1 / 53
காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் செவிலியர் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து... அவர் வசிக்கும் சத்யா நகரில் இன்று (18.6.2020) தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
படம்: வி.எம்.மணிநாதன்
2 / 53
காட்பாடி பாலாஜி நகரில் இன்று (18.6.2020) ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து - அவரது குடும்பத்தில் உள்ள பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து... அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு - மாநகராட்சி ஊழியர்களால் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்
3 / 53
4 / 53
இந்திய - சீன எல்லையான...
லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து... மதுரை புறநகர் பா.ஜ.க சார்பாக இன்று (18.6.2020) மதுரை - அன்ணா நகர் மேல மடைப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் - சீன அதிபர் உருவ பொம்மையை அக்கட்சியினர் எரிக்க முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
தகவல் + படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 53
6 / 53
இந்திய - சீன எல்லையான...
லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து...
சீன நாட்டின் நடவடிக்கைகளைக் கண்டித்து... இன்று (18.6.2020) திருச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில், 'சீன நாட்டுப் பொருட்களை வாங்க மாட்டோம்' என அக்கட்சியினர். உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
7 / 53
8 / 53
திருச்சி மாவட்டம் - முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் உடைந்து விழுந்ததையடுத்து... அதன் அருகிலேயே ரூ.387 கோடியில் புதிய அணைக்கான கட்டுமானப் பணி தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது புதிய அணைக்கு 1,650 மீட்டர் நீளம் உள்ள அடித்தள சுவர் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் 7,800 கான்கிரீட் பிளாக்குகள் தயாரிக்கப்பட்டு... அடித்தள சுவர்களுக்கு இடையில் பதிக்கும் பணியும், தூண்களுக்கான அடித்தளம் அமைக்கும் பணியும் நடக்கிறது.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
9 / 53
10 / 53
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்... இன்று (18.6.2020) சேலத்தில் இருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
இவர்கள் அனைவரும் தங்குவதற்கும், உணவுக்கும் வழியில்லாமல் தவிப்பதாகவும்... தங்களது சொந்த மாநிலமான ஜார்கண்டுக்கு தங்களை அனுப்பி வைக்கக் கோரியும்... வேலூர் - ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே கோரிக்கையுடன் காத்திருந்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
11 / 53
திருநெல்வேலி - பாளையங்கோட்டை பகுதியில் உள்ள லெட்சுமி விலாஸ் வங்கிக் கிளையில்... பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து - சுகாதாரத் துறை ஊழியர்கள் அந்த வங்கி முழுவதும் சுத்தப்படுத்தும் பணியில் இன்று (18.6.2020) ஈடுபட்டனர்.. வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்களும் , வாடிக்கையாளர்களும் வங்கியின் வெளியே செய்வதறியாது காத்திருந்தனர். படங்கள் . மு. லெட்சுமி அருண் .
12 / 53
13 / 53
கொல்கத்தாவில் உள்ள துறைமுகத்துக்கு சூட்டப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்... மத்திய அரசை கண்டித்தும்... இன்று (18.6.2020) மதுரை - தல்லாகுளம் அஞ்சல் நிலையம் முன்பு பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
14 / 53
மதுரை - மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்... அலங்கார கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது அம்மன் சன்னதி முன்பு இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 53
ஆந்திர மாநிலத்தில் இருந்து... வேலூர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து குவிந்துள்ள மருத்துவ குணம் கொண்ட நாவல் பழங்கள்... இன்று கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
படம் : வி.எம்.மணிநாதன்
16 / 53
நாளை முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு - சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச் தெருவில் இருக்கும் மின் சாதனப் பொருட்கள் விற்பனை கடைகள் 12 நாட்கள் மூடப்படுவதால்... இன்று (18.6.2020) கூட்டம் அலைமோதியது.
படம்: ம.பிரபு
17 / 53
வேலூரை அடுத்த பாகாயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து.... இந்த காவல் நிலையம் இன்று (18.6.2020) மூடப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்
18 / 53
சீன தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரா்களுக்கு... புதுச்சேரி - கடற்கரை சாலையில் உள்ள கார்கில் போர் வீார்கள் நினைவு துான் அருகில் இன்று (18.6.2020) பொதுக்கள் மலர்த் துாவி... மெழுகுவத்தி ஏந்தி... அஞ்சலி செலுத்தினர்.
படம்: எம்.சாம்ராஜ்
19 / 53
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பையடுத்து... இன்று (18.6.2020) புதுச்சேரி - கோரிமேடு எல்லையில் வரும் வாகனங்களை... உரிய இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்து உள்ளேஎ அனுப்பும் காவல்துறையினர்.
படம்: எம்.சாம்ராஜ்
20 / 53
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவைதையடுத்து... இன்று (18.6.2020) முதல் புதுச்சேரி எல்லைகள் மூடப்பட்டன. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கைக்குழந்தையுடன் சிகிச்சைக்கு வரும் முஸ்லிம் பெண்.
படம்: எம்.சாம்ராஜ்
21 / 53
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள்... அதிகரித்து வருவதையடுத்து புதுச்சேரிக்குள் அனுமதிக்காததையடுத்து - இன்று (18.6.2020) தமிழக அரசுப் பேருந்துகள் விழுப்புரம் மாவட்ட எல்லையான மதகடிப்பட்டில் நிறுத்தப்பட்டது
படம்: எம்.சாம்ராஜ்
22 / 53
திண்டுக்கல் அருகே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
படம்: பு.க.பிரவீன்
23 / 53
24 / 53
25 / 53
திண்டுக்கல் - நத்தம் இடையே சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில்... சாலையில் தூசி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
படம்: பு.க.பிரவீன்.
26 / 53
27 / 53
28 / 53
29 / 53
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் சேலம் மாவட்டத்தில் பட்டுப்புடவை விற்பனை முடங்கியதால்... ரூ.100 கோடி மதிப்பிலான பட்டுப்புடவைகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் , படம் : எஸ்.குரு பிரசாத்
30 / 53
சேலம் - கொண்டலாம்பட்டி பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கைத்தறி பட்டுப் புடவை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். கரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருப்பதால்... நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைந்துபோன கவலையில் தனது கைத்தறியை சீர்படுத்திக்கொண்டிருக்கிறார் ஒரு செவாளி.
தகவல் , படம் : எஸ்.குரு பிரசாத்
31 / 53
சேலம் - கொண்டலாம்பட்டி பகுதியில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால்... ஒருபக்கம் அவர்களுடைய மூலாதாரமாக விளங்கும்... கைத்தறி மவுனித்திருக்க.... கவலைக்களுக்கிடையில் - சதுரங்க விளையாட்டில் ஈடுபடும் நெசவாள தம்பதி.
தகவல் , படம் : எஸ்.குரு பிரசாத்
32 / 53
கோவை மாநகர காவல்துறையின் சார்பில், சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு முகக்கவசம், கண்ணாடி, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.6.2020) நடந்தது. இதில் - பெண் காவலருக்கு உபகரணங்களை வழங்கிய பின்னர், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யும் காவல் ஆணையர் சுமித்சரண். அருகில் - துணை ஆணையர்கள் உமா, முத்தரசு மற்றும் காவல்துறையினர் .
படம் : ஜெ.மனோகரன்.
33 / 53
கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவை - சாயிபாபா காலனி காவல் நிலைய வளாகத்தில்... அமைக்கப்பட்ட சிறப்பு பந்தலின்கீழ்... அமர்ந்தவாறு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட காவல்துறையினர்.
படம் : ஜெ.மனோகரன்.
34 / 53
தன் வீட்டு மாடுகளுக்கு தீவனங்களை எடுத்து செல்லும் இந்த வாகனத்தை ஓட்டி செல்பவர்... கொஞ்சம்கூட ஆபத்தான பயணத்தைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
படம் : ஜெ.மனோகரன்.
35 / 53
கோவை வ .உ .சி உயிரியல் பூங்காவில் பறவைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பூங்கா ஊழியர்.
36 / 53
இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில்
சீன ராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு இன்று (18.6.2020) சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தியாகிகள் நினைவு தூணருகே... பா.ஜ.க-வினர் ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
படம்: எஸ்.குரு பிரசாத்.
37 / 53
38 / 53
லடாக் பகுதியில் நடந்த இந்தியா - சீனா மோதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் உருவ படத்துக்கு... இன்று (18.6.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாரதிய ஜனதா கட்சி மற்ற்ம் இந்து முன்னணியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
39 / 53
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ,கே.விஸ்வநாதன் ஆகியோர்... இன்று (18.6.2020) மாம்பலம் - காவல் நிலைய வளாகத்தில் நேற்று மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உடன் பாலமுரளியுடன் பணிபுரிந்த சக காவலர்கள்.
படங்கள்: ம.பிரபு
40 / 53
41 / 53
42 / 53
சென்னையில் நாளை (19.6.2020) முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால்... இன்று இரவு முதல்... சென்னை சாலைகளை போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடங்கிவிட்டனர். இதையொட்டி வடபழனி மேம்பாலத்தை இன்று போலீஸார் மூடினர்.
படங்கள்: ம.பிரபு
43 / 53
44 / 53
சென்னையில் நாளை (19.6.2020) முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - ஊரடங்கு தளர்வு நாட்களில்... அண்ணா சாலையில் குறைந்த அளவில் சென்ற வாகனங்கள... இன்று மதியம் உச்சி வெயிலிலும் பெருக்கெடுத்தோடின.
படம் : ம.பிரபு
45 / 53
46 / 53
சென்னை மாநகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு... பல நாட்கள் ஆனதால், காலாவதியான மதுப்பானங்களை சேகரித்து திருமழிசையில் உள்ள குடோனுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து - இன்று (18.6.2020) சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் காலாவதியான மதுபானப் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
படங்கள்: ம.பிரபு
47 / 53
48 / 53
49 / 53
50 / 53
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நாளை (19.6.2020) முதல் அமல்படுத்தப்படுவதால்... செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில்... இன்று போலீஸார் சோதனையை தீவிரப்படுத்தினர். இதனால் இப்பகுதியில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் குவிந்தன.
51 / 53
52 / 53
53 / 53