Published on : 16 Jun 2020 18:22 pm

பேசும் படங்கள்... (16.06.2020)

Published on : 16 Jun 2020 18:22 pm

1 / 39
புதுச்சேரி - ஏஐடியுசி பாப்ஸ்கோ ஊழியர்கள் சங்கம் சார்பில் - தங்களுக்கு கடந்த 32 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்கக் கோரி.... தலைமைச் செயலகத்தின் முன்பு... ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள். படம்: எம்.சாம்ராஜ்
2 / 39
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள்... தங்களுக்கு வழங்கப்படாத 2 மாத சம்பளத்தை வழங்கக் கோரி... கஞ்சிக் காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள். படம்: எம்.சாம்ராஜ்
3 / 39
கடந்த 4 ஆண்டுகளாக - ஒரு அரசு வேலையையும் பூர்த்திசெய்யாத புதுவை மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து.... புதுவை வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுவாமிநாதன் எம்எல்ஏ மற்றும் பாஜக-வினர். படம்: எம்.சாம்ராஜ்
4 / 39
வேலூர் - சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டு.... அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் இன்று (ஜூன் - 16) மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து... அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று வேறு யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
5 / 39
6 / 39
கரோனா தொற்றுக் காரணமாக சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் தடைபட்டுக் கிடக்கின்றன. திருமண மண்டபங்களைத் திறக்கப்பட முடியாத நிலைமை. இந்நிலையில் - தன் வாழ்வாதாரத்தை இழந்த... மதுரை மாவட்ட ஒளிப்பதிவாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர்... தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி... இன்று (16.6.2020) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 39
வேலூரை அடுத்த ரங்காபுரத்தில் ஒரு குடும்பத்தினருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து... புலவர் நகரில் தடுப்பு அமைக்கப்பட்டு அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் இன்று (ஜூன் - 16) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டனர். படம்: வி.எம்.மணிநாதன்
8 / 39
9 / 39
10 / 39
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து... இன்று ( ஜூன் - 16) மதுரை மேல மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதி சந்திப்பில்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
11 / 39
மதுரை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பார்சல் எடுத்துச் செல்லும் குட்டி யானை வாகனத்தில் சமூக இடைவெளியின்றிச் செல்லும் பொதுமக்கள். படம்: கிருஷ்ணமூர்த்தி
12 / 39
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ’அரும்புகள்’ தன்னார்வ - தொண்டு நிறுவனத்தினர்... ஊர் ஊராகச் சென்று ‘கரொனா’ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்கள்... பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு நடனமாடுவதுடன் , வித்தியாசமாக வேடம் அணிந்து - பொதுமக்கள் இருக்கும் இடம் சென்று விழிப்புணர்வு கைப்பிரதிகளும் விநியோகம் செய்கின்றனர். படங்கள் மு. லெட்சுமி அருண்
13 / 39
14 / 39
15 / 39
16 / 39
வேலூரை - அடுத்த அலமேலுமங்காபுரம் ஏரியுரில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மேலும் பலருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் - தடுப்பு அமைத்து தனிமை படுத்தப்பட்டது. மேலும் - இன்று (ஜூன் 16) சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று வேறு யாருக்காவது காய்ச்சல், சளி இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
17 / 39
18 / 39
வேலூரை அடுத்த பாகாயம் துத்திப்பட்டு கிராமத்தில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதில் - பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய... நபர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று(ஜூன்- 16) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தன்னார்வலர்கள். படம்: வி.எம்.மணிநாதன்
19 / 39
சென்னை - அண்ணா சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு - பொதுமக்கள் அதிகளவில் கரோனாப் பரிசோதனைக்கு வருவதால்... அந்த வளாகம் முழுவதும் பாதுகாப்பு கருதி இன்று (ஜூன் -16) கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. படம் : ம.. பிரபு
20 / 39
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் - பொதுமக்கள் பொருட்கள் வாங்க... கடைகளின் கூடத் தொடங்கியுள்ளனர். இத்தனை நாட்கள் ஆள் நடமாட்டமின்றி - வெறிச்சோடிக் கிடந்த தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில்... இன்று (ஜூன் -16) கூட்டம் அதிகளவில் இருந்தது. படம்: ம.பிரபு
21 / 39
வட சென்னையில் அதிகளவில் கரோனா தொற்றுப் பரவுவதால்... அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா தொற்றுப் பாதிப்பால்... ஆக்ஸிஜன் அளவு குறைவதைக் கண்டறியும் புதிய கருவியை.... திருவெற்றியூர் பூங்கா பள்ளி பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஜூன் - 16) வழங்கினார் படம்: ம.பிர
22 / 39
நீர்வனப் பூங்கா அமைப்பதற்காக.... சிட்லபாக்கம் ஏரி ரூ.25 கோடி செலவில் பொதுபணித் துறையினரால் தூர்வாரப்படுகிறது. படங்கள்:எம்.முத்துகணேஷ்
23 / 39
24 / 39
25 / 39
26 / 39
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை மலைப் பகுதியில்... காய்த்துக் குலுங்காமல் குலுங்கும் பலாப்பழங்கள். படம்: பு.க.பிரவீன்
27 / 39
28 / 39
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை மலைப் பகுதியில்... இயற்கையாக விளையும் பொருள் அனைத்தும்... அனைவருக்கும் பொது என்பதை உணர்த்தும் வகையில் - காய்த்து தொங்கும் பலாப்பழங்களை ருசித்து உண்ணும் குரங்குகள். படம்: பு.க.பிரவீன்.
29 / 39
30 / 39
31 / 39
32 / 39
கடந்த சிலமாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து இன்று (ஜூன் -16) கோவை மரக்கடை என்.டி. சி ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலைத் தொழிலாளராகள். படம் : ஜெ .மனோகரன்
33 / 39
கோவை பாஜக அலுவலகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த.. விளக்க கையேட்டுப் புத்தகத்தை... இன்று (ஜூன் -16) பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட... பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பெற்றுக்கொண்டார். உடன், மாநில நிர்வாகி முருகானந்தம், கனகசபாபதி உள்ளிட்டோர். படம் : ஜெ .மனோகரன்
34 / 39
கோவை சிங்காநல்லூர் பகுதியில் திருச்சி சாலையின் நடுவில் அமைந்துள்ள நடு தடுப்புகளை ( சென்டர் மீடியன்) இன்று (ஜூன் -16) சுத்தம் செய்யும் தனியார் ஊழியர்கள். படம்: .ஜெ .மனோகரன்
35 / 39
கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் ஓடும் நொய்யல் ஆற்றில்... இன்று (ஜூன் -16) நுரைத்துக்கொண்டு கலந்தோடும் கழிவு நீர். படம் ; ஜெ .மனோகரன்
36 / 39
37 / 39
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 19-ம் தேதிமுதல்... முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - டாஸ்மாக் கடைகள் மூடப்பட உல்ளன. இதனால் மது அருந்துவோர் இன்றுமுதல் (ஜூன் -16) சரக்குகளை வாங்கி சேகரிக்கத் தொடங்கிவிட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், வண்டலூர் பகுதி டாஸ்மாக் கடைகளில் இன்று அணிவகுத்த மது அருந்துவோர். படங்கள்: எம்.முத்து கணேஷ்
38 / 39
39 / 39

Recently Added

More From This Category

x