1 / 51
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ .அன்பழகன்... கரோனா தொற்று காரணமாக காலமானதை அடுத்து - மதுரையில் திமுகவினர் சார்பில்... அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தளபதி, வேலுச்சாமி, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் ஆகியோர் மறைந்த அன்பழகனுக்கு இன்று (10.6.2020) அஞ்சலி செலுத்தினர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 51
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களையும் மீண்டும் திறக்கக் கோரி... இந்து மக்கள் கட்சியின் சார்பாக - இன்று (10.6.2020)
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்குக் கோபுர வாசல் முன்பு - ஒரு காலில் நிற்கும் போராட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 51
தமிழகத்தில் - கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் உள்ள மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் மட்டும்... தனியார் பேருந்துகள் இயங்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து சேலத்தில் இன்று (10.06.2020) முதல் தனியார் பேருந்துகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க தொடங்கின. சேலம் - பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் சமூக இடைவெளியுடன்... பாதுகாப்பாக பயணம் மேற்கொண்ட பயணிகள்.
படம்: எஸ். குரு பிரசாத்
4 / 51
5 / 51
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தாலும்... இதில் - சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 10) முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையொட்டி... வேலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளித்து அவை சுத்தம் செய்யப்பட்டன. மேலும் - பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என உடல் வெப்ப அளவு கண்டறியப்பட்டு... தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன.
படம்: வி.எம்.மணிநாதன்
6 / 51
7 / 51
8 / 51
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை உடனடியாக திறக்கக் கோரி... வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயில் முன்பாக... ஒற்றைக் காலில் நிற்கும் நூதனப் போராட்டத்தில் இந்து முன்னணியினர் இன்று (10.6.2020) ஈடுபட்டனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
9 / 51
கோயில் வாசலில் வளைகாப்பு:
மதுரை கருப்பாயூரணி பகுதியில்... வசிப்பவர்கள் முத்துச்சாமி - பிரியங்கா தம்பதி. இவர்களுக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது பிரியங்கா இரண்டவதாக கற்பமாக உள்ளார். முத்துச்சாமி - பிரியங்கா குடும்பத்தில் எப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வளைகாப்பு விழா நடத்துவதுதான் வழக்கம். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து - ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால்... மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (10.6.2020) காலையில்...
- பிரியங்காவின் வளைகாப்பு இக்கோயிலின் வெளி பிரகாரத்தில் எளிய முறையில்... சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இருப்பினும் வளைபாப்பு போட்டுக்கொள்ளும் பெண் முகக்கவசம் அணியாமல் இருந்ததை அவ்வழியே சென்றவர்கள் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 51
கரோனா தொற்றுக் காரணமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை - குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தகவலறிந்து வந்த - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மறைந்த அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர். தகவலறிந்த அக்கட்சியின் தொண்டர்களும் அம்மருத்துவமனையின் முன்பு திரண்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
11 / 51
12 / 51
13 / 51
14 / 51
கடந்த வாரம் புதுச்சேரி - வில்லியனுாரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்த நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள்... இறந்தவரின் உடலை குழிக்குள் துாக்கி வீசியதாகக் கூறி ... 3 பேரை புதுவை அரசு பணிநீக்கம் செய்தது.
இதையடுத்து - ஃபிரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற சமூக சேவை அமைப்பினர்... புதுச்சேரி பகுதியில் கரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை மருத்துவமனையில் இருந்து அடக்கம் செய்யும் இடத்துக்கு அல்லது எரியூட்டும் இடத்துக்கு எடுத்துச்செல்லும் பொறுப்பை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டனர்.
படம்: எம்.சாம்ராஜ்
15 / 51
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இன்று (10.6.2020) மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு... கரோனா தொற்று இருந்ததாக உறுதி செய்யப்பட்டது. இன்று காலையில் அவரது உடலை புதுவை - சுகாதாரத் துறையினர் கருவடிக்குப்பம் மின் தகன மையத்துக்கு எரியூட்ட கொண்டு வந்தனர். இந்நிலையில் - அம்முதியவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் எவரும் பொறுப்பெற்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: எம்.சாம்ராஜ்
16 / 51
வேளாண் விளைப்பொருட்களுக்கான விலை நிர்ணயத்தை... தனியாருக்கு விடப்படுவது தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து... இன்று (10.6.2020)
வேலூர் - தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினரை.. காவல்துறையினர் கைது செய்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
17 / 51
18 / 51
சேலம் மாவட்டத்தில் - கரோனா தொற்றுப் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக... அரசுப் பேருந்துகளுக்கு தினமும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்பே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் - இன்று (10.06.2020) சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நவீன இயந்திரம் மூலம் மருந்து தெளிக்கும் மாநகராட்சிப் பணியாளர்கள்.
படம்: எஸ்.குரு பிரசாத்
19 / 51
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் கோயில்களை திறக்கக் கோரி... இன்று (10.6.2020)
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஒற்றைக் காலில் நின்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்; எஸ்.குரு பிரசாத்
20 / 51
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு... குரோம்பேட்டை - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று (10.6.2020) அதிகாலையில் காலமானார். அவரது உடல் தியாகராய நகரில் உள்ள கண்ணம்மா பேட்டை மயானத்துக்கு இன்று மாலையில் நல்லடக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது. உடன் அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
படம்: க.ஸ்ரீ பரத்
21 / 51
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு... குரோம்பேட்டை - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று (10.6.2020) அதிகாலையில் காலமானார். இன்று மாலையில் அவரது உடல் தியாகராய நகரில் உள்ள கண்ணம்மா பேட்டை மயானத்துக்கு இன்று மாலையில் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
படம்: க.ஸ்ரீ பரத்
22 / 51
23 / 51
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி .ஜானகிராமனின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (10.6.2020) அவரது உருவப் படத்துக்கு... முதல்வர் நாராயணசாமி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
படம்: எம்.சாம்ராஜ்
24 / 51
புதுச்சேரி மாநிலத்தியில் கடந்த வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் ஏற்றப்பட்டது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் - புதுச்சேரி திப்புராப்பேட்டை பகுதியைச்
சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலு... சமீப நாட்களில்... தனது
ஆட்டோவில் வாடிக்கையாளர்கள் எவரும் பயணிக்காததால்... வாழ்வாதாரத்தை இழந்த அவர் - தனது
ஆட்டோவை
பழங்கள் விற்கும் வண்டியாக மாற்றி தனது வாழ்க்கை வண்டியை ஓட்டி வருகிறார்.
படம்: எம்.சாம்ராஜ்
25 / 51
விருதுநகர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 4
மாவட்டங்களைச்
சேர்ந்த இரண்டாம் நிலை பயிற்சி காவலர்கள் 285 பேருக்கு... ஜூன் 1-ம் தேதியில் இருந்து... வேலூர் கோட்டையினுள்ளே
உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி - இன்று (10.6.2020) நடந்த - பயிற்சியில் புழுதிப்பறக்க... பறக்க
வீரநடை போட்டு வந்த பயிற்சி காவலர்கள்.
படம்: வி.எம்.மணிநாதன்
26 / 51
27 / 51
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள -
ஈஸ்வரதாஸ் தெருவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கரோனா தொற்று பரவியுள்ளதால்..
அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே - மேலும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (10.6.2020) அந்தத் தெரு மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினரால் -
தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
படம்:
க.ஸ்ரீபரத்
28 / 51
வேலூர் -
சைதாப்பேட்டை பகுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து
வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியின் -
சுருட்டுக்காரத் தெரு உட்பட பல தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு...
அப்பகுதி - தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று (10.6.2020) காலையில்...
அப்பகுதியில் உள்ள அஞ்சல் நிலையம் மற்றும் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்
29 / 51
30 / 51
31 / 51
32 / 51
கேரளாவில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு இன்று (10.6.2020)
விற்பனைக்காக பலாப்பழங்கள்
லாரிகளில்
வந்திறங்கின. ஒவ்வொரு
பலாப்பழமும் பழத்தின் அளவுக்கு
ஏற்ப ரூ.100 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.
படம்: வி.எம்.மணிநாதன்.
33 / 51
34 / 51
35 / 51
தமிழகத்தில் -
மழைக்காலம் தொடங்கவிருப்பதால்...
திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சி சார்பாக கொசுமருந்து புகையடிக்கும் பணி இன்று (10.6.2020)
தொடங்கியது . இந்நிலையில் -
திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உடையணிந்து கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
படங்கள்: மு. லெட்சுமி அருண்
36 / 51
37 / 51
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக- தமிழகத்தில்...
144 ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் அமலில் இருக்கும் நிலையில்...
மூடப்பட்டிருக்கும் உடற் பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி... இன்று (10.6.2020)
உடற் பயிற்சி மைய
உரிமையாளர்கள்...
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
38 / 51
இன்று (10.6.2020) அதிகாலையில் சென்னை - குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைபாடால்
தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.
அன்பழகன் காலமானார். இதையொட்டி - இன்று மாலை
சென்னை -
அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த
ஜெ.அன்பழகனின் உருவப்படத்துக்கு... அக்கட்சியின் தலைவர் மு.க.
ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு , தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி...
அஞ்சலி செலுத்தினர்.
படம்: ம.பிரபு
39 / 51
கரோனா தடுப்புக்காக அமலில் இருந்து வரும்
ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள்...
தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடன் சுமை
மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,
கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கின்
போது மக்களுக்கு
அவசரஉதவியாக -
இயக்கப்பட்ட ஆட்டோக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததை
விடுவிக்க கோரியும்...
நிதி நிறுவனங்களின் மிரட்டலில் இருந்து தங்களைக்
காப்பற்ற -
கால அவகாசம் கோரியும் ... இன்று (10.6.2020) சோஷியல் டெமாக்ரெடிக் டிரேட் யூனியன் தொழிற்சங்கத்தினர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்.
40 / 51
கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில்
களப் பணியாற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 'இந்து தமிழ் திசை' சார்பில்
வழங்கும் வகையில்... இன்று (10.6.2020)
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம், 'பேஸ் ஷீல்டு'களை வழங்கிய 'இந்து தமிழ் திசை' பொது மேலாளர் டி.ராஜ்குமார். அருகில் கோவை மாவட்ட
ஆட்சியர் கு.ராசாமணி,
மாநகராட்சி ஆணையர் ஸ்ரவண்குமார் ஜடாவத் உள்ளிட்டோர்.
படம்: ஜெ.மனோகரன்
41 / 51
தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் -
கரோனா தொற்றுத்
தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து -
கோவை ரேஸ் கோர்ஸ் நடைப்பயிற்சி பாதை... தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (10.6.2020)
இப்பகுதியில் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி
மருந்து தெளிக்கும் தீயணைப்பு துறையினர் .
படம்: ஜெ.மனோகரன்.
42 / 51
தமிழகத்தில் ஊடங்கை முன்னிட்டு மூடப்பட்ட அனைத்து
ஆலயங்களையும் மீண்டும் -
திறக்கக்
கோரி... இன்று (10.6.2020)
கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் கோவில் முன்பு ஒற்றைக்
காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.
படம்:
ஜெ .மனோகரன்
43 / 51
கோவை வ.உ.சி
உயிரியல் பூங்காவுக்கு இன்று (10.6.2020) காலையில்
புதிய வரவாக வந்துள்ள -
பிறந்து ஐந்தே நாட்களான கடைமான் குட்டி.
படம் : .ஜெ .மனோகரன்
44 / 51
45 / 51
தமிழகத்தில் கரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ள மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து கோவை காந்திபுரம் பேருந்து
நிலையத்தில் தனியார் பேருந்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்கும் நடத்துநர்.
படம் : .ஜெ .மனோகரன்
46 / 51
ஊரடங்கு காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், வேலூரில் தற்போது அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலினால் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்வது குறைந்துள்ளது. இதன், காரணமாக, பயணிகள் இன்றி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிரீன் சர்க்கில் பகுதிவரை நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்.
படம்: வி.எம்.மணிநாதன்
47 / 51
தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானதையொட்டி... இன்று (10.6.2020)
சென்னை - தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர்
அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு
அப்பகுதி மக்கள் மற்றும் தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர்
படம்: ம.பிரபு
48 / 51
தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானதையொட்டி... இன்று (10.6.2020)
சென்னை - தியாகராய நகர் ரெங்கநாதன்
தெருவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
படம்: ம.பிரபு
49 / 51
ஒடிசா மாநிலத்தில் விமானப்
பயிற்சியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த
அனீஸ் பாத்திமா எதிர்பாராத வகையில் இரு நாட்களுக்கு முன்பு
விபத்தில் உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று (10.6.2020)
சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
படம்:
எம் முத்து கணேஷ்
50 / 51
ஒடிசா மாநிலத்தில் விமானப்
பயிற்சியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த
அனீஸ் பாத்திமா எதிர்பாராத வகையில் இரு நாட்களுக்கு முன்பு
விபத்தில் உயிரிழந்தார்.
படம்:
எம் முத்து கணேஷ்
51 / 51
சென்னை - குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.
அன்பழகன்
உடல்நலக் குறைபாடு காரணமாக இன்று (10.6.2020) அதிகாலையில்
காலமானார். இதையொட்டி - இன்று மாலை
சென்னை -
அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த
ஜெ.அன்பழகனின் உருவப்படத்துக்கு... அக்கட்சியின் தலைவர் மு.க.
ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு , தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி...
அஞ்சலி செலுத்தினர்.
படம்: ம.பிரபு