Published on : 11 Jun 2020 17:55 pm

பேசும் படங்கள்... (11.06.2020)

Published on : 11 Jun 2020 17:55 pm

1 / 35
சென்னையில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயில்... நேற்று சற்று தணிந்து... இன்று (11.6.2020) காலை முதல் மழைத் தூவும் பாவனையுடன்... ஆகாயம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இடம்: சென்னை கடற்கரையில் - கலங்கரை விளக்கம் பகுதி... படம்: க.ஸ்ரீபரத்
2 / 35
கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் - சென்னை கொத்தவால் சாவடி மார்கெட் பகுதியில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் வியாபாரிகள், கை வண்டி இழுப்போர், மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள், சாலையோரம் கடை வைத்திருப்போர்... என ஏராளமான கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை இந்த மார்கெட்டை சுற்றித்தான் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். தற்போது - மார்கெட் மூடப்பட்டுள்ளதால்... தேனீ போல் சுற்றித் திரிந்த இந்தத் தொழிலாளர்கள்... ஒரு குவளைத் தேநீருக்குக்கூட வழியின்றி சிரமப்படுகின்றனர். இருப்பினும் - தங்கள் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள பரமபதம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு... வாழ்கையில் ஏற்றம் - இறக்கம் எல்லாமே சகஜம்தான் என இக்கரோனா காலத்தை எதிர்கொள்கின்றனர். தகவல் + படம்: க.ஸ்ரீபரத்
3 / 35
நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக... திருவானைக்காவல் - மாம்பழச் சாலையில்... சிக்னல் அருகேயுள்ள வீர ஆஞ்சநேயர் கோயில் அப்புறப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து... அக்கோயில் அப்புறப்படுத்தப்படுவதை கண்டித்து - இன்று (11.6.2020) திருச்சி - நெடுச்சாலைத் துறை அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
4 / 35
நொறுக்குத் தீனிகள் அடைத்து விற்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு... தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் - திருச்சியில் பல கடைகளில் நொறுக்குத் தீனிகள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்... விற்பனைக்காக - சரம் சரமாக தொங்கவிடப்பட்டுள்ளன. படம்: ஜி.ஞானவேல்முருகன்
5 / 35
6 / 35
7 / 35
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தங்கள் அன்றாடக் குடும்பச் செலவுகளை சமாளிக்க... வேலூர் பகுதி சாலையோரங்களில் முகக்கவசங்களை விற்பனை செய்யும் இளைஞர். படம்: வி.எம்.மணிநாதன்
8 / 35
வேலூர் பகுதிகளில் இன்று (11.6.2020) காலைமுதல் வானில் கருமேகக் கூட்டம் சூழ்ந்து... அவ்வப்போது சிறுமழைப் பெய்தது. படம்: வி.எம்.மணிநாதன்
9 / 35
10 / 35
சேலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில்... புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று (11.6.2020) மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். உடன் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக், மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெங்கடாச்சலம், மனோன்மணி உட்பட பலர். படம்: எஸ்.குருபிரசாத்
11 / 35
சேலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்... கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று (11.6.2020) திறந்து வைத்து... வாகனப் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக், மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெங்கடாச்சலம், சக்திவேல் உட்பட பலர். படம்: எஸ்.குரு பிரசாத்
12 / 35
சேலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்... இன்று (11.6.2020) கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி... பத்திரிகையாளர்களை சந்தித்தார். படம்: எஸ்.குரு பிரசாத்
13 / 35
சேலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்... இன்று (11.6.2020) கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதி. இடம் : செலம் - ஐந்து ரோடு படம்: எஸ்.குருபிரசாத்
14 / 35
15 / 35
16 / 35
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு... இன்று (11.6.2020) ஐ. என். டி. யு. சி சங்கம் சார்பில் - பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
17 / 35
மதுரை - ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில்... கரோனா காலத்தில் 1,413 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதையொட்டி... மருத்துவமனை டீன் சங்குமணி தலைமையில் - இன்று (11.6.2020) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது . படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
18 / 35
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்... இந்த கரோனா பேரிடர் காலத்தில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், பரிசோதனை மைய ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்கு 3 நேர உணவையும் ...தொடர்ந்து 75 நாட்களாக வழங்கி வருகின்றன சில நல்ல உள்ளங்கள். மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.எம். அன்புநிதி , வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் சுல்தான் சேட், வில்லாபுரம் அரிமா சங்கத் தலைவரும் சமூக ஆர்வலருமான காதர் மைதீன், சேக் அப்துல் சட்டர், செய்யது சாஹதீன், சீனி முகமது ஆகியோர்தான் அந்த நல்ல உள்ளங்கள். இந்த அன்பர்களின் - சமூக சேவையை பாராட்டி... இன்று (11.6.2020) அரசு ராஜாஜி மருத்துவமனை தலைவர் சங்குமணி நன்றி தெரிவித்து, சால்வை போர்த்தி... சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தினார். உடன் - மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹேமந்த் குமார் மற்றும் கரோனா தலைமை மருத்துவரும் நுரையீரல் நலத் துறை தலைவர் ஆர்.பிரபாகரன் ஆகியோர் . படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
19 / 35
திருநெல்வேலி - அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில்... ’கோவிட் 19 - திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற - கரோனா தொடர்பான சிகிச்சை மற்றும் அதை எதிர்கொண்ட விதம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (11.6.2020) நடைபெற்றது . இதில் - மருத்துவமனை தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் கண்ணன் மற்றும் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர் . இதில் - காணொலிக் காட்சி மூலம் இம்மருத்துவமனை ஆற்றியிருக்கும் சேவைகள் மற்றும் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது . படம்: மு. லெட்சுமி அருண்
20 / 35
21 / 35
கரோனா பேரிடர் பாதிப்பால் தமிழகத்தில் - பல்வேறு தொழில்களும் அதில் ஈடுபட்ட தொழிலாளர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இந்நிலையில் - மதுரை சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழுவினர் சார்பில்... இன்று (11.6.2020) மதுரை - மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கடன் விண்ணப்பம் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
22 / 35
திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் சாலையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று (10.6.2020) நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் - மரக்கடை மற்றும் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை உள்ளிட்ட கடைகள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இத்தீயில் - சில லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. படங்கள்: மு. லெட்சுமி அருண்
23 / 35
24 / 35
25 / 35
தமிழகத்தில் வேலை பார்த்துவந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர்... கரோனா அச்சத்தில் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிவிட்டனர். இந்நிலையில் - தமிழகத்தில் அநேக இடங்களில் வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறை காரணமாக சென்னை - பெருங்களத்தூர் பகுதியில் விரைவாக கட்டப்பட்டுவந்த மேம்பாலப் பணிகள் பாதியிலேயெ தடைபட்டு நிற்பதால்... ’வேலையாட்கள் தேவை’ என தமிழிலும் இந்தியிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. படம்: எம்.முத்து கணேஷ்
26 / 35
புதுச்சேரி - சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மார்ச், ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கக் கோரி... சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில்... சுற்றுலாத் துறை இயக்குநர் அலுவலகம் முன்பு - இன்று (11.6.2020) சமூக இடைவெளியுடன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
27 / 35
அரசு அலுவலகங்களில் 2-வது வார சனிக்கிழமைதோறும்... சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் என அரசு அறிவித்துள்ள நிலையில்... பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு - சென்னைையில் உள்ள காவல் நிலையங்களை துய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று (11.6.2020) சென்னை - வேப்பேரி காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. படங்கள்: ம.பிரபு
28 / 35
29 / 35
30 / 35
31 / 35
கோவை சிங்காநல்லூர் இ. எஸ். ஐ மருத்துவமனையில் இன்று (11.6.2020) சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். உடன் - அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் மருத்துவமனை தலைவர் நிர்மலா, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர். படங்கள்: ஜெ மனோகரன்
32 / 35
33 / 35
கோவை - ராஜவீதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் உள்ள தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வளாகத்தில்... பெரிய கடைகள், சிறிய கடைகள் என மொத்தம் 421 கடைகள் அமைந்துள்ளன. இதன் அருகே - பெரியகடை வீதியையும் ராஜவீதியையும் இணைக்கும் இணைப்பு சாலையான தென்வடல் வீதியில் சாலையை ஆக்கிரமித்து 88 கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆக்கிரமிப்பு கடைகளால்... போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி... இக்கடைகளை அகற்ற வேண்டும் என - சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து 88 ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற சென்னை - உயர்நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவின்பேரில், மாநகராட்சி நகரமைப்புத் துறையினர் காவல்துறையினரின் உதவியுடன் மேற்கண்ட தென்வடல் வீதியில் இருந்த 88 ஆக்கிரமிப்புக் கடைகளின் கட்டமைப்புகளை இன்று (11.6.2020) இடித்து அகற்றினர் படங்கள் : ஜெ .மனோகரன்
34 / 35
35 / 35

Recently Added

More From This Category

x