Published on : 12 Jun 2020 16:49 pm

பேசும் படங்கள்... (12.06.2020)

Published on : 12 Jun 2020 16:49 pm

1 / 38
இது கோடைக்காலம். வெயில் அதன் வேலையை காட்டி வாட்டி வதக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் - புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில தினங்களாக... வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன்... குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இதையடுத்து - இன்று (12.6.2020) நகரப் பகுதியின் ஆம்பூர் சாலையில் பெய்த மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் நனைந்தபடி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள். படம்: எம்.சாம்ராஜ்
2 / 38
3 / 38
4 / 38
சாய்ந்தாடம்மா... சாய்ந்தாடு: தமிழர்களின் வீட்டில் சிறு குழந்தைகள் நடக்க தொடங்கும் நேரத்தில்... மரக் குதிரையில் குழந்தைகளை விளையாட வைப்பார்கள். இந்த மரபார்ந்த பழக்கம்... இன்றைய நவீன நாட்களில் கிராமப்புறங்களில் கூட காணாமலே போய்விட்டது. இந்நிலையில் - புதுச்சேரி காமராஜர் சாலை பிருந்தாவனம் பகுதியில்... மரக்குதிரைளைத் தயார் செய்து அதற்கு வண்ணம் தீட்டும் பணியில் செல்லபெருமாள், பெருமாள் ஆகிய தொழிலாளர்கள் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இத்தொழிலாளர்கள் பேசும்போது - ‘’சார்... இந்த கரோனா நாட்களில் தாங்கள் மறந்த பாரம்பரிய விஷயங்களை தமிழர்கள் மறுபடியும் தங்கள் வீடுகளில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்போது - நிறைய பேர் விரும்பி வந்து இந்த மரக்குதிரைகளை வாங்கிச் செல்கின்றனர்’’ என்றனர். தகவல் + படம்: எம்.சாம்ராஜ்
5 / 38
6 / 38
கரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கு அமலில் இருப்பதால்... சமூகத்தில் நடக்கும் மதச் சடங்குகள் தற்போது அதிகளவில் நடைபெறுவதில்லை. அதனால்... புரோகிதம் செய்வதை தொழிலாகக் கொண்டோர் வருமானமின்றி சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்... இன்று (12.6.2020) சென்னை - மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் நட்ராஜ்... புரோகிதர்களுக்கு கரானோ நிவாரணப் பொருட்களை வழங்கினார். படம்: க.ஸ்ரீபரத்
7 / 38
8 / 38
திருநெல்வேலி - பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் உள்ள கடைகளில்... இன்று (12.6.2020) உணவு பாதுகாப்பு அதிகாரிகள் - உணவுப் பொருட்களின் காலாவதி மற்றும் தரத்தை ஆய்வு செய்தனர். படம் : மு. லெட்சுமி அருண்
9 / 38
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால்... இரு மாவட்டங்களின் எல்லையான பிள்ளையார் குப்பம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் - காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தடுப்பு அமைத்து - சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களைக் கண்காணித்து... தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக - அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (12.6.2020) வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. படம்: வி.எம்.மணிநாதன்
10 / 38
11 / 38
தமிழகத்தில் மீண்டும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி... இன்று (12.6.2020) நெல்லையப்பர் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் முழங்காலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு. லெட்சுமி அருண்
12 / 38
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (12.6.2020) கோவை - சாய்பாபா காலனியில் ’பல சமய நல்லுணர்வு இயக்கம்’ சார்பில்... நடைபெற்ற பேரணியில்... விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் அந்த இயக்கத்தினர். படம்: ஜெ .மனோகரன்
13 / 38
கோவை மாநகராட்சியின் ரேஸ்கோர்ஸ் பகுதியில்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாதிரி சாலை திட்டப் பணியை இன்று (12.6.2020) உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி தொடங்கி வைத்தார். உடன் - கோவை ஆட்சியர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் பலர். படம்: ஜெ .மனோகரன்
14 / 38
15 / 38
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் ஆட்டோ அரங்க கிளை சார்பில்... வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (12.6.2020) ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டன. படம்: வி.எம்.மணிநாதன்
16 / 38
கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான உதவி தொகை இன்னும் முழுமையாக அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை, எனவே அவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி.... இன்று (12.6.2020) மதுரை - எல்லீஸ் நகர் தொழிலாளர் நலத் துறை அலுவலம் முன்பு சிஐடியு சங்கக் கட்டிடத் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
17 / 38
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (12.6.2020) மதுரை - புதூரில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
18 / 38
மதுரை - ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் பணியாற்றுவோருக்கு... மருத்துவமனை தலைவர் சங்குமணியின் ஆலோசனைப்படி இன்று (12.6.2020) சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் - செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள் மகேஸ்வரி, செல்வ நாராயணன், ரமணி சொர்ணதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19 / 38
இந்த ஆண்டு - குறுவை சாகுபடியை மேற்கொள்ள காவிரி டெல்டா பாசனத்துக்காக... மேட்டூர் அணையில் இருந்து இன்று (12.6.2020) முதல்வர் பழனிசாமி தண்ணீரைத் திறந்து வைத்து மலர்தூவி வரவேற்றார். உடன் - அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சியர் ராமன் உட்பட பலர். படம்: எஸ்.குரு பிரசாத்
20 / 38
இந்த ஆண்டு - குறுவை சாகுபடியை மேற்கொள்ள காவிரி டெல்டா பாசனத்துக்காக... மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைக்க இன்று (12.6.2020) முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணைக்கு வந்திருந்தார். உடன் - அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சியர் ராமன் உட்பட பலர். படம்: எஸ்.குரு பிரசாத்
21 / 38
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக (12.6.2020) தமிழக முதல்வரால் திறந்துவிடப்பட்ட தண்ணீர்.... அணையின் எட்டு கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் பாய்ந்தோடியது. படம்: எஸ்.குரு பிரசாத்
22 / 38
23 / 38
விளைச்சல் குறைவு காரணமாக... தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (12.6.2020) திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தக்காளிப் பழங்கள். படம்: பு.க.பிரவீன்
24 / 38
தூத்துக்குடி மாவட்டம் - ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல் பாண்டி. இவர், தான் யாசகமாகப் பெற்ற ரூ.10 ஆயிரத்தை கடந்த மே 18-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நிதியாக வழங்கினார். இதைத் தொடர்ந்து இன்று (12.6.2020) தான் யாசகம் செய்த ரூ.10 ஆயிரம் தொகையை மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
25 / 38
சென்னை - மாதவரத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பழ அங்காடியில்.... கடைகளின் எண்ணிக்கையை மாநகராட்சியினர் அதிகரிக்கவுள்ளனர். இதையடுத்து... பழ வியாபாரிகளுக்கிடையே கடைகள் ஒதுக்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடை ஒதுக்கீட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்க்கக் கோரி... இன்று (12.6.2020) பழ மொத்த வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ம.பிரபு
26 / 38
மருத்துவ உபகரணங்கள் மொத்த விற்பனைக்கு புகழ்பெற்ற இடம் - சென்னை பாரிமுனை உள்ள நயினியப்பன் தெரு. அத்தியாவசியத் தேவை பட்டியலில் மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் முதலிடத்தில் இருப்பதால்.... கரோனா தடுப்புக்காக - ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்திலும் இத்தெருவில் உள்ள கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. ஆனால்... சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு... ஏராளமானோர் தினந்தோறும் இங்கு திரண்டதால்... முதல்முறையாக இன்றுமுதல் 3 நாட்களுக்கு இப்பகுதியில்... முழு கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் - சென்னையில் மருத்துவ உபகரணங்கள் பற்றாகுறை ஏற்பட வாய்புள்ளதாகக் கூறப்படுகிறது. படங்கள் : ம.பிரபு
27 / 38
28 / 38
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக... சென்னை - கோயம்பேடு மலர் அங்காடியில்... பூ மார்கெட் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து - பாரிமுனை பூக்கடை அருகே பத்ரியன் தெருவில் பூ வாங்குவோர் கூட்டம் அதிகரித்து வந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நாள்தோறும் ஏராளமானோர் இப்பகுதியில் திரள்வதையடுத்து... இப்பகுதியில் பூ கடைகள் வைக்க தடைவிதிக்கப்பட்டு.... தடுப்புக்கள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். படங்கள்: ம.பிரபு
29 / 38
30 / 38
31 / 38
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கில் தடைபட்டிருந்த ரயில் சேவை.... மீண்டும் தமிழகத்தில் இன்றுமுதல் (12.6.2020) இயங்கியது. திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வந்த பல்லவன் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு வெளியே அனுப்பப்பட்டனர். கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு... பயணிகள் வருகையால்... செங்கல்பட்டு ரயில் நிலையம் மீண்டும் இன்றூ களைகட்டியிருந்தது. படங்கள்: எம்.முத்து கணேஷ்
32 / 38
33 / 38
34 / 38
35 / 38
36 / 38
37 / 38
38 / 38
கரோனா தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால் பொது ரயில் போக்குவரத்து... ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் - 75 நாட்களுக்குப் பிறகு தமிழகத்துக்குள் மீண்டும் ரயில் போக்குவரத்து இன்று 912.6.2020) தொடங்கியது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர் வரை கைகளில் சானிட்டைசரைத் தடவிக்கொண்டதை... அனைவரும் வியப்புடன் பார்த்தனர். படம்: எம்.முத்துகணேஷ்

Recently Added

More From This Category

x