி வயர்லெஸ் ரோடு, காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியை தூய்மைப் பணியாளர்கள் இன்று (22.6.2020) சுத்தம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து - போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி குடியிருப்புவாசிகள். படம்: ஜி.ஞானவேல்முருகன்
52 / 61
53 / 61
செங்கல்பட்டு மாவட்டம் - சேலையூர் பகுதியில் இன்று (22.6.2020) அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கரோனா நிவாரண நிதியாக... ரூ.1000-ஐ ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர். படங்கள்: எம்.முத்து கணேஷ்
54 / 61
55 / 61
56 / 61
57 / 61
சென்னையில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் 4- வது நாளான... இன்று (22.6.2020) எந்தவித போக்குவரத்துமின்றி அடையாறு மேம்பாலம் வெறிச்சோடிக் காணப்பட்டது. படம் : ம.பிரபு
58 / 61
வேலூர் - சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில்... 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து... இன்று (22.6.2020) அப்பகுதிக்கு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து... வேலூர் மாநகராட்சியினரால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. படங்கள்: வி.எம்.மணிநாதன்.
59 / 61
60 / 61
வேலூரில் இன்று (22.6.2020) பகல் முழுவதும்.... அவ்வப்போது.... விட்டு விட்டு பெய்த மழையினால் - கிரீன் சர்க்கிள் பகுதி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் - தேங்கியுள்ள மழைநீர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
61 / 61

Recently Added

More From This Category

x