Published on : 13 Jun 2020 18:19 pm

பேசும் படங்கள்... (13.06.2020)

Published on : 13 Jun 2020 18:19 pm

1 / 47
சென்னையில் கரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதையொட்டி... அதைக் கட்டுப்படுத்தும் விதமாக நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து - பல்வேறு மாவட்டங்களில் இருந்து 102 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு... சென்னை - பெருநகர மாநகராட்சி வளாகத்தின் முன்பு சாலையில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. படங்கள்: ம.பிரபு
2 / 47
3 / 47
சென்னையில் கரோனா தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில்... அதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 102 ஆம்புலன்ஸ்களின் செயல்பாடுகளை... இன்று (13.6.1010) தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
4 / 47
5 / 47
6 / 47
7 / 47
சென்னையில் - ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று (13.6.2020) நடைபெற்ற விழாவில் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை... சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். உடன் - சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர். படம்: க.ஸ்ரீபரத்
8 / 47
9 / 47
10 / 47
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து.... இன்று (13.6.2020) மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே - ஜான்சிராணி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக... கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 47
காற்றுள்ள போதே தூங்கிக் கொள்: "வேலை வெட்டி முன்ன மாதிரி இல்ல. எவ்வளவு நேரம்தான் வண்டிக்குள்ளேயே இருக்கிறது? துண்டை உதறிப் போட்டு செத்த நேரம் கட்டைய சாய்ப்போம்" என்று மதுரை வைகை ஆற்றுப் பாலத்தின் கீழே படுத்தவர்கள்... குளிர்ச்சியான வைகைக் காற்றில் அசந்து உறங்கிவிட்டார்கள் போலும். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 47
டெல்லி வன்முறை வழக்கில் காவல் துறையின் ஒரு சார்புத் தன்மை மற்றும் சி சி ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கைதைக் கண்டித்து... இன்று (13.6.2020) மதுரை கோரிப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில்... போராட்டம் நடைபெற இருந்த நேரத்தில் போராட்டக்காரர்களைப் போலீஸார் கைது செய்தனர் . படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
13 / 47
14 / 47
15 / 47
16 / 47
அரசு அலுவலகங்களில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... இன்று (13.6.2020) சென்னை - தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கிருமிநாசினி திரவம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் படம்: க.ஸ்ரீபரத்
17 / 47
18 / 47
19 / 47
20 / 47
திண்டுக்கல் பகுதியில் - இன்று (!3.6.2020) அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கருத்தில் கொள்ளாது நெருக்கமாக கூட்டம் கூட்டமாக.... பயணம் செய்யும் பொது மக்கள். படம்: பு.க.பிரவீன்
21 / 47
22 / 47
23 / 47
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்... ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால்... தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரிக்கையுடன்... வேலூர் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்தினர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
24 / 47
25 / 47
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக... ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களையும்... கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என - தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (13.6.2020) வேலூரில் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுத்தப்படுத்தப்படும் பணியில் வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். படங்க;: வி.எம்.மணிநாதன்
26 / 47
27 / 47
28 / 47
29 / 47
வேலூரில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக... மக்கள் அதிகளவில் கூடும் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டை... தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக - வணிகர் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம்... வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமையில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. படம்: வி.எம்.மணிநாதன்
30 / 47
வழி பிறக்குமா என்ற ஏக்கத்துடன் திருநெல்வேலி மக்கள்: புகை மண்டலமும் அதற்கிடையில் முட்டி மோதி செல்லும் வாகனங்களும் நகர்கின்ற இந்த இடம் திருநெல்வேலி டவுனுக்குச் செல்லும் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை. இந்தச் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது என்று இங்குள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை அரசுக்கு மனு அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். "திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி ஆகி என்ன ஆகிவிடப் போகுது? பொதுமக்கள் இப்படி அவதிப்படுவதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது " என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம் தூசு படலத்தால் சுவாசக் கோளாறு வருகிறது, மறுபக்கம் வாகன நெருக்கடி. அப்புறம்... கரோனா தொற்றுப் பரவல்... இப்படி மூன்று பக்கமும் இப்பகுதி பொதுமக்கள் கேடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிற... இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்குமா? படங்கள் : மு. லெட்சுமி அருண் .
31 / 47
32 / 47
33 / 47
மேட்டூர் அணையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்குக் குறையாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இன்று (13.6.2020) அணையின் நீர்மட்டம் 101.03 அடியாக உள்ளது. படம் : எஸ்.குரு பிரசாத்.
34 / 47
35 / 47
36 / 47
நெல்லையில் சாலையில் மாடுகள் தொல்லை! கரோனா ஊரடங்கு தளர்வுகள் நீங்கி வாகனங்கள் அதிகமாக சாலைகளில் செல்ல ஆரம்பித்துவிட்டன. அதே சமயத்தில் வாகனகளுக்கு இடையில் விலங்குகளும் நகர ஆரம்பித்துவிட்டன. திருநெல்வேலி நகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் விலங்குகள் திரிவது வாடிக்கை, இதனால் விலங்குகளால் வாகன ஓட்டிகளும் , வாகனங்களால் விலங்குகளுக்கும் ஆபத்துகள் ஏற்படுகின்றன. அதிகபட்சமாக இரு பக்கமும் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன . சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதால் விலங்குகளைப் பிடித்து அடைப்பதும் பின்பு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது . இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்களும் சமூக நல ஆர்வலர்களும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலையில் நீதிமன்றம் அருகே நடுவிலே ஓய்வு எடுக்கிறது மாடு . ' இது எங்க ஏரியா உள்ள வராதீங்க' என்று சொல்கிறதோ? படம்: மு. லெட்சுமி அருண்
37 / 47
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று (13.6.2020) சேலம் - நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் இல்லம் அருகே கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. படம்: எஸ்.குரு பிரசாத்
38 / 47
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்.. தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவின்படி... இன்று (12.6.2020) கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தூய்மைப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். படம்: ஜெ.மனோகரன்
39 / 47
40 / 47
ஸ்மார்ட் சிட்டியின் ஒருபகுதியாக கோவை வாலாங்குளத்தில் மிதவை நடை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது . படம்: ஜெ .மனோகரன்
41 / 47
42 / 47
43 / 47
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி... இன்று (12.6.2020) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அலுவலர்கள் அனைவரும் - குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றும் உறுதிமொழியை ஏற்றனர். படம்: ஜெ .மனோகரன்
44 / 47
புதுச்சேரி - ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் சில மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து... அவர்கள் தங்கியிருந்த மருத்துவர்கள் குடியிருப்பு பகுதி முழுவதும் இன்று (13.6.2020) அடைக்கப்பட்டுள்ளது. படம்: எம்.சாம்ராஜ்
45 / 47
46 / 47
மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை வழங்கக் கோரி... இன்று (13.6.2020) புதுச்சேரி - உப்பளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையில் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற மீனவர்களை புதுவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். படம்: எம்.சாம்ராஜ்
47 / 47
''என் மேல் வெயில் அடிக்கலாம்... என் மேல் மழை பொழியலாம்... என் மேல் இடிகூட இறங்கலாம்.... ஆனால் என் கண்ணானக் கண்ணே... வெயிலின் ஒருதுளி ஒளிகூட உன் மீது விழ... இந்த அம்மா சம்மதிக்க மாட்டேன்... என் செல்லமே’’ - என்று சொல்லாமல் சொல்லி - புதுச்சேரி காந்திநகர் பகுதியில் இன்று (13.6.2020) தாய் ஒருவர் தன் பிள்ளையை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள துணியால் முடிக் கொண்டுச் செல்கிறார். படம்: எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x