Published on : 14 Jun 2020 18:18 pm

பேசும் படங்கள்... (14.06.2020)

Published on : 14 Jun 2020 18:18 pm

1 / 48
சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த... தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் - பட்டினப்பாக்கம் சினிவாசபுரம் பகுதியில் சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலம் சார்பில்... காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (14.6.2020) நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்
2 / 48
3 / 48
சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் - சாந்தோம் பவாணிக்குப்பம் பகுதியில் இன்று (14.6.2020) சென்னை மாதகராட்சி சார்பில் இப்பகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. படங்கள்: க.ஸ்ரீபரத்
4 / 48
5 / 48
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று (14.6.2020) சென்னை - காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில்... பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடல் காற்றில் பறக்கவிட்டு... மீன் வாங்கத் திரண்டிருந்தனர். படம்: க.ஸ்ரீபரத்
6 / 48
7 / 48
ஞாயிற்றுக் கிழமை என்பதால் சென்னை - காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில்... இன்று (14.6.2020) பொதுமக்கள் சமூக இடைவெளியை கடல் காற்றில் பறக்கவிட்டு... மீன் வாங்க... திரண்டிருந்தனர். அங்கு - விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய மீன்களை மீன் பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். படம்: க.ஸ்ரீபரத்
8 / 48
9 / 48
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று (14.6.2020) சென்னை - காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு.. ஏராளமான வாடிக்கையாளர்கள் மீன் வாங்க வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பில்... பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக சவுக்கை மரங்களைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் - பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடல் காற்றில் பறக்கவிட்டுத்தான்... மீன்களை வாங்கிச் சென்றனர். படம்: க.ஸ்ரீபரத்
10 / 48
11 / 48
கருணையின் ஜெராக்ஸ் காப்பிகள்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில்... சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் தற்போது அன்றாடப் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் - முடி திருத்தகங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து... புதுக்கோட்டையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர்... திருச்சி சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு முடித்திருத்தம் செய்து, அவர்களை குளிக்க வைத்து... புத்தாடை வழங்கினர். திருச்சி - புத்தூர் அரசு பொது மருத்துவமனை அருகே... பேருந்து நிழற்குடையில் கடந்த சில மாதங்களாக குளிக்காமல் அடர்ந்த தலைமுடியுடன் இருந்த சற்று மனநலம் குன்றிய இளைஞர் ஒருவருக்கு... இன்று (14.6.2020) தன்னார்வலர்கள் மொட்டை அடித்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்தனர். இதே போல் தினமும் நான்கு ஆதரவற்றோருக்கு இவர்கள் - மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று சுத்தம் செய்து வருகின்றனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
12 / 48
13 / 48
14 / 48
15 / 48
ஒரு பக்கெட் உண்மை: திருச்சி டி.வி.எஸ் டோல்கேட், சேதுராமன் பிள்ளை காலனி எதிரே ஒரு பிரியாணி கடையில் இன்று (14.6.2020) ஒரு பக்கெட் - சிக்கன் பிரியாணி ரூ. 150-க்கு கிடைக்கும்’ என்ற ஆஃபர் அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து... அக்கடையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து போலீஸார் வந்து பொதுமக்களை வரிசையில் ஒழுங்குப்படுத்த வேண்டியிருந்தது. ஆனாலும் - பிரியாணி பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்... நெருக்கமாகவே நின்றிருந்தனர். ’’ஆஃபரில் கிடைக்கும் பிரியாணிக்கு ஆசைப்பட்டு... நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருந்தால் சரி’’ என்று சாலையில் யாரோ ஒரு புண்ணியவான் முணுமுணுத்தபடி சென்றதில் ஒரு பக்கெட் உண்மை இருந்தது! தகவல் + படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
16 / 48
17 / 48
வேலூர் பகுதியில் - அரிசி மண்டியில் பணிபுரிவோர், காய்கறி வியாபாரிகள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து... வேலூர் - கிருபானந்த வாரியார் சாலை, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வகை கடைகளும் இன்று (ஜூன் - 14) மூடப்பட்டு... அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
18 / 48
19 / 48
20 / 48
21 / 48
22 / 48
23 / 48
சமீப நாட்களாக திருநெல்வேலிப் பகுதிகளில் அதிகளவில் காற்று வீசி வருகிறது. இதனால் - மரங்களும், மின்கம்பங்களும் சேதமடைந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டை அருகில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் உள்ள பெரிய அரச மரம் இன்று (14.6.2020) காற்றில் அசைந்து அருகில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை மின் துறை அதிகாரிகள்... அந்த இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த மரத்தை அகற்றி... நடவடிக்கை எடுத்தனர். இதனால் திருவனந்தபுரம் சாலையின் ஒரு பகுதி காவல்துறையினரால் மூடப்பட்டது. மின் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது. படங்கள்: மு. லெட்சுமி அருண்
24 / 48
25 / 48
26 / 48
சென்னையை அடுத்த வண்டலூரில் ஜிஎஸ்டி சாலையில் பாலம் வேலை நடைபெறுவதால் வண்டலூர்- கொல்கத்தா பைபாஸ் பாலத்துக்குக் கீழ் மாநகரப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.இனி எதிர்வரும் காலங்களில் வண்டலூர் பூங்காவில் இருந்து செல்ல பேருந்துகள் இங்கிருந்துதான் புறப்படும். படம்: எம்.முத்துகணேஷ்
27 / 48
28 / 48
29 / 48
30 / 48
திருநெல்வேலியில் - கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகின்றன. இந்நிலையில் - அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனை மற்றும் சமூகநல ஆர்வலர்கள், சில இளைஞர்கள் பொதுமக்களுக்கு இலவசமாககபசுரக் குடிநீரை வழங்கி வருகின்றனர். இதையடுத்து - திருநெல்வேலி ரயில்வே நிலையப் பகுதியில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் இன்று (12.6.2020) சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை எளியோருக்கு... சமூக நல ஆர்வலர்கள் கபாசுரக்குடி நீர் வழங்கினர். படங்கள்: மு.லெட்சுமி அருண்
31 / 48
32 / 48
33 / 48
34 / 48
சேலத்தில் இன்று (14.6.2020 ) காலை முதல் வானம் இயற்கை அழகுடன் நீல நிறமாய் காட்சியளித்தது. படத்தில் நீங்கள் பார்த்து ரசிப்பது - மேகக் கூட்டங்களுக்கு மேலும் அழகு சேர்த்த ஏற்காடு மலை. படங்கள்: எஸ். குரு பிரசாத்
35 / 48
36 / 48
37 / 48
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மீன் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியதால்... இன்று (14.6.2020) களைகட்டிய திண்டுக்கல் மீன் மார்க்கெட். படங்கள்: பு.க.பிரவீன்
38 / 48
39 / 48
40 / 48
41 / 48
தனது வழக்கமான பணியை தொடங்க இன்று (ஜூன் -14) காலையில் கதிர்ஒளி வீசி புறப்பட்ட சூரியன். இடம்: திண்டுக்கல் - சிறுமலை அடிவாரம். படம்: பு.க.பிரவீன்
42 / 48
மதுரை - வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர்... மாரியம்மன் தெப்பக் குளத்தில் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில்.... குளத்தின் நான்கு மூலைகளிலும் தண்ணீரில் மிதக்கும் குப்பை கூளங்களை மாநகராட்சியினர் அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
43 / 48
44 / 48
கோவை - பீளமேடு பகுதியில் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு கோவை மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில்... இன்று (12.6.2020) கரோனா நிவாரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. படம்: ஜெ.மனோகரன்
45 / 48
கோவை உக்கடம் மாநகராட்சி மீன் மார்க்கட்டில் முகக்கவசம் அணியாமல் - மீன் வாங்க வந்தோருக்கு... இன்று (14.6.2020) மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர். படங்கள்: ஜெ .மனோகரன்
46 / 48
47 / 48
கோவை - சி .எம். சி காலனியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வீடுகள் பழுதாகி... சேதம் அடைந்துள்ளாதால்... பழுதான வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் வீடு கட்டும் வரை - அப்பகுதியிலேயே அவர்களுக்கு தற்காலிக மாற்று வீடுகள் தயாராகி வருகின்றன. படங்கள்: ஜெ .மனோகரன்
48 / 48

Recently Added

More From This Category

x