1 / 81
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (21.6.2020) சூரிய கிரகணம் தென்பட்டது. சேலம் - இரும்பாலை பகுதியில் தென்பட்ட சூரிய கிரகணத்தைத் தொலைநோக்கி கருவி மூலம் குழந்தைகளுக்கு காண்பிக்கும் இளைஞர்.
படம்: எஸ்.குரு பிரசாத்
2 / 81
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (21.6.2020) சூரிய கிரகணம் தென்பட்டது. சேலம் இரும்பாலை பகுதியில் தென்பட்ட சூரிய கிரகணத்தை சிறுவர்கள் கண்ணாடி மூலம் பார்த்து ரசித்தனர்.
படம்: எஸ்.குரு பிரசாத்
3 / 81
4 / 81
சேலத்தில் இன்று (21.06.2020) தென்பட்ட சூரிய கிரகணம்.
படம் எஸ்.குரு பிரசாத்
5 / 81
சென்னையில் எந்தவித தளர்வுமின்றி... முழு ஊரடங்கின் 3-வது நாளான இன்று (21.6.2020) சென்னையின் - மத்திய பகுதியான சென்ட்ரல் - பாரிமுனை சாலை ஆட்கள் மற்றும் வாகனம் இன்றி காணப்பட்டது. ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட இப்படத்தில் - மாநகராட்சி கட்டிடம், நேரு ஸ்டேடியம், அரசு பொது மருத்துவமனை, தெற்கு ரயில்வே அலுவலகம் இன்னும் Uல பகுதிகளைக் காணலாம்.
படம் : ம.பிரபு
6 / 81
சென்னையில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கின் 3-ம் நாளான இன்று (21.6.2020) கிழக்கு கடற்கரை சாலையில் காலில் செருப்புக் கூட இல்லாமல்... தள்ளாடும் வயதில்... உணவைத் தேடி அலையும் முதியவர்.
படம்: ம.பிரபு
7 / 81
இன்று (21.6.2020) வானில் தோன்றிய சூரிய கிரகணத்தை... மதுரை - மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் எக்ஸ்ரே ஃபிலிம் மூலம் கண்டு ரசிக்கும் பெண்.
படம்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 81
இன்று (21.6.2020) காலையில் வானில் தோன்றிய சூரிய கிரகணம். மதுரை - தெப்பக்குளத்தருகே நின்று எடுத்தப் புகைப்படம்.
]படம்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 81
இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில்
இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து... இன்று (21.6.20200 இந்து முன்னணி சார்பில் - மதுரை கல்லூரி முன்பு சீனப் பொருட்களை உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 81
இன்று (21.6.2020) வானில் தோன்றிய
சூரிய கிரகணத்தை முன்னிட்டு... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது. இதனால் - பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில்.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 81
திருச்சி அண்ணா கோளரங்கம் அருகே... இன்று (21.6.2020) வானில் தோன்றிய சூரிய கிரகணத்தை... பிரத்யக கண்ணாடி வழியே பார்த்து ரசித்த சிறுவர் - சிறுமிகள் மற்றும் பொதுமக்கள்.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
12 / 81
13 / 81
14 / 81
திருச்சியில் இன்று (21.6.2020) காலையில் வானில் தோன்றிய சூரிய கிரகணம்.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
15 / 81
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் 3-ம் நாளான இன்று (21.6.2020) மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் காசிமேட்டில் மின்பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
படங்கள் : எல்.சீனிவாசன்
16 / 81
17 / 81
18 / 81
19 / 81
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கின் 3-ம் நாளான இன்று (21.6.2020) சென்னை - ராயபுரம் எம்.எஸ்.கோயில் சாலை ஆள் மற்றும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படங்கள் : எல்.சீனிவாசன்
20 / 81
21 / 81
கரோனா தடுப்புக்காக சென்னையில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் 3-ம் நாளான இன்று ( 21.6.2020) வெறிச்சோடி காணப்பட்ட சென்னை தங்க சாலை (மிண்ட் தெரு) .
படம் : எல்.சீனிவாசன்
22 / 81
கரோனா தொற்று பரவலைத் தடுக்க... புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டை திறக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை திரும்பப் பெறக் கோரி... சண்டே மார்கெட் சாலையோர வியாபாரிகள் இன்று (21.6.2020) ஆர்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
23 / 81
இன்று (21.6.2020) வானில் தோன்றிய
கிரகணத்தை முன்னிட்டு... புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் கதவுகள் மூடப்பட்டன. எனவே - கோயிலின் வெளியே நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
24 / 81
இன்று (21.6.2020) வானில் தோன்றிய
கிரகணத்தை... புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்ப கோளரங்கத்தில் நுண்ணோக்கி கருவி மூலம் பார்க்கும் தொழில்நுட்ப ஊழியர்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
25 / 81
26 / 81
கரோனா தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கின் 3-ம் நாளான இன்று (21.6.2020) வெறிச்சோடிய சென்னை - தங்கசாலை வழியாக கொருக்குப்பேட்டை செல்லும் மேம்பாலம் .
படங்கள் : எல்.சீனிவாசன்
27 / 81
28 / 81
29 / 81
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை - காசிமேட்டில் உள்ள மீன் ஏலக் கூடத்தில் மீன் வாங்க கூட்டம் அலைமோதும் .
சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக - அமலில் இருக்கும் ஊரடங்கின் 3-வது நாளான இன்று (21.6.2020 ) ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக காசிமேடு மீன் ஏலக் கூடம்
வெறிச்சோடிக் காணப்பட்டது.
படங்கள் : எல்.சீனிவாசன்
30 / 81
31 / 81
32 / 81
சென்னையில் கரோனா தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கின் 3-வது நாளான இன்று (21.6.2020) ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சாலையில் திரிந்த இரு சக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்து... சென்னை தங்கசாலையில் (மிண்ட்) நிறுத்தி வைத்துள்ளனர்.
படம்: எல்.சீனிவாசன்
33 / 81
இன்று (21.6.2020) வானில் சூரிய கிரகணம் தோன்றும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் - இன்று வானில் மேகங்கள் சூழ்ந்ததால்... சென்னையில் முழுமையாக சூரியகிரகணம் தெரியவில்லை. இந்நிலையில் - விமானநிலையப் பகுதியில் தெரிந்த சூரிய கிரகணக் காட்சிகள்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
34 / 81
35 / 81
36 / 81
37 / 81
38 / 81
39 / 81
40 / 81
41 / 81
இன்று (21.6.2020) தமிழகத்தின் பல இடங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது.
அரசு விதிமுறைப்படி... பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால்... திருநெல்வேலி அறிவியல் மையத்தில்
தொலைநோக்கியின் மூலம் காணும் சூரிய கிரகண காட்சிகளை... யு-டியூப் , கூகுள் மீட் மற்றும் முகநூலில் நேரடியாக அறிவியல் மைய பணியாளர்கள் ஒளிபரப்பு செய்தனர்.
படங்கள். மு. லெட்சுமி அருண் .
42 / 81
43 / 81
44 / 81
45 / 81
46 / 81
உலக யோகா தினத்தையொட்டி.... இன்று (21.6.2020)
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில்... கலந்து கொண்டு யோகா ஆசனங்களை செய்த காவலர்கள்.
படம்: மு. லெட்சுமி அருண் .
47 / 81
இன்று (21.6.2020) வானில்
மேகக் கூட்டங்களுக்கு இடையே... தாம்பரம் பகுதியில் தெரிந்த சூரிய கிரகணம்.
படங்கள்; எம்.முத்துகணேஷ்
48 / 81
49 / 81
50 / 81
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால்... உலக யோகா தினமான இன்று (21.6.2020) அவரவர்கள் வசிக்கும்
பகுதியிலேயே எளிமையாக யோகா தினத்தை கொண்டாடினர்.
சேலம் களரம்பட்டி பகுதியில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம்
அணிந்து யோகா பயிற்சியில் ஈடுபட்ட அப்பகுதியினர்.
படம்: எஸ்.குரு பிரசாத்
51 / 81
52 / 81
53 / 81
இன்று (21,6,2020)
தந்தையர்கள் தினம்:
தாய்...
என்றால் பாசம்,
தந்தை...
என்றால் அக்கறை , இக்கரையில் நிற்கும் பிள்ளையை
இருந்து அக்கரைக்கு அழைத்து செல்வதற்கு தந்தைக்கு
நிகர் அவர்தான் .
பாளையங்கோட்டையில் மார்க்கெட் பகுதிக்கு அழைத்து வந்த தனது மகனுக்கு பாதுகாப்பு முகக்கவசத்தை அணிவித்து அழைத்து வந்திருந்தார் இந்த தந்தை . படம: லெட்சுமி அருண் .
54 / 81
மீனம்பாக்கம், குரோம்பேட்டை,
தாம்பரம் பகுதிகளில் முழு ஊரடங்கால் இன்று (21.6.2020)
வெறிச்சோடிய சாலைகள். இந்நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் வந்த சில வாகனங்களை போலீஸார்
சோதனை செய்தனர்.
படங்கள்:எம்.முத்துகணேஷ்
55 / 81
56 / 81
57 / 81
58 / 81
59 / 81
சென்னையில் எந்த தளர்வும் இன்றி அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் 3-வது நாளான இன்று (21.6.2020) போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் காணப்படும் - கிண்டி - கத்திபாரா மேம்பாலம். பின்னனியில் தெரிவது மீனம்பாக்கம் விமான நிலையம், பரங்கிமலை மற்றும் ஜி,எஸ்,டி சாலை. (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது)
60 / 81
சென்னையில் எந்த தளர்வும் இன்றி அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் 3-வது நாளான இன்று (21.6.2020) போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் காணப்படும் கிண்டி கத்தி பாரா மேம்பாலம் . (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது)
படம்: ம.பிரபு
61 / 81
கரோனா தொற்றுப் பரவல் ஒரு முடிவுக்கு வராத நிலையில்... திண்டுக்கல் அருகே சிறுமலையில் விளையும் பலாப்பழங்களை - வாங்கிச் செல்ல வெளிமாவட்ட வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால்... சிறுமலை அடிவாரத்திலேயே சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
படங்கள்: பு.க.பிரவீன்.
62 / 81
63 / 81
சென்னையில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் 3-வது நாளான இன்று (21.6.2020) போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்ட
ஜெமினி மேம்பாலம் (அண்ணாசாலைமற்றும் அதனை சுற்றியுள்ள சாலை)
படங்கள் : எல்.சீனிவாசன்
64 / 81
65 / 81
66 / 81
67 / 81
முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று (21.6.2020) ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட சென்னை -
தியாகராய நகர் - ரெங்கநாதன் தெரு,
படம்; எல் .சீனிவாசன்
68 / 81
இன்று (21.6.2020) கோவையில் -
சூரிய கிரகணத்தை பிரத்யக கண்ணாடி வழியே பார்த்து ரசித்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள்.
படங்கள்: ஜெ .மனோகரன்
69 / 81
70 / 81
71 / 81
கோவையில்
இன்று (21.6.2020) தெரிந்த சூரிய கிரகணம்.
படங்கள்: ஜெ .மனோகரன்
72 / 81
73 / 81
74 / 81
75 / 81
76 / 81
77 / 81
78 / 81
79 / 81
இன்று (21.6.2020) உலக - யோகா தினத்தையொட்டி... கோவை நஞ்சுண்டாபுரம் குடியிருப்பு வளாகத்தில்... யோகா பயிற்சியில் ஈடுபட்ட குடும்பத்தினர்.
படங்கள்: மனோகரன்
80 / 81
81 / 81