1 / 42
தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் மாவட்டங்களில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக... பேருந்துகளில் இருக்கைக்கு ஒரு நபர் மட்டுமே அமர்ந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சேலம் மாவட்டத்தில் - பெரும்பாலான நகரப் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றி அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை அமரவைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படங்கள்: எஸ். குருபிரசாத்
2 / 42
3 / 42
புதுச்சேரி சமூக நலத் துறை முலம்... புதுவையில் இந்திரா நகர் மற்றும் கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வானங்களை முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று (17.6.1010) வழங்கினார்.
படம்: எம்.சாம்ராஜ்
4 / 42
கரோனா தடுப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அம்மாநிலத்தில் இன்று (17.6.2020) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் - புதுவை மாநில அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், கோகுலகிருஷ்ணன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
5 / 42
சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இன்று (17.6.2020) அரசு மருத்துவமனை முன்பு கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. படம் எஸ். குரு பிரசாத்
6 / 42
சேலம் மாநகராட்சியில் வ.உ.சி பூ மார்க்கெட்டுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரையில் இங்குள்ள பூக்கடைகள் சேலம் - பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வருகிறது. இன்று (17.6.2020) மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படம்: எஸ். குரு பிரசாத்
7 / 42
கரைபுரண்டு ஓடும் காவிரி:
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்... வழி நெடுகிலும் இருபுறம் கரை தொட்டு ஓடுகிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில், திருச்சி மலைக்கோட்டைப் பின்னணியில் கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆறு.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
8 / 42
9 / 42
10 / 42
மதுரை - காளவாசலில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் திறக்கப்பட்டு... அதில் வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இன்று (17.6.2020) பாலத்துக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் - மின் விளக்குகளும் அமைக்கப்பட வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 42
வேலூரில் - காவல் துறையினர் சிலருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று (17.6.2020) கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர்.
படம்: வி.எம்.மணிநாதன்
12 / 42
13 / 42
14 / 42
15 / 42
16 / 42
மதுரை மாவட்டத்தில் - மொத்தம் 1,389 நியாய விலைக் கடைகள் உள்ளன. தற்போது இந்த நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்துமே எடை குறைவாக இருப்பதாகப் புகார் கூறி... கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம்... இன்று (17.6.2020) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மனு கொடுத்தனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 42
இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில்... இந்திய - சீன ராணுவ மோதலால் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்ததை அடுத்து - இன்று (17.6.2020) மதுரை - விக்டோரியா மன்றம் சார்பில் வீரமரணம் அடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
18 / 42
வேலூர் மாநகராட்சி அதிகாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து... மாநகராட்சி அலுவலக வாயில்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக - பொதுமக்கள் வருவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
படம்: வி.எம்.மணிநாதன்
19 / 42
திருநெல்வேலி - மேலப்பாளையம் கனரா வங்கி கிளையில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையொட்டி... இன்று (17.6.2020) வங்கி மூடப்பட்டு... பாதுகாப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
படம்: மு. லெட்சுமி அருண்
20 / 42
வேலூர் - தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் உள்ள இரு கட்டிடப் பகுதிகள்... கரோனா தொற்று பாதித்தோரை தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இன்று (17.6.2020) வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
21 / 42
22 / 42
திண்டுக்கல்லில் உள்ள திருச்சி சாலையில் சாலை விரிவாக்கப் பணிகளூக்காக இன்று (17.6.2020) மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.
படம்: பு.க.பிரவீன்
23 / 42
24 / 42
25 / 42
26 / 42
27 / 42
இன்று (17.6.2020) காலைவேளையில்... கோவை கிராஸ் கட் சாலையில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை... முக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி அனுப்பும் நகர போலீஸார்.
படம் : ஜெ .மனோகரன்
28 / 42
29 / 42
30 / 42
கோவை சித்திரைச்சாவடி நொய்யல் நதியைத் தூர்வாரும் பணி... இன்று (17.6.2020) முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.
படம் : ஜெ .மனோகரன்
31 / 42
32 / 42
லடாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது ... உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு... கோவையில் பாஜக-வினர் அஞ்சலி செலுத்தினர்.
படம் ; ஜெ .மனோகரன்
33 / 42
தொடர்ந்து பல காலமாக... உருது பேசும் தக்னி முஸ்லிம் மக்களை கோவை டவுன் காஜியாக நியமனம் செய்யவேண்டி... கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தக்னி பொதுநல சமூக நலன் உதவியாளர்கள்.
படம் : ஜெ .மனோகரன்
34 / 42
இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களை... உடனடியாக திறக்கக் கோரி.. இந்து மக்கள் கட்சி மற்றும் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர்... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முன்பு... மண் சோறு சாப்பிட்டனர்.
படம்: மு. லெட்சுமி அருண்
35 / 42
சென்னை உட்பட 4 மாவட்டங்களில்... முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து... இன்று (17.6.2020) சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் கடைகளுக்கு தேவையானப் பொருட்களை அதிக அளவில் வாங்க - பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மொத்த விற்பனை கடைகளில் குவிந்ததால் கூட்ட நெரிசலும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
பLம்: ம.பிரபு
36 / 42
37 / 42
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் - வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து - இன்று (17.6.2020) சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல.. சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் குழந்தைகளுடன் காத்திருக்கும்... வட மாநிலத்தோர்.
படம் : ம.பிரபு
38 / 42
39 / 42
சென்னை மாநகராட்சி கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம்... இன்று (17.6.2020) மாநகராட்சி அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் -
அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் , பாண்டியராஜன், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அதிகாரிகள் ஜெ.ராதாகிருஷ்ணன், கோ. பிரகாஷ் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பLம்; ம.பிரபு
40 / 42
விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 2 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து.... அங்கு இருக்கும் அனைவரையும் உடனடியாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கக் கோரி.... தமுமுக-வினர் இன்று (17.6.2020) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
41 / 42
42 / 42